கல்வெட்டியல், கல்வெட்டு நிபுணர், போராடும் பிரச்சினை- 2013லிருந்து பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைத்து தொல்துறையினர் ஆர்பாட்டம் செய்வது! (1)

கல்வெட்டியல், கல்வெட்டு நிபுணர், போராடும் பிரச்சினை– 2013லிருந்து பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைத்து தொல்துறையினர் ஆர்பாட்டம் செய்வது! (1)

கல்வெட்டு பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவோ, புதிய பணியிடங்களை உருவாக்கவோ, எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை: மத்திய தொல்லியல் துறையில் உள்ள கல்வெட்டு ஆய்வாளர்கள், 15-07-2021, அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய தொல்லியல் துறையின் கீழ், பிராந்திய அலுவலகங்கள் உள்ளன. தென் மாநிலங்களுக்கு, கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பிராந்திய அலுவலகம், தலைமையிடமாக உள்ளது. சென்னை உள்ளிட்ட இடங்களில், இதற்கு வட்டார அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், கல்வெட்டு ஆய்வுப் பிரிவு மிக முக்கியமானதாக உள்ளது. இந்த பிரிவு தான், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகத்தை, கல்வெட்டுகளின் வாயிலாக படித்து, வரலாறாக பதிவு செய்கிறது. இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை, தோட்ட வேலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஆள் எடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால், கல்வெட்டு பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவோ, புதிய பணியிடங்களை உருவாக்கவோ, எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை[1]. இதை கண்டிக்கும் வகையில், சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள, மத்திய தொல்லியல் துறையின், வட்டார அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் உள்ள கல்வெட்டு துறையினர், அமைதியான முறையில், கையில் பதாகைகளை ஏந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[2].

ஒப்பந்த முறையில் வேலை வேண்டும் என்றால், அதை வெளிப்படையாகக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்: மத்திய தொல்லியல் துறை, தோட்ட வேலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஆள் எடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால், கல்வெட்டு பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவோ, புதிய பணியிடங்களை உருவாக்கவோ, எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது பொய். கீழே விளக்கியுள்ளப் படி, ஒப்பந்த முறையில் கல்வெட்டுத் துறைக்கும் ஒரு ஆண்டிற்கு ஆள் எடுக்க வேண்டும் என்றால், சொல்லியிருக்கலாம், இப்பொழுதும், அவ்வாறு செய்வது சுலபமே. பிறகு அதற்கு போராடாமல், திசைத் திருப்பும் அவசியம் தேவையில்லை. ரூ 35,000/- வாங்கிக் கொண்டு, ஓராண்டு வேலைசெய்ய தயார் என்றால், தாராளமாக விண்ணப்பித்து, வேலைக்கு போகலாம். யாரும் தடுக்கப் போவதில்லை. ஆகவே, கல்வெட்டு நிபுணர்களின் உண்மையான பிரச்சினை என்ன என்பதை, அனுபவஸ்தர்கள் ஒழுங்காக தெரிவிக்க வேண்டும். மற்றவர்கள் சொல்லியதைக் கேட்டு, பதாகை ஏந்துவதால், எந்த பிரயோஜனமும் இல்லை.

தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதரன் உண்மையினை மறைத்து பேசியது: ‘பிரதமரே, கல்வெட்டு பிரிவை காப்பாற்றுங்கள்’ என்ற பதாகையை கையில் பிடித்துக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை, பல மூத்த வரலாற்று ஆய்வாளர்களும், கல்வெட்டியல் அறிஞர்களும், சமூக வலைதளங்களில் வெளியிடத் துவங்கியது, பரபரப்பை கிளப்பியது[3]. எதற்காக இந்த உருக்கமான வேண்டுகோள் என்பது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதரன் கூறியதாவது[4]: “இந்திய தொல்லியல் துறையில், பல்வேறு பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசு விளம்பரம் செய்திருந்தது. அதில், ‘கல்வெட்டு ஆய்வாளர்என்ற பிரிவே இல்லை. இதைப் பார்த்து விட்டுத்தான் மூத்த ஆய்வாளர்களும், அறிஞர்களும், ‘கல்வெட்டு பிரிவை காப்பாற்றுங்கள்என்ற பதாகையை ஏந்த வேண்டியிருந்தது.இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மைசூரு, நாக்பூர், லக்னோ, சென்னை ஆகிய இடங்களில் உள்ள இந்திய தொல்லியல் துறை அலுவலகங்களில் மொத்தம், 31 கல்வெட்டு ஆய்வாளர்கள் தான் உள்ளனர்.கொஞ்சம் யோசித்து பாருங்கள்”.

தென்னிந்திய கோவில்கள் கல்வெட்டுகள் 39-தொகுதிகள் வெளியிடப் பட்டுள்ளன: ஸ்ரீதரன் கூறியதாவது,இதுவரை இந்தியாவில், 60,000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதில், 20,000 கல்வெட்டுகள் தான் படியெடுக்கப்பட்டு, அதன் விபரங்கள் வாசிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான கல்வெட்டுகளை படியெடுத்து வாசிக்க வேண்டும். தமிழகத்திலேயே, 32,000 கோவில்கள் உள்ளன. இதில் எல்லாவற்றிலும் இல்லையென்றாலும், ஆயிரக்கணக்கான கோவில்களில் கல்வெட்டுகள் உள்ளன. அவை காலப் போக்கில் பல்வேறு காரணங்களால் சிதைந்து போய் விடும். அதற்கு முன், அவற்றை எல்லாம் கண்டுபிடித்துப் படியெடுக்க வேண்டாமா? இதுவரை, மத்திய தொல்லியல் துறை, தான் கண்டுபிடித்து வாசித்த கல்வெட்டு விபரங்களை, 39 தொகுதிகளாக வெளியிட்டுள்ளது; இன்னும் பல தொகுதிகள் வெளிவர வேண்டியுள்ளது.” 1947லிருந்து இவர்கள் எல்லோரும் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை.

அப்படியானால், அதற்கு உரிய கல்வெட்டு ஆய்வாளர்கள் தேவை இல்லையா: ஸ்ரீதரன் கூறியதாவது,“அப்படியானால், அதற்கு உரிய கல்வெட்டு ஆய்வாளர்கள் தேவை இல்லையா; அதுவும் கல்வெட்டு ஆய்வு என்பது, மிக முக்கியமான சமுதாய பணி. அது, வழிபாட்டு வரலாற்றை மட்டும் சொல்வதில்லை; சமுதாய வரலாற்றையும் சொல்கிறது.உதாரணமாக, இன்று நாம் சென்னைக்கு அருகே உள்ள ஒரு பகுதியை, திரிசூலம் என்று அழைக்கிறோம். அன்றைக்கு அதன் பெயர், திரிசுரம். திருமுக்கூடலில், ஆதுர சாலை இருந்துள்ளது. நாவிதர்களுக்கான பணிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இதையெல்லாம் கல்வெட்டு வாயிலாகவே தெரிந்து கொண்டோம்”……….“கீழடி ஆய்வு பற்றி பேசுகிறோம். அதில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை கல்வெட்டு ஆய்வாளர்களால் தான் வாசிக்க முடியும். பல்வேறு நாணயங்கள் கிடைத்துள்ளன; அதன் முக்கியத்துவத்தையும், காலத்தையும் கணிக்க ஆய்வாளர்கள் தேவை.இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான், கல்வெட்டு ஆய்வாளர் பிரிவை வலிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது,” இவ்வாறு ஸ்ரீதரன் கூறினார். “அப்படியானால், அதற்கு உரிய கல்வெட்டு ஆய்வாளர்கள் தேவை இல்லையா…?,” ஆமாம், தேவைதான், பிறகு ஏன் இல்லை?

பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைப்பது: நிதி ஆயோக் பரிந்துரை பேரில், 2013லிருந்தே, இந்த திட்டம் செயல்பட ஆரம்பித்து விட்டது. இருப்பவர்களுக்கு, பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில், பணியாளர் மறுசீரமைப்பு முறையை அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தத்தம் சங்கங்கள் மூலமாக ஒப்புக் கொள்வது சாதாரணமான விசயமாக இருந்து வருகிறது. ASI என்ற பெயரை,  ஆஸ்மி – Ashmi—Archaeological Survey and Heritage Management of India என்று மாற்றியமைக்க திட்டமிடப் பட்டது. 2020ல் சமஸ்கிருத மற்றும் திராவிட கல்வெட்டு அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிமுறைகள் உருவாக்கப் பட்டதையும் ஒப்புக் கொண்டனர்[5]. இது பற்றி சுற்றுக்கு விட்டு, கருத்து கேட்டுத் தான் “Assistant Superintending Epigraphists and Assistant Epigraphists (Sanskrit, Dravidian and Arabic and Persian Inscriptions) Group ‘B’ posts, Recruitment Rules, 2020” உருவாக்கப் பட்டன[6]. இவ்வாறு 2013லிருந்து நடந்து வரும் நிகழ்வுகளை முழுவதும் அறிந்து கொள்ளாமல் அல்லது உண்மையினை சொல்லாமல், திடீரென்று இப்பொழுது ஏதோ நடக்கிறது போன்ற மாயையை உருவாக்க முற்படுவது, யாருக்கும் நல்லதல்ல. குறிப்பாக, ஓய்வு பெற்று வசதியாக இருப்பவர்கள், இருப்பவர்களுக்கு பிரச்சினை உருவாக்கும் விதத்தில் ஊடகங்களில் பேட்டி அளிப்பது, அறிக்கைகள் விடுவது முதலியவை தவிர்க்கப் பட வேண்டும் / முதலியவற்றைத் தடுக்க வேண்டும். 28-09-2020 அன்று வெளியிடப் பட்ட விதிமுறைகளையும் எதிர்க்கவில்லை.

© வேதபிரகாஷ்

02-08-2021


[1] தினமலர், கல்வெட்டு ஆய்வாளர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம், Added : ஜூலை 16, 2021  00:47.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2803154

[3] தினமலர், கல்வெட்டு பிரிவை வலிமைப்படுத்துவது அவசியம்‘,  நமது நிருபர், Updated : ஆக 01, 2021  01:12 |  Added : ஆக 01, 2021  01:11.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2813989

[5] The Notification No. 3-2/2020, the 28th September, 2020 was issued to introduce rules on the posts of Assistant Superintending Epigraphists and Assistant Epigraphists.

[6] https://www.staffnews.in/wp-content/uploads/2020/10/Para-Medical-Worker-Library-Clerk-Chief-Chemist-etc-post-rr.pdf

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: