சிந்துசமவெளி குறியீடும், காட்டுக்கழுதையும்!

சிந்துசமவெளி குறியீடும், காட்டுக்கழுதையும்

அஸ்கோ பார்போல, இதே தலைப்பில் செம்மொழி மாநாட்டில் வாசித்தக் கட்டுரையின் சுருக்கம், “தி ஹிந்துவில்”, வெளிவந்துள்ளது.

அதன் தமிழாக்கம் இங்கே கொடுக்கப்படுகிறது[1].

செம்மொழி மாநாட்டில் நான் என்னுடைய சமீபகால சிந்துசமவெளி வரிவடிவங்களைப்பற்றிய ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளை ஒரு ஆய்வுக்கட்டுரையில் சமர்ப்பிக்க உள்ளேன். “சிந்துசமவெளி வரிவடிவங்களை அடையாளங்கொண்டுப் படிப்பது” என்ற புத்தகத்தில்[2] (கேம்பிரிட்ஜ், 1994), நான் மீன் வடிவத்தை “மின் நட்சத்திரம்”, மற்றும் அதன் மற்ற கூட்டு வார்த்தைகள் பழந்தமிழில், பல வானில் உள்ளவற்றைக் குறிப்பதாக எடுத்துக் காட்டி விளக்கம் கொடுத்துள்ளேன். புதிதாக அடையாளங்காணப்படுகின்ற முத்திரையில் ஒரு “திமில் கொண்ட விலங்கின் பின்னங்கால்கள்” உள்ளன. அது மீன் சின்னத்திற்கு முன்பாகக் காணப்படுகிறது. பழந்தமிழ் “தாள்” என்ற வார்த்க்தையின் மறுவுருவம், தோடாவில் “விலங்கின் பின்னங்காலின் தொடை” என்ற பொருளில் உள்ளது. அதுவே புறநானூறில் நட்சத்திரத்தைக் குறிப்பதாக உள்ளது (புறம்.395).

ஒரே ஒரு இந்து-முத்திரையில்தான் காட்டுக்கழுதையின் உருவம் காணப்படுகிறது. இந்த முத்திரை 2009ல் கட்சில் உள்ள கன்மர் என்ற இடத்தில் தோன்றியபோது கிடைத்ததாகும். தென்னாசிய பிராந்தியத்தில் உள்ள காட்டுக்கழுதைகள் சரணாலயத்திற்கு மிக்க அருகில் இந்த இடம் உள்ளது. காட்டுக்கழுதைகளின் எலும்புகள் பலுச்சிஸ்தான், சிந்துசமவெளி மற்றும் குஜராத் முதலிய ஹரப்பன் அகழ்வாய்விடங்களிலிருந்து கிடைக்கின்றன. உவர் நிலமாக இருக்கும் இந்த இடம்தான் இந்த காட்டுக்கழுதையின் வாழ்விடமாக இருந்துள்ளது. 1600 BCE முன்பாக தெற்காசியாவில் மனிதனின் உபயோகத்தில் இருந்த குதிரையின் எலும்புகள் மற்றும் அவற்றின் உருவம் காணப்படுவதில்லை.

தமிழ் “கழுதை”யின் வார்த்தை உருவங்கள் மலையாளம், கோடா, தோடா, கன்னடம், கொடகு, துளு, தெலுங்கு, கொலாமி, நாய்கி, பர்ஜி, கோண்டி, மறும் குவி மொழிகளில் காணப்படுகிறது. பாத்ரிராஜு கிர்ஷ்ணாமூர்த்தி என்பவர், கழ்-உத்-அய் என்று வார்த்தை அமைப்பின மறுபடியும் ஏற்படுத்தியுள்ளார். அதன்படி முந்தைய-திராவிரர்களுக்கு கழுதை தெரிந்துள்ளது என்று தெரிகிறது. கழு-தை என்றால் ஒருவேளை “காட்டுக்கழுதை” என்று ஹரப்பன்-திராவிடர்களால் உணரப்பட்டது போலும். மேற்கிலிருந்து இந்தக் காட்டுக்கழுதை புதியதாக சிந்துசவளி வழியாக தெற்காசியாவில் நுழைந்திருக்கிறது. அதே மாதிரி அந்த வார்த்தையும் மாற்றப்பட்டு சென்றடைந்துள்ளது. ரிக்வேதத்தில் உள்ள கழுதையைக் குறிக்கும் “கர்தபா” என்ற வார்த்தைக்கு ஈரானியத்தில் எந்த மூலக்கூறும் இல்லை. அது ஒரு திராவிடத்திலிருந்து கடன் பெற்றச் சொல்லாகிறது. அதாவது திராவிட வார்த்தை “பா” என்ற இந்தோ-இரானிய விலங்கின் கூறுடன் சேர்ந்து “கர்த + பா” என்றாகிறது. நான் கழுதை என்றால், உவர்ப்பான பாலைவனத்தின் மண்ணை உதைக்கும் விலங்கு என்று கழுதைக்கு பொருள் விளக்கம் சொல்வேன் – கழ் / கள்ளர் = உவர்ப்பான மண் மற்றும் “உதய்” = உதைப்பது. ஆக, இந்த காட்டுக்கழுதை உவர்ப்பான பாலைவனத்தில் வசிக்கிறது மற்றும் நன்றாக உதைக்கும் விலங்காக உள்ளது.

ஹரிவம்சம் என்ற சமஸ்கிருத நூலில் 57வது அதியாயத்தில் காட்டுகழுதையைப் பற்றிய ஒரு இந்து காட்டுக்கதையுள்ளது. கிருஷ்ணரும், பலராமனும் தேனுகன் என்ற அரக்கன் வாழும் பனைமரக் காட்டிற்கு சென்றனர். நன்றாக பழுத்த பனைப்பழத்தின் சாற்றை குடிக்க, பனைமரங்களை பலராமன் ஆட்டுகிறான். சப்தத்தைக் கேட்டு கழுதை-அரக்கன் ஓடிவருகிறான்.  பனைமரத்தின் கீழிருக்கும் பலராமனை, மரத்தைத் தன் கைகளில் பிடித்திருக்கும் விதத்தில், பனைக்கொடியைப் பிடித்திருப்பது போன்று தெரிந்ததாம். ஓடிச்சென்று, தன்னுடைய பின்னங்கால்களினால், அக்கழுதை அரக்கன் பலமாக உதைக்க ஆரம்பித்தானாம். அப்பின்னங்கால்களைப் பிடித்துக் கொண்டு, பலராமன் அப்படியே பனைமரத்தின் மீது தூக்கி எரிய, அக்குழுதை கீழே விழுந்து இறந்ததாம். மற்றக்கழுதைகளும் அவ்வாறே கொல்லப்பட்டனவாம். முன்பு அக்கழுதைகள் அவ்வழியாக யாரும் செல்லமுடியாதபடி, தீவிரவாதத்துடன் கலாட்டா செய்து வந்தநிலையில், இப்பொழுது அவைகள் கொல்லப்பட்டதால், அழகான இடமாகிவிட்டதாம்.

பனைமர காட்டின் விவரணம் உவர் பாலைவனத்தைக் குறிப்பதாக இருப்பது, நிச்சயம்மாக “காட்டுக்கழுதைகளை”த்தான் என்று தெரிகிறது. சமஸ்கிருதத்தில் “தாள” மற்றும் முந்தைய-திராவிடத்தில் “தாழ்” என்ற வார்த்தைகளில் குறிப்பிடப்படும் பனைமரம், இவ்விதமாக காட்டுக்கதைகளிலும், பழைய இலக்கியங்களிலும் உள்லதைக் காணலாம். கள்ளிருக்கும் பனை, காட்டுக்கழுதையுடன் ஒப்பிடப்படுகிறது. பழுத்தப்பழங்கள் கீழே விழுவது மாதிரி, அவையும் கீழே விழுகின்றன. அந்தவிதமாக, கள்ளிருக்கும் பனை கழுதையைக்கொன்றவனுடன் சம்பந்தப்படுத்தப்படுகிறது, அவனுடைய முக்கிய அம்சமாகவும் கருதப்படுகிறது.

இந்த கட்டுக்கதை பலராமனுடைய கொடியையும் (தாள-த்வஜா) குறிக்கிறது. ரிக்வேதத்தில், இந்திரன் சோமபானத்தைப் போன்றதை ருசிக்க அழைக்கப்படுகிறன். அது ஒரு தாகமெடுத்த காட்டடக்கழுதை (கௌர) உவர்நிலத்திலுள்ள (இரிணா) ஒரு குட்டையில் நீர்பருகுவதைப் போன்றிருக்கிறதாம். கட்ச் பிரதேசத்தில், அத்தகைய குட்டைகள் எல்லாம் இன்றும் “தாலாப்” என்றுதான் வழங்க்கப்படுகின்றன. இந்த பாரசீக வார்த்தை இந்தோ-ஆரியன் வார்த்தை “தால”, மற்றும் முந்தைய-திராவிட “தாழ்” – தாழ்ந்த, குழிந்த இடம் என்ற பொருளில் வருகிறது. ஒட்டகத்தைப் போல, இந்தக் காட்டுக்கழுதையும் நிறைய தண்ணீரை மொந்தைக்குடிகாரனைப் போலக் குடிக்கலாம். இதைத்தவிர, “தாழ்” என்ற வார்த்தை, தாழ்வான அலைகளைக் குறிப்பதாகவும் உள்ளது. அதாவது, குதிரையின் முகத்தையுடைய ஒரு அரக்கன் கடல் முழுவதையும் குடித்துவிடிவதுபோல ஒரு கட்டுக்கடதையும் உள்ளது.

முடிவுரை: “தாள்” (தாழ் என்று பழைய கான்னடத்தில் உள்ளது), (பின்னங்)கால், மரத்தின் திம்மை (பருத்த திம்மையையுடைய தாழச் செடி> கள் தருகின்ற பனைமரம்) முதலியவை பலவிதங்லளில் காட்டுக்கழுதையுடன் தொடர்புடையாத உள்ளது.

விமர்சனம் மற்றும் வினவுகள்:

   1. கழுதையில் எந்த கழுதை காட்டுக்கழுதை? கழுதை – கழ் / கழு + உதய் = பின்பக்கமாக + உதை = அவ்வாறாக உதைக்கும் விலங்கு = கழுதை. அஸ்கோ பர்போல் இவ்வாறு கழுதைக்கு அர்த்தம் கண்டுபிடித்திருப்பது, மிகப்பெரிய ஆராய்ச்சியா என்றுத் தெரியவில்லை. ஏனெனில், “கழுதை” என்ற வார்த்தை ஏற்கெனெவே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. புறம்.15.1-3; புறம்.392.8-10; பதிற்றுப்பத்து..25.4; பெரும்பாணாற்றுப்படை.78-80 முதலிய, கழுதை, பொதி-கழுதையைக் குறிக்கின்றன.
   2. சமஸ்கிருத நூல்களினின்று ஏன் முந்தைய-திராவிடி சொற்கூறுகளின் விள்ளக்கம், அர்த்தம் பெறப்படவேண்டும்? முந்தைய-திராவிட மொழி, பழந்தமிழ் என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், ஏன் அத்தகைய மொழிக்கூறுகளின் தன்மை, உண்மை, விவரங்கள் எல்லாமே, சமஸ்கிருத நூல்களின் மூலம்தான் அறியப்படவேண்டும் என்று, இந்த உற்சாகமுள்ள திராவிட ஆராய்ச்சியாளர்கள் யோசித்துப் பார்ப்பதில்லை. அத்தகையத் தொன்மைத் தனம் முந்தைய-திராவிடியிலேயே இருந்திருந்தால், அக்காலத்தைல் ஏன் இலக்கியம் தோன்றாமல் இருந்தது?
   3. என்னுடைய கருத்தின்படி, தமிழ் முந்தைய-திராவிட (மொழிக்குடும்பத்திற்கு)ச் செல்கின்றது அவை 2600-1700 BCE வாக்கில் இந்து-வரிவடிவங்களில் சிறிய அளவில் ஆயிரக்கணக்கில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகளில் காணலாம் என்பதாகும்”, என்கிறார். பிறகு ஏன் சுமார் 300 BCE வாக்கில்தான் சங்க இலக்கியம் எழுதப்பட்டிருக்க வேண்டும்?
   4. இடைப்பட்டகாலத்தில் சுமார்.2600-1700 BCEமுதல் 300 BCE வரை, முந்தைய திராவிடர் எழுதியதையே எழுதிக் கொண்டிருந்தார்களா, இல்லை, வேறு வரிவடிவங்களை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார்களா?
   5. மேற்கிலிருந்து இந்தக் காட்டுக்கழுதை புதியதாக சிந்துசமவளி வழியாக தெற்காசியாவில் நுழைந்திருக்கிறது”. அதாவது, முந்தைய-திராவிட மொழி பேசும் காலத்தில் காட்டுக்கழுதைகள்தாம் இருந்தன. அதனால், “கழுதை”யை பழந்தமிழன் நன்றக அறிந்திருந்தான். ஆக, கழுதைகள், காட்டுக்கழுதைகள் எல்லாம் கூட“மேற்கிலிருந்து புதியதாக சிந்துசமவளி வழியாக தெற்காசியாவில் நுழைந்திருக்கிறது”. ஆக, இனி “காட்டுக்கழுதை நுழைந்த சித்தாந்தத்தை”ப் பற்றி தமிழர்கள் படித்துக் கொண்டேயிருக்கலாம்.
   6. 1600 BCE முன்பாக தெற்காசியாவில் மனிதனின் உபயோகத்தில் இருந்த குதிரையின் எலும்புகள் மற்றும் அவற்றின் உருவம் காணப்படுவதில்லை”. அதாவது, முந்தைய-திராவிட மொழி பேசும் மக்களுக்கு “குதிரை” என்றால் என்னவென்று தெரியாது.
   7. காட்டுக்குழுதைக்குப் பிறகு, குதிரைகள் எப்பொழுது இந்தியாவில், “மேற்கிலிருந்து புதியதாக சிந்துசமவளி வழியாக நுழைந்தது”., என்று தெரியவில்லை.
   8. காட்டுக்கழுதை முத்திரை” கட்சில் உள்ள கன்மர் என்ற இடத்தில் கிடைத்தது, மற்றும் தென்னாசிய பிராந்தியத்தில் உள்ள காட்டுக்கழுதைகள் சரணாலயத்திற்கு மிக்க அருகில் இந்த இடம் உள்ளது”, என்றெல்லாம் விளக்கம் கொடுக்கும் போது, குதிரைகள் சரணாலயம் ஏன் இல்லை என்று சொல்லவில்லையே?
   9. குதிரைக்கு, சங்க இலக்கியத்தில் மா, புரவி, இமில் என பற்பல சொற்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, காட்டுக்கழுதை, கழுதையை விட அதிகமான பெயர்கள் உள்ளபோது, அதே மாதிரி, முந்தைய-திராவிட மொழிகளில் அதன் பிரயோகம் ஏன் இல்லை?
   10. திராவிடர்கள் நுழைந்த பிறகு காட்டுக்கழுதைகள் / கழுதைகள் “மேற்கிலிருந்து புதியதாக சிந்துசவளி வழியாக நுழைந்தனவா”, அல்லது காட்டுக்கழுதைகள் / கழுதைகள் நுழைந்த பிறகு திராவிடர்கள் நுழைந்தனரா?
   11. ஆரியர்கள் நுழைந்த பிறகு குதிரைகள் “மேற்கிலிருந்து புதியதாக சிந்துசவளி வழியாக நுழைந்தனவா”, அல்லது குதிரைகள் நுழைந்த பிறகு ஆரியர்கள் நுழைந்தனரா?
   12. தெற்கிலிருக்கும் அரக்கர்கள் கோவேறுக்கழுதைகள் பூட்டிய ரதங்களை ஓட்டியதாக கதைகள் உள்ளன. இதற்கும், முந்தைய-திராவிட மொழி பாரம்பரியங்களுக்கும், ஏதாவது தொடர்பு உள்ளதா?

   வேதபிரகாஷ்

   26-06-2010


   [1] Asko Parpola, The Indus script and the wild ass, The Hindu

   http://beta.thehindu.com/opinion/op-ed/article481104.ece

   [2] Asko Parpola, Deciphering the Indus Script, Cambridge 1994.

   குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

   13 பதில்கள் to “சிந்துசமவெளி குறியீடும், காட்டுக்கழுதையும்!”

   1. vedaprakash Says:

    அஸ்கோ பர்போலவின் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள கட்டுரை சுருக்கம்:

    The Indus script and the wild ass – Asko Parpola
    http://beta.thehindu.com/opinion/op-ed/article481104.ece

    Image of a modern impression of the seal M-290 from Mohenjo-daro, where the sequence ‘hind leg’ + ‘wild ass’ (to be read from right to left) occurs. Courtesy: Asko Parpola

    In a paper to be presented at the World Classical Tamil Conference, I am going to discuss recent developments in my study of the Indus script. In the book Deciphering the Indus Script (Cambridge 1994), I interpreted the ‘fish’ sign as Proto-Dravidian *miin ‘fish’ = *miin ‘star’, and its compounds with preceding signs as names of heavenly bodies attested in Old Tamil. One newly deciphered sign depicts “a hoofed animal’s hind leg.” It occurs once before the plain ‘fish’ sign. Old Tamil taaL ‘leg’ has a Toda cognate meaning “thigh of animal’s hind leg” and denotes a star in PuRam 395. The ‘hind leg’ sign once precedes a sign that depicts the wild ass. Is the reading taaL ‘(hind) leg’ meaningful in this context?

    Just one Indus seal has the wild ass as its iconographic motif; it was excavated in 2009 at Kanmer in the Kutch, next to the only wild ass sanctuary in South Asia. Bones of wild ass come from Harappan sites in Baluchistan, the Indus Valley and Gujarat; the salt deserts of this very area have always been the habitat of the wild ass. Bones or depictions of the domestic horse and the donkey are not found in South Asia before 1600 BCE.

    Tamil kaZutai or “donkey” has cognates in Malayalam, Kota, Toda, Kannada, Kodagu, Tulu, Telugu, Kolami, Naiki, Parji, Gondi and Kuwi. Bhadriraju Krishnamurti reconstructs *kaZ-ut-ay and asserts that Proto-Dravidian speakers knew of the donkey. More probably *kaZutay meant ‘wild ass’ in Harappan Dravidian, and the term was transferred to the similar-looking donkey when this newcomer came to South Asia from the west through the Indus Valley. Rigvedic gardabha – ‘donkey’ has no cognates in Iranian; it is a Dravidian loan word with the added Indo-Iranian animal name suffix -bha-. I explain *kaZutay as ‘kicker of the salt desert’, from *kaZ(i) / *kaLLar ‘saline soil’ and *utay ‘to kick’. The wild ass lives in the salt desert and is a vicious kicker.

    There is a Hindu myth explicitly associated with the wild ass, the Dhenukavadha of Harivamsa 57. Krishna and Balarama came to a palmyra forest occupied by the fierce ass demon Dhenuka and its herd. Wanting to drink the juice of ripe palm fruits, Balarama shook the trees. Hearing the sound of falling fruits, the enraged ass demon rushed to the spot. Seeing Balarama beneath a wine palm, as if holding the tree as his banner, the wicked ass bit Balarama and started kicking him hard with its hind legs. Balarama seized the ass by those hind legs and flung it to the top of a palm. The ass fell down with its neck and back broken and died. Dhenuka’s retinue met with the same fate, and the ground became covered with dead asses and fallen palm fruits. The palm forest, horrible when terrorised by the asses, impossible for humans to live in, difficult to cross, and with a great extent and salty soil (iriNa), now became a lovely place.

    The description of the palm forest as a salt desert confirms that wild asses are meant. The palm tree, Sanskrit taala from Proto-Dravidian *taaZ, is prominent in the myth and its earliest sculptural representations. The wine palm is associated with the wild ass, which inhabits the palm forest and finally falls down from the top of the palm like its ripe fruits. The wine palm is connected also with the ass’ killer (his successor as the god of its drink), Balarama, whose addiction to toddy is “an essential part of his character.”

    The myth also refers to the palm emblem on Balarama’s banner (tâla-dhvaja). In the Rigveda, Indra is invited to drink Soma like a thirsty wild ass (gaura) drinks in a pond of salty soil (iriNa). In Kutch today, such ponds are called taalaab. This Persian word comes from Indo-Aryan taala ‘pond’, from Proto-Dravidian *taaZ ‘low place, depression.’ Like the camel, the wild ass can quickly drink an enormous amount of water, becoming through homophony the prototypal toddy-drinker. Further homophones of taaZ connect the wild ass with the ebb of tide and its mythical cause, the mare-faced demon of the netherworld who drinks the whole ocean.

    Conclusion: taaL (from *taaZ, preserved in Old Kannada) ‘(hind) leg, stem of tree’ (whence taaZ ‘tree with a prominent stem’ > ‘wine palm’) is in many ways connected with the wild ass.

    (The author, who will be the first recipient of the Kalaignar M. Karunanidhi Classical Tamil Award, is Professor Emeritus of Indology, Institute of World Cultures, University of Helsinki.)

    • vedaprakash Says:

     இதற்கு பதில்களாக பதிவாகியுள்ளவை:

     I shall try to interpret the words taken by Asko Parpola strictly in the Sangam literature context where the purity of Tamil clould has been more. Parpola has been definitely confused with the Tamil words “தாள்” (புறம்.395.35) and “தாழ்” taking only one particular meaning according to his convenience.

     Actually, the word “தாள்” has more than a dozen meaning in the Sangam literature context itself – feet, effort, bottom portion of the tree, trunk or central portion of plant, soft stalk, star, bottom portion, a finger ornament, nail, pillar of Pandal, step, and so on.

     The word “தாழ்” has the meanings padlock, ring (noun), degrade, demean, fall etc.

     The word “தாலம்” has the meaning of palm trees, as matted leaves were used as seat (Silappatikaram.XVI.35). Though, it is a post-sangam literature, for academic interest I am giving this meaning.

     Coming to the word “கழுதை”, the word is found in the Sangam literature – Puram.15.1-3; Puram.392.8-10; Padait.25.4; Perumpaanat.78-80 etc, where it refers to donkey only, of course, it can be ass also.

     But Parpola has pained himself to show that the so-called Proto-Dravidian speakers know ass / donkey, implying that they did not know horse.

     Therefore, his whole exercise appears to be childish than academic considering his stature and scholarship. Probably, his “Dravidian” friends have not provided the Tamil inputsd properly in the context. As they have from “கழகம்” owhich has also the same root கழ் / கழ, where all come together, join together.
     from: K. V. Ramakrishna Rao
     Posted on: Jun 23, 2010 at 15:39 IST

   2. vedaprakash Says:

    Parpola’s efforts in deciphering the Indus script are comendable. However, inventing new words in this so called proto-dravidian language is not going to lead him to success in deciphering the script.

    from: skg
    Posted on: Jun 23, 2010 at 22:38 IST

   3. vedaprakash Says:

    Dear Mr KV Ramakrishna Rao, as a well read person with deep knowledge about Sangam Tamil should really be part of the Academic Workgroups part of the Classical Tamil Conference. Dr Asko Parpola is also presenting a paper there, so are innumerous Tamil scholars. A healthy debate with Dr Parpola can throw more light on the assumptions he has made for தாழ் and தாள் in Proto-Dravadian as opposed to Sangam Tamil. Pelase bear in mind that Parpola’s Proto-Dravidian of IVC predates Sangam Tamil by atleast 1700 years which is a huge time frame, a time gap between now and when Poompukar was a bustling International Port city…

    from: Rajasekaran Elangovan
    Posted on: Jun 24, 2010 at 01:03 IST

   4. vedaprakash Says:

    நானும், “விமர்சனம் மற்றும் வினவுகள்” என்பதன் கீழுள்ளவற்றை, எனது பதிலாக அனுப்பியுள்ளேன்.

   5. K. Venkatraman Says:

    It is unfortunate that scholars like Asko Parpola speak differently at different fora, just for getting awards, money, honour etc., compromising with their research.

   6. Tamilselvan Says:

    பாவம், நைனா, கஷ்டப்பட்டு எழுதிகிறாப்போல தெரியுது.

    ஆனா, இதெல்லாம் யார் படிக்கிறது?

    படிச்சாலும், நம்ம ஜனங்களுக்குப் புரியாது.

    ஒன்னு மட்டும் நல்லா புரியுது, முன்னே வந்த கிருத்துவ சாமிகள் போல, இந்தாளும், நம்பளை ஏமாத்துரான்.

   7. நெட்டிமையார் Says:

    என்னய்யா, இந்த ஆள் கதை விடுகிறார்?

    முதலில், திராவிடர்கள் நுழைந்தனர்.

    திராவிடர்கள் போன பிறகு, ஆரியர்கள் நுழைந்தார்கள்.

    இடையே அந்த காட்டுக்கழுதை நுழைந்தது!

    அப்படியென்றால், முன்பாக, தமிழர்கள் இங்கு தேர்களை எப்படி விட்டுக் கொண்டிருந்தனர்?

    • vedaprakash Says:

     இவர்களுடைய ஆராய்ச்சியில், அடிப்படையில் உள்ள தவறுகளை, துரதிருஷ்டமாக, எந்த தமிழாராய்ச்சியாளர்களும் எடுத்துக் காட்டுவதில்லை.

     குமரிக்கண்ட கருதுகோளில் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தால், திராவிடர்கள் / தமிழர்கள், வடக்கிலிருந்து வந்திருக்க முடியாது.

     வடக்கிலிருந்து வந்தால், குமரிக்கண்ட கருதுகோள் அடிபட்டு போகிறது.

     எல்லாவற்றையும் விட, காலக்கணக்கீட்டு முறை. தமிழாராய்ச்சியாளர்கள், இதைப் பற்றிக் கவலைப் படுவதாகவே தெரியவில்லை.

   8. ramanan.pg Says:

    வேத பிரகாஷ் அவர்களே!
    எங்கே உங்கள் நண்பர் சுஜாலைக் காணவில்லை? குதிரைதான் இல்லை, கழுதையாவது இருக்கிறதே என்று மகிழாமல் ஏன் இந்த கோபம் தமிழர்கள் மீது?பாவம் இவர்கள் உங்கள் நதிமூலம், ரிஷிமூலம் அரியாதவர்கள். நான் சொல்கிறேன்: சமஸ்கிருதம்தான் உலகில் தோன்றிய முதல்மோழி!அது ஒன்றுதான் தேவபாஷை!இந்த ப்ரபஞ்சமே ரிக் வேதத்திலிருந்துதான் தோன்றியது. ‘ஆயுஷ்மானுபவ’

    • vedaprakash Says:

     திரு ரமணன் அவகளுக்கு வணக்கம்,
     1. மேலேயுள்ளவற்றை முழுமையாக படித்துவிட்டு “கமென்ட்” அடிக்கிறீர்களா, அல்லது கிண்டலுக்காக அப்படி எழுதுகிறீர்களா என்று தெரியவில்லை.
     2. முடிந்தால், மேலே எழுப்பியுள்ள வினாக்களுக்கு விடை தாருங்களேன், பார்ப்போம்?
     3. ஆராய்ச்சி எனும்போது, உணர்ச்சி பூர்வமான எண்ணங்களுக்கோ, விவாதங்களுக்கோ இடமில்லை.
     4. எது பெரிது, முதல் என்பதில் பிரச்சினை இல்லை, எது உண்மை என்பதில் தான் பிரச்சினை.
     5. அடுத்த தடவை ஆஸ்கோ பார்போல, மைக்கேல் விட்செல், முதலியோர் தமிழகம் வரும் போது, அவர்களுடன் விவாதித்துப் பாருங்களேன்?
     6.அப்பொழுது தெரியும், சுஜால் யாருடைய நண்பர் என்று.

   மறுமொழியொன்றை இடுங்கள்

   Fill in your details below or click an icon to log in:

   WordPress.com Logo

   You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

   Twitter picture

   You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

   Facebook photo

   You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

   Connecting to %s


   %d bloggers like this: