உலகில் முதலில் பிறந்த குரங்கு – தமிழ்க்குரங்கு தான் – திராவிடியன் ஸ்டாக் ஸ்டாலினின் புதிய மனிதவியல் சித்தாந்தம்! (2)

அரசியல்–ஆதிக்கம்–அதிகாரம் மூலம் திணிக்கப் படும் மனித விரோத இனவாத, இனவெறித்துவ சித்தாந்தங்கள்: ஆக திராவிடத்துவ வாதத்துடன், இன்றும் இனவாதங்களை வைத்து அரசியல், பாடதிட்டம், சமூக அணுகுமுறை முதலியவற்றை நடத்திக் கொண்டிருந்தால், தமிழகம் சீரழிந்து தான் போகும். இருப்பினும், மக்களின் நம்பிக்கைகளால், பழக்க-வழக்கங்களினால், இவற்றையெல்லாம் கடந்து, நடப்பவை நடந்து கொண்டிருக்கின்றன. பொறுப்புள்ள முதலமைச்சர் இந்த 21ம் நூற்றாண்டிலும், யாரோ, விசயம் தெரியாதவர் எழுதி கொடுத்ததை படித்தால், மக்களுக்கு நன்மை ஏற்பட்டு விடாது. மேலும், உலகம் முழுவதும் கவனிக்கும் போது, உண்மை வெளிப்பட்டு விடும். இங்கு வேண்டுமானாலும், எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, “ஆமாம், சாமி” போட்டுக் கொண்டிருப்பார்கள். மெத்தப் படித்த பல மனிதவியல், அகழ்வாய்வு, மனிதவியல்- அகழ்வாய்வு, அகழ்வாழ்வியல்- மனிதவியல், அறிஞர்கள், வல்லுனர்கள், பேராசிரியர்கள் எல்லாம் இருந்தும் வாய் திறக்காமல் இருப்பதிலிருந்தே அறிந்து கொள்ளலாம். சரித்திரத் தன்மையற்ற குப்பைத் தொட்டியில் போடப்பட்ட இனவாதத்தை வைத்து, இன்னும் அரசியல் செய்யலாம், என்றால் செய்து கொண்டே இருக்கலாம். பிறகு, பொருளாதார முன்னேற்றம், தொழிற்துறை மேன்பாடு, முதலியவைப் பற்றி கண்டுகொள்ள முடியாது..

திராவிடத்துவ ஆராய்ச்சியின் கோலம்–அலங்கோலம்–அரசியல்: முன்பு ஆஸ்கோ பார்போலா, நொபுரா கரஷிமா போன்றோரை வைத்துக் கொண்டு, போலித்தாமாக பிம்பத்தை உருவாக்க கருணாநிதி முயன்றார். ஆனால், ஆஸ்கோ பார்போலா, தான் பதவியில் இருக்கும் போது ஒரு மாதிரி, ஓய்வு எற்றப் பிறகு வேறு மாதிரி என்று பேசி வந்தார்[1]. ஆனால், எழுதும் போது எச்சரிக்கையாக இருந்தார். திராவிடனும் இல்லை- ஆரியனும் இல்லை என்பது போலத்தான் முடிவுகள் இருக்கும். நொபுரா கரஷிமா எப்பொழுதுமோ “திராவிடத்துவ அரசியலுக்கு” ஒத்துப் போகவில்லை. 2013ல் நடத்தப் பட்ட மாநாட்டிற்கு வரமுடியாது என்றே சொல்லி விட்டார். அப்பொழுது, கண்டியூர் கல்வெட்டு என்ற மோசடி நடந்தது. பிறகு, உலகத் தமிழ் மாநாடு கோயம்புத்தூரில் நடந்தபோதும், அதனை ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், “செம்மொழி மாநாடு” என்று பெயர் மாற்றப் பட்டது. “நேதி, நேதி” ஐராவதம் மகாதேவன் மற்ற மாநாடுகளில் “நேதி, நேதி” (அதுவுமில்லை, இதுவுமில்லை) என்று சொல்லி தப்பித்து வந்தார். இப்பொழுது, பாலகிருஷ்ணன் அவரது இடத்தைப் பிடித்துக் கொண்டு விளையாடி வருகிறார்.
ஆரிய படையெடுப்பு இல்லை, திராவிடர்களே, ஆரியர்கள் வருவதற்கு முன்னமே தெற்காக நகர்ந்து சென்று விட்டனர்: அஸ்கோ பர்போல திடீரென்று அதிரடியாக, இரண்டாம் மில்லினியம் காலத்தில் ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதற்கு, ஒரு புதிய திரிபு வாதத்தை முன்வைத்துள்ளார். இதன்படி, திராவிடர்கள் விரட்டியடிக்கப்படவில்லை, ஆனால், ஆரியர்கள் அங்கு நகரத்திற்கு வருவதற்கு முன்னமே, படிப்படியாக அவர்களே மேய்ச்சலுக்கு நல்ல பசுமையான நிலங்களைத் தேடிக்கொண்டு, தெற்கு நோக்கி நகர்ந்து சென்று விட்டனர். சென்னைக் கிருத்துக் கல்லூரியின் சார்பாக, கிஃப்ட் சிரோமணி என்பாரது நினைவுச் சொற்பொழிவாக, தான் “சிந்துவரிவடிவம், திராவிட ஹரப்பன்கள், காட்டுக்கழுதை” என்ற தலைப்பில் பேசியதைப் பற்றி, இந்தியன் எக்ஸ்பிரஸுக்குச் சொன்னார். அவரது ஆராய்ச்சியின் படி, திராவிடர்கள்தாம், குஜராத்தில் உள்ள சிந்துசமவெளி நாகரிகத்தில் இருந்தனர். அவர்களில் சிலர் மேய்ச்சலுக்கு நல்ல பசுமையான மற்றும் செழுமையான நிலங்களைத் தேடிக்கொண்டு தெற்காக நகர்ந்தனர். இது ஆரியர்கள் கூட்டம் கூட்டமாக பெருமளவில் வருவதற்கு முன்பே ஏற்பட்டது, என்று ஆதாரங்கள் உள்ளன.
வட–இந்தியாவில் ஆங்கிலேயர்களைப் போல ஆரியர்கள் திராவிடர்களை இந்தோ–ஆரிய மொழியைக் கற்றுக்க்கொள்ளச் செய்தனர்: ஆங்கிலேயர்கள் எப்படி பிராமணர்களை ஆங்கிலம் கற்றுக்கொள்ளவைத்து, தங்கள் கீழ் வேலை செய்யவைத்து, நாட்டை ஆண்டனரோ, அதே போல, சிந்துநதி அருகில் தங்கி விட்ட, திராவிட சமுதாயமும், குறிப்பாக சமுதாயத்தலைவர்கள், இந்தோ-ஆரிய மொழியைக் கற்றுக்கொண்டது. திராவிடர்களுடைய மேற்தட்டுக் குடிகள் அவ்வாறு ஆரிய மொழியைக் கற்றுக் கொண்டு, வட-திராவிடர்களாக மாறினர். இருப்பினும் அவர்களது மொழியில், முந்தைய-திராவிட கூறுகளைத் தக்கவைத்துக் கொண்டனர். தென்னிந்தியாவில் திராவிட மொழிகள் இன்னும் பேசப்பட்டு வருகின்றன, ஏனெனில், ஆரியர்கள் தென்னிந்தியாவை முழுவதுமாக வெற்றிக் கொள்ளமுடியவில்லை. வட-இந்தியாவை அவ்வாறு வெற்றிக் கொள்வதற்கே பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கும். ஆனால், இப்பொழுதைக்கு, சரித்திர ஆசிரியர்களிடம் வழக்கத்தில் உள்ள சித்தாந்தமானது, ஆரியர்கள் திராவிடர்களை தென்னிந்தியாவிற்கு விரட்டியடித்தனர் என்பதுதான். இது படித்தவர்களிடையே, இப்பொழுது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
கழுதை போல, இனி குரங்கும் திராவிடத்துவத்தில் இடம் பெறும்: ஆஸ்கோ பார்போல விசயத்தில், கழுதை விவாதப் பொருளாகியது[2]. இனி, ஸ்டாலினின் குரங்கும் அதில் சேரும்.
- உலகில் முதலில் பிறந்த குரங்கு – தமிழ்க்குரங்கு தான், மற்ற மொழி குரங்குகள் எல்லாம் பிறகு தோன்றின, பிறந்தன, வளர்ந்தன.
- தமிழ் குரங்கு தான் முதன் முதலில் மனித குரங்காக மாறியது. Hominid ஆக இருந்த போதே, இறைச்சி சாப்பிட்டு, குடித்துக் கொண்டிருந்தது.
- ஈவேராத் தான் அதனை ஓரளவுக்கு Homo-habilis ஆக்கியதால், கொஞ்சம் கத்த ஆரம்பித்தது, குதித்தது, ஆடிப் பாடிக் கொண்டிருந்தது.
- அண்ணா அதனைத் தூக்கி நிறுத்த homo-erectus ஆகியது. உடன் பிறவா தோழர்கள் உருவாகினர். மற்றவர்களைத் தூக்கி விட்டனர்.
- கருணாநிதி தான் அவற்றை homo-sapien ஆக்கினார், கழகக் கண்மணிகளாக சூப்ப ஆரம்பித்தனர், ஞானம் / அறிவு பெற்றனர்..
- ஸ்டாலின் வந்த பிறகு, தமிழகத்திலிருந்து, தமிழ் குரங்குகள் பல தேசங்களுக்கு செல்ல ஆரம்பித்தன. சிந்துக்கு சென்று உலகம் முழுவதும் பரவின.
- தெலுங்கு குரங்கு, கன்னடக் குரங்கு, மலையாளக் குரங்கு எல்லாம் தோன்ற, திராவிடக் குரங்கு என்ற கூட்டணி உருவாகியது,
- ஆரியக் குரங்கு, வந்தேறி குரங்கு, குந்தேறி குரங்கு, வந்துகுந்தேறிய குரங்கு என்று எல்லா குரங்குகளுடன் சண்டை போட ஆரம்பித்தது.
- திடீரென்று ஹிந்தி குரங்கு வர, இந்தி தெரியாது போடா என்றது. இதனால், மற்ற திராவிட குரங்குகள் கூட்டணியிலிருந்து ஓடிவிட்டன.
- திடீரென்று திராவிட குரங்களுக்குள் சண்டை ஏற்பட திக-குரங்கு, திமுக-குரங்கு, அதிகும-குரங்கு, தேதிமுக-குரங்கு என்றெல்லாம் உருவாகின.
திராவிடியன் ஸ்டாக் ஸ்டாலினின் புதிய மனிதவியல் சித்தாந்தம்!: இனி ஆராய்ச்சிகள் இந்த கோணத்தில் ஆரம்பிக்கும், தொடரும். இனம், இனவெறி, இனவெறித்துவம் தலைக்கேறி, போதையுடன் இருக்கும் நிலையில், சரித்திரம் மட்டுமல்லாது, விஞ்ஞானமும் மறக்கப் படுகிறது. இனி பல்கலைக் கழகங்களில் மனிதவியல், அகழ்வாய்வு, மனிதவியல்- அகழ்வாய்வு, அகழ்வாழ்வியல்- மனிதவியல், முதலியவை படிக்க வேண்டும், அவற்றையும், இது போலவே மாற்றி விடலாம். அத்தகைய பாடதிட்டங்களின் படியே, “திரூவிட குரங்கு” மூலங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம். இத்தகைய இனவெறித்துவ முரட்டு நம்பிக்கைகளை வைத்துக் கொண்டே காலத்தை ஓட்டி விடலாம். மொழி, மொழித்துவ வெறி, இனம், இனத்துவ வெறி இவற்றைத் தாண்டி, இனி மனிதகூறு விஞ்ஞானத்தையும் மறுத்து, கட்டுக்கதைகளை நம்பி, அரசியல் செய்தால், யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
© வேதபிரகாஷ்
20-07-2022
[1] வேதபிரகாஷ், ஆஸ்கோ பர்போல, கருணாநிதி, ஐராவதம் மஹாதேவன்: சிந்துசமவெளி குறியீடுகள்!, ஜூன்.24 2010.
[2] வேதபிரகாஷ், சிந்து வரிவடிவம், ஹரப்பன் திராவிடி மற்றும் காட்டுக் கழுதை, ஜூன்.16 2010.