ஹரப்பா நாகரிக புதிர்கள் விடுவிக்கப் படவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து – மொஹஞ்சதாரோ-ஹரப்பா நாகரிகம், பாகிஸ்தான், திராவிடஸ்தான் மற்றும் திராவிட மாடல் அகழாய்வு!

ஹரப்பா நாகரிக புதிர்கள் விடுவிக்கப்படவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்துமொஹஞ்சதாரோஹரப்பா நாகரிகம், பாகிஸ்தான், திராவிடஸ்தான் மற்றும் திராவிட மாடல் அகழாய்வு!

என்னே விந்தை இந்த ஹரப்பா நாகரிகம்என்ற நூல் வெளியீட்டு விழா: ஃப்ரன்ட்லைன் முன்னாள் இணை ஆசிரியர் டி.எஸ்.சுப்பிரமணியனின் ‘என்னே விந்தை இந்த ஹரப்பா நாகரிகம்’ நூலை சென்னையில் 06-09-2022 அன்று அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, ‘தி இந்து’ குழும இயக்குநர் என். ராம் பெற்றுக்கொண்டார். இந்த டி.எஸ்.சுப்பிரமணியன் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து இறைய விசயங்களைக் கேட்டுப் பெற்றுக் கொல்வார். பிறகு, அவற்றை தனது எழுத்துகளுக்கும் உபயோகப் படுத்திக் கொள்வார்[1]. திமுக-தி.இந்து சொந்தங்கள்-பந்தங்கள் அறிந்ததே. அரசியல்-வியாபாரம்-பாதுகாப்பு என்றெல்லாம் திட்டம் இருக்கும் பொழுது, பெரியாட்கள் விசயத்துடன் தான் எல்லாவற்றையும் செய்வார்கள். ஹரப்பா நாகரிகம் குறித்த பல புதிர்கள் இன்றும் விடுவிக்கப்படவில்லை என்று தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். ஃப்ரன்ட்லைன் முன்னாள் இணை ஆசிரியர் டி.எஸ்.சுப்பிரமணியன் எழுதிய ‘என்னே விந்தை இந்த ஹரப்பா நாகரிகம்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ‘தி இந்து’ குழும அலுவலகத்தில் 06-09-2022 அன்று  நடைபெற்றது. அமைச்சர் தங்கம் தென்னரசு நூலை வெளியிட, ‘தி இந்து’ குழும இயக்குநர் என்.ராம் பெற்றுக்கொண்டார். விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

தென் தமிழகத்துக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்பு[2]: சிந்து சமவெளியில் இந்திய தொல்லியல் ஆய்வக தலைமை இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் அகழாய்வு செய்து 100 ஆண்டுகளாகிவிட்டன[3]. ஒவ்வொரு முறையும் அங்கு அகழாய்வு செய்யும்போது புதிய தகவல்கள் கிடைக்கின்றன. ஆனாலும், பாதியளவுக்குத்தான் அகழாய்வு செய்திருக்கிறோம். இன்றும் ஹரப்பா நாகரிகம் தொடர்பான பல புதிர்கள் விடுவிக்கப்படவில்லை[4]. திராவிட மொழிக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன[5]. தென் தமிழகத்துக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுசெய்ய தமிழக அரசு ரூ. 77 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது[6]. இதேபோல, சங்ககால துறைமுகப் பட்டினங்கள் தொடர்பாக அகழாய்வு செய்தால், தமிழர்களின் வணிகம் தொடர்பான ஏராளமான தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது[7]. கடும் உழைப்பால், பல அரிய தகவல்களுடன் இந்த நூல் உருவாகியுள்ளது,” இவ்வாறு அமைச்சர் பேசினார்.

புத்தகம் பற்றி பேச்சு: ‘தி இந்து’ குழும இயக்குநர் என். ராம் பேசும்போது, “நூலாசிரியர் வழக்கமான பத்திரிகையாளர் அல்ல. தொல்லியல் மட்டுமின்றி, அணு ஆற்றல், விண்வெளி ஆராய்ச்சி, இலங்கைப் பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாகவும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ஹரப்பா நாகரிகம் தொடர்பாக நிறைய ஆராய வேண்டியுள்ளது. நானும் அங்கு ஒருமுறை சென்றுள்ளேன்,” என்றார். நூலாசிரியர் டி.எஸ்.சுப்பிரமணியன் பேசும்போது, “ஹரப்பா நாகரிகம் தொடர்பாக 1921-ல் அகழாய்வு செய்யப்பட்டது. அதன் நினைவாக இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் 600-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன,” என்றார். இந்த நிகழ்ச்சியில், ‘தி இந்து’ குழுமப் பதிப்பாளர் நிர்மலா லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தென் தமிழகத்துக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுசெய்ய தமிழக அரசு ரூ. 77 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, திராவிடம் பற்றி அதிகமாகவே, இனம், இனவாதம், இனவெறி, மொழிவெறி போன்ற ஒதுக்கப் பட்ட, சரித்திராசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப் படாத விசயங்களை வைத்துக் கொண்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர். கீழடியை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய, கும்பல்கள் கிளம்பி விட்டன. தேவையில்லாமல், கோடிகளை செலவழித்து, மியூசியம், என்றெல்லாம் ஆர்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. வியாபார மயமாக்கப் பட்ட அகழாய்வை இங்குதான் பார்க்க முடிகிறது எனலாம். அரசியல்வாதிகள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என்று தோண்டும் இடங்களுக்குச் சென்று, குழிகளில் இறங்கி, அனைவற்றையும் தொட்டு, இடம் மாற்றி, கீழே போட்டு ஆதாரங்களை சிதைத்து வருகிறார்கள். ஒதுக்கிய்ப் பணத்தை செலவழிக்க வேண்டும், மேலும் பணம் கேட்க வேண்டும் என்ற கோணத்தில் தான் செயல் பட்டு வருகின்றனர்.

தமிழ் தொன்மை ஆதாரம் கிடைப்பது, பணம் பெறுவது: இதனால், லட்சங்கள், கோடிகள் ஒதுக்கினாலும், மறுபடி தமிழ் தன் தொன்மையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூற வேண்டும். இலையென்றால் பணமும் கிடைக்காது, பதவியும்-பாராட்டும் கிடைக்காது. அதற்கேற்ற முறையில் தான் எல்லோரும் “ஆமாம், சாமி” பாணியில் ஜாலியாக வேலை செய்து வருகின்றனர்.  பைபில் அகழ்வாய்வு (Biblical archaeology) என்றுள்ளது, அதன்படி, தோண்டினால், கண்டிப்பாக ஏதாவது ஒரு ஆதாரத்தைக்  கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆதாரம் இல்லை என்றால், பணமும் இல்லை (no evidence, no money) என்பது, உலகத்திற்கு தெரிந்த விசயம். அதுபோலத்தான், தமிழகத்தில் அகழ்வாய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தினம்தினம் ‘’எதையோ கண்டுபிடித்தனர்..…….” என்று செய்திகள் வந்துக் கொண்டிருந்ததை கவனித்திருக்களாம். இப்பொழுது குறைந்துள்ளது.

அகழாய்வு, அகழாய்வு ஆராய்ச்சி, நெறிமுறைகளைப் பின்பற்றாமல் நடந்து வரும் தோண்டுதல் முதலியன: அகழ்வாய்வு முறைகளை மீறிய செயல்களுடன் நடந்து வரும் இவற்றை அகழ்வாய்வு அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், தமிழகத்தில் மட்டும் ஆர்பாட்டம் செய்து வருகின்றன. ஏற்கெனவே அறிக்கை சமர்ப்பிப்பதில் காலதாமதம், மழை பெய்து குழிகளில் நீர் நிரம்பி தோண்டி எடுத்த ஆதாரங்கள் நனைந்து, பலரின் கைகள் பட்டு, படிவுகள் மாறி, தமது விருப்பத்திற்கு ஏற்ப, கையாண்டு வருகின்றனர். முறையை அகழ்வாய்வு கொள்கைகளைப் பின்பற்றாமல் இருக்கின்றனர். அரசியல் செய்து ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். ஸ்டாலின் தலைமையில் ஆழாய்வு நடைபெறுகிறது என்று செய்தி,ஏன், அறிக்கையையே அவர்தான் சட்டமன்றத்தில் படிக்கிறார். அந்த நிலையில், அகழாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் “திராவிட மாடல்” அகழாய்வு எனலாம் போலிருக்கிறது.

மொஹஞ்சதாரோஹரப்பன் நாகரிகம், பாகிஸ்தான், திராவிடஸ்தான், திராவிட மாடல்: முன்பு, ஜின்னா-பெரியார் முஸ்லிம்-திராவிட கூட்டு தவிடு பொடியாக்கி விட்டது. பாகிஸ்தான் கிடைத்தவுடன், ஜின்னா பெரியாரைத் தூக்கியெரிந்து விட்டார், அதனால், அம்பேத்கரைப் பிடித்துக் கொண்டார்[8]. ஜின்னா சென்னைக்கு வந்தபோது, அதிகமாக கண்டுகொள்ளவே இல்லை. பாகிஸ்தானியர் என்றுமே அந்நாகரிகம் திராவிடர் என்று ஒப்புக் கொண்டதே இல்லை[9]. இப்பொழுது அதனைக் கண்டு கொள்வதே இல்லை[10]. ஆனால், இங்கிருப்பவர்கள் தான் ஆர்பாட்டம்-கலாட்டா செய்து வருகிறார்கள். ஓய்வு பெற்ற ஏ. பாலகிருஷ்ணன் இப்பொழுது, திராவிடப் பாட்டு அதிகமாகவே பாடி வருகிறார். ஐராவதம் மஹாதேவனின் இருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டு, அவரது கொள்கையினை மீறி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துள்ளார். அவரது புத்தகங்கள் விற்கவேண்டும், பெயர்-புகழ் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார். இத்தகைய முரண்பாடுகளூடன் தான், ‘திராவிட மாடல் அகழாய்வு” ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

07-09-2022


[1]  தன்னுடைய கட்டுரைகளில் அவற்றை தாராளமாக உபயோகப் படுத்திக் கொள்வார். தி.இந்துவில் தமது கட்டுரை அல்லது கண்டுபிடிப்பு / விவரங்கள் வருமே என்று ஆசைப்பட்டு ஆராய்ச்சியாளர்கள் விசயங்கள், குறிப்புகள், புகைப் படங்கள் கொடுப்பார்கள். ஆனால், பத்தில் ஒன்று மடங்கு தான் வரும், மிச்சம் அவரது உபயோகத்திர்குச் சென்று விடும். இந்த முறையை மற்ற பிரபல நாளிதழ் எழுத்தாளர்களும் பின்பற்றி வருகிறார்கள்.

[2] தமிழ்.இந்து, ஹரப்பா நாகரிக புதிர்கள் விடுவிக்கப்படவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து, செய்திப்பிரிவு Last Updated : 07 Sep, 2022 06:46 AM.

[3] https://www.hindutamil.in/news/tamilnadu/862407-harappan-civilisation.html

[4] g7tamil, ஹரப்பா நாகரிக புதிர்கள் விடுவிக்கப்படவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து, By G7tamil, September 7, 2022.

[5]https://g7tamil.in/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

[6] தமிழ்.முரசு, ஹரப்பா நாகரிக புதிர்கள் விடுவிக்கப்படவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து, 8 Sep 2022 05:30.

[7] https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20220908-95719.html

[8]  1950களில் அம்பேத்கரும், பெரியாரின் ஸ்திரமற்ற கொள்கைகளை அறிந்து கழட்டி விட்டார். பர்மா சந்திப்பே அதனை வெளிப்படுத்துகிறது.

[9] திராவிடத்துவாதிகள் இந்த உண்மையை முழுமையாக மறைத்து எழுதி, பேசி வருகின்ன்றனர். இப்பொழுதைய பாலகிருஷ்ணனும், இதே வேலையை செய்து வருகறார்.

[10]  ஐக்கிய நாடுகள் கலாச்சாரப் பிரிவு, இதன் பாரம்பரிய சின்ன அடையாளத்தைக் கூட பாகிஸ்தான் தக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று செய்திகள் வந்துள்ளன.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: