ரத்தம், நிறம், இனம் பிறகு மரபணு வைத்து “விஞ்ஞான” போர்வையில், மக்களைப் பிரிக்கும் முயற்சிகள் [1]
டோனி ஜோசப்பை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை?: டோனி ஜோசப்பின்[1] கட்டுரைகள் மற்றும் புத்தகம், நிறைய பேர்களால் கண்டுகொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது. இப்பொழுதெல்லாம், புத்தகம் விற்கவேண்டும், சினிமா ஓட வேண்டும் என்றால், ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி, அதன் மூலம் வியாபாரத்தைப் பெருக்கி, லாபமடையலாம் என்ற யுக்தியை கையாண்டு வருகிறார்கள். 2017லேயே கண்டுகொள்ளாத நிலையில், 2019ல் மறுபடியும், ஏதோ எய்தியை வெளியிட்டு, வியாபாரத்தைத் தொடங்கியிருப்பது போன்று தெரிகிறது. மரபணுவியல் என்ற போர்வையில். ஏதோ விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி, ஆராய்ச்சியின் புள்ளி விவரங்கள், புள்ளி விவரங்கள் வைத்து விளக்கம், விளக்கங்களை வைத்து திரிபு விளக்கங்கள் என்று பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. ஆனால், ஆரம்பித்திலிருந்தே, திராவிடத்துவ வாதிகள் இவற்றைக் கண்டுகொள்ளவில்லை. ஒன்று அவர்களுக்கு ஆங்கிலத்தில் இருப்பவற்றைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. ஆங்கிலத்தில் படித்து அவர்களுக்கு சொன்னபோது, அவர்களுக்கு சாதகமாக இல்லை என்ற நிலையில் அமைதியாக இருந்து வருகின்றனர்.
டோனியின் வந்தேறி முடிவும், எடுபடாமல் போன புத்தகமும்: இப்பொழுது கூட, “சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் வருகையால்தான் அழிந்தது என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப் பெறவில்லை என்கிறார் கட்டுரையாளர் டோனி ஜோசப்,” என்றுள்ளதை மறைக்கப் பார்க்கின்றனர் திராவிடத்துவவாதிகள், கம்யூனிஸ்ட் மற்றும் இதர பிரிவினைவாதிகள். உண்மைகளை மறைத்து, திரிக்கும் போக்கை, வழக்கமாக, “வினவு” போன்றவற்றில் கவனிக்கலாம்[2].
“இன்று இந்த மரபணுக்கள் எல்லாம் கலந்து ஒன்று பிணைந்திருக்கின்றது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த ஒன்றிணைவை இன்றைக்கும் பார்ப்பனியம் கேள்விக்குள்ளாக்கி மதம், சாதி, மொழியின் பெயரால் இந்திய உழைக்கும் மக்களை சூத்திரன், பஞ்சமன் என்றே ஒடுக்குகிறது. இந்த ஒடுக்குமுறை ஆரியர் வருகையோடு தொடர்புடையது என்பதுதான் முக்கியமானது. “நாங்கள் கருப்பாக இருக்கும் திராவிடர்களோடு சேர்ந்து வாழவில்லையா” என்று தருண் விஜய் கேட்ட கேள்வி அதை வேறு விதத்தில் விளக்குகிறது. இனி இந்துமதவெறியர்கள், ஆரியர்கள்தான் இந்தியாவில் குடியேறினார்கள் என்பதை மறுத்துப் பேச முடியாது. ஆனால் இந்த வரலாற்று உண்மையை அவர்கள் பாடப்புத்தகங்களில் இருந்து தடை செய்ய முனைவார்கள். உண்மையை வன்மையாக மக்களிடம் எடுத்துச் செல்வோம்.”
அதாவது, இந்தியாவிற்குள் வந்தவர்கள் எல்லோருமே “வந்தேறிகள்” என்பதை மறைத்து, அந்த பதிவை செய்தது[3]. இரண்டு வருடங்கள் கழித்து, டெக்கான் குரோனிகல், “ஜாதி மற்றும் ஆரியர்” என்ற தலைப்பில், அதே விவரங்களை வெளிட்டதால் கவனிக்க நேர்ந்தது[4]. திகவோ அமுக்கி வாசிக்க பார்த்தது[5]. தி.இந்து, தமிழில் வந்ததை போட்டு, “நன்றி: ‘தி இந்து’ (16.6.2017)” தனது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டது[6].
65,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி மக்கள் இந்தியாவில் குடியேறினராம்!: கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதிக்கு வந்த அதாவது 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள். எது என்னவாக இருந்தாலும், இந்திய மக்கள் தங்கள் நாகரிகத்தை பல இனம் மற்றும் வரலாற்றிலிருந்து உருவாக்கினார்கள் என்பதே நிஜம். இந்திய நாகரிகத்தின் செழுமையின் உச்சம், அது எல்லாவற்றையுன் உள்ளடக்கிய போதுதான் நிகழ்ந்தது. அதாவது இந்திய மரபியல் அடிப்படையின் மையமாக ‘வேற்றுமையில் ஒற்றுமையே’ இருந்துள்ளது என்பதே உண்மை.
கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் இரண்டு மிகப்பெரிய குடிப்பெயர்வு நடந்துள்ளது: இன்று இந்தியாவில் உள்ளவர்கள் எல்லோருமே “வந்தேறிகள்” தாம் என்ற ரீதியில் டோனி ஜோசப் என்பவர் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மரபணுவியலாளர் டேவிட் ரெய்ச்சின் ஆய்வு முடிவானது 2018 மார்ச்சில் வெளியானது. அவருடன் உலகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, வரலாறு, தொல்லியல், மானுடவியல், மரபணுவில் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 92 அறிஞர்கள் இந்த ஆய்வில் பணியாற்றினார்கள். அந்த ஆய்வானது கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் இரண்டு மிகப்பெரிய குடிப்பெயர்வு நடந்துள்ளது.
7000 – 3000 YBP காலத்தில் நடந்தது: முதல் குடிப்பெயர்வானது தென்மேற்கு இரான் பகுதியில் உள்ள ஜக்ரோஸிலிருந்து நடந்திருக்கிறது. அதாவது, அங்கிருந்து இந்தியாவுக்கு விவசாயிகளாகவும், ஆடு மேய்ப்பவர்களாகவும் வந்திருக்கிறார்கள். இந்த குடிபெயர்வானது 7000 மற்றும் 3000 ஆண்டுகளுக்கு இடையேயான காலக்கட்டத்தில் நடந்திருக்கிறது. இந்த கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதிக்கு வந்த அதாவது 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள்.
2000 BCEல் நடந்த குடிபெயர்வு: இரண்டாவது குடிபெயர்வு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. அதாவது ஆரியர்கள் வந்திருக்கிறார்கள். இது இன்றைய கஜகஸ்தான் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என அனுமானிக்கிறார்கள். குதிரை செலுத்துவதில் வல்லுநர்களான அவர்கள் சமஸ்கிருதத்தின் முந்தைய மொழி வடிவத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பலியிடும் பழக்கத்தையும், வேத பண்பாட்டையும் உருவாக்கியது அவர்களே. எனது புத்தகத்தில் எழுதியது போல, இந்த மக்களை புரிந்து கொள்ள நமக்கு பீட்சாவுடம் ஒப்பிடுவது உதவதலாம்.
இந்தியர்கள் எல்லோருமே பீட்சா மாதிரிதான்[7]: இந்திய மக்களை ஒரு பீட்சாவாக கருதிக் கொள்ளுங்கள். முதல்முதலாக இந்த நிலபரப்பிற்கு வந்தவர்கள் பீட்சாவின் அடிபாகத்தை உருவாக்கினார்கள். அந்த அடிபாகமானது சில இடங்களில் மெல்லிதாகவும், சில இடங்களில் தடிமனாகவும் இருந்தது. இதன் மேல்தான் பீட்சாவின் பிற பகுதிகள் அமைக்கப்பட்டன. அதாவது இந்திய மக்களின் மரபணுவை சோதனை செய்தால், அது 50 முதல் 65 சதவீதம் முதல் முதலாக இந்தியாவிற்குள் குடிப்புகுந்த மரபணுவை ஒத்து இருக்கிறது. பீட்சாவின் மேற்பகுதியில் உள்ள சாஸை போன்றவர்கள் ஹரப்பன் (சிந்து சமவெளி) நாகரிக மக்கள். அதன்மீது உள்ள வெண்ணெய்தான் பிற்காலத்தில் இந்தியாவிற்குள் குடிபுகுந்த ஆரியர்கள், திபெத்தோ-பர்மன் மக்கள் மற்றும் ஆஸ்ட்ரோ-ஆசிய மக்கள். எது என்னவாக இருந்தாலும், இந்திய மக்கள் தங்கள் நாகரிகத்தை பல இனம் மற்றும் வரலாற்றிலிருந்து உருவாக்கினார்கள் என்பதே நிஜம். இந்திய நாகரிகத்தின் செழுமையின் உச்சம், அது எல்லாவற்றையுன் உள்ளடக்கிய போதுதான் நிகழ்ந்தது. அதாவது இந்திய மரபியல் அடிப்படையின் மையமாக ‘வேற்றுமையில் ஒற்றுமையே’ இருந்துள்ளது என்பதே உண்மை[8].
உஷரான திக டோனி ஜோசப்பை திரித்தது[9]: விடுதலையின் திரிப்பு மற்றும் புலம்பல் இவ்வாறாக உள்ளது, “இந்திய மனித இனம் குறித்த மரபணு ஆய்வில் குறிப்பிட்ட பிரிவு மக்கள் மத்திய ஆசியாவின் மேய்ச்சல் நிலப்பகுதியில் இருந்து வந்தவர்கள் என்று மரபணு ஆய்வாளர் டோனி ஜோசப் பிபிசி—க்கு தனது ஆய்வின் முடிவுகள் குறித்து பேட்டியளித்துள்ளார். இதன் மூலம் ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்துவந்தவர்கள் தான் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[10]……………… இந்த சிந்து வெளி நாகரிகமானது, எகிப்திய மற்றும் மெசோ போடாமிய நாகரிக காலகட்டத்தை சேர்ந்தது, ஆரியக் கலாச்சாரத்திற்கு முற்றிலும் எதிரான திராவிடக் கலாச்சாரம் என்று சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ளனர்… அமைக்கப்பட்டன. அதாவது இந்திய மக்களின் மரபணுவை சோதனை செய்தால், அது 50 முதல் 65 சதவீதம் இந்தியாவில் உள்ள பூர்வீக மக்கள் ஹரப்பன் (சிந்து சமவெளி) நாகரிக மக்களின் மரபணுவை ஒத்து இருக்கிறது. ஆனால், தற்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் இதை முற்றிலுமாக மறுக்கின்றனர். அவர்கள் இந்திய வரலாற்றின் உள்ளடக்கத்தை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்கள். ஆரியர்கள் வெளியிலிருந்து குடிபெயரவில்லை என்கிறார்கள். ஆரியர்கள் வருகைக் கோட்பாட்டை முன் வைக்கும் முன்னணி வரலாற்று ஆய்வாளர்களுக்கு மாறாக சமூகவலைதளம் மற்றும் பொதுத்தளத்தில் கடுமையாக கருத்துத்தாக்குதலை மேற்கொள்கின்றனர்”.
© வேதபிரகாஷ்
15-07-2019
[1] ஆசிரியர் குறிப்பு : டோனி ஜோசஃப் ஒரு எழுத்தாளர் BusinessWorld ன் முன்னாளைய ஆசிரியர்., டிவிட்டர் பக்கம் : @tjoseph0010.
[2] வினவு, ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !, சிறப்புக் கட்டுரை – June 23, 2017.
[3] https://www.vinavu.com/2017/06/23/tamil-translation-of-how-genetics-is-settling-the-aryan-migration-debate/
[4] DECCAN CHRONICLE. Caste system and Aryans, Published Jul 7, 2019, 3:02 am ISTUpdated Jul 7, 2019, 3:02 am IST
https://www.deccanchronicle.com/nation/in-other-news/070719/caste-system-and-aryans.html
[5] விடுதலை, ஆரியர்களின் வருகைக்கு மரபணு ரீதியான ஆதாரம் கண்டுபிடிப்பு, சனி, 01 ஜூலை 2017 12:51
[6]http://www.viduthalai.in/component/content/article/133-2012-02-18-07-12-19/145835-2017-07-01-07-28-08.html
[7] பிபிசி.தமிழ், ஆரியர்களும், சிந்துவெளி நாகரிகமும்: இந்திய முற்கால வரலாற்றை திருத்தி எழுதும் மரபணு ஆய்வு, டோனி ஜோசப்-எழுத்தாளர், 31 டிசம்பர் 2018.
[8] https://www.bbc.com/tamil/india-46715678
[9] விடுதலை, “ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்களே” மீண்டும் உறுதி செய்த மரபணு ஆய்வுகள், வெள்ளி, 04 ஜனவரி 2019 14:38
மறுமொழியொன்றை இடுங்கள்