கல்வெட்டியல், கல்வெட்டு நிபுணர், போராடும் பிரச்சினை- 2013லிருந்து பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைத்து தொல்துறையினர் ஆர்பாட்டம் செய்வது! ஒப்பந்தமுறையில் ஆள்சேர்ப்பு வேண்டும் என்றால் சொல்லியிருக்கலாமே? (2)

கல்வெட்டியல், கல்வெட்டு நிபுணர், போராடும் பிரச்சினை– 2013லிருந்து பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைத்து தொல்துறையினர் ஆர்பாட்டம் செய்வது! ஒப்பந்தமுறையில் ஆள்சேர்ப்பு வேண்டும் என்றால் சொல்லியிருக்கலாமே? (2)

தேசிய அருங்காட்சியகத்தில் உரிய நிபுணர்கள் கிடைக்காததால் 92 காலியிடங்கள் நீக்கப் பட்டன: தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப் படும் 2 லட்சத்திற்கு மேலாக உள்ள விலையுயர்ந்த பொருட்களை விளக்க 15 பேர் தான் உள்ளனர்.  ஜூலை 23, 2019 அன்று காலியிடங்களுக்கு திறமையான நிபுணர்கள் வராதலால், அவை காலாவடி ஆகியதாக அறிவித்து, நீக்கப் பட்டன[1]. தகுதி வாய்ந்தவர்கள் கிடைக்கவில்லை என்று 2014 முதல் 2019 வரை ஐந்து வருடங்களாக நிரப்பப் படாமல் காலியாக இருந்தன. ஏனெனில், சரித்திரகாலத்திற்கு முந்தைய பொருட்கள், கையெழுத்துப் பிரதிகள், நாணயங்கள், கல்வெட்டுகள், தாமர பட்டயங்கள் முதலியவற்றை விளக்க, பாதுகாக்க யாரும் வரவில்லை[2]. அதனால், அவ்வாறு செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது[3]. அத்தகைய நிபுணத்துவம், வல்லமை, திறமை, கல்விதகுதி என்று எல்லாம் இருந்திருந்தால், ஏன் அந்த 92 காலியடங்களுக்கு தமிழர்கள் முறைப்படி விண்ணப்பித்து சேர்ந்திருக்கக் கூடாது?  குங்குமம், விகடன், நக்கீரன், கலைஞர் செய்தி என்றெல்லாம் ஊடகங்களில் பெருமை பேசுபவர்கள் ஏன் சேரவில்லை?

இளைஞர் அகழாய்வாய்வாளர் [Young Archaeologist (ASI-YA)] சேர்ப்பு என்று அறிவிக்கப் பட்டது: 27-07-2021 அன்று இளைஞர் அகழாய்வாய்வாளர் [Young Archaeologist (ASI-YA)] சேர்ப்பு பற்றி சுற்றறிக்கை விடப் பட்டது[4]. மாதம் ரூ 35,000/- என்று ஒப்பந்த முறையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க அறிக்கை வெளியிட்டது. இதையும், சிலர் சுட்டிக் காட்டி, அகழாய்விற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள், ஆனால், கல்வெட்டியல் துறைக்கு ஆள் சேர்ப்பதை தடுக்கிறார்கள் என்றேல்லாம் என்று சொல்வதாகட் தெரிகிறது. இருப்பினும், தமிழ் ஊடகங்களில் இவையெல்லாம் வெளிவரவில்லை. வெங்கடேசன் கடிதம் எழுதியது, தங்கம் தென்னரசு கல்வெட்டு படித்தது, கனிமொழி ஆய்வு செய்தது பற்றி தான் செய்திகள் வந்துள்ளன.  ஒருவேளை, இந்த வேலைக்கும் கல்வெட்டு நிபுணத்துவ இளைஞர்கள் விரும்பினால், அவர்களுக்கும் அதுபோல வேலை கொடுக்க, பெரியவர்கள் பதாகை ஏந்தலாம், போராடலாம், ஏன் மோடிக்கு கடிதம் கூட எழுதலாம். ஆனால், செய்யவில்லை. ஊடகங்களில் தற்பெருமை செய்திகளை வெளியிட்டு,  அது-இது-எது பாணியில் ஆரிய-திராவிட கட்டுக் கதைகளுக்கு வந்து, ஆர்பாட்டங்கள் செய்வதில் முடிந்துள்ளன.

டிசம்பர் 2020 – ‘இந்தியாவில், எத்தனை கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் எந்த மொழியில் அதிக கல்வெட்டுகள் உள்ளன: என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தர விட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர், இளஞ்செழியன் தாக்கல் செய்த பொதுநல மனு: “மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆய்வகப் பிரிவு, மைசூரில் உள்ளது.தமிழக அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட, 90 சதவீத கல்வெட்டுகள் மற்றும் அவற்றின் நகல் எடுக்கப்பட்ட படிகள், அங்கு உள்ளன.அவை, முறையாக பராமரிக்கப்படவில்லை. அவை சேதமடைந்து, அழியும் நிலையில் உள்ளன. அங்கு சென்று, தமிழக தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய இயலவில்லை. மைசூரில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் அவற்றின் நகல் படிகளை, தமிழகத்திற்கு கொண்டு வந்து பராமரிக்க, நடவடிக்கை எடுக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்[5]. நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி அமர்வு விசாரித்தது. மத்திய அரசுத் தரப்பு, ‘இவை, முதலில் ஊட்டியில் பாதுகாக்கப்பட்டன. தட்பவெப்ப நிலை கருதி, மைசூருக்கு மாற்றப்பட்டன. அங்கு பாதுகாக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என தெரிவித்தது[6].

கட்டமைப்பு வசதிநீதிபதிகள் உத்தரவு: இந்தியாவில், எத்தனை கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் எந்தெந்த மொழிகளைச் சேர்ந்த கல்வெட்டுகள் உள்ளன. எந்த மொழியில், அதிக கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. மைசூரில் உள்ளவற்றில், எத்தனை சேதம் அடைந்துள்ளன. மத்திய தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வகப் பிரிவின் கிளையை, தமிழகத்தில் ஏற்படுத்தினால் என்ன?மைசூரில் உள்ள பொருட்களை தமிழகத்திற்கு மாற்றி பாதுகாக்க வாய்ப்புள்ளதா, அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை, தமிழக அரசு ஏற்படுத்தி தர சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து, மத்திய, மாநில தொல்லியல் துறைகள், டிச., 10, 2020ல் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

2019 – பிப்ரவரியில் ஒரு வழக்கு: 16—02-2019 அன்று மதுரை உயர்நீதிமன்றமும் தமிழின் தொன்மைக்குச் சான்றாக இருக்கும் சமணர்காலக் கல்வெட்டுகளைப் பாதுகாக்கத் தொல்லியல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை தொல்லியல் துறைக்குக் கேள்வி எழுப்பியுள்ளது[7]. விகடனின் செய்தி, செய்தியாக இல்லை, ஏதோ தீர்ப்பு கொடுக்கும் தோரணையில் உள்ளது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட வாதங்கள், ஆவணங்கள் பற்றி சொல்லாமல், “மத்திய அரசு, வடநாட்டுத் தொன்மையை வெளிப்படுத்த முயற்சிக்கும் அளவுக்குத் தமிழகத்தின் தொன்மையை வெளிப்படுத்துவதில் போதிய அக்கறையின்றியே செயல்பட்டுவருகிறதுஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல் என்று பல்வேறு அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு போதிய முக்கியத்துவத்தை எப்போதுமே அளித்ததில்லை. பாதுகாக்க வேண்டிய முக்கிய சின்னங்களான சமணர் படுகைகள் மற்றும் தமிழ் பிராமி கல்வெட்டுகளுக்கும் இதே நிலைமை தான்.” இவ்வாறு ஏதோ குடுமிப்பிடி சண்டையை மூட்டிவிடுவது போலிருக்கிறது[8].

2019 ஆகஸ்டில் தொடர்ந்த வழக்கு: பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரம் பகுதியில் ஆறு வார்டுகளில் உள்ள 59 ஏக்கர் நிலம், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள நிலங்களை யாரும் விற்கவோ, வாங்கவோ, வீடு கட்டவோ அல்லது வீட்டை புதுப்பிக்கவோ கூடாது என தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவித்தனர். தொல்லியல் துறையின் இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று (07.08.2019) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், பல்லாவரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை சுற்றி வேலி அமைப்பதற்காக தொல்லியல் துறையினரும், வேலையாட்களும் சென்றபோது அந்த பகுதியில் உள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வேலி அமைக்கும் பணியை மேற்கொள்ள முடியவில்லை என வாதிட்டார். இதையடுத்து, அகழ்வாராய்ச்சி செய்வதற்காக குறிப்பிட்ட அந்த பகுதிகளில் வேலி அமைக்க பாதுகாப்பு வழங்கும்படி, நீதிபதி கிருபாகரன் பரங்கிமலை டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட்டார். பின்னர், இந்தியாவில் கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான கல்வெட்டுகள் தமிழில் உள்ளதால் தமிழ்மொழி தெரிந்த கூடுதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களை ஏன் நியமிக்க கூடாது எனக் கேள்வி எழுப்பினார்[9]. மேலும், கல்வெட்டு ஆராய்ச்சி மைய கிளையை ஏன் சென்னையில் அமைக்க கூடாது எனவும், அனைத்து தமிழ் கல்வெட்டுகளையும் ஏன் சென்னைக்கு மாற்றக்கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இதற்கு வரும் 25ம் தேதிக்குள் பதில் அளிக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்[10].

© வேதபிரகாஷ்

02-08-2021


[1] The museum issued its office order on July 23, 2019 announcing that the group A, B and C posts stand abolished, following a ministry of culture order[1]. A museum source informed that of the 92 posts, up to 50 were group A and B — functional and technical staff.

[2] Times of India, National Museum in Delhi abolishes 92 vacant posts, Manimugdha S Sharma / TNN / Updated: Jul 26, 2019, 08:58 IST.

[3] https://timesofindia.indiatimes.com/city/delhi/national-museum-abolishes-92-vacant-posts/articleshow/70386889.cms

[4] Circular No.A.44/27/2021-ADMN-I, Government of India, Ministry of Culture, Archaeological Survey of India dated 27-07-2021

[5] தினமலர், எந்த மொழியில் அதிக கல்வெட்டுகள்? அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!,  Added : டிச 03, 2020  00:44.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2663841

[7] விகடன், அழியும் தமிழின் தொன்மையைப் பாதுகாக்க மறுப்பது ஏன்? – நீதிமன்றத்தின் கேள்விக்குப் பின் இருக்கும் நியாயங்கள், சி.வெற்றிவேல், Published:17 Feb 2019 8 AM; Updated:17 Feb 2019 8 AM.

[8] https://www.vikatan.com/spiritual/miscellaneous/149917-extinct-of-tamil-jain-beds-and-tamil-bhrami-inscriptions

[9] கலைஞர்.செய்தி, கல்வெட்டு ஆராய்ச்சி மைய கிளையை ஏன் சென்னையில் அமைக்கக் கூடாதுசென்னை உயர் நீதிமன்றம் கேள்வி, 10:08:35 pm – Sep 07, 2019.

[10] https://m.kalaignarseithigal.com/article/tamilnadu/chennai-high-court-questioned-why-should-not-set-epigraphical-research-center-in/c464f1d9-030f-4950-827a-ce9702560b9a

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: