கல்வெட்டியல், கல்வெட்டு நிபுணர், போராடும் பிரச்சினை- 2013லிருந்து பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைத்து தொல்துறையினர் ஆர்பாட்டம் செய்வது! தமிழக அரசியல்வாதிகள் புகுந்து குழப்புவது (3)

கல்வெட்டியல், கல்வெட்டு நிபுணர், போராடும் பிரச்சினை– 2013லிருந்து பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைத்து தொல்துறையினர் ஆர்பாட்டம் செய்வது! தமிழக அரசியல்வாதிகள் புகுந்து குழப்புவது (3)

2019ல் வழக்கு செப்டம்பர்மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், பாதுகாப்பு: “சமீபத்தில் மைசூருவில் உள்ள கல்வெட்டுத்துறை அலுவலகத்தை மற்றொரு இடத்திற்கு மாற்றியபோது, தமிழ் கலவெட்டு படிமங்கள் பெரும்பாலானவை சேதமடைந்தன[1]. அவற்றை புத்தக வடிவிற்கு மாற்றி, டிஜிட்டல் மயமாக்கி பாதுகாத்து இருக்க வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டனர்[2]. இதனால் தமிழர்களின் வரலாறு, எதிர்கால தலைமுறையினருக்கு தெரியாமல் அழிந்து விடும். எனவே தமிழக வரலாற்றை பாதுகாக்கும் வகையில் மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டு படிமங்களை தமிழக தொல்லியல் துறை வசம் ஒப்படைத்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும். தமிழக  கல்வெட்டு படிமங்களை பாதுகாக்க எடுத்துள்ள நடவடிக்கை குறித்து மத்திய தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மைசூரில் பாதுகாக்கப்பட்டு வரும் தமிழ் கல்வெட்டு படிமங்களை தமிழகத்துக்கு மாற்ற  தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது[3]. இதனை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம்,  தாரணி அமர்வு,  தமிழக  கல்வெட்டு படிமங்களை பாதுகாக்கவும், படிக்கவும், அவற்றை பதிப்பிக்கவும் எடுத்துள்ள  நடவடிக்கை குறித்து மத்திய தொல்லியல் துறை பதில்  அளிக்க  உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 22, 2019 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்[4].

2018 ல் தொடர்ந்த வழக்கு – தமிழ் கல்வெட்டு படிகள் பாதுகாப்பாக உள்ளன : ”மத்திய தொல்லியல் துறையின், மைசூரு அலுவலகத்தில் உள்ள, தமிழ் கல்வெட்டு படிகள், வெளிப்படை தன்மையுடன் பாதுகாக்கப்படுகின்றன; ஆவணங்கள் ஏதும் சிதைக்கப்படவில்லை,” என, அதன் இயக்குனர், முனிரத்தினம் தெரிவித்துள்ளார். மத்திய தொல்லியல் துறையின், தென்னிந்திய அலுவலகம் மைசூரில் உள்ளது. அங்குள்ள, கல்வெட்டு துறையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சமஸ்கிருத கல்வெட்டு ஆவணங்கள் உள்ளன. அவற்றின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத் தன்மை குறித்து புகார் எழுந்தது[5]. இது குறித்து, அந்நிறுவனத்தின் கல்வெட்டியல் துறை இயக்குனர், முனிரத்தினம் கூறியதாவது: “மைசூரு கல்வெட்டுப் பிரிவில் உள்ள, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி கல்வெட்டு ஆவணங்களும், உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன. இங்குள்ள தமிழ் அறிஞர்கள், தமிழ் கல்வெட்டு ஆவணங்களை சரிபார்த்து, பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழ் அறிஞர்களும், ஆய்வாளர்களும், இங்கு வந்து ஆவணங்களை பார்த்து, ஆராய்ந்து செல்கின்றனர். மத்திய அரசின் நிறுவனமான, மத்திய தொல்லியல் துறை, இந்திய மொழிகளின் ஆவணங்களை சிதைத்து, நாட்டின் ஒற்றுமையை ஒரு போதும் கெடுக்காது,” இவ்வாறு அவர் கூறினார்[6].

வெங்கடேசனின் டுவிட்டர் கடிதம் வைத்து கதை விடும் குங்குமம்[7]: இந்திய தொல்லியல் துறையின் கீழ் உருவாக்கப்படவுள்ள 758 புதிய பணியிடங்கள் குறித்தும், இந்தியக் கல்வெட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் குறிப்பிட்டும் இந்தியக் கலாசாரத்துறை அமைச்சருக்கு மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன் எழுதிய கடிதம்தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாக் என்று கதையை ஆரம்பிக்கிறது குங்குமம்[8]. அந்தக் கடிதத்தில், “இந்திய வரலாற்றிற்குப் பேருதவி புரியும் கல்வெட்டுத்துறையில் குறைந்தது 40 தொழில்நுட்ப பணியிடங்களை உருவாக்க வேண்டும். இந்தியா முழுமைக்கும் கல்வெட்டு ஆய்வாளர்களைப் புதிதாக நியமியுங்கள்; குறைந்த அளவாக ஒரு மொழிக்கு 2 பேரையாவது நியமனம் செய்யுங்கள்,…” என சு.வெங்கடேசன் வலியுறுத்தி இருந்தார். தவிர, “இந்தியா முழுவதும் கண்டறியப்பட்டுள்ள 80,000 மேலான கல்வெட்டுகளில் 50% இன்னும் பதிப்பிக்கப்படவில்லை என்பதை மீண்டும் கவனப்படுத்துகிறேன்…” என்றும் குறிப்பிட்டிருந்தார்.  ஆனால், அரைகுறையாக கடிதம் எழுதி, டுவிட்டரில் வெளியிட்ட்தற்கு, அமைச்சர் முறையாக பதில் அளித்து விட்டார்.

பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைப்பது: இதுகுறித்து கல்வெட்டுத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஓர் அதிகாரியிடம் பேசினோம். ஓய்வுபெற்ற அவர் தன்னுடைய பெயரை வெளியிட விரும்பவில்லை. ‘‘கற்பாறைகள், தூண்கள், கோயிற்சுவர்கள், செப்பேடுகள், காசுகள், கற்கள், உலோகங்கள், பானைகள், மரங்கள், ஓலைச்சுவடிகள், துணிகள், சங்குகள் மற்றும் ஓவியங்கள் மீதான எழுத்துப்பதிவுகள் பற்றிய ஆய்வை கல்வெட்டியல் என்கிறோம். இது திராவிடம், சமஸ்கிருதம் என்று இரு பிரிவுகளாகத்தான் இருக்கும். அந்த இரு பிரிவுக்கும் ஒரே ஒரு இயக்குனர்தான். இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் 60% இருக்கின்றன. இதில் தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கைதான் அதிகம். தொல்லியல் துறையின் கீழ் 758 புதிய பணியிடங்களில், கல்வெட்டு துறைக்கென்று 99 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இது மிக மிகக் குறைவானது. இந்திய அரசு அங்கீகரித்துள்ள ஒவ்வொரு மொழிக்கும் அதன் விகிதாசார அடிப்படையில் கல்வெட்டு கண்காணிப்பாளர், துணை கல்வெட்டு கண்காணிப்பாளர், உதவி கல்வெட்டு கண்கணிப்பாளர், கல்வெட்டு ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும். பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைத்துப் பேசுவது தான் வெளிப்படுகிறது.

துறை ஆரம்பித்த கதை சொல்லும் விதம்: அதிலும் அதிகமாக இருக்கும் தமிழ் கல்வெட்டுகளைப் படித்து, டிஜிட்டல் ஆக்குவதற்கு கூடுதலாக பணி நியமனம் செய்ய வேண்டும்…” என்கிற அந்த அதிகாரி, ‘‘1916லிருந்து 2020 வரைக்குமான கல்வெட்டுகள் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை…” என்கிறார்.  ‘‘இதுபோக ஏற்கனவே இருக்கும் கல்வெட்டுகளின் காகிதப்பதிவுகள் பலவீனமடைந்து வருகின்றன. அதனால் 74 ஆயிரம் கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணியை உடனே செய்ய வேண்டும்…” என்று அரசுக்கு கோரிக்கை வைக்கும் அந்த அதிகாரி, இந்தியாவில் கல்வெட்டுத் துறை குறித்தான  வரலாற்றைப் பகிர்ந்தார். “இந்தியாவில் ஆங்கில அரசால் 1860ல் தொல்லியல் துறை ஆரம்பிக்கப்பட்டது. இதிலிருந்து பிரிந்து 1886ல் தனியாக கல்வெட்டு துறை உருவானது. வட இந்தியாவிற்கு அலெக்சாண்டர் கன்னிங்காமும் தென் இந்தியாவிற்கு ஜெர்மன் ஆய்வாளரான ஹல்ட்ஸ்ச்சும் முக்கிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். தஞ்சை பெரிய கோயில் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுகளை வெளியிட்டவர் ஹல்ட்ஸ்ச். 1887லிருந்து இதுவரை இந்தியா முழுக்க 85,000 – 90,000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் கல்வெட்டுகள் 45 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். இதற்கடுத்து கன்னடத்தில் 10 ஆயிரம், தெலுங்கில் 8 ஆயிரம், சமஸ்கிருதத்தில் 5,000 – 8,000 கல்வெட்டுகள் இருக்கும். இனிவரும் காலங்களிலும் கல்வெட்டுகள்  கண்டெடுக்கப்பட வேண்டியுள்ளது.

ஆங்கிலேயர் ஊட்டியில் வைத்திருந்தது மைசூருக்குச் சென்றது: “உலக அளவில் இந்தியாவில்தான் அதிக கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில் குவாரி, சுரங்க வேலைகள் செய்யும்போது கல்வெட்டுகளைப் பாதுகாப்பதும் அவசியமானது. ஆரம்பத்தில் கல்வெட்டுகளைப் பாதுகாக்கும் அலுவலகம் சென்னையில் இயங்கியது. சென்னையில் வைத்திருந்தால் காலப்போக்கில் காகிதம் இற்றுப்போய்விடும் என்று, காலநிலை குளிர்ச்சியாக இருக்கும் ஊட்டிக்கு மாற்றப்பட்டது. 1968ல் மைசூர்காரர் ஒருவர் கல்வெட்டுத்துறையின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். பாதுகாப்பு அலுவலகத்தை அவர் இடத்துக்குக் கொண்டுபோய்விட்டார். அங்கேயும் காலநிலை மோசம் இல்லை. ஆனால், கன்னடம், தமிழ் பிரச்னைகள் இருந்தது,…” என்கிற அந்த அதிகாரி, கல்வெட்டுத் துறையில் வட இந்திய, தென் இந்திய அதிகாரிகளுக்கான பனிப்போர் குறித்தும் விளக்கினார்.

© வேதபிரகாஷ்

02-08-2021


[1] தினத்தந்தி, தமிழக கல்வெட்டு படிமங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? மத்திய தொல்லியல் துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி, செப்டம்பர் 26, 2019, 05:15 AM

[2] https://www.dailythanthi.com/amp/News/Districts/2019/09/26004106/What-are-the-steps-taken-to-preserve-the-inscriptions.vpf

[3] தினத்தந்தி, கல்வெட்டுகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?- உயர் நீதிமன்றம் கேள்வி, பதிவு : செப்டம்பர் 25, 2019, 05:09 PM.

[4] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/09/25170950/1053188/What-are-the-measures-taken-to-protect-the-inscriptions.vpf.vpf

[5] தினமலர், தமிழ் கல்வெட்டு படிகள் பாதுகாப்பாக உள்ளன,  Added : பிப் 09, 2018  02:21.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=1955452

[7] குங்குமம், கல்வெட்டு அரசியல்!, அன்னம் அரசு, 04 Jul 2021

[8] http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=18238&id1=4&issue=20210704.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: