பிஷப் கால்டுவெல் – பிழையுரையும், பொய்யுரையும், திராவிட இனவாதமும் – புத்தக வெளிட்டு ராஜா பேசியது – பின்னணி, தமிழ் தேசிய குழப்பமா, சித்தாந்த மோதலா, சரித்திரவரையிலா?  [4]

பிஷப் கால்டுவெல்பிழையுரையும், பொய்யுரையும், திராவிட இனவாதமும்புத்தக வெளிட்டு ராஜா பேசியதுபின்னணி, தமிழ் தேசிய குழப்பமா, சித்தாந்த மோதலா, சரித்திரவரையிலா?  [4]

WhatsApp Image 2018-10-02 at 4.48.03 PM

அறிமுக உறை, வாழ்த்துரை முதலியன: இனி இந்த புத்தக வெளியீடு நிகழ்சிற்கு வருவோம். அறிமுகவுரையை கோப.சீனிவாசன், இல.குணசேகரன்; வாழ்த்துரை கா.பிரியதர்ஷினி, பி.பாலகணேஷ் நாடார், கே.வி.ராமகிருஷ்ண ராவ், எஸ்.ஈஸ்வரன் முதலியோர் நடத்துவதாக இருந்தது.  எச். ராஜா, பரதிய ஜனதா கட்சி தலைவர் 5.20ற்கு வந்ததால், நிகழ்சி துவங்கியது[1]. பிரியதர்ஷினி, “ராம் டிரஸ்டின்” [RAM = Religious Awareness Movement] சார்பாக பேசினார். பி.பாலகணேஷ், நாடார்கள் கால்டுவெல்லை ஏன் எதிர்கிறார்கள் என்று விளக்கினார். நாடார் என்றாலே இந்து, ஆகையால், இந்து நாடார் என்று சொல்லவேண்டிய தேவையில்லை. கத்தோலிக்க சர்ச் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துகிறது. சட்டம்பி சாமி, “ஏசுமத கண்டனம்” என்ற நூலை எழுதியுள்ளார். அதனை தமிழில் வெளியிடவேண்டும் என்றார்.

KVR apeaks

கே.வி.ராமகிருஷ்ண ராவ் பேசுகிறார்.

Audience-1

அரங்கத்தில் பங்கு கொண்டவர்கள் / பார்வையாளர்கள்

Audience-2

சரித்திர வரைவியல், சித்தாந்தம், வரலாற்று புறஇயல்பு நோக்கு, பாரபட்சம் முதலியன: பிறகு, கே.வி.ராமகிருஷ்ண ராவ் பேசும் போது, எப்படி இந்தியர் பிரிக்கப்பட்டது என்று விளக்கினார். சரித்திரவரவியல் சித்தாந்தம் எப்படி இந்தியாவில் பல குழுக்களால் விளக்கம் கொடுக்கப் பட்டு வர்கின்றது, என்பதனை எடுத்துக் காட்டி, உண்மை இருக்கும் போது, ஏன் மறுபக்கத்தை அல்லது மறைக்கப் பட்ட வரலாற்றை சொல்லக் கூடாது, எழுதக் கூடாது என்ற வினா எழுகின்றது. ஒரு முடிவிற்கு, தீர்மானத்திற்கு, தீர்ப்பிற்கு வரும் போது, இருக்கின்ற-கிடைக்கின்ற ஆதாரங்கள் அனைத்தையும் [contemporary, available and accessible evidences] விருப்பு-வெறுப்பின்றி அலசி [without bias, prejjudiced and preconceived notions], சாட்சிகள் கூறுவதையும் மற்ற சார்புடைய, இயைந்து போகும் அத்தாட்சிகளை [collaborative and corroborative evidences] வைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் சோதிக்க வேண்டும். எனவே திரு காசிவேலு அதே ஆராய்ச்சி முறையியலைப் [research methodology] பின்பற்றி இப்புத்தகத்தை எழுதியுள்ளார். ஈ.எச். கார் [E. H. Car] என்பவரின் படி, “சரித்திரம் என்பது இறந்த கால, நிகழ்காலங்களுக்கு இடையில் நடத்தப் படும் முடிவற்ற உரையாடல், தர்க்கம்,” என்றால், அத்தகைய முறையை எதிர்க்க எந்த சரித்திராசிரியனுக்கும் உரிமை இல்லை. மேலும், இக்கால சரித்திராசிரியர், விஞ்ஞானிகள் போல, உண்மை அறியும் விற்பன்னர்களைப் போல எங்களுக்கு பாரபட்சமற்ற உறுதித் தன்மை [objectivity] தேவை என்று சொல்லிக் கொள்வதில்லை. காசிவேலுவின் முயற்சி வரலாற்று வரைவியலில் முன்னுதாரணமாகக் கொண்டு பாராட்ட வேண்டும், இத்தகைய புத்தகங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்க வேண்டும். அவர் முயற்சி தொடர்ந்து வரவேண்டும்.

Chandrasekar, President

சந்திரசேகர், தலைவர்-நாடார் மகாஜனம், பேசுகிறார்.

Audience-3

அரங்கத்தில் பங்கு கொண்டவர்கள் / பார்வையாளர்கள்

Audience-4

எஸ். கல்யாண ராமன், கோப.சீனிவாசன், குணசேகரன் பேசியது: எஸ். கல்யாண ராமன், கால்டுவெல்லின் நாடார்களைப் பற்றிய புத்தக விவரங்களை தமிழில் மொழிபெயர்த்து, பின்னிணைப்பாக கொடுத்துள்ளதை எடுத்துக் காட்டினார். கோப.சீனிவாசன் பேசும் போது, இந்துக்களுக்கு நல்லவேலையை செய்பவர்களை பாராட்டத் தெரியவில்லை என்று எடுத்துக் காட்டினார். இந்து ஊடகவியல் மற்றும் அறிவுஜீவி குழுமம் சார்பாக, நினைவு பரிசுகளை வழங்கினார். குணசேகரன் பேசும் பொது, தியாகராயநகர், நடேச முதலியார் பூங்கா, நாயர் தெரு என்றெல்லாம் திராவிடத் தலைவர்களின் பெயர்களை வைத்துள்ளதைச் சுட்டிக் காட்டி, அதேபோல, மாற்று சித்தாந்திகளின் பெயர்களும் வைக்கப் படவேண்டும் என்றார். சமீபத்தில் இந்து கடவுளரை “சாத்தான்” என்றதை சுட்டிக் காட்டி, பதிலுக்கு அவர்கள் அரக்கர், என்று குறிப்பிடப்பட வேண்டும் என்று வாதிட்டார். கிருத்துவர் “ஐயர்” போன்ற பிரயோகம் செய்யக்கூடாது.

Caldwell book criticism released by H Raja-1

நுாலின் முதல் பிரதியை பெற்ற வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் பேசியதாவது: “எனக்கு மேடைகளில் பேசி பழக்கம் இல்லை, நீதிமன்றத்தில் பேசியிருக்கிறேன். தமிழகத்தில், நீதித்துறையை நம்பி, நீதிமன்றத்தை நாடினால், நல்ல பலன் கிடைக்கிறது. ஆனால், இவ்வளவு கோவில்கள் இருந்தாலும், விக்கிரங்கள் போலியாக இருப்பதால் ;அன் கிடைப்பதில்லை போலும்….1976லிருந்து தான் சிலை திருட்டு அதிகம் ஆனதுஇந்து அறநிலைய அறத்துறை என்பதே தவறு, “அறக்கட்டளைஎன்றிருக்க வேண்டும்..”பசுவதை, சிலை திருட்டு உள்ளிட்டவற்றிற்கு, நான் போட்ட ரிட் மனுவிற்கு, நீதிமன்ற உத்தரவு படி, தமிழக அரசு நல்ல பதில் அளித்துள்ளது. இந்து மதம், பழமையானது; அதன் கோட்பாடுகள் மக்களுடன் இணைந்தவை. அவற்றை யாராலும் அழிக்க முடியாது,” இவ்வாறு அவர் பேசினார்.

Kalyanaraman hounours Raja

புத்தகத்தை வெளியிட்டு எச். ராஜா பேசியது: வெளியிட்டு பேசும் போது, “தமிழர்கள் வந்தேறிகள் என்ற கால்டுவெல்லுக்கு மணிமண்டபம் தேவையா?” என்று கேட்டார்!  ”திராவிடர்களை வந்தேறிகள் எனக்கூறிய, பிஷப் கால்டுவெல்லுக்கு, தமிழகத்தில், சிலையும், மணிமண்டபமும் அமைத்தது எப்படி சரியாகும்,” என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா பேசினார்[2]. உமரி காசிவேலு எழுதிய, ‘பிஷப் கால்டுவெல் – பிழையுரையும், பொய்யுரையும், திராவிட இனவாதமும்’ என்ற நுாலை, சென்னையில், 07-10-2018 அன்று வெளியிட்டு அவர் பேசியதாவது[3]: “கால்டுவெல், நாடார் சமூகத்தை பற்றி குறிப்பிட்டதை சமீபத்தில், ஒரு மேடையில் பேசினேன். அது, என் கருத்து என்பது போல, சமூக ஊடகங்களில் பரப்பி, என்னை சர்ச்சைக்குள்ளாக்கினர். நான், எதை பேசினாலும், சர்ச்சைக்குரியதாய் மாற்ற, பலர் ஆர்வம் காட்டுகின்றனர். கால்டுவெல் எழுதிய, ‘ஆரியர் குடியேற்றக் கோட்பாடுஎன்பதை வைத்து, தமிழகத்தில், அரை நுாற்றாண்டாக, தமிழக இளைஞர்களின் மூளையை குப்பைத் தொட்டியாக, திராவிடக் கட்சிகள் மாற்றி உள்ளன.

 Book release, some kept aside

வந்தேறிகள் கோட்பாடுஆரியர்களுக்கு முன், திராவிடர்களும், இங்கு குடியேறியவர்கள் தான்: ஆரியர்களுக்கு முன், திராவிடர்களும், இங்கு குடியேறியவர்கள் தான்என, கால்டுவெல் கூறி உள்ளார். அவருக்கு, சிலையும், மணிமண்டமும் கட்டப்பட்டது எப்படி சரியாகும்.அவர் கூற்றுப்படி, அறிவற்ற, கருமை நிறம் உடைய, குட்டையான, சுருட்டை முடி கொண்டவர்களே திராவிடர்கள். திராவிடத்தை போற்றிய கருணாநிதியின் குடும்பத்திலேயே, பல்வேறு உருவமைப்புகள் உள்ளவர்கள் இருக்கும் போது, கால்டுவெல்லின் திராவிடக் கூற்று எப்படி சரியாகும். திருவள்ளுவரை, ஏழாம் நுாற்றாண்டைச் சேர்ந்தவர்; தாமஸின் நண்பர்; கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ள கால்டுவெல்லின் கூற்றை, திராவிடக் கட்சிகள் ஏற்கின்றனவா?தமிழக அரசு, 1926ல் வெளியிட்ட அரசாணையில், தமிழகத்தில், தெலுங்கு பேசும் பட்டியல் இனத்தினரை, ஆதி தெலுங்கர்கள் என்றும், தமிழ் பேசுவோரை, ஆதி திராவிடர் என்றும் பிரித்துள்ளனர்; ஏன், ஆதி தமிழர் என, பிரிக்கவில்லை. தமிழகத்தில், தமிழும், சமஸ்கிருதமும் கலந்தே வழங்கின. வணிகர்களுக்கு கூட, சமஸ்கிருதம் படிக்க தெரிந்தது.இதற்கு, தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்திலேயே நிறைய சான்றுகள் உள்ளன. திராவிட மொழிகளைப் பற்றி அறியாமல், திராவிட ஒப்பிலக்கணம் என்ற நுாலை, ஆங்கிலத்தில் எழுதி உள்ளார். ஆங்கிலம், நம் பூர்வ மொழியா. தன் மதத்தை பரப்ப, நம் மண்ணின் மைந்தர்களிடம், பொய்யுரைகளைக் கூறி, நம்ப வைத்து, பிரித்தாளும் சூழ்ச்சியை செய்துள்ளார், கால்டுவெல்.

 Kalayanaraman, GPs, Kasivelu,Raja, Gajendran

திராவிட இனம் என்பது கட்டுக்கதை, மாயை: திராவிடம் என்பது ஒரு இடம்[4]; இனமல்லஎன, ஆதிசங்கரர் கூறி உள்ளார். அதை, இனமாக்கியது, கட்சிகள் தான். திராவிடக் கட்சிகள், தமிழர்களின் வழிபாட்டு முறைகளை உடைத்து, அவர்களுக்கு பக்தியின் மீதிருந்த நம்பிக்கைகளை அழித்து, கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்டன. எப்படி தமிழையும், சமஸ்கிரு தத்தையும் பிரிக்க முடியாதோ அதேபோல் தமிழையும் இந்துவையும் பிரிக்க முடியாது. இரண்டும் இணைந்து இருக்கின்றன. இந்து மதத்தில் தீண்டாமை கிடையாது. ஏற்றத்தாழ்வுகள் இல்லை[5]. இதுவரை, கோவில் சொத்துக்கள் மட்டும், பல லட்சம் கோடி ரூபாய், கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.’பல சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன[6]; அவை, எந்த கோவிலுக்கு உரியது என்பது தெரியவில்லைஎன, தமிழக தொல்லியல் துறை அமைச்சர், பாண்டியராஜன் கூறி உள்ளார்[7]. கோவில் சொத்துக்களை பற்றி, அந்தந்த கோவில் அதிகாரிகள், பதிவேட்டில் குறித்து, சரிபார்க்க வேண்டும்[8]. ஆனால், அதற்குப் பதில், பத்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், கொள்ளையடித்துள்ளனர்[9]. கோவில் நிலங்களும், கோவில்களும், மடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.தற்போது, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், ‘தங்களுக்கு பணிப்பாதுகாப்பு இல்லை; வேறு துறைக்கு மாற்ற வேண்டும்என, கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள் எங்கு சென்றாலும், வழக்கு பாயும். துாத்துக்குடி கலவரத்தை, கிறிஸ்த பாதிரியார்கள்தான், தேவாலய மணியடித்து, துவக்கி வைத்தனர். அவர்கள், நம் மக்களின் ஒற்றுமையை குலைக்க திட்டமிட்டுள்ளனர்,” இவ்வாறு, எச்.ராஜா பேசினார்.

© வேதபிரகாஷ்

13-10-2018

KVR- Calwell criticism book-3

[1] அழைப்பிதழ் அவ்வாறுதான் அச்சிடப் பட்டிருந்தது.

[2] தினமலர், கால்டுவெல்லுக்கு சிலை எதற்கு: எச். ராஜா பேச்சு, : அக் 08, 2018  00:34

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=2118699

[4] தி.இந்து.தமிழ், திராவிடம் என்பது இனம் அல்ல; அது ஓர் இடம்: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விளக்கம், Published : 08 Oct 2018 08:10 IST, Updated : 08 Oct 2018 08:10 IST.

[5] https://tamil.thehindu.com/tamilnadu/article25153723.ece

[6] நெல்லை ஆன்.லைன், கால்டுவெல்லும், ஜி.யூ.போப்பும் தமிழ்ச் சமூகத்தையும் இந்து மக்களையும் பிரித்தார்கள் : எச்.ராஜா பேச்சு, திங்கள் 8, அக்டோபர் 2018 10:50:15 AM (IST)

[7] தி.தமிழ்.இந்து வெளியிட்ட செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளது – http://nellaionline.net/view/32_166369/20181008105015.html

[8] கதிர்.நியூஸ், 10 லட்சம் கோடிக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும் தமிழக கோயில் சொத்துக்கள்” – H ராஜா பகீர்!, By Kathir WebDesk – 8th October 2018

[9]  தி.தமிழ்.இந்து வெளியிட்ட செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளது – http://nellaionline.net/view/32_166369/20181008105015.htmlhttp://kathirnews.com/2018/10/08/10-lakh-crores-looted-hraja/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: