திராவிடத்துவ சரித்திரம், தலைவர்களின் பாடங்கள், தமிழ்நாடு பாடநூல் புத்தகங்கள், கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக லியோனி (1)

திராவிடத்துவ சரித்திரம், தலைவர்களின் பாடங்கள், தமிழ்நாடு பாடநூல் புத்தகங்கள், கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக லியோனி (1)

தமிழகத்தில் திராவிடத்துவ  வாதிகளின் ஆபாசகொக்கோகப் பேச்சுகள்: தமிழகத்தை பொறுத்த வரையில், ஈவேரா, அண்ணா, கருணாநிதி போன்ற திராவிடத்துவத் தலைவர்கள் மற்றும், அணுகுண்டு ஆறுமுகம், இரா. வெற்றிக் கொண்டான், தீப்பொறி சண்முகம் என்ற அடுத்த கட்ட மேடைப் பேச்சாளர்கள், 1950களிலிருந்தே, ஆபாசமாக, அருவருப்பாக, இரட்டை அர்த்தத்தில் செக்ஸ் தொணியில் பேசுவது வழக்கமாக, வாடிக்கையாக இருந்து வந்தது. அப்பொழுதெல்லாம், இரவு 10-11 மணிக்கு மேல், காலை 2 மணி வரை நடக்கும், இத்தகைய கூட்டங்களுக்கு பிரத்யேக கூட்டம் இருக்கும். நடுவில் ஜனரஞ்சகமாக இருக்க எஸ்.ஏ. அசோகன் போன்றோரையும்  பேச வைப்பது உண்டு. அவர் பேசிக் கொண்டே நடித்துக் காட்டுவார், நடித்துக் கொண்டே கிண்டலாக பேசுவார். இதற்ககென்றே தனிக் கூட்டம் வரும். உடன்பிறப்புகளே, ஒரு தாய் மக்களே, போன்றவற்றிற்கு சிறப்பான விளக்கமுமளிக்கப் படும். பிறகு திரைப்படம், திரைப்பட பாடல்கள், நாடகம், சினிமா என்று டிவி வந்தது. இவற்றிலும் அந்த ஆபாச-நகச்சுவை தொடர்ந்தது. பிறகு பட்டிப் பன்ற கலாச்சாரத்திலும் புகுந்தது. 1980-90களில் டிவி-பட்டிமன்றம்   மக்களின் நேரவிரயத்திற்கு அதிகமாகப் பயன் பட்டது. அந்நிலையில், பாப்பையா, லியோனி போன்றோர் பிரபலமாகினர். ஆபாச-கொக்கோக பேச்சுகளுக்கு லியோனி, தனி பிரான்ட் தான்!

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் .லியோனி நியமனம்:  திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஒரு பக்கம் நல்ல அதிகாரிகள் நியமனம் என்று ஆரம்பித்து, இன்னொரு பக்கம் இத்தகைய நியமனங்களும் அரங்கேறின. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். தொண்டாமுத்தூரில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது லியோனி பெண்கள் குறித்துப் பேசியது சர்ச்சையான நிலையில், பாடநூல் கழகத்தின் தலைவராக அவர் நியமனம் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியது[1]. பாமக நிறுவனர் ராமதாஸ், கஸ்தூரி உட்பட்டோரும் இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் விளக்கமளித்த ஐ.லியோனி, “இத்தகைய விமர்சனங்களை நான் பொருட்படுத்தவில்லை. ஏனெனில், பெண்களே அதுகுறித்த பெரிய போராட்டத்தையோ, பெரிய அளவிலான எதிர்ப்பையோ இதுவரை பதிவு செய்யவில்லை” என்றார்[2]. அதாவது, போராட்டம் நடத்தினால் தான், இவரது ஆபாசத்திற்கு அப்ரூவல் கிடைக்கும் போலிருக்கிறது!

வெளிநாட்டு மாட்டு பாலை குடித்து, குடித்து நம்ம தமிழக பெண்கள் பலூன் மாதிரி பெருத்து போயிட்டாங்கா லியோனி தேர்தல் பேச்சு: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டபோது தொடங்கிய விவாதங்களும் சர்ச்சைகளும், அவர் பொறுப்பேற்ற பிறகு வேறு திசையில் இன்னும் தீவிரம்பெற்றிருக்கின்றன. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பெண்களைக் கண்ணியக் குறைவான முறையில் பேசியதாக லியோனி மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள், அவர் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டபோது மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தப்பட்டிருக்கின்றன. கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு ஆதரவாக லியோனி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய லியோனி, “வெளிநாட்டு மாட்டு பாலை குடித்து, குடித்து நம்ம தமிழக பெண்கள் பலூன் மாதிரி பெருத்து போயிட்டாங்கா[3]. அவர்களின் பிள்ளைகளும் அதே போன்று பெருத்து போயிட்டாங்கா. ஒரு காலத்துல பெண்களோட இடுப்பு 8 மாதிரி இருக்கும், குழந்தைகளை தூக்கி இடுப்புல வச்சா அப்படியே உட்கார்ந்துக்குவாங்க,” என்று மிகவும் அறுவருக்கத்தக்க வகையில் பேசினார்[4].

லியோனி பேச்சுகளை கவனித்தால், அவர் ஆசிரியராக இருந்ததே கேள்விக் குறியாகிறது: 33 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்த லியோனி, அறிவொளி இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டவர். அவரைப் பாடநூல் கழகத்தின் தலைவராக நியமித்தது சரியானதுதான் என்று திமுகவுக்கு வெளியிலிருந்தும் ஆதரவுக் குரல்கள் எழுந்தன. தவிர்த்திருக்கப்பட வேண்டியவை என்று அவரது மேடைப் பேச்சுகளைக் கடந்துசென்றாலும், பாடநூல் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அவர் அளித்த பதில்கள் விவாதத்துக்குரியதாகவே அமைந்துள்ளன. அத்தகைய பேச்சுகளில் ஊறிப் போனவர்களை மாற்ற முடியாது. ஒருவர் பேசும் போதே, அவர்களின் இயற்கையான குணம் வெளிப்பட்டு விடும். என்னத்தான், மறைத்தாலும், மறைக்க முயன்றாலும், நில நேரங்களில் வார்த்தை உச்சரிப்பு, கருத்துகள் தோன்றும் தன்மை, முதலியவை வெளிப்படுத்தி விடும்.

அண்ணா போல கருணாநிதி பற்றிய பாடங்கள் 12ம் வகுப்பு பாடதிட்டத்தில் சேர்க்கப் படும்: முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடத்தை 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக பதவியேற்ற திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார். பாடநூல்களை மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில் மாற்றுவதே என்னுடைய நோக்கம். நான் மாணவராக இருந்த காலக்கட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் பேச்சு பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது[5]. அதுபோல ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் கருணாநிதியின் கல்விப் பணி, இலக்கிய பணி, பிற்படுத்தப்பட்டோருக்காக ஆற்றிய பணிகள் ஆகியவற்றைச் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும்,” என்று தெரிவித்தார்[6].2022ஆம் ஆண்டு முதல் இனி பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு என்று தான் இருக்கும்.

கருணாநிதி பற்றிய பாடங்கள் என்றால் எப்படியிருக்கும்?: ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் இலக்கியப் பணிகள், கல்விப் பணிகள், பொதுமக்களுக்கு ஆற்றிய பணிகள், பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி கற்பதற்காக ஆற்றிய பணிகள் குறித்துப் பாடங்கள் இடம்பெறும் என்று லியோனி தெரிவித்துள்ளார். நடப்புக் கல்வியாண்டில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுவிட்டதால், அடுத்த ஆண்டு இத்திருத்தங்களைச் செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். திமுகவின் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்துகொண்டதற்கான பரிசாகத் தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை அவர் கருதியிருக்கலாம். இப்பொழுதுள்ள 60 முதல் 90 வயதானவர்களுக்கு திராவிடத் தலைவர்கள் பற்றி நன்றாகவே தெரியும். ஆகையால், அவர்களைப் பற்றிய விவரங்களை பாடங்களாக கொடுத்தால், அவை நிச்சயமாக முழுமையாக, உண்மையாக இருக்காது என்று தெரியும். ஆகவே, சரித்திர ரீதியில், அத்தகைய 50% உண்மை, 70% என்ற நிலையில் பாடங்களைப் படித்தால், மாணவ-மாணவிகளுக்கு உண்மை தெரியாது.

கருணாநிதி பாடம் பற்றி “தமிழ்.இந்து” கூறுவது: லியோனி, தான் நியமிக்கப் படுத்தப் பட்டதற்கு, நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையிலேயே அவரது பேச்சு அமைந்துள்ளது, என்கிறது தமிழ்.இந்து. “கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஏறக்குறைய அனைத்து வகுப்புப் பாடங்களிலுமே திமுக குறித்தும் மு.கருணாநிதி குறித்தும் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்தக் குறிப்புகள் நீக்கப்பட்டன. அதுபோலத் தலைவர்களின் பங்களிப்புகளை மாணவர்களுக்குப் பாடமாக வைப்பதை அரசியலாகப் பார்க்கக் கூடாது என்று ஒரு கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார் லியோனி. ஒன்றிய அரசோ, மாநில அரசோ எந்தவொரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் அதன் கருத்தியல்ரீதியிலான சார்புநிலைகள் பாடநூல்களிலும் எதிரொலிக்கவே செய்கின்றன. தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கல்ல”, என்கிறது.

© வேதபிரகாஷ்

22-07-2021


[1] தமிழ்.இந்து, லியோனி நியமனம்; தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் நோக்கத்தைச் சிதைப்பதாக உள்ளது: ஓபிஎஸ், செய்திப்பிரிவு, Published : 09 Jul 2021 02:07 PM; Last Updated : 09 Jul 2021 03:02 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/691168-ops-on-lioni-1.html

[3] கதிர்.நியூஸ், தமிழக பெண்களின் இடுப்பு இப்படியா இருக்கணும்: வக்கிர புத்தியுடன் பேசிய திமுக பேச்சாளர் லியோனி.!, By : Thangavelu  |  24 March 2021 11:20 AM.

[4] https://kathir.news/politics/dmk-spoke-person-campaign-dindigul-leoni-bad-words-women-886663

[5]  ஏசியாநெல்.தமிழ், தமிழகப் பள்ளிப் பாடங்களில் கருணாநிதி பற்றிய பாடம்பதவியேற்றதும் திண்டுக்கல் லியோனி அதிரடி.!, Asianet Tamil, Chennai, First Published Jul 12, 2021, 8:57 PM IST.

[6] https://tamil.asianetnews.com/politics/karunanidhi-biography-in-school-curriculum-from-1st-to-12th-class-dindigul-leoni-action–qw51l7

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: