பிஷப் கால்டுவெல் – பிழையுரையும், பொய்யுரையும், திராவிட இனவாதமும் – புத்தக வெளியீடு, பின்னணி, தமிழ் தேசிய குழப்பமா, சித்தாந்த மோதலா, சரித்திரவரையிலா?  [3]

பிஷப் கால்டுவெல்பிழையுரையும், பொய்யுரையும், திராவிட இனவாதமும்புத்தக வெளியீடு, பின்னணி, தமிழ் தேசிய குழப்பமா, சித்தாந்த மோதலா, சரித்திரவரையிலா?  [3]

Arumai Nayakam Sattampillai nadar- 1823–1918

நாடார், திராவிடர், கால்டுவெல் முதலியன: சாணார் / நாடார் சரித்திர ஆராய்ச்சியில், அருமை நாயகம் என்ற சட்டாம் பிள்ளை சாணர்களை சத்திரியர் என்று எடுத்துக் காட்டியதை கவனிக்கலாம். இனம் பொய், கட்டுக்கதை, மாயை என்று உலகம் முழுவதும் ஒப்புக் கொண்டு விட்டதாலும், மனித வம்சாவளி கூறு ஆராய்ச்சி இந்தியர்களும் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியவர் என்று நிரூபிக்கப் பட்டதாலும், திராவிட சித்தாந்திகள் தங்களது சிந்தனைகளை சீர்தூக்கி, பார்க்க ஆரம்பித்துள்ளது. குணா “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற சிறு புத்தகத்தை வெளியிட்டதன் மூலம், தெலுங்கு, கன்னடம், மலையாள வெறுப்பை ஊற்றினர். தெலுங்கர் ஆதிக்கத்தினால், தமிழகத்தில், தமிழர் பின் தள்ளப்பட்டனர் என்ற ரீதியில் கருத்து வைக்கப் பட்டது. பெரியார், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என்று எல்லா அரசியல்வாதிகளும் தமிழர் அல்லர், மற்ற மொழியினத்தவராக இருந்து தமிழக்த்தை ஆண்டு, ஆட்டிப் படைக்கின்றனர் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டனர். பிறகு, திராவிட மாயைப் பற்றி மற்றவர்களும் பேச ஆரம்பித்து விட்டனர்.

Tamilnadu people- Dravidar or Tamils-2010

தமிழக மக்கள் தமிழரா, திராவிடரா?:  மொழிவாரி மாநிலங்கள் என்ற போது, ஆந்திரபிரதேசம் முதலில் உருவானது. எம்ஜிஆர் விசயத்தில் “மலையாளத்தான்” என்று கேலி பேசியதால், கேரளத்தினர் மாறுபட்டன. காவிரி பிரச்சினையில் கன்னட-தமிழ் மொழி பேசும் மக்களிடையே வேற்றுமை வெளிப்பட்டது. இவ்வாறு தமிழர் தனித்து விடபட்டபோது, “நாம் திராவிடரா அல்லது தமிழரா” போன்ற விவாதங்கள் 2010லேயே தோன்றி விட்டன. ஜூன் 2010ல் “தமிழத்திற்கு எதிரான கால்டுவெல் – கருத்தரங்கம்”, சென்னையில் 07-02-2015ல் நடைபெற்றதில், சில கருத்துகள் வெளிப்பட்டுள்ளன. திராவிட மொழிகள் என்பதற்கு பதிலாக, “தமிழிய மொழிகள்” என்று சொல்ல வேண்டும்.  வடுகர் ஆட்சி,, நாயக்கர் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுவதை எதிர்த்து பேசிய விதத்தையும் காணலாம். இருப்பினும், தமிழ் மொழி வெறியோடு பேசியுள்ளதை கவனிக்கலாம். நாடார்களைப் பற்றி சரித்திர ரீதியில் கொடுக்கப் படும் குறிப்புகளை இங்கு கேட்கலாம்[1]. கால்டுவெல்லின் திராவிட கோட்பாட்டை மறுத்து நடைபெற்ற மாநாட்டின் உரைகளை இங்கு பார்க்கலாம்-கேட்கலாம்[2]. கால்டுவெல் ஆதரவு-எதிர்ப்பு பலவிதமாக வெளிப்பட்டது. திராவிட கழக சார்பில் நடைப்பெற்ற “கால்டுவெல் படத் திறப்பு விழா – 29-05-2014” உரையை இங்கு பார்க்கலாம்-கேட்கலாம்[3].

Anti caldwell conferences 2015

திராவிடரா? தமிழரா? வீரமணி விளக்கம் [11-07-2018][4]: வீரமணி பேசியது[5], “திராவிட மாணவர் கழகம் என்று ஏன் சொல்லவேண்டும் என்று உங்களைக் குழப்பலாம் சிலர். அவர்களுக்கு நான் தெளிவாகச் சொல்கிறேன், ‘‘திராவிடரா? தமிழரா? என்றெல் லாம் சில அரசியல் வியாதிகள் உங்களை ஏமாற்றலாம்’’ தந்தை பெரியார் இதற்கும் பதிலளிக்கிறார். பெரியாரை சுவாசிப்பதில் என்ன லாபம் என்றால், எந்தப் பிரச்சினைகளுக்கும் பெரியாரிடம் விடை இருக்கிறது. எங் களுக்கெல்லாம் சொந்த புத்தி தேவை இல்லை என்று சொன்ன தற்குக் காரணம், எந்த நிலைமை வந்தாலும், பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் என்று டக்கென்று புரட்டிப் பார்ப்போம். பெரியார் இந்த நிலைமையை எப்படி எதிர் கொண்டார்? என்று புரட்டிப் பார்ப்போம். அதற்கு சரியான விடை கிடைக் கும். ஆகவே, எளிதாக அதனை நாங்கள் செய்துவிட்டுப் போகிறோம். ஏனென்றால், அவருடைய அனுபவம் 80 ஆண்டு அனுபவம்; அவருடைய அனுபவம் பல்வேறு இயக்கங்களில் இருந்த அனுபவம்; வியாபாரியாக இருந்த அனுபவம்; பதவிக்குப் போகாத அனுபவம்; ஒரே கடிதத்தில், 29 பதவிகளை ராஜினாமா செய்து தூக்கி எறிந்த அனுபவம் பெரியாருடைய அனுபவத்தைத் தவிர வேறு எங்கும் கிடையாது”.

What is the problem among the Dravidian ideologists

திராவிடரா? தமிழரா? தந்தை பெரியாரின் விளக்கம்[6]: பெரியாரிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்; திராவிடரா? தமிழரா? என்று. அதற்குப் பெரியார் சொல்கிற செய்தி தோழர்களில்கூட யாருக்காவது அய்யம் இருந்தால், தெளிவுபடுத்திக் கொள்ளலாம். பெரியார் சொல்கிறார்: ‘‘தமிழர் என்பது மொழிப் பெயர், திராவிடர் என்பது இனப் பெயர், தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்ற தலைப்பில் கூட முடியும். ஆனால், தமிழ்ப் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது. இனத்தால் திராவிடனான ஒருவன் எந்த சமயத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவனாக இருந்தாலும், அவன் ‘திராவிடன்’ என்ற தலைப்பில் சேருவான். ஆகையால், திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன் – மொழி காரண மாக மட்டுமே தன்னை ‘திராவிடன்’ என்று கூறிக்கொள்ள முடியாது[7].

What is the problem among the Dravidian ideologists-2

Illustrations adopted from the pictures available in Internet – credit goes to the respective authors / artists

பார்ப்பனன் திராவிடன் அல்லன்: ‘தமிழர்’ என்றால் பார்ப்பானும் தன்னைத் தமிழரென்று கூறிக்கொண்டு, நம்முடன் கலந்துகொண்டு மேலும் இங்கே பேசக்கூடிய வாய்ப்புகள் வந்துவிட்டது. தமிழர் என்றால், பார்ப்பானும் தன்னைத் தமிழரென்று கூறிக்கொண்டு, மேலும் நம்மைக் கெடுக்கப் பார்ப்பான். ‘திராவிடர்’ என்றால்,  எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக்கொண்டு, நம்முடன் சேர முற்படமாட்டான். அப்படி முன்வந்தாலும் அவனுடைய ஆச்சார அனுஷ் டானங்களையும், பேத உணர்ச்சியையும் விட்டுத் திராவிடப் பண்பை ஒப்புக்கொண்டு, அதன்படி நடந்தாலொழிய, நாம் அவனைத் திராவிடன் என்று ஒப்புக்கொள்ள மாட்டோம். மேலும், பண்டைத் திராவிட மக்களின் பழக்கவழக்கங் களையொட்டி, அதில் ஏதாவது தவறு இருக்குமானால், அதையும் களைந்துவிட்டு, ஒரு திராவிடன் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டுமென்று ஏற்பாடு செய்தால், அவ் வேற்பாட்டுக்கு உட்பட்டு நடக்க ஒப்புக்கொள்பவனைத்தான் ‘திராவிடன்’ என்று கூற முடியுமே தவிர, சி.பி.இராமசாமி அய்யரையும், இராஜகோபாலாச்சாரியாரையும்கூட அவர்கள் பண்பு திராவிடப் பண்பாக மாறும்வரை திராவிட இனத்தில் சேர்த்துக் கொள்ளமாட்டோமே!’’

What is the problem among the Dravidian ideologists-3

Illustrations adopted from the pictures available in Internet – credit goes to the respective authors / artists

திராவிடம், ஆரியத்துடன் கூட்டு வைப்பது ஏன்?: இவ்வாறு, திராவிடஸ்தான், திராவிட நாடு, திராவிட தேசம், திராவிடதேசியம், தமிழ் தேசியம், தேசிய மொழி இனங்கள், சுய ஆட்சி, மாநில சுய ஆட்சி, சுய நிர்ணயம், தமிழகம், தமிழ் தேசியம், தமிழீழம், அகண்ட தமிழகம் என்றெல்லாம் பேசிவந்தாலும், தேர்தலில் போட்டியிட, அண்ணாதுரை [முதலியார்], பிரிவினைவாதத்தை கைவிட்டார், தேர்தலில் நின்றார், முதலமைச்சர் ஆனார். கருணாநிதி, ஜாதியம் வைத்து, நெடுஞ்செழியினை [முதலியார்] ஓரம் கட்டி ஆட்சியினை பிடித்தார். எம்ஜிஆரை “மலையாளத்தான்” என்று வைது அரசியல் நடத்தி, ஜெயலலிதாவை “பாப்பாத்தி” என்று வெறுப்பைக் கக்கி, காலத்தை ஓட்டினார். ஆனால், திராவிடம் வீழ்ந்ததா, எழுந்ததா என்று அவ்வர்கள் தான் சொல்ல வேண்டும். ஆரிய-பார்ப்பனக் கட்சி பிஜேபியுடன், கருணாநிதி கூட்டு வைத்துக் கொண்டதும், இப்பொழுது அணியில் சேர தயாராக இருப்பதும், அவர்களது “செக்யூலரிஸ” அரசியலைக் காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

12-10-2018

 

What is the problem among the Dravidian ideologists-4

Illustrations adopted from the pictures available in Internet – credit goes to the respective authors / artists

[1]நாடார் வரலாறு, பகுதி -1-  https://www.youtube.com/watch?v=WP4P1tSSQg0;

எழுகதிர் ஆசிரியர் அருகோ உரை -1 – https://www.youtube.com/watch?v=o8x0UvD6LGE

பகுதி-2- https://www.youtube.com/watch?v=dvxE2F7aDoc

பகுதி-3-  https://www.youtube.com/watch?v=k7hx9V3_CPk

[2] தமிழினத்திற்கு எதிரான கால்டுவெல்லின் நிலைப்பாடுப் பற்றிய கருத்தரங்கம் சென்னை 7-2-2015 மக்கள் மாநாடு கட்சி சார்பில் நடைப்பெற்றதாக, சில வீடியோக்கள் இணைதளத்தில் காணக் கிடைக்கின்றன. அக்கட்சித் தலைவர் க.சக்திவேல் ஆற்றிய உரை- 2

https://www.youtube.com/watch?v=95NLOl5doQU

க.சக்திவேல் ஆற்றிய உரை- 3 மற்றும் கச்சத்தீவு இயக்கத் தலைவர் சீதையின் மைந்தன் உரை, https://www.youtube.com/watch?v=CIqEb_G7aDU

அருட்கண்ணனார் உரை-2https://www.youtube.com/watch?v=DJZOUT_7jKg

[3] டாக்டர். கால்டுவெல் மற்றும் எழுத்தாளர். நாரண துரைக்கண்ணன் அவர்கள் படத்திறப்பு நிகழ்ச்சி- மானமிகு முகம் மாமணி-(பகுதி-1)-நாள்:29.05.2014. இடம்: பெரியார் திடல்,சென்னை. https://www.youtube.com/watch?v=er8h3YO1yt4

அ.கருணானந்தன்-(பகுதி-2) – https://www.youtube.com/watch?v=qVfJ2RG42yM

[4] விடுதலை, போராட்டக் களத்தில் பிறந்தது திராவிட மாணவர் கழகம்! திராவிட மாணவர் கழகத்தில் சேர்ந்தால் இலாபமா நட்டமா?, புதன், 11 ஜூலை 2018 17:04.

[5] http://www.viduthalai.in/component/content/article/90-asiriyar-speech/164754-2018-07-11-11-37-36.html

[6] விடுதலை, போராட்டக் களத்தில் பிறந்தது திராவிட மாணவர் கழகம்! திராவிட மாணவர் கழகத்தில் சேர்ந்தால் இலாபமா நட்டமா?, புதன், 11 ஜூலை 2018 17:04.

[7] [7] http://www.viduthalai.in/component/content/article/90-asiriyar-speech/164754-2018-07-11-11-37-36.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: