கல்வெட்டியல், கல்வெட்டு நிபுணர், போராடும் பிரச்சினை-  தமிழக அரசியல்வாதிகள் புகுந்து குழப்புவது, நிலுவையில் கிடக்கும் வழக்குகள், ஆரிய-திராவிடக் கட்டுக் கதைகளில் முடிந்த நிலை! (4)

கல்வெட்டியல், கல்வெட்டு நிபுணர், போராடும் பிரச்சினை–  தமிழக அரசியல்வாதிகள் புகுந்து குழப்புவது, நிலுவையில் கிடக்கும் வழக்குகள், ஆரியதிராவிடக் கட்டுக் கதைகளில் முடிந்த நிலை! (4)

கல்வெட்டுத் துறையில் சிறப்பானவர் இல்லாதிருப்பது[1]: கல்வெட்டுத்துறையினர், வெளியே வராமல், காலத்தை ஓட்டி வந்தனர். தேசிய-அனைத்துலக மாநாடுகளில் கலந்து கொள்வது, ஆராய்ச்சி கட்டுரைகள் படிப்பது என்றெல்லாம் அலுவலகங்களில் உட்கார்ந்திருந்தனர். தமிழகத்தில் உள்ளோர், அப்பதவிக்கு வர, போதிய படிப்பு, அனுபம் இல்லாதிருததால், அவர்கள் வேலைக்கு வர முடியவில்லை[2]. நீதிமன்ற வழக்குகள் இதை அப்பட்டமாக வெளிப் படுத்துகிறது[3]. “இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடந்தது. “கல்வெட்டுத்துறையில் ரொம்ப நாட்களாக வட இந்தியர்கள்தான் பெரிய பொறுப்பில் இருந்தனர். ஒரு கட்டத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த நாகராஜ் ராவ் என்பவர் முக்கிய பொறுப்புக்கு வந்தார். அதனால் பெரிய தகராறு எல்லாம் நடந்தது. தென் இந்தியாவில் இருந்து ஒருத்தர் வந்துட்டார் என வட நாட்டவர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அது இன்றும் நீடிக்கிறது என்பதற்கு சான்றுதான் இப்போது கல்வெட்டுத்துறையில் அறிவித்திருக்கும் பணி இடங்கள். இவர் பதவிக் காலம் முடிந்த உடனே கல்வெட்டுக்கு என்று இருந்த மதிப்பு குறைந்து போனது,” என்கிற அந்த அதிகாரி, கல்வெட்டுகள் குறித்து தமிழக அரசின் செயல்பாட்டை விவரித்தார். குங்குமம் இப்படியெல்லாம் கதை விட்டிருக்கிறது[4].

அரசியல் செய்வதால், திறமை வந்து விடாது: ‘‘தமிழக அரசைப் பொறுத்தவரை கல்வெட்டு, தொல்லியல் துறையில் அதீத அக்கறை கொண்டிருக்கிறது. 2010ல் கலைஞர் முதல்வராக இருந்த போது, தமிழ் கல்வெட்டுகள் எல்லாம் பதிப்பிக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் அன்பழகனுடன் இணைந்து முழு முயற்சி எடுத்தார். அதற்காக கையெழுத்தும் போடப்பட்டது. அந்த நேரத்தில் அது கைகூடாமல் போனது. இப்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. கல்வெட்டுகளைப் பதிப்பிக்கும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுத்தால் நன்றாக இருக்கும். கல்வெட்டுத்துறையினை, தொல்லியல் துறையோடு இணைத்திருக்கிறார்கள். கல்வெட்டுகள் குறித்தான காப்பிகள் கொடுத்தால் கூட இங்கு நம் ஆட்களை நியமித்து பாதுகாத்து, பராமரித்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யலாம். தொல்லியல் மீது மிகுந்த கவனம் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசில், இப்போது நல்ல செயலர்களும், கல்வெட்டுகள் படிக்கத் தெரிந்த அமைச்சரும் இருக்கின்றனர்.

ஒருவருக்கு ஒருவர் ஜால்றா அடிப்பதால் திறமை வந்து விடாது: “அமைச்சர் தங்கம் தென்னரசு கல்வெட்டுகளை நன்றாகவே படிப்பார். அத்துடன் அறிவியல்பூர்வமாகக் கொண்டு வர ஆசைப்படும் உதயசந்திரனின் செயல்பாடுகள் இன்னும் ஊக்கமாக இருக்கிறது. அவர் போட்ட அடிப்படை இன்று நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது...” என்கிற அந்த அதிகாரி, கல்வெட்டுகளின் தேவை குறித்தும் பேசினார். “இந்தியாவின் உண்மை வரலாற்றை எழுதக்கூடிய அலுவலகம் இது. இப்போது கேட்பது தமிழ் கல்வெட்டுகளுக்கு மட்டும் பணி நியமனம் அல்ல, சமஸ்கிருத கல்வெட்டுக்கும்தான். அதையும் வாசிக்க, பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் இந்திய வரலாறு முழுமையடையும். மண்ணுக்கு அடியில் இருப்பது நமக்கு எப்படித் தெரியும்..? எல்லாமே கல்வெட்டுகள் மூலமாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இன்று இத்துறையில் இருக்கும் பலருக்கு கல்வெட்டைப் பெரிதாக படிக்கத் தெரியாது. இதற்காக அரசைக் குறை சொல்லவில்லை. துறையில் இருப்பவர்கள் அவர்களுக்குத் தெரிந்தவர்களை நியமித்துவிடுகிறார்கள். இது மாற வேண்டும். அதே வேளையில் கல்வெட்டுகளின் முக்கியத்துவம் குறித்து கலாசார விழிப்புணர்வுத் திட்டங்கள் நடத்தப்பட வேண்டும்…” என்று அழுத்தமாக முடித்தார் அந்த அதிகாரி.

இன்று இத்துறையில் இருக்கும் பலருக்கு கல்வெட்டைப் பெரிதாக படிக்கத் தெரியாது: பளிச்சென்று நடுவில் சொன்ன உண்மை இதுதான். மற்றும், “இப்போது கேட்பது தமிழ் கல்வெட்டுகளுக்கு மட்டும் பணி நியமனம் அல்ல, சமஸ்கிருத கல்வெட்டுக்கும்தான். அதையும் வாசிக்க, பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் இந்திய வரலாறு முழுமையடையும்,” இதை திராவிடத்துவ வாதிகள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?  சமஸ்கிருத கல்வெட்டுகளை யார் படிப்பார்கள், “அதையும் வாசிக்க, பாதுகாக்க வேண்டும்,” என்றால் யார் செய்வது? பாவம், ஏதோ போகிற போக்கில், இத்தகைய உண்மையினையும் சொல்லி விட்டார் போலும். குங்குமம் படிப்பவர்களும், இதையெல்லாம் உன்னிப்பாக யாரும் படிக்கப் போவதில்லை.  வெங்கடேசன், மாறன் போன்றோர் ஏற்கெனவே புலம்பி இருக்கிறார்கள். ஆனால், அவை  அவை நடவடிக்கைகளில் பதிவாகாது என்று சொல்லி விட்டார்கள். இருப்பினும், இங்கு ஏதோ சாதித்து விட்டது போல, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆரிய-திராவிடக் கட்டுக் கதைகள் கல்வெட்டுகள் படிக்க உதவாது: சமஸ்கிருதம்-தமிழ் என்று வைத்துக் கொண்டு திரிபுவாதம் செய்து கொண்டிருந்தால், கல்வெட்டியலில் ஒன்றையும் சாதிக்க முடியாது. தமிழகத்தைப் பொறுத்த வரையிலும் கூட, இந்த இரு மொழிகளும் தெரியாமல், கல்வெட்டுகளும் படிக்க முடியாது, ஆராய்ச்சியும் செய்ய முடியாது. பிரம்மி, தமிழ் பிரம்மி, தமிழி என்றெல்லாம் பேசினாலோ, சொற்பொழிவுகள் நடத்தினாலோ, வரிவடிவம் மாறப் போவதில்லை. நெட்டெழுத்தோ, வட்டெழுத்தோ, கிரந்தம் வரும் போதும், சமஸ்கிருதம் தெரிந்தே ஆகவேண்டும். ஆகவே, தங்கம் தென்னரசு நன்றாக கல்வெட்டுகள் படிப்பார் என்று மெச்சிக் கொள்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. திராவிட பாணியில், மேடை பேச்சுகள் பேசுவதற்கு உபயோகப் படலாம், நடைமுறையில் ஒன்றையும் சாதித்து விடமுடியாது. அதே போலத்தான், “ஆரிய-திராவிடக் கட்டுக்கதைகள்,” ஏனெனில், சரித்திராசிரியர்கள் அவற்றை ஒதுக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்கள். ஆனால், நாங்கள் அதை வைத்து தான் ஆராய்ச்சி செய்வோம் என்றால், உலகத்தில் யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. குண்டுசட்டியில் குதிரை ஓட்டி, சந்தோசமாக இன்னொரு 50-100 ஆண்டுகள் கூட கழித்து விடலாம்.

நிலுவையில் உள்ள வழக்குகள் ASI மற்ற அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது யார்?: மேலே குறிப்பிட்ட வழக்குகள் எல்லாமே “சதாய்ப்பு வழக்குகள்” (harassment PILs, petitions) போன்றவை என்று தெரிந்து கொள்ளலாம். ஏற்கெனவே, ஒரே மாதிரியான வழக்குகள் இருக்கும் போது, எப்படி, மேலும்-மேலும் அதே வகையிலான வழக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டன என்பதை கவனிக்க வேண்டும். பல்லாவரம் பிரச்சினை ஆபாத்தான விசயம். ஏற்கெனவே பல்லாவர மலையில், பல்லவர்களின் குகைக் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு, அவற்றை முழுவதுமாக மாற்றி தர்கா, கட்டிடங்கள் என்று முஸ்லிம்கள் மாற்றி விட்டனர். அங்கிருந்த சிலைகள், கல்வெட்டுகள் எல்லாமே காணாமல் போய்விட்டன. இதைப் பற்றி, இதுவரை எந்த பொறுப்பான, யோக்கியமான அகழ்வாய்வு நிபுணாரோ, நேர்மையான தொல்துறை வல்லுனரோ, தமிழ் அபிமானியோ, திராவிடத் தலைவரோ என்றும் பேசியதில்லை. பதாகை ஏந்தவில்லை, போராடவில்லை. இப்பொழுதும், ASI மற்ற அதிகாரிகள் சென்ற போது, பாதுகாப்பிற்கு யாரும் வரவில்லை. போலீஸாருக்கு புகைக் கொடுத்தாலும் ஒன்றும் நடக்கவில்லை. நீதிமன்றமும், மேற்கொண்டு என்னவாயிற்று என்று கேட்கவில்லை. இந்த விகடன், குங்குமம், கலைஞர் செய்தி, நக்கீரன் முதலியவை ஆராய்ந்து, தொல்துறை அதிகாரிகளை ரகசியமாக விசாரித்து, செய்திகளை வெளியிடவில்லை.

© வேதபிரகாஷ்

02-08-2021 .


[1]  குங்குமம், கல்வெட்டு அரசியல்!, அன்னம் அரசு, 04 Jul 2021

[2] Madras High Court – Dr. S. Rajavelu vs Chairman, Union Public Service … on 7 October, 2005

Author: N Kannadasan; Bench: P Misra, N Kannadasan; JUDGMENT N. Kannadasan, J. https://indiankanoon.org/doc/128349221/

[3] Supreme Court of India – Sanjay Kumar Manjul vs The Chairman, Upsc And Ors on 13 September, 2006; Author: S.B. Sinha

Bench: S.B. Sinha, Dalveer Bhandari;   CASE NO.:  Appeal (civil)  4098 of 2006

PETITIONER:  Sanjay Kumar Manjul      versus  RESPONDENT:  The Chairman, UPSC and Ors.                   

DATE OF JUDGMENT: 13/09/2006;  https://indiankanoon.org/doc/1577105/

[4] http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=18238&id1=4&issue=20210704.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: