Archive for the ‘குடியேறுதல்’ Category

ஹரப்பா நாகரிக புதிர்கள் விடுவிக்கப் படவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து – மொஹஞ்சதாரோ-ஹரப்பா நாகரிகம், பாகிஸ்தான், திராவிடஸ்தான் மற்றும் திராவிட மாடல் அகழாய்வு!

செப்ரெம்பர் 12, 2022

ஹரப்பா நாகரிக புதிர்கள் விடுவிக்கப்படவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்துமொஹஞ்சதாரோஹரப்பா நாகரிகம், பாகிஸ்தான், திராவிடஸ்தான் மற்றும் திராவிட மாடல் அகழாய்வு!

என்னே விந்தை இந்த ஹரப்பா நாகரிகம்என்ற நூல் வெளியீட்டு விழா: ஃப்ரன்ட்லைன் முன்னாள் இணை ஆசிரியர் டி.எஸ்.சுப்பிரமணியனின் ‘என்னே விந்தை இந்த ஹரப்பா நாகரிகம்’ நூலை சென்னையில் 06-09-2022 அன்று அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, ‘தி இந்து’ குழும இயக்குநர் என். ராம் பெற்றுக்கொண்டார். இந்த டி.எஸ்.சுப்பிரமணியன் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து இறைய விசயங்களைக் கேட்டுப் பெற்றுக் கொல்வார். பிறகு, அவற்றை தனது எழுத்துகளுக்கும் உபயோகப் படுத்திக் கொள்வார்[1]. திமுக-தி.இந்து சொந்தங்கள்-பந்தங்கள் அறிந்ததே. அரசியல்-வியாபாரம்-பாதுகாப்பு என்றெல்லாம் திட்டம் இருக்கும் பொழுது, பெரியாட்கள் விசயத்துடன் தான் எல்லாவற்றையும் செய்வார்கள். ஹரப்பா நாகரிகம் குறித்த பல புதிர்கள் இன்றும் விடுவிக்கப்படவில்லை என்று தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். ஃப்ரன்ட்லைன் முன்னாள் இணை ஆசிரியர் டி.எஸ்.சுப்பிரமணியன் எழுதிய ‘என்னே விந்தை இந்த ஹரப்பா நாகரிகம்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ‘தி இந்து’ குழும அலுவலகத்தில் 06-09-2022 அன்று  நடைபெற்றது. அமைச்சர் தங்கம் தென்னரசு நூலை வெளியிட, ‘தி இந்து’ குழும இயக்குநர் என்.ராம் பெற்றுக்கொண்டார். விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

தென் தமிழகத்துக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்பு[2]: சிந்து சமவெளியில் இந்திய தொல்லியல் ஆய்வக தலைமை இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் அகழாய்வு செய்து 100 ஆண்டுகளாகிவிட்டன[3]. ஒவ்வொரு முறையும் அங்கு அகழாய்வு செய்யும்போது புதிய தகவல்கள் கிடைக்கின்றன. ஆனாலும், பாதியளவுக்குத்தான் அகழாய்வு செய்திருக்கிறோம். இன்றும் ஹரப்பா நாகரிகம் தொடர்பான பல புதிர்கள் விடுவிக்கப்படவில்லை[4]. திராவிட மொழிக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன[5]. தென் தமிழகத்துக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுசெய்ய தமிழக அரசு ரூ. 77 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது[6]. இதேபோல, சங்ககால துறைமுகப் பட்டினங்கள் தொடர்பாக அகழாய்வு செய்தால், தமிழர்களின் வணிகம் தொடர்பான ஏராளமான தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது[7]. கடும் உழைப்பால், பல அரிய தகவல்களுடன் இந்த நூல் உருவாகியுள்ளது,” இவ்வாறு அமைச்சர் பேசினார்.

புத்தகம் பற்றி பேச்சு: ‘தி இந்து’ குழும இயக்குநர் என். ராம் பேசும்போது, “நூலாசிரியர் வழக்கமான பத்திரிகையாளர் அல்ல. தொல்லியல் மட்டுமின்றி, அணு ஆற்றல், விண்வெளி ஆராய்ச்சி, இலங்கைப் பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாகவும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ஹரப்பா நாகரிகம் தொடர்பாக நிறைய ஆராய வேண்டியுள்ளது. நானும் அங்கு ஒருமுறை சென்றுள்ளேன்,” என்றார். நூலாசிரியர் டி.எஸ்.சுப்பிரமணியன் பேசும்போது, “ஹரப்பா நாகரிகம் தொடர்பாக 1921-ல் அகழாய்வு செய்யப்பட்டது. அதன் நினைவாக இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் 600-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன,” என்றார். இந்த நிகழ்ச்சியில், ‘தி இந்து’ குழுமப் பதிப்பாளர் நிர்மலா லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தென் தமிழகத்துக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுசெய்ய தமிழக அரசு ரூ. 77 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, திராவிடம் பற்றி அதிகமாகவே, இனம், இனவாதம், இனவெறி, மொழிவெறி போன்ற ஒதுக்கப் பட்ட, சரித்திராசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப் படாத விசயங்களை வைத்துக் கொண்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர். கீழடியை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய, கும்பல்கள் கிளம்பி விட்டன. தேவையில்லாமல், கோடிகளை செலவழித்து, மியூசியம், என்றெல்லாம் ஆர்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. வியாபார மயமாக்கப் பட்ட அகழாய்வை இங்குதான் பார்க்க முடிகிறது எனலாம். அரசியல்வாதிகள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என்று தோண்டும் இடங்களுக்குச் சென்று, குழிகளில் இறங்கி, அனைவற்றையும் தொட்டு, இடம் மாற்றி, கீழே போட்டு ஆதாரங்களை சிதைத்து வருகிறார்கள். ஒதுக்கிய்ப் பணத்தை செலவழிக்க வேண்டும், மேலும் பணம் கேட்க வேண்டும் என்ற கோணத்தில் தான் செயல் பட்டு வருகின்றனர்.

தமிழ் தொன்மை ஆதாரம் கிடைப்பது, பணம் பெறுவது: இதனால், லட்சங்கள், கோடிகள் ஒதுக்கினாலும், மறுபடி தமிழ் தன் தொன்மையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூற வேண்டும். இலையென்றால் பணமும் கிடைக்காது, பதவியும்-பாராட்டும் கிடைக்காது. அதற்கேற்ற முறையில் தான் எல்லோரும் “ஆமாம், சாமி” பாணியில் ஜாலியாக வேலை செய்து வருகின்றனர்.  பைபில் அகழ்வாய்வு (Biblical archaeology) என்றுள்ளது, அதன்படி, தோண்டினால், கண்டிப்பாக ஏதாவது ஒரு ஆதாரத்தைக்  கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆதாரம் இல்லை என்றால், பணமும் இல்லை (no evidence, no money) என்பது, உலகத்திற்கு தெரிந்த விசயம். அதுபோலத்தான், தமிழகத்தில் அகழ்வாய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தினம்தினம் ‘’எதையோ கண்டுபிடித்தனர்..…….” என்று செய்திகள் வந்துக் கொண்டிருந்ததை கவனித்திருக்களாம். இப்பொழுது குறைந்துள்ளது.

அகழாய்வு, அகழாய்வு ஆராய்ச்சி, நெறிமுறைகளைப் பின்பற்றாமல் நடந்து வரும் தோண்டுதல் முதலியன: அகழ்வாய்வு முறைகளை மீறிய செயல்களுடன் நடந்து வரும் இவற்றை அகழ்வாய்வு அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், தமிழகத்தில் மட்டும் ஆர்பாட்டம் செய்து வருகின்றன. ஏற்கெனவே அறிக்கை சமர்ப்பிப்பதில் காலதாமதம், மழை பெய்து குழிகளில் நீர் நிரம்பி தோண்டி எடுத்த ஆதாரங்கள் நனைந்து, பலரின் கைகள் பட்டு, படிவுகள் மாறி, தமது விருப்பத்திற்கு ஏற்ப, கையாண்டு வருகின்றனர். முறையை அகழ்வாய்வு கொள்கைகளைப் பின்பற்றாமல் இருக்கின்றனர். அரசியல் செய்து ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். ஸ்டாலின் தலைமையில் ஆழாய்வு நடைபெறுகிறது என்று செய்தி,ஏன், அறிக்கையையே அவர்தான் சட்டமன்றத்தில் படிக்கிறார். அந்த நிலையில், அகழாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் “திராவிட மாடல்” அகழாய்வு எனலாம் போலிருக்கிறது.

மொஹஞ்சதாரோஹரப்பன் நாகரிகம், பாகிஸ்தான், திராவிடஸ்தான், திராவிட மாடல்: முன்பு, ஜின்னா-பெரியார் முஸ்லிம்-திராவிட கூட்டு தவிடு பொடியாக்கி விட்டது. பாகிஸ்தான் கிடைத்தவுடன், ஜின்னா பெரியாரைத் தூக்கியெரிந்து விட்டார், அதனால், அம்பேத்கரைப் பிடித்துக் கொண்டார்[8]. ஜின்னா சென்னைக்கு வந்தபோது, அதிகமாக கண்டுகொள்ளவே இல்லை. பாகிஸ்தானியர் என்றுமே அந்நாகரிகம் திராவிடர் என்று ஒப்புக் கொண்டதே இல்லை[9]. இப்பொழுது அதனைக் கண்டு கொள்வதே இல்லை[10]. ஆனால், இங்கிருப்பவர்கள் தான் ஆர்பாட்டம்-கலாட்டா செய்து வருகிறார்கள். ஓய்வு பெற்ற ஏ. பாலகிருஷ்ணன் இப்பொழுது, திராவிடப் பாட்டு அதிகமாகவே பாடி வருகிறார். ஐராவதம் மஹாதேவனின் இருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டு, அவரது கொள்கையினை மீறி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துள்ளார். அவரது புத்தகங்கள் விற்கவேண்டும், பெயர்-புகழ் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார். இத்தகைய முரண்பாடுகளூடன் தான், ‘திராவிட மாடல் அகழாய்வு” ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

07-09-2022


[1]  தன்னுடைய கட்டுரைகளில் அவற்றை தாராளமாக உபயோகப் படுத்திக் கொள்வார். தி.இந்துவில் தமது கட்டுரை அல்லது கண்டுபிடிப்பு / விவரங்கள் வருமே என்று ஆசைப்பட்டு ஆராய்ச்சியாளர்கள் விசயங்கள், குறிப்புகள், புகைப் படங்கள் கொடுப்பார்கள். ஆனால், பத்தில் ஒன்று மடங்கு தான் வரும், மிச்சம் அவரது உபயோகத்திர்குச் சென்று விடும். இந்த முறையை மற்ற பிரபல நாளிதழ் எழுத்தாளர்களும் பின்பற்றி வருகிறார்கள்.

[2] தமிழ்.இந்து, ஹரப்பா நாகரிக புதிர்கள் விடுவிக்கப்படவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து, செய்திப்பிரிவு Last Updated : 07 Sep, 2022 06:46 AM.

[3] https://www.hindutamil.in/news/tamilnadu/862407-harappan-civilisation.html

[4] g7tamil, ஹரப்பா நாகரிக புதிர்கள் விடுவிக்கப்படவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து, By G7tamil, September 7, 2022.

[5]https://g7tamil.in/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

[6] தமிழ்.முரசு, ஹரப்பா நாகரிக புதிர்கள் விடுவிக்கப்படவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து, 8 Sep 2022 05:30.

[7] https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20220908-95719.html

[8]  1950களில் அம்பேத்கரும், பெரியாரின் ஸ்திரமற்ற கொள்கைகளை அறிந்து கழட்டி விட்டார். பர்மா சந்திப்பே அதனை வெளிப்படுத்துகிறது.

[9] திராவிடத்துவாதிகள் இந்த உண்மையை முழுமையாக மறைத்து எழுதி, பேசி வருகின்ன்றனர். இப்பொழுதைய பாலகிருஷ்ணனும், இதே வேலையை செய்து வருகறார்.

[10]  ஐக்கிய நாடுகள் கலாச்சாரப் பிரிவு, இதன் பாரம்பரிய சின்ன அடையாளத்தைக் கூட பாகிஸ்தான் தக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று செய்திகள் வந்துள்ளன.

உலகில் முதலில் பிறந்த குரங்கு – தமிழ்க்குரங்கு தான் – திராவிடியன் ஸ்டாக் ஸ்டாலினின் புதிய மனிதவியல் சித்தாந்தம்! (2)

ஜூலை 20, 2022

உலகில் முதலில் பிறந்த குரங்குதமிழ்க்குரங்கு தான்திராவிடியன் ஸ்டாக் ஸ்டாலினின் புதிய மனிதவியல் சித்தாந்தம்! (2)

அரசியல்ஆதிக்கம்அதிகாரம் மூலம் திணிக்கப் படும் மனித விரோத இனவாத, இனவெறித்துவ சித்தாந்தங்கள்: ஆக திராவிடத்துவ வாதத்துடன், இன்றும் இனவாதங்களை வைத்து அரசியல், பாடதிட்டம், சமூக அணுகுமுறை முதலியவற்றை நடத்திக் கொண்டிருந்தால், தமிழகம் சீரழிந்து தான் போகும். இருப்பினும், மக்களின் நம்பிக்கைகளால், பழக்க-வழக்கங்களினால், இவற்றையெல்லாம் கடந்து, நடப்பவை நடந்து கொண்டிருக்கின்றன. பொறுப்புள்ள முதலமைச்சர் இந்த 21ம் நூற்றாண்டிலும், யாரோ, விசயம் தெரியாதவர் எழுதி கொடுத்ததை படித்தால், மக்களுக்கு நன்மை ஏற்பட்டு விடாது. மேலும், உலகம் முழுவதும் கவனிக்கும் போது, உண்மை வெளிப்பட்டு விடும். இங்கு வேண்டுமானாலும், எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, “ஆமாம், சாமி” போட்டுக் கொண்டிருப்பார்கள். மெத்தப் படித்த பல மனிதவியல், அகழ்வாய்வு, மனிதவியல்- அகழ்வாய்வு, அகழ்வாழ்வியல்- மனிதவியல், அறிஞர்கள், வல்லுனர்கள், பேராசிரியர்கள் எல்லாம் இருந்தும் வாய் திறக்காமல் இருப்பதிலிருந்தே அறிந்து கொள்ளலாம். சரித்திரத் தன்மையற்ற குப்பைத் தொட்டியில் போடப்பட்ட இனவாதத்தை வைத்து, இன்னும் அரசியல் செய்யலாம், என்றால் செய்து கொண்டே இருக்கலாம். பிறகு, பொருளாதார முன்னேற்றம், தொழிற்துறை மேன்பாடு, முதலியவைப் பற்றி கண்டுகொள்ள முடியாது..   

திராவிடத்துவ ஆராய்ச்சியின் கோலம்அலங்கோலம்அரசியல்: முன்பு ஆஸ்கோ பார்போலா, நொபுரா கரஷிமா போன்றோரை வைத்துக் கொண்டு, போலித்தாமாக பிம்பத்தை உருவாக்க கருணாநிதி முயன்றார். ஆனால், ஆஸ்கோ பார்போலா, தான் பதவியில் இருக்கும் போது ஒரு மாதிரி, ஓய்வு எற்றப் பிறகு வேறு மாதிரி என்று பேசி வந்தார்[1]. ஆனால், எழுதும் போது எச்சரிக்கையாக இருந்தார். திராவிடனும் இல்லை- ஆரியனும் இல்லை என்பது போலத்தான் முடிவுகள் இருக்கும். நொபுரா கரஷிமா எப்பொழுதுமோ “திராவிடத்துவ அரசியலுக்கு” ஒத்துப் போகவில்லை. 2013ல் நடத்தப் பட்ட மாநாட்டிற்கு வரமுடியாது என்றே சொல்லி விட்டார். அப்பொழுது, கண்டியூர் கல்வெட்டு என்ற மோசடி நடந்தது. பிறகு, உலகத் தமிழ் மாநாடு கோயம்புத்தூரில் நடந்தபோதும், அதனை ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், “செம்மொழி மாநாடு” என்று பெயர் மாற்றப் பட்டது. “நேதி, நேதி” ஐராவதம் மகாதேவன் மற்ற மாநாடுகளில் “நேதி, நேதி” (அதுவுமில்லை, இதுவுமில்லை) என்று சொல்லி தப்பித்து வந்தார். இப்பொழுது, பாலகிருஷ்ணன் அவரது இடத்தைப் பிடித்துக் கொண்டு விளையாடி வருகிறார்.

ஆரிய படையெடுப்பு இல்லை, திராவிடர்களே, ஆரியர்கள் வருவதற்கு முன்னமே தெற்காக நகர்ந்து சென்று விட்டனர்: அஸ்கோ பர்போல திடீரென்று அதிரடியாக, இரண்டாம் மில்லினியம் காலத்தில் ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதற்கு, ஒரு புதிய திரிபு வாதத்தை முன்வைத்துள்ளார். இதன்படி, திராவிடர்கள் விரட்டியடிக்கப்படவில்லை, ஆனால், ஆரியர்கள் அங்கு நகரத்திற்கு வருவதற்கு முன்னமே, படிப்படியாக அவர்களே மேய்ச்சலுக்கு நல்ல பசுமையான நிலங்களைத் தேடிக்கொண்டு, தெற்கு நோக்கி நகர்ந்து சென்று விட்டனர். சென்னைக் கிருத்துக் கல்லூரியின் சார்பாக, கிஃப்ட் சிரோமணி என்பாரது நினைவுச் சொற்பொழிவாக, தான் “சிந்துவரிவடிவம், திராவிட ஹரப்பன்கள், காட்டுக்கழுதை” என்ற தலைப்பில் பேசியதைப் பற்றி, இந்தியன் எக்ஸ்பிரஸுக்குச் சொன்னார். அவரது ஆராய்ச்சியின் படி, திராவிடர்கள்தாம், குஜராத்தில் உள்ள சிந்துசமவெளி நாகரிகத்தில் இருந்தனர். அவர்களில் சிலர் மேய்ச்சலுக்கு நல்ல பசுமையான மற்றும் செழுமையான நிலங்களைத் தேடிக்கொண்டு தெற்காக நகர்ந்தனர். இது ஆரியர்கள் கூட்டம் கூட்டமாக பெருமளவில் வருவதற்கு முன்பே ஏற்பட்டது, என்று ஆதாரங்கள் உள்ளன.

வடஇந்தியாவில் ஆங்கிலேயர்களைப் போல ஆரியர்கள் திராவிடர்களை இந்தோஆரிய மொழியைக் கற்றுக்க்கொள்ளச் செய்தனர்: ஆங்கிலேயர்கள் எப்படி பிராமணர்களை ஆங்கிலம் கற்றுக்கொள்ளவைத்து, தங்கள் கீழ் வேலை செய்யவைத்து, நாட்டை ஆண்டனரோ, அதே போல, சிந்துநதி அருகில் தங்கி விட்ட, திராவிட சமுதாயமும், குறிப்பாக சமுதாயத்தலைவர்கள், இந்தோ-ஆரிய மொழியைக் கற்றுக்கொண்டது. திராவிடர்களுடைய மேற்தட்டுக் குடிகள் அவ்வாறு ஆரிய மொழியைக் கற்றுக் கொண்டு, வட-திராவிடர்களாக மாறினர். இருப்பினும் அவர்களது மொழியில், முந்தைய-திராவிட கூறுகளைத் தக்கவைத்துக் கொண்டனர். தென்னிந்தியாவில் திராவிட மொழிகள் இன்னும் பேசப்பட்டு வருகின்றன, ஏனெனில், ஆரியர்கள் தென்னிந்தியாவை முழுவதுமாக வெற்றிக் கொள்ளமுடியவில்லை. வட-இந்தியாவை அவ்வாறு வெற்றிக் கொள்வதற்கே பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கும். ஆனால், இப்பொழுதைக்கு, சரித்திர ஆசிரியர்களிடம் வழக்கத்தில் உள்ள சித்தாந்தமானது, ஆரியர்கள் திராவிடர்களை தென்னிந்தியாவிற்கு விரட்டியடித்தனர் என்பதுதான். இது படித்தவர்களிடையே, இப்பொழுது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

கழுதை போல, இனி குரங்கும் திராவிடத்துவத்தில் இடம் பெறும்: ஆஸ்கோ பார்போல விசயத்தில், கழுதை விவாதப் பொருளாகியது[2]. இனி, ஸ்டாலினின் குரங்கும் அதில் சேரும்.

 • உலகில் முதலில் பிறந்த குரங்கு – தமிழ்க்குரங்கு தான், மற்ற மொழி குரங்குகள் எல்லாம் பிறகு தோன்றின, பிறந்தன, வளர்ந்தன.
 • தமிழ் குரங்கு தான் முதன் முதலில் மனித குரங்காக மாறியது. Hominid ஆக இருந்த போதே, இறைச்சி சாப்பிட்டு, குடித்துக் கொண்டிருந்தது.
 • ஈவேராத் தான் அதனை ஓரளவுக்கு Homo-habilis ஆக்கியதால், கொஞ்சம் கத்த ஆரம்பித்தது, குதித்தது, ஆடிப் பாடிக் கொண்டிருந்தது.
 • அண்ணா அதனைத் தூக்கி நிறுத்த homo-erectus ஆகியது. உடன் பிறவா தோழர்கள் உருவாகினர். மற்றவர்களைத் தூக்கி விட்டனர்.
 • கருணாநிதி தான் அவற்றை homo-sapien ஆக்கினார், கழகக் கண்மணிகளாக சூப்ப ஆரம்பித்தனர், ஞானம் / அறிவு பெற்றனர்..
 • ஸ்டாலின் வந்த பிறகு, தமிழகத்திலிருந்து, தமிழ் குரங்குகள் பல தேசங்களுக்கு செல்ல ஆரம்பித்தன. சிந்துக்கு சென்று உலகம் முழுவதும் பரவின.
 • தெலுங்கு குரங்கு, கன்னடக் குரங்கு, மலையாளக் குரங்கு எல்லாம் தோன்ற, திராவிடக் குரங்கு என்ற கூட்டணி உருவாகியது,
 • ஆரியக் குரங்கு, வந்தேறி குரங்கு, குந்தேறி குரங்கு, வந்துகுந்தேறிய குரங்கு என்று எல்லா குரங்குகளுடன் சண்டை போட ஆரம்பித்தது.
 • திடீரென்று ஹிந்தி குரங்கு வர, இந்தி தெரியாது போடா என்றது. இதனால், மற்ற திராவிட குரங்குகள் கூட்டணியிலிருந்து ஓடிவிட்டன.
 • திடீரென்று திராவிட குரங்களுக்குள் சண்டை ஏற்பட திக-குரங்கு, திமுக-குரங்கு, அதிகும-குரங்கு, தேதிமுக-குரங்கு என்றெல்லாம் உருவாகின.

திராவிடியன் ஸ்டாக் ஸ்டாலினின் புதிய மனிதவியல் சித்தாந்தம்!: இனி ஆராய்ச்சிகள் இந்த கோணத்தில் ஆரம்பிக்கும், தொடரும். இனம், இனவெறி, இனவெறித்துவம் தலைக்கேறி, போதையுடன் இருக்கும் நிலையில், சரித்திரம் மட்டுமல்லாது, விஞ்ஞானமும் மறக்கப் படுகிறது. இனி பல்கலைக் கழகங்களில் மனிதவியல், அகழ்வாய்வு, மனிதவியல்- அகழ்வாய்வு, அகழ்வாழ்வியல்- மனிதவியல், முதலியவை படிக்க வேண்டும், அவற்றையும், இது போலவே மாற்றி விடலாம். அத்தகைய பாடதிட்டங்களின் படியே, “திரூவிட குரங்கு” மூலங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம். இத்தகைய இனவெறித்துவ முரட்டு நம்பிக்கைகளை வைத்துக் கொண்டே காலத்தை ஓட்டி விடலாம். மொழி, மொழித்துவ வெறி, இனம், இனத்துவ வெறி இவற்றைத் தாண்டி, இனி மனிதகூறு விஞ்ஞானத்தையும் மறுத்து, கட்டுக்கதைகளை நம்பி, அரசியல் செய்தால், யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

© வேதபிரகாஷ்

20-07-2022


[1]  வேதபிரகாஷ், ஆஸ்கோ பர்போல, கருணாநிதி, ஐராவதம் மஹாதேவன்: சிந்துசமவெளி குறியீடுகள்!, ஜூன்.24 2010.

[2]  வேதபிரகாஷ், சிந்து வரிவடிவம், ஹரப்பன் திராவிடி மற்றும் காட்டுக் கழுதை, ஜூன்.16 2010.

உலகில் முதலில் பிறந்த குரங்கு – தமிழ்க்குரங்கு தான் – திராவிடியன் ஸ்டாக் ஸ்டாலினின் புதிய மனிதவியல் சித்தாந்தம்! (1)

ஜூலை 20, 2022

உலகில் முதலில் பிறந்த குரங்குதமிழ்க்குரங்கு தான்திராவிடியன் ஸ்டாக் ஸ்டாலினின் புதிய மனிதவியல் சித்தாந்தம்! (1)

தமிழ்நாடு நாள்’, ‘தமிழ்நாடு திருநாள்என்று சொல்லும்போதே நமது உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 18-07-2022 அன்று தனது முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திருநாள் விழாவில் கலந்துகொண்டார்[1]. இதில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “எத்தனையோ விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்தாலும், தமிழ்நாடு திருநாள் என்ற நிகழ்ச்சிக்கு இணையானது எதுவுமில்லை[2]. ஏனென்றால், ‘தமிழ்நாடு நாள்’, ‘தமிழ்நாடு திருநாள்’ என்று சொல்லும்போதே நமது உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது[3]. அதனைச்சொல்லும்போதே ஒரு ஆற்றல் பிறக்கிறது. “தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!” என்று அண்ணா, 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முழங்கிய முழக்கத்தை, மீண்டும் ஒரு முறை முழங்குவதன் மூலமாக என் உள்ளத்தில் மலர்ச்சி ஏற்படுகிறது[4].  செந்தமிழ் நாடென்னும் போதினிலே – இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே – என்று பாடினார் மகாகவி பாரதியார். அத்தகைய உணர்ச்சியை நாம் இன்று பெறுகிறோம். இத்தகைய உணர்ச்சியை ஊட்டும் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டிய சாதனையானது, சாதாரணமாக நடந்துவிடவில்லை.

மொழிப்போர் தியாகிகள் தமிழுக்கு உயிர் விட்ட தியாகிகள்: தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுங்கள் என்று சொல்லி 72 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மறைந்தார் விருதுநகர் தியாகி சங்கரலிங்கனார்![5] தலைகொடுத்தாவது தலைநகரைக் காப்பேன் – என்று முழங்கியவர் தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி.அவர்கள். தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை மொழிவாரி மாகாணம் உருவாக்க ஒப்படைத்துக் கொண்டவர் சிலம்புச் செல்வர்[6]. அவர்கள். திருத்தணியில் நடந்த தடியடியில் இறந்து போனார்கள் இரண்டு தியாகிகள். தென் எல்லைப் போராட்டத்தில் 11 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போனார்கள். தமிழ்நாடு கேட்டு போராடுபவர்களை ‘நான்சென்ஸ்’ என்று சொன்னதை எதிர்த்து மும்முனைப் போராட்டம் நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். நாடுமுழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்கள், பல மாதங்கள் சிறை வைக்கப்பட்டார்கள். தூத்துக்குடியில் நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்கள்.

திமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு பெயர் சூட்டப் பட்டது: தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலத்துக்கு, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டுவதற்கே நாம் பல பத்தாண்டுகளாகப் போராட வேண்டி வந்தது, வாதாட வேண்டி இருந்தது, பேச வேண்டி இருந்தது, எழுத வேண்டி இருந்தது, உயிரைத் தர வேண்டி இருந்தது, ரத்தம் சிந்த வேண்டி வந்தது, மாநிலங்களவையில் குரல் எழுப்ப வேண்டி வந்தது, சட்டப்பேரவையில் தொடர்ந்து கேட்க வேண்டி வந்தது, தீர்மானங்களைக் கொண்டு வர வேண்டி வந்தது. அத்தனைக்குப் பிறகும் ‘தமிழ்நாடு’ என்று சொல்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இறுதியாக, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்த காரணத்தால்தான், தாய்த் தமிழ்நாட்டுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டது. அண்ணா முதலமைச்சராக வந்ததால்தான் தாய்த்தமிழ்நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டது.

சென்னை பிரதேசம் ஆக வேண்டியது தமிழ்நாடு அனது: “தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆதல் வேண்டும்” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் குறிப்பிட்டாரே, அத்தகைய தலைமகனான அண்ணா தலைமையில், கருணாநிதி, நாவலர் போன்றவர்கள் அமைச்சர்களாக வந்ததால்தான், இந்தத் தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம் உருவாகாமல் போயிருந்தால், தமிழ்நாட்டில் இந்த இயக்கம் ஆட்சிக்கு வராமால் போயிருந்தால், இந்த மாநிலத்திற்கு இன்று வரையில் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படாமலேயே இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம் போல இதுவும், ‘சென்னை பிரதேசம்’ என்று அடையாளமற்ற மாநிலமாகத்தான், இன்று வரை இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

தமிழினம், ஒரு நிலத்தில் ஒரு நாட்டில் மட்டுமே வாழும் இனம் அல்ல; உலகளாவிய இனம்; திராவிடம் என்ன கிழித்தது என்று வாய் கிழியப் பேசுபவர்கள் இதனை அறிய வேண்டும். தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதைவிட, வேறு சாதனை ஏதாவது தேவையா? மூவாயிரம் ஆண்டு பழமைகொண்ட தமிழ்மொழிக்குச் செம்மொழி என்ற தகுதியைப் பெற்றுத் தந்தது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனை அல்லவா? இதனைவிட வேறு சாதனை தேவையா? இத்தகைய சாதனைச் சரித்திரத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம்.அதனால்தான், தமிழ்நாடு நாளைத் ‘தமிழ்நாடு திருநாளாக’ நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் ஓர் இனம் உண்டென்றால், அது தமிழினம் தான். நம்முடைய இனம், ஒரு நிலத்தில் ஒரு நாட்டில் மட்டுமே வாழும் இனம் அல்ல; உலகளாவிய இனம்.

மூத்த மொழி தமிழ்: முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்[7]. இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடுதான் தாய்வீடு. இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடுதான் தாய்நாடு[8]. “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி – நம்முடைய தமிழ்க்குடி!” அத்தகைய தமிழ்க்குடியின் தாய்மடி, இந்தத் தமிழ்நாடுதான்[9]. தமிழ்நாடு திருநாள் நிகழ்வுதமிழ்நாடு திருநாள் நிகழ்வுதமிழ்நாட்டில், கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பதை, கீழடி நமக்கு நிரூபித்துக் கொண்டு இருக்கிறது[10]. அதேபோல், சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு.1155 எனக் கண்டறியப்பட்டுள்ளது.

3200 ஆண்டுகளுக்கு முறபட்ட தமிழ் நாகரிகம்: ‘தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இவை அனைத்தும் உலகப் புகழ்பெற்ற மானுடவியல் ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மைகள். “உலகில் முதலில் பிறந்த குரங்கு – தமிழ்க்குரங்குதான்” என்று நம்மைச் சிலர் அந்தக் காலத்தில் கிண்டல் செய்வார்கள்[11]. அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. நாம் எதைச் சொன்னாலும் ஆய்வுப்பூர்வமாகத்தான் சொல்கிறோம்[12]. சிலர் போலக் கற்பனையாகச் சொல்லவில்லை. அத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட நமது தமிழினம் வாழ்ந்த நிலப்பரப்புக்கு, தமிழ்நாடு என்ற பெயர் இல்லை[13]. அதற்காகவும் போராட வேண்டி இருந்தது என்பது அவமானம் அல்லவா? அந்த அவமானம் துடைக்கப்பட்ட நாள்தான், இந்த ஜூலை 18-ஆம் நாள்” எனப் பேசினார்[14].

© வேதபிரகாஷ்

20-07-2022


[1] இ.டிவி.பாரத், சென்னை பிரதேசம்என்ற அடையாளமற்ற மாநிலமாகத்தான் இருந்திருக்கும்..’’ – ‘தமிழ்நாடு திருநாள்குறித்து முதலமைச்சர் உணர்ச்சிமிகு பேச்சு!, Published on: Jul 18, 2022, 10:42 PM IST.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/chennai-pradesh-would-have-been-an-unidentified-state-chief-minister-stalin-is-proud-of-tamil-nadu-thirunal/tamil-nadu20220718224253117117416?utm_source=JioNews&utm_medium=referral&utm_campaign=JioNews

[3] கலைஞர் செய்திகள், கொஞ்சம் விட்டிருந்தால் தமிழ்நாடு சென்னை பிரதேசம் ஆக மாறியிருக்கும்: சண்டை செய்வதன் அவசியத்தை விளக்கிய CM!, Prem Kumar, Updated on : 18 July 2022, 04:56 PM

[4] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2022/07/18/cm-mk-stalins-speech-at-the-tamil-nadu-day-function-tamil-nadu-would-have-become-chennai-region

[5] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழின நிலப்பரப்புக்கு தமிழ்நாடு பெயரிட இயலாத அவமானம் அகற்றப்பட்ட நாள் இன்றுமுதல்வர் மு..ஸ்டாலின் , By Mathivanan Maran Published: Monday, July 18, 2022, 15:52 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/cm-mk-stalin-speech-in-tamilnadu-day-466831.html

[7] தமிழ்.இந்து, தமிழ்நாடுஎன்று பெயர் சூட்டியதை விட வேறு சாதனை தேவையா? – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம், செய்திப்பிரிவு, Published : 18 Jul 2022 02:01 PM; Last Updated : 18 Jul 2022 02:01 PM.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/828144-cm-mk-stalin-speech-on-tamil-nadu-day.html

[9] தினத்தந்தி தமிழ்நாடு நாள் விழாவில் உரையாற்றுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை: முதல்அமைச்சர் மு..ஸ்டாலின், ஜூலை 18, 1:23 pm.

[10] https://www.dailythanthi.com/News/State/it-was-my-greatest-honor-to-address-the-tamil-nadu-day-function-chief-minister-m-k-stalin-748290

[11] NEWS18 TAMIL, “உலகில் முதலில் பிறந்த குரங்குதமிழ்க்குரங்குதான்” – முதலமைச்சர் மு..ஸ்டாலின் பேச்சு, LAST UPDATED : JULY 18, 2022, 14:29 IST.

[12] https://tamil.news18.com/news/tamil-nadu/tamil-nadu-chief-minister-m-k-stalin-speech-in-tamil-nadu-day-function-773262.html

[13] தினகரன், மாநிலத்தில் சுயாட்சி அமைந்தால்தான் இந்தியாவின் ஒருமைப்பாடு காப்பாற்றப்படும்: சென்னை விழாவில் காணொலி வாயிலாக முதல்வர் மு..ஸ்டாலின் பேச்சு, 2022-07-19@ 01:22:16. ; https://www.dinakaran.com/news_detail.asp?Nid=783839

[14] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=783839

ரத்தம், நிறம், இனம் பிறகு மரபணு வைத்து “விஞ்ஞான” ஆராய்ச்சி – நூபியா-ஆப்பிரிகாவிலிருந்து திராவிடர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர் [2]

ஜூலை 16, 2019

ரத்தம், நிறம், இனம் பிறகு மரபணு வைத்துவிஞ்ஞானஆராய்ச்சிநூபியாஆப்பிரிகாவிலிருந்து திராவிடர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர்  [2]

Nubia-origi of Dravidians

சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் வருகையால்தான் அழிந்தது என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப் பெறவில்லைடோனி ஜோசப்: “டைம்ஸ் நௌ” தமிழும் விடவில்லை, தமிழில் இவ்வாறு வெளியிட்டது. இந்திய வரலாற்றில் ஆரியர்களின் வருகை இதுநாள் வரை கோட்பாடு அடிப்படையில் சொல்லப்பட்டு வந்தது[1]. டிஎன்ஏ அடிப்படையிலான ஆய்வில் உலக அறிவியலாளர்கள் தற்போது இந்தக் கோட்பாட்டுக்கு ஆதாரங்களை வழங்கியுள்ளனர்[2]. இதுகுறித்து தி இந்து ஆங்கில நாளிதழில் (ஜூன் 17, 2017) டோனி ஜோசப் விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார்[3]. கட்டுரையிலிருந்து சில குறிப்பிடத்தகுந்த கருத்துக்கள் மட்டும் இங்கே…[4] என்று மொழிபெயர்த்து கொடுத்துள்ளது:

 • தந்தை வழியில் கடத்தப்படும் ’ஒய்’ குரோமோசோம்களைக் கொண்டு ஆரியர்களின் வருகையை அறிவியலாளர் நிரூபித்துள்ளனர். இதுநாள் வரை தாய் வழி எம்டி டிஎன்ஏக்களை வைத்துதான் ஆய்வு நடந்தது. அதில் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியவில்லை.
 • ஒய் டிஎன்ஏக்களுக்கும் எம்டி டிஎன்ஏக்களுக்கும் நேர் எதிரான ஆய்வு முடிவுகள் காணக்கிடைக்கின்றன. காரணம், வெண்கல யுகத்தில் நடந்த புலப்பெயரில் பாலியல் சமத்துவமற்ற நிலைமை இருந்திருக்கிறது. அதாவது புலப்பெயர்வில் ஆண்களே அதிகமானோர் இருந்திருக்கிறார்கள். எனவே, இந்திய பெண்களின் தாய்வழி மரபணுக்களை வைத்து இதுநாள் வரை சரியான முடிவை நோக்கி ஆய்வாளர்களால் நகர முடியவில்லை.
 • ஒய் டிஎன்ஏக்களின் ஆய்வில்5% இந்திய ஆண்கள் ஹப்லோ க்ரூப் எனப்படும் ஆர்1ஏ என்ற பிரிவினர் ஒற்றை உறவு வழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
 • இந்த ஆர்1ஏ என்ற பிரிவினர் மத்திய ஆசியா, ஐரோப்பிய மற்றும் தெற்கு ஆசியாவில் விரவி இருக்கிறார்கள்.

Dravidians came from Nubia-Iran-India

கட்டுரை வலியுறுத்துவது இந்தியாவில் ஒற்றை கலாச்சாரம், ஒற்றை சந்ததியினர் என்பவர் எவரும் இல்லை: “வெண்கல யுகத்தில் மத்திய ஆசியாவில் நிகழ்ந்த புலப்பெயர்வு ஆண்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை டிஎன்ஏ முடிவுகள் காட்டுகின்றன.  மேலும், த பண்டைய இந்தோ ஆசிய இனத்தின் பாகுபாடுள்ள சமூக அமைப்பையும் இது காட்டுகிறது” என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்டின் பி. ரிச்சர்ட்ஸ்.

 • ஆர்1ஏ பிரிவில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன. ஒன்று z282, z93. z282 பிரிவினர் ஐரோப்பாவுக்குள் மட்டுமே பிரிந்து சென்றனர். z93 பிரிவினர் மத்திய ஆசியாவுக்கும் கிழக்கு ஆசியாவுக்கும் பரவினர். மேலும்z93ன் மூன்று துணைபிரிவினர் இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இமாலய பகுதிகளில் பரவினர்..
 • முந்தைய ஆய்வுகளில் ஆர்1ஏ பிரிவினர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு, அங்கிருந்து பரவியதாக கருதப்பட்டனர். அந்தக் கருத்தை தற்போதைய ஆய்வு தகர்த்திருக்கிறது” என்கிறார் அறிவியலாளர் பீட்டர் அண்டர்ஹில்.
 • பீட்டர் அண்டர்ஹில்லுடன் இணைந்து டேவிட் போஸ்னிக் 2016ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு ஆய்வு முடிவில்z93பிரிவினரின் பரவல் 4000லிருந்து 4500 ஆண்டுகளில் நடந்திருக்கலாம் என்கின்றன. அதாவது 4000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இந்தப் பிரிவினரின் வருகை நடந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் வருகையால்தான் அழிந்தது என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப் பெறவில்லை என்கிறார் கட்டுரையாளர் டோனி ஜோசப். ஆனால் இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே காலத்தில் நடந்தேறியிருக்கின்றன என்பதையும் சுட்டுகிறார்.
 • 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஊடகங்கள் ’ஆரிய – திராவிட பிரிவினை என்பது பொய்- ஆய்வு முடிவு’ என தவறான கோணத்தில் செய்தி வெளியிட்டதையும் கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறார். இதுவரை வெளியான ஆய்வுகளில் அப்படியான கருத்துகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால். ஊடகங்கள் திரித்துள்ளன என்கிறார்.
 • இதுவரையிலான ஆய்வுகளில் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பங்களிலிருந்து பிரிந்த ஒரு பிரிவினர் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர் என்று நிரூபித்திருந்தனர். அதாவது சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இவர்கள் உயர்சாதியினராக அறியப்படுகின்றனர்.
 • கட்டுரை வலியுறுத்துவது இந்தியாவில் ஒற்றை கலாச்சாரம், ஒற்றை சந்ததியினர் என்பவர் எவரும் இல்லை. 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து ஒரு பிரிவினர் இங்கே வந்தனர்[5]. பிறகு 10 ஆயிரம் ஆண்டுகளில் தெற்கு ஆசியாவிலிருந்து ஒரு பிரிவினர் வந்தனர்[6].  பிறகு சிந்துவெளி சமவெளி மக்கள் (அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதை கட்டுரையாளர் குறிப்பிடவில்லை; அவர்கள் முதலில் வந்தவர்கள்தான் அதாவது பூர்வகுடிகள் என்கிற கோட்பாடு சொல்லப்படுகிறது) 4 ஆயிரம் ஆண்டுகளில் ஆரியர்கள் வந்தனர். அதன் பிறகு வணிகம் செய்யவந்தவர்கள் என வரலாறு முழுக்க பலரும் வந்துகொண்டிருக்கின்றனர் என்கிறார்கள். நாமெல்லாம் வந்தேறிகள் என்று முடிக்கிறார்.

Myth of race, psudo science

இனம் [Race], இனசித்தாந்தம் [Racism], மற்றும் இனவெறித்துவம் / நிறவெறித்துவம் [Racialism]: கலப்பினத் தோற்றம் அல்லது கலப்பினம் உருவாக்கம் [Miscegenation] என்பது முன்னமே இருந்த கொள்கைதான். இனம் [Race], இனசித்தாந்தம் [Racism], மற்றும் இனவெறித்துவம் / நிறவெறித்துவம் [Racialism] முதலியவற்றுடன், கலப்பினத் தோற்றம் அல்லது கலப்பினம் உருவாக்கம் சேர்ந்திருந்தன. போர்ச்சுகீசியர் தாம், தாம் சென்ற நாடுகளில், அந்தந்த நாட்டினர் பெண்களுடன் புணர்ந்து, புதியதாக கலப்பினத்தவரை உண்டாக்கினர். அத்தகையோர் தமக்கு விசுவாசமாக இருப்பர் என்பது அவர்களது கொள்கையாக இருந்தது. அவ்வாறு உருவாக்கிய குழுமத்தை காஸ்டா [casta] என்று குறிப்பிட்டனர். அது பிறகு காஸ்ட் [caste] / ஜாதி என்றாகியது. போர்ச்சுகீசியர் கலப்பினத்தவரை சுத்தமானவர் / தூய்ன்மையாஅ இனத்தவர் என்று கொள்ளவில்லை. ஆனால், அவர்கள் தங்களது நிறவெறித்துவ தீவிரவாதக் கொள்கைகளை உலக யுத்தங்கள் முடிந்த பிறகு, ஹிட்லரி மீது சுமத்த, “ஆரிய இனம்” என்று உருவாக்கி, பரப்ப ஆரம்பித்தனர். இனரீதியில், அது யூதர்களை பாதித்ததால், இனம் பொய், கட்டுக்கதை என்று மற்றினர். பிறகு, இப்பொழுது, உலகமயமாக்கம் போன்றவற்றில் வியாபாரம் தான் முக்கியம் எனும் போது, “எல்ல்லொரும் ஒன்று” போன்ற பொய்மை சித்தாந்தங்களை உருவாக்க, வழி தேடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் தான், டோனி ஜோசப் போன்ற வியாபார ஏஜென்டுகள், “எல்லோருமே வந்தேறிகள்” என்று சித்தாந்தத்தை மாற்றியமைக்கப் பார்க்கின்றானர்.

Genetic Dravidian myth- Vedaprakash

திராவிடர்களும், மரபணு ஆராய்ச்சிகளும்: இந்தியாவில், வேண்டுமென்றே, ஆரிய குடியேற்றம், குடிபெயர்பு என்றெல்லாம் தான், விவாதிக்கப் படுகிறது, “திராவிடர்” பற்றி பேசுவது கிடையாது. ஏனெனில், ஆராய்ச்சியாளர்கள், 5000 வருடங்களுக்கு முன்பாக, திராவிட மொழி பேசுபவர்கள் நூபியாவில் வாழ்ந்து, இரான் மூலமாக, இந்தியாவிற்குள் நுழைந்து குடியேறிவர்கள் ஆவர். நூபியா என்பது, ஆப்ரிகாவில், நைல் நதிக்கரையில், அஸ்வான் மற்றும் கார்டோம் இடையில் உள்ளது[7]. அதனால், இந்தியாவில் தோன்றிய மரபணு குழுக்கள் அல்லர் என்பது “M macrohaplogroups” நிரூபிக்கிறது[8] என்பதால், மறைப்பர்தற்காக, இதைப் பற்றி அலசுவதில்லை. மேலும், ஆப்ரிகாவில் இருந்து திராவிடர்கள் வந்தனர் என்றால், சிந்துசமவெளி மற்றும் குமரிக்கண்டம் இரண்டுமே – மூலம் மற்றும் சம்பந்தப்பட்ட கருதுகோள்கள், சித்தாந்தங்கள் எல்லாமே –  அடிபட்டு போகிறது. பூகோள ரீதியாக பரவிய, மரமணு கூறு “hg M” கொண்டவர், நூபியாவில் உள்ள “C-Group”-டன் ஒத்துப் போகிறார்கள்[9] என்றும் எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. இந்நிலையில், திராவிட இன வந்தேறி மரபணு கோட்பாட்டை ஓரங்கட்டி, ஜாதி ரீதியில் அலசி, ஆராய்ச்சி செய்ய இறங்கி விட்டனர்[10]. பள்ளர், வன்னியர், நாடார் [கிருத்துவன் / இந்து], முஸ்லிம், ஐயங்கார், ஐயர், மீனவர், மார்வார், அகமுடையார், என்று எல்லோருமே, ஒரே மூல மரபணுவிருந்து, பிறகு, கலப்பினில் உருவானவதாம் என்று எடுத்துக் காட்டுகின்றனர். பிறகு, தமிழகத்தில் இருப்பவர் அனைவரையும் ஒரே ஜாதி என்று சொல்லி விட முடியுமா?

© வேதபிரகாஷ்

15-07-2019

Genetic Dravidian myth- Vedaprakash-2

[1] The Hindu, How genetics is settling the Aryan migration debate, Tony Joseph JUNE 16, 2017 23:49 IST; UPDATED: JUNE 19, 2017 12:50 IST.

[2]https://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece

[3] டைம்ஸ் தமிழ், பெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆரியர்களின் வருகைக்கு மரபணு ரீதியான ஆதாரம் கண்டுபிடிப்பு, ஜூன் 17, 2017

[4]https://thetimestamil.com/2017/06/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/

 

[5] தி.இந்து, எங்கிருந்து வந்தார்கள்?, டோனி ஜோசப், Published : 03 Jul 2017 09:40 IST, Updated : 03 Jul 2017 09:40 IST.

[6]https://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9745656.ece

[7] Nubia is a region along the Nile river encompassing the area between Aswan in southern Egypt and Khartoum in central Sudan. It was the seat of one of the earliest civilizations of ancient Africa, with a history that can be traced from at least 2500 BC onward with the Kerma culture. The latter was conquered by the New Kingdom of Egypt under pharaoh Thutmose I around 1500 BC. Nubia was home to several empires, most prominently the kingdom of Kush, which conquered Egypt during the 8th century BC during the reign of Piye and ruled the country as its Twenty-fifth Dynasty (to be replaced a century later by the native Egyptian Twenty-sixth Dynasty).

[8] Dravidian speakers formerly lived in Nubia and migrated to India over 5000 years ago and the Indian M macrohaplogroups do not have an in situ origin.

Winters, Clyde. Origin and spread of Dravidian speakers, International Journal of Human Genetics 8.4 (2008): pp.325-329.

[9] The geographical distribution of the archaeological signature of the C-Group people from Nubia to India matches the location of populations carrying hg M.

[10] Kanthimathi, S., M. Vijaya, and A. Ramesh. Genetic study of Dravidian castes of Tamil NaduJournal of genetics 87.2 (2008): pp.175-179.

ரத்தம், நிறம், இனம் பிறகு மரபணு வைத்து “விஞ்ஞான” போர்வையில், மக்களைப் பிரிக்கும் முயற்சிகள் [1]

ஜூலை 16, 2019

ரத்தம், நிறம், இனம் பிறகு மரபணு வைத்துவிஞ்ஞானபோர்வையில், மக்களைப் பிரிக்கும் முயற்சிகள் [1]

Tony Joseph book

டோனி ஜோசப்பை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை?: டோனி ஜோசப்பின்[1] கட்டுரைகள் மற்றும் புத்தகம், நிறைய பேர்களால் கண்டுகொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது. இப்பொழுதெல்லாம், புத்தகம் விற்கவேண்டும், சினிமா ஓட வேண்டும் என்றால், ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி, அதன் மூலம் வியாபாரத்தைப் பெருக்கி, லாபமடையலாம் என்ற யுக்தியை கையாண்டு வருகிறார்கள். 2017லேயே கண்டுகொள்ளாத நிலையில், 2019ல் மறுபடியும், ஏதோ எய்தியை வெளியிட்டு, வியாபாரத்தைத் தொடங்கியிருப்பது போன்று தெரிகிறது. மரபணுவியல் என்ற போர்வையில். ஏதோ விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி, ஆராய்ச்சியின் புள்ளி விவரங்கள், புள்ளி விவரங்கள் வைத்து விளக்கம், விளக்கங்களை வைத்து திரிபு விளக்கங்கள் என்று பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. ஆனால், ஆரம்பித்திலிருந்தே, திராவிடத்துவ வாதிகள் இவற்றைக் கண்டுகொள்ளவில்லை. ஒன்று அவர்களுக்கு ஆங்கிலத்தில் இருப்பவற்றைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. ஆங்கிலத்தில் படித்து அவர்களுக்கு சொன்னபோது, அவர்களுக்கு சாதகமாக இல்லை என்ற நிலையில் அமைதியாக இருந்து வருகின்றனர்.

immigrant disparagement, Tamil way

டோனியின் வந்தேறி முடிவும், எடுபடாமல் போன புத்தகமும்: இப்பொழுது கூட, “சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் வருகையால்தான் அழிந்தது என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப் பெறவில்லை என்கிறார் கட்டுரையாளர் டோனி ஜோசப்,” என்றுள்ளதை மறைக்கப் பார்க்கின்றனர் திராவிடத்துவவாதிகள், கம்யூனிஸ்ட் மற்றும் இதர பிரிவினைவாதிகள். உண்மைகளை மறைத்து, திரிக்கும் போக்கை, வழக்கமாக, “வினவு” போன்றவற்றில் கவனிக்கலாம்[2].

இன்று இந்த மரபணுக்கள் எல்லாம் கலந்து ஒன்று பிணைந்திருக்கின்றது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த ஒன்றிணைவை இன்றைக்கும் பார்ப்பனியம் கேள்விக்குள்ளாக்கி மதம், சாதி, மொழியின் பெயரால் இந்திய உழைக்கும் மக்களை சூத்திரன், பஞ்சமன் என்றே ஒடுக்குகிறது. இந்த ஒடுக்குமுறை ஆரியர் வருகையோடு தொடர்புடையது என்பதுதான் முக்கியமானது. “நாங்கள் கருப்பாக இருக்கும் திராவிடர்களோடு சேர்ந்து வாழவில்லையாஎன்று தருண் விஜய் கேட்ட கேள்வி அதை வேறு விதத்தில் விளக்குகிறது. இனி இந்துமதவெறியர்கள், ஆரியர்கள்தான் இந்தியாவில் குடியேறினார்கள் என்பதை மறுத்துப் பேச முடியாது. ஆனால் இந்த வரலாற்று உண்மையை அவர்கள் பாடப்புத்தகங்களில் இருந்து தடை செய்ய முனைவார்கள். உண்மையை வன்மையாக மக்களிடம் எடுத்துச் செல்வோம்.

அதாவது, இந்தியாவிற்குள் வந்தவர்கள் எல்லோருமே “வந்தேறிகள்” என்பதை மறைத்து, அந்த பதிவை செய்தது[3]. இரண்டு வருடங்கள் கழித்து, டெக்கான் குரோனிகல், “ஜாதி மற்றும் ஆரியர்” என்ற தலைப்பில், அதே விவரங்களை வெளிட்டதால் கவனிக்க நேர்ந்தது[4]. திகவோ அமுக்கி வாசிக்க பார்த்தது[5]. தி.இந்து, தமிழில் வந்ததை போட்டு, “நன்றி: ‘தி இந்து’ (16.6.2017)” தனது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டது[6].

Out of Africa, genetic theory.2

65,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி மக்கள் இந்தியாவில் குடியேறினராம்!: கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதிக்கு வந்த அதாவது 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள். எது என்னவாக இருந்தாலும், இந்திய மக்கள் தங்கள் நாகரிகத்தை பல இனம் மற்றும் வரலாற்றிலிருந்து உருவாக்கினார்கள் என்பதே நிஜம். இந்திய நாகரிகத்தின் செழுமையின் உச்சம், அது எல்லாவற்றையுன் உள்ளடக்கிய போதுதான் நிகழ்ந்தது. அதாவது இந்திய மரபியல் அடிப்படையின் மையமாக ‘வேற்றுமையில் ஒற்றுமையே’ இருந்துள்ளது என்பதே உண்மை.

Dolococephalic....cranil index gone

கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் இரண்டு மிகப்பெரிய குடிப்பெயர்வு நடந்துள்ளது: இன்று இந்தியாவில் உள்ளவர்கள் எல்லோருமே “வந்தேறிகள்” தாம் என்ற ரீதியில் டோனி ஜோசப் என்பவர் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மரபணுவியலாளர் டேவிட் ரெய்ச்சின் ஆய்வு முடிவானது 2018 மார்ச்சில் வெளியானது. அவருடன் உலகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, வரலாறு, தொல்லியல், மானுடவியல், மரபணுவில் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 92 அறிஞர்கள் இந்த ஆய்வில் பணியாற்றினார்கள். அந்த ஆய்வானது கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் இரண்டு மிகப்பெரிய குடிப்பெயர்வு நடந்துள்ளது.

immigrant disparagement, Tamil way-news cutting.jpg

7000 – 3000 YBP காலத்தில் நடந்தது: முதல் குடிப்பெயர்வானது தென்மேற்கு இரான் பகுதியில் உள்ள ஜக்ரோஸிலிருந்து நடந்திருக்கிறது. அதாவது, அங்கிருந்து இந்தியாவுக்கு விவசாயிகளாகவும், ஆடு மேய்ப்பவர்களாகவும் வந்திருக்கிறார்கள். இந்த குடிபெயர்வானது 7000 மற்றும் 3000 ஆண்டுகளுக்கு இடையேயான காலக்கட்டத்தில் நடந்திருக்கிறது. இந்த கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதிக்கு வந்த அதாவது 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள்.

Caldwell lies

2000 BCEல் நடந்த குடிபெயர்வு:  இரண்டாவது குடிபெயர்வு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. அதாவது ஆரியர்கள் வந்திருக்கிறார்கள். இது இன்றைய கஜகஸ்தான் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என அனுமானிக்கிறார்கள். குதிரை செலுத்துவதில் வல்லுநர்களான அவர்கள் சமஸ்கிருதத்தின் முந்தைய மொழி வடிவத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பலியிடும் பழக்கத்தையும், வேத பண்பாட்டையும் உருவாக்கியது அவர்களே. எனது புத்தகத்தில் எழுதியது போல, இந்த மக்களை புரிந்து கொள்ள நமக்கு பீட்சாவுடம் ஒப்பிடுவது உதவதலாம்.

Aryans vs Dravidians.Pizza theory

இந்தியர்கள் எல்லோருமே பீட்சா மாதிரிதான்[7]: இந்திய மக்களை ஒரு பீட்சாவாக கருதிக் கொள்ளுங்கள். முதல்முதலாக இந்த நிலபரப்பிற்கு வந்தவர்கள் பீட்சாவின் அடிபாகத்தை உருவாக்கினார்கள். அந்த அடிபாகமானது சில இடங்களில் மெல்லிதாகவும், சில இடங்களில் தடிமனாகவும் இருந்தது. இதன் மேல்தான் பீட்சாவின் பிற பகுதிகள் அமைக்கப்பட்டன. அதாவது இந்திய மக்களின் மரபணுவை சோதனை செய்தால், அது 50 முதல் 65 சதவீதம் முதல் முதலாக இந்தியாவிற்குள் குடிப்புகுந்த மரபணுவை ஒத்து இருக்கிறது.  பீட்சாவின் மேற்பகுதியில் உள்ள சாஸை போன்றவர்கள் ஹரப்பன் (சிந்து சமவெளி) நாகரிக மக்கள். அதன்மீது உள்ள வெண்ணெய்தான் பிற்காலத்தில் இந்தியாவிற்குள் குடிபுகுந்த ஆரியர்கள், திபெத்தோ-பர்மன் மக்கள் மற்றும் ஆஸ்ட்ரோ-ஆசிய மக்கள். எது என்னவாக இருந்தாலும், இந்திய மக்கள் தங்கள் நாகரிகத்தை பல இனம் மற்றும் வரலாற்றிலிருந்து உருவாக்கினார்கள் என்பதே நிஜம். இந்திய நாகரிகத்தின் செழுமையின் உச்சம், அது எல்லாவற்றையுன் உள்ளடக்கிய போதுதான் நிகழ்ந்தது. அதாவது இந்திய மரபியல் அடிப்படையின் மையமாக ‘வேற்றுமையில் ஒற்றுமையே’ இருந்துள்ளது என்பதே உண்மை[8].

Aryans vs Dravidians

உஷரான திக டோனி ஜோசப்பை திரித்தது[9]: விடுதலையின் திரிப்பு மற்றும் புலம்பல் இவ்வாறாக உள்ளது, “இந்திய மனித இனம் குறித்த மரபணு ஆய்வில் குறிப்பிட்ட பிரிவு மக்கள் மத்திய ஆசியாவின் மேய்ச்சல் நிலப்பகுதியில் இருந்து வந்தவர்கள் என்று மரபணு ஆய்வாளர் டோனி ஜோசப் பிபிசிக்கு தனது ஆய்வின் முடிவுகள் குறித்து பேட்டியளித்துள்ளார். இதன் மூலம் ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்துவந்தவர்கள் தான் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[10]……………… இந்த சிந்து வெளி நாகரிகமானது, எகிப்திய மற்றும் மெசோ போடாமிய நாகரிக காலகட்டத்தை சேர்ந்தது, ஆரியக் கலாச்சாரத்திற்கு முற்றிலும் எதிரான திராவிடக் கலாச்சாரம் என்று சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ளனர் அமைக்கப்பட்டன. அதாவது இந்திய மக்களின் மரபணுவை சோதனை செய்தால், அது 50 முதல் 65 சதவீதம் இந்தியாவில் உள்ள பூர்வீக மக்கள் ஹரப்பன் (சிந்து சமவெளி) நாகரிக மக்களின் மரபணுவை ஒத்து இருக்கிறது. ஆனால், தற்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் இதை முற்றிலுமாக மறுக்கின்றனர். அவர்கள் இந்திய வரலாற்றின் உள்ளடக்கத்தை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்கள். ஆரியர்கள் வெளியிலிருந்து குடிபெயரவில்லை என்கிறார்கள். ஆரியர்கள் வருகைக் கோட்பாட்டை முன் வைக்கும் முன்னணி வரலாற்று ஆய்வாளர்களுக்கு மாறாக சமூகவலைதளம் மற்றும் பொதுத்தளத்தில் கடுமையாக கருத்துத்தாக்குதலை மேற்கொள்கின்றனர்”.

© வேதபிரகாஷ்

15-07-2019

Blood theory gone

[1] ஆசிரியர் குறிப்பு : டோனி ஜோசஃப் ஒரு எழுத்தாளர் BusinessWorld ன் முன்னாளைய ஆசிரியர்., டிவிட்டர் பக்கம் : @tjoseph0010.

[2] வினவு, ஆரியர்கள் வந்தேறிகள்தான்நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !, சிறப்புக் கட்டுரை – June 23, 2017.

https://www.vinavu.com/2017/06/23/tamil-translation-of-how-genetics-is-settling-the-aryan-migration-debate/

[3] https://www.vinavu.com/2017/06/23/tamil-translation-of-how-genetics-is-settling-the-aryan-migration-debate/

[4] DECCAN CHRONICLE. Caste system and Aryans, Published Jul 7, 2019, 3:02 am ISTUpdated Jul 7, 2019, 3:02 am IST

https://www.deccanchronicle.com/nation/in-other-news/070719/caste-system-and-aryans.html

[5] விடுதலை, ஆரியர்களின் வருகைக்கு மரபணு ரீதியான ஆதாரம் கண்டுபிடிப்பு, சனி, 01 ஜூலை 2017 12:51

[6]http://www.viduthalai.in/component/content/article/133-2012-02-18-07-12-19/145835-2017-07-01-07-28-08.html

[7] பிபிசி.தமிழ், ஆரியர்களும், சிந்துவெளி நாகரிகமும்: இந்திய முற்கால வரலாற்றை திருத்தி எழுதும் மரபணு ஆய்வு, டோனி ஜோசப்-எழுத்தாளர், 31 டிசம்பர் 2018.

[8]  https://www.bbc.com/tamil/india-46715678

[9] விடுதலை, ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்களேமீண்டும் உறுதி செய்த மரபணு ஆய்வுகள், வெள்ளி, 04 ஜனவரி 2019 14:38

[10] https://www.viduthalai.in/headline/174572-q—q—–.html