என்னேவிந்தைஇந்தஹரப்பாநாகரிகம்’ என்றநூல்வெளியீட்டுவிழா: ஃப்ரன்ட்லைன் முன்னாள் இணை ஆசிரியர் டி.எஸ்.சுப்பிரமணியனின் ‘என்னே விந்தை இந்த ஹரப்பா நாகரிகம்’ நூலை சென்னையில் 06-09-2022 அன்று அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, ‘தி இந்து’ குழும இயக்குநர் என். ராம் பெற்றுக்கொண்டார். இந்த டி.எஸ்.சுப்பிரமணியன் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து இறைய விசயங்களைக் கேட்டுப் பெற்றுக் கொல்வார். பிறகு, அவற்றை தனது எழுத்துகளுக்கும் உபயோகப் படுத்திக் கொள்வார்[1]. திமுக-தி.இந்து சொந்தங்கள்-பந்தங்கள் அறிந்ததே. அரசியல்-வியாபாரம்-பாதுகாப்பு என்றெல்லாம் திட்டம் இருக்கும் பொழுது, பெரியாட்கள் விசயத்துடன் தான் எல்லாவற்றையும் செய்வார்கள். ஹரப்பா நாகரிகம் குறித்த பல புதிர்கள் இன்றும் விடுவிக்கப்படவில்லை என்று தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். ஃப்ரன்ட்லைன் முன்னாள் இணை ஆசிரியர் டி.எஸ்.சுப்பிரமணியன் எழுதிய ‘என்னே விந்தை இந்த ஹரப்பா நாகரிகம்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ‘தி இந்து’ குழும அலுவலகத்தில் 06-09-2022 அன்று நடைபெற்றது. அமைச்சர் தங்கம் தென்னரசு நூலை வெளியிட, ‘தி இந்து’ குழும இயக்குநர் என்.ராம் பெற்றுக்கொண்டார். விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தென்தமிழகத்துக்கும், சிந்துசமவெளிநாகரிகத்துக்கும்உள்ளதொடர்பு[2]: சிந்து சமவெளியில் இந்திய தொல்லியல் ஆய்வக தலைமை இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் அகழாய்வு செய்து 100 ஆண்டுகளாகிவிட்டன[3]. ஒவ்வொரு முறையும் அங்கு அகழாய்வு செய்யும்போது புதிய தகவல்கள் கிடைக்கின்றன. ஆனாலும், பாதியளவுக்குத்தான் அகழாய்வு செய்திருக்கிறோம். இன்றும் ஹரப்பா நாகரிகம் தொடர்பான பல புதிர்கள் விடுவிக்கப்படவில்லை[4]. திராவிட மொழிக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன[5]. தென் தமிழகத்துக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுசெய்ய தமிழக அரசு ரூ. 77 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது[6]. இதேபோல, சங்ககால துறைமுகப் பட்டினங்கள் தொடர்பாக அகழாய்வு செய்தால், தமிழர்களின் வணிகம் தொடர்பான ஏராளமான தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது[7]. கடும் உழைப்பால், பல அரிய தகவல்களுடன் இந்த நூல் உருவாகியுள்ளது,” இவ்வாறு அமைச்சர் பேசினார்.
புத்தகம்பற்றிபேச்சு: ‘தி இந்து’ குழும இயக்குநர் என். ராம் பேசும்போது, “நூலாசிரியர்வழக்கமானபத்திரிகையாளர்அல்ல. தொல்லியல்மட்டுமின்றி, அணுஆற்றல், விண்வெளிஆராய்ச்சி, இலங்கைப்பிரச்சினைஉள்ளிட்டவைதொடர்பாகவும்பலகட்டுரைகளைஎழுதியுள்ளார். ஹரப்பாநாகரிகம்தொடர்பாகநிறையஆராயவேண்டியுள்ளது. நானும்அங்குஒருமுறைசென்றுள்ளேன்,” என்றார். நூலாசிரியர் டி.எஸ்.சுப்பிரமணியன் பேசும்போது, “ஹரப்பாநாகரிகம்தொடர்பாக 1921-ல்அகழாய்வுசெய்யப்பட்டது. அதன்நினைவாகஇந்தநூல்உருவாக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் 600-க்கும்மேற்பட்டபுகைப்படங்கள்இடம்பெற்றுள்ளன,” என்றார். இந்த நிகழ்ச்சியில், ‘தி இந்து’ குழுமப் பதிப்பாளர் நிர்மலா லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தென்தமிழகத்துக்கும், சிந்துசமவெளிநாகரிகத்துக்கும்உள்ளதொடர்புகுறித்துஆய்வுசெய்யதமிழகஅரசுரூ. 77 லட்சம்ஒதுக்கீடுசெய்துள்ளது: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, திராவிடம் பற்றி அதிகமாகவே, இனம், இனவாதம், இனவெறி, மொழிவெறி போன்ற ஒதுக்கப் பட்ட, சரித்திராசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப் படாத விசயங்களை வைத்துக் கொண்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர். கீழடியை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய, கும்பல்கள் கிளம்பி விட்டன. தேவையில்லாமல், கோடிகளை செலவழித்து, மியூசியம், என்றெல்லாம் ஆர்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. வியாபார மயமாக்கப் பட்ட அகழாய்வை இங்குதான் பார்க்க முடிகிறது எனலாம். அரசியல்வாதிகள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என்று தோண்டும் இடங்களுக்குச் சென்று, குழிகளில் இறங்கி, அனைவற்றையும் தொட்டு, இடம் மாற்றி, கீழே போட்டு ஆதாரங்களை சிதைத்து வருகிறார்கள். ஒதுக்கிய்ப் பணத்தை செலவழிக்க வேண்டும், மேலும் பணம் கேட்க வேண்டும் என்ற கோணத்தில் தான் செயல் பட்டு வருகின்றனர்.
தமிழ்தொன்மைஆதாரம்கிடைப்பது, பணம்பெறுவது: இதனால், லட்சங்கள், கோடிகள் ஒதுக்கினாலும், மறுபடி தமிழ் தன் தொன்மையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூற வேண்டும். இலையென்றால் பணமும் கிடைக்காது, பதவியும்-பாராட்டும் கிடைக்காது. அதற்கேற்ற முறையில் தான் எல்லோரும் “ஆமாம், சாமி” பாணியில் ஜாலியாக வேலை செய்து வருகின்றனர். பைபில் அகழ்வாய்வு (Biblical archaeology) என்றுள்ளது, அதன்படி, தோண்டினால், கண்டிப்பாக ஏதாவது ஒரு ஆதாரத்தைக் கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆதாரம் இல்லை என்றால், பணமும் இல்லை (no evidence, no money) என்பது, உலகத்திற்கு தெரிந்த விசயம். அதுபோலத்தான், தமிழகத்தில் அகழ்வாய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தினம்தினம் ‘’எதையோ கண்டுபிடித்தனர்..…….” என்று செய்திகள் வந்துக் கொண்டிருந்ததை கவனித்திருக்களாம். இப்பொழுது குறைந்துள்ளது.
அகழாய்வு, அகழாய்வுஆராய்ச்சி, நெறிமுறைகளைப்பின்பற்றாமல்நடந்துவரும்தோண்டுதல்முதலியன: அகழ்வாய்வு முறைகளை மீறிய செயல்களுடன் நடந்து வரும் இவற்றை அகழ்வாய்வு அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், தமிழகத்தில் மட்டும் ஆர்பாட்டம் செய்து வருகின்றன. ஏற்கெனவே அறிக்கை சமர்ப்பிப்பதில் காலதாமதம், மழை பெய்து குழிகளில் நீர் நிரம்பி தோண்டி எடுத்த ஆதாரங்கள் நனைந்து, பலரின் கைகள் பட்டு, படிவுகள் மாறி, தமது விருப்பத்திற்கு ஏற்ப, கையாண்டு வருகின்றனர். முறையை அகழ்வாய்வு கொள்கைகளைப் பின்பற்றாமல் இருக்கின்றனர். அரசியல் செய்து ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். ஸ்டாலின் தலைமையில் ஆழாய்வு நடைபெறுகிறது என்று செய்தி,ஏன், அறிக்கையையே அவர்தான் சட்டமன்றத்தில் படிக்கிறார். அந்த நிலையில், அகழாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் “திராவிட மாடல்” அகழாய்வு எனலாம் போலிருக்கிறது.
மொஹஞ்சதாரோ–ஹரப்பன்நாகரிகம், பாகிஸ்தான், திராவிடஸ்தான், திராவிடமாடல்: முன்பு, ஜின்னா-பெரியார் முஸ்லிம்-திராவிட கூட்டு தவிடு பொடியாக்கி விட்டது. பாகிஸ்தான் கிடைத்தவுடன், ஜின்னா பெரியாரைத் தூக்கியெரிந்து விட்டார், அதனால், அம்பேத்கரைப் பிடித்துக் கொண்டார்[8]. ஜின்னா சென்னைக்கு வந்தபோது, அதிகமாக கண்டுகொள்ளவே இல்லை. பாகிஸ்தானியர் என்றுமே அந்நாகரிகம் திராவிடர் என்று ஒப்புக் கொண்டதே இல்லை[9]. இப்பொழுது அதனைக் கண்டு கொள்வதே இல்லை[10]. ஆனால், இங்கிருப்பவர்கள் தான் ஆர்பாட்டம்-கலாட்டா செய்து வருகிறார்கள். ஓய்வு பெற்ற ஏ. பாலகிருஷ்ணன் இப்பொழுது, திராவிடப் பாட்டு அதிகமாகவே பாடி வருகிறார். ஐராவதம் மஹாதேவனின் இருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டு, அவரது கொள்கையினை மீறி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துள்ளார். அவரது புத்தகங்கள் விற்கவேண்டும், பெயர்-புகழ் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார். இத்தகைய முரண்பாடுகளூடன் தான், ‘திராவிட மாடல் அகழாய்வு” ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
[1] தன்னுடைய கட்டுரைகளில் அவற்றை தாராளமாக உபயோகப் படுத்திக் கொள்வார். தி.இந்துவில் தமது கட்டுரை அல்லது கண்டுபிடிப்பு / விவரங்கள் வருமே என்று ஆசைப்பட்டு ஆராய்ச்சியாளர்கள் விசயங்கள், குறிப்புகள், புகைப் படங்கள் கொடுப்பார்கள். ஆனால், பத்தில் ஒன்று மடங்கு தான் வரும், மிச்சம் அவரது உபயோகத்திர்குச் சென்று விடும். இந்த முறையை மற்ற பிரபல நாளிதழ் எழுத்தாளர்களும் பின்பற்றி வருகிறார்கள்.
கல்வெட்டுத்துறையில்சிறப்பானவர்இல்லாதிருப்பது[1]: கல்வெட்டுத்துறையினர், வெளியே வராமல், காலத்தை ஓட்டி வந்தனர். தேசிய-அனைத்துலக மாநாடுகளில் கலந்து கொள்வது, ஆராய்ச்சி கட்டுரைகள் படிப்பது என்றெல்லாம் அலுவலகங்களில் உட்கார்ந்திருந்தனர். தமிழகத்தில் உள்ளோர், அப்பதவிக்கு வர, போதிய படிப்பு, அனுபம் இல்லாதிருததால், அவர்கள் வேலைக்கு வர முடியவில்லை[2]. நீதிமன்ற வழக்குகள் இதை அப்பட்டமாக வெளிப் படுத்துகிறது[3]. “இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடந்தது. “கல்வெட்டுத்துறையில்ரொம்பநாட்களாகவடஇந்தியர்கள்தான்பெரியபொறுப்பில்இருந்தனர். ஒருகட்டத்தில்கர்நாடகாவைச்சேர்ந்தநாகராஜ்ராவ்என்பவர்முக்கியபொறுப்புக்குவந்தார். அதனால்பெரியதகராறுஎல்லாம்நடந்தது. தென்இந்தியாவில்இருந்துஒருத்தர்வந்துட்டார்எனவடநாட்டவர்ஒத்துழைப்புகொடுக்கவில்லை. அதுஇன்றும்நீடிக்கிறதுஎன்பதற்குசான்றுதான்இப்போதுகல்வெட்டுத்துறையில்அறிவித்திருக்கும்பணிஇடங்கள். இவர்பதவிக்காலம்முடிந்தஉடனேகல்வெட்டுக்குஎன்றுஇருந்தமதிப்புகுறைந்துபோனது…,” என்கிற அந்த அதிகாரி, கல்வெட்டுகள் குறித்து தமிழக அரசின் செயல்பாட்டை விவரித்தார். குங்குமம் இப்படியெல்லாம் கதை விட்டிருக்கிறது[4].
அரசியல்செய்வதால், திறமைவந்துவிடாது: ‘‘தமிழக அரசைப் பொறுத்தவரை கல்வெட்டு, தொல்லியல் துறையில் அதீத அக்கறை கொண்டிருக்கிறது. 2010ல் கலைஞர் முதல்வராக இருந்த போது, தமிழ் கல்வெட்டுகள் எல்லாம் பதிப்பிக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் அன்பழகனுடன் இணைந்து முழு முயற்சி எடுத்தார். அதற்காக கையெழுத்தும் போடப்பட்டது. அந்த நேரத்தில் அது கைகூடாமல் போனது. இப்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. கல்வெட்டுகளைப் பதிப்பிக்கும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுத்தால் நன்றாக இருக்கும். கல்வெட்டுத்துறையினை, தொல்லியல் துறையோடு இணைத்திருக்கிறார்கள். கல்வெட்டுகள் குறித்தான காப்பிகள் கொடுத்தால் கூட இங்கு நம் ஆட்களை நியமித்து பாதுகாத்து, பராமரித்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யலாம். தொல்லியல் மீது மிகுந்த கவனம் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசில், இப்போது நல்ல செயலர்களும், கல்வெட்டுகள் படிக்கத் தெரிந்த அமைச்சரும் இருக்கின்றனர்.
ஒருவருக்குஒருவர்ஜால்றாஅடிப்பதால்திறமைவந்துவிடாது: “அமைச்சர்தங்கம்தென்னரசுகல்வெட்டுகளைநன்றாகவேபடிப்பார். அத்துடன்அறிவியல்பூர்வமாகக்கொண்டுவரஆசைப்படும்உதயசந்திரனின்செயல்பாடுகள்இன்னும்ஊக்கமாகஇருக்கிறது. அவர்போட்டஅடிப்படைஇன்றுநன்றாகப்போய்க்கொண்டிருக்கிறது...” என்கிற அந்த அதிகாரி, கல்வெட்டுகளின் தேவை குறித்தும் பேசினார். “இந்தியாவின்உண்மைவரலாற்றைஎழுதக்கூடியஅலுவலகம்இது. இப்போதுகேட்பதுதமிழ்கல்வெட்டுகளுக்குமட்டும்பணிநியமனம்அல்ல, சமஸ்கிருதகல்வெட்டுக்கும்தான். அதையும்வாசிக்க, பாதுகாக்கவேண்டும். அப்போதுதான்இந்தியவரலாறுமுழுமையடையும். மண்ணுக்குஅடியில்இருப்பதுநமக்குஎப்படித்தெரியும்..? எல்லாமேகல்வெட்டுகள்மூலமாகத்தான்கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இன்றுஇத்துறையில்இருக்கும்பலருக்குகல்வெட்டைப்பெரிதாகபடிக்கத்தெரியாது. இதற்காகஅரசைக்குறைசொல்லவில்லை. துறையில்இருப்பவர்கள்அவர்களுக்குத்தெரிந்தவர்களைநியமித்துவிடுகிறார்கள். இதுமாறவேண்டும். அதேவேளையில்கல்வெட்டுகளின்முக்கியத்துவம்குறித்துகலாசாரவிழிப்புணர்வுத்திட்டங்கள்நடத்தப்படவேண்டும்…” என்று அழுத்தமாக முடித்தார் அந்த அதிகாரி.
இன்றுஇத்துறையில்இருக்கும்பலருக்குகல்வெட்டைப்பெரிதாகபடிக்கத்தெரியாது: பளிச்சென்று நடுவில் சொன்ன உண்மை இதுதான். மற்றும், “இப்போதுகேட்பதுதமிழ்கல்வெட்டுகளுக்குமட்டும்பணிநியமனம்அல்ல, சமஸ்கிருதகல்வெட்டுக்கும்தான். அதையும்வாசிக்க, பாதுகாக்கவேண்டும். அப்போதுதான்இந்தியவரலாறுமுழுமையடையும்,” இதை திராவிடத்துவ வாதிகள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? சமஸ்கிருத கல்வெட்டுகளை யார் படிப்பார்கள், “அதையும்வாசிக்க, பாதுகாக்கவேண்டும்,” என்றால் யார் செய்வது? பாவம், ஏதோ போகிற போக்கில், இத்தகைய உண்மையினையும் சொல்லி விட்டார் போலும். குங்குமம் படிப்பவர்களும், இதையெல்லாம் உன்னிப்பாக யாரும் படிக்கப் போவதில்லை. வெங்கடேசன், மாறன் போன்றோர் ஏற்கெனவே புலம்பி இருக்கிறார்கள். ஆனால், அவை அவை நடவடிக்கைகளில் பதிவாகாது என்று சொல்லி விட்டார்கள். இருப்பினும், இங்கு ஏதோ சாதித்து விட்டது போல, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆரிய-திராவிடக் கட்டுக் கதைகள் கல்வெட்டுகள் படிக்க உதவாது: சமஸ்கிருதம்-தமிழ் என்று வைத்துக் கொண்டு திரிபுவாதம் செய்து கொண்டிருந்தால், கல்வெட்டியலில் ஒன்றையும் சாதிக்க முடியாது. தமிழகத்தைப் பொறுத்த வரையிலும் கூட, இந்த இரு மொழிகளும் தெரியாமல், கல்வெட்டுகளும் படிக்க முடியாது, ஆராய்ச்சியும் செய்ய முடியாது. பிரம்மி, தமிழ் பிரம்மி, தமிழி என்றெல்லாம் பேசினாலோ, சொற்பொழிவுகள் நடத்தினாலோ, வரிவடிவம் மாறப் போவதில்லை. நெட்டெழுத்தோ, வட்டெழுத்தோ, கிரந்தம் வரும் போதும், சமஸ்கிருதம் தெரிந்தே ஆகவேண்டும். ஆகவே, தங்கம் தென்னரசு நன்றாக கல்வெட்டுகள் படிப்பார் என்று மெச்சிக் கொள்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. திராவிட பாணியில், மேடை பேச்சுகள் பேசுவதற்கு உபயோகப் படலாம், நடைமுறையில் ஒன்றையும் சாதித்து விடமுடியாது. அதே போலத்தான், “ஆரிய-திராவிடக் கட்டுக்கதைகள்,” ஏனெனில், சரித்திராசிரியர்கள் அவற்றை ஒதுக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்கள். ஆனால், நாங்கள் அதை வைத்து தான் ஆராய்ச்சி செய்வோம் என்றால், உலகத்தில் யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. குண்டுசட்டியில் குதிரை ஓட்டி, சந்தோசமாக இன்னொரு 50-100 ஆண்டுகள் கூட கழித்து விடலாம்.
நிலுவையில்உள்ளவழக்குகள்ASI மற்றஅதிகாரிகளுக்குபாதுகாப்புகொடுப்பதுயார்?: மேலே குறிப்பிட்ட வழக்குகள் எல்லாமே “சதாய்ப்பு வழக்குகள்” (harassment PILs, petitions) போன்றவை என்று தெரிந்து கொள்ளலாம். ஏற்கெனவே, ஒரே மாதிரியான வழக்குகள் இருக்கும் போது, எப்படி, மேலும்-மேலும் அதே வகையிலான வழக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டன என்பதை கவனிக்க வேண்டும். பல்லாவரம் பிரச்சினை ஆபாத்தான விசயம். ஏற்கெனவே பல்லாவர மலையில், பல்லவர்களின் குகைக் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு, அவற்றை முழுவதுமாக மாற்றி தர்கா, கட்டிடங்கள் என்று முஸ்லிம்கள் மாற்றி விட்டனர். அங்கிருந்த சிலைகள், கல்வெட்டுகள் எல்லாமே காணாமல் போய்விட்டன. இதைப் பற்றி, இதுவரை எந்த பொறுப்பான, யோக்கியமான அகழ்வாய்வு நிபுணாரோ, நேர்மையான தொல்துறை வல்லுனரோ, தமிழ் அபிமானியோ, திராவிடத் தலைவரோ என்றும் பேசியதில்லை. பதாகை ஏந்தவில்லை, போராடவில்லை. இப்பொழுதும், ASI மற்ற அதிகாரிகள் சென்ற போது, பாதுகாப்பிற்கு யாரும் வரவில்லை. போலீஸாருக்கு புகைக் கொடுத்தாலும் ஒன்றும் நடக்கவில்லை. நீதிமன்றமும், மேற்கொண்டு என்னவாயிற்று என்று கேட்கவில்லை. இந்த விகடன், குங்குமம், கலைஞர் செய்தி, நக்கீரன் முதலியவை ஆராய்ந்து, தொல்துறை அதிகாரிகளை ரகசியமாக விசாரித்து, செய்திகளை வெளியிடவில்லை.
2019ல்வழக்குசெப்டம்பர் – மைசூரில்உள்ளதமிழ்கல்வெட்டுகள், பாதுகாப்பு: “சமீபத்தில் மைசூருவில் உள்ள கல்வெட்டுத்துறை அலுவலகத்தை மற்றொரு இடத்திற்கு மாற்றியபோது, தமிழ் கலவெட்டு படிமங்கள் பெரும்பாலானவை சேதமடைந்தன[1]. அவற்றை புத்தக வடிவிற்கு மாற்றி, டிஜிட்டல் மயமாக்கி பாதுகாத்து இருக்க வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டனர்[2]. இதனால் தமிழர்களின் வரலாறு, எதிர்கால தலைமுறையினருக்கு தெரியாமல் அழிந்து விடும். எனவே தமிழக வரலாற்றை பாதுகாக்கும் வகையில் மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டு படிமங்களை தமிழக தொல்லியல் துறை வசம் ஒப்படைத்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும். தமிழக கல்வெட்டு படிமங்களை பாதுகாக்க எடுத்துள்ள நடவடிக்கை குறித்து மத்திய தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மைசூரில் பாதுகாக்கப்பட்டு வரும் தமிழ் கல்வெட்டு படிமங்களை தமிழகத்துக்கு மாற்ற தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது[3]. இதனை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, தமிழக கல்வெட்டு படிமங்களை பாதுகாக்கவும், படிக்கவும், அவற்றை பதிப்பிக்கவும் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து மத்திய தொல்லியல் துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 22, 2019 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்[4].
2018 ல் தொடர்ந்த வழக்கு – தமிழ் கல்வெட்டு படிகள் பாதுகாப்பாக உள்ளன : ”மத்திய தொல்லியல் துறையின், மைசூரு அலுவலகத்தில் உள்ள, தமிழ் கல்வெட்டு படிகள், வெளிப்படை தன்மையுடன் பாதுகாக்கப்படுகின்றன; ஆவணங்கள் ஏதும் சிதைக்கப்படவில்லை,” என, அதன் இயக்குனர், முனிரத்தினம் தெரிவித்துள்ளார். மத்திய தொல்லியல் துறையின், தென்னிந்திய அலுவலகம் மைசூரில் உள்ளது. அங்குள்ள, கல்வெட்டு துறையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சமஸ்கிருத கல்வெட்டு ஆவணங்கள் உள்ளன. அவற்றின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத் தன்மை குறித்து புகார் எழுந்தது[5]. இது குறித்து, அந்நிறுவனத்தின் கல்வெட்டியல் துறை இயக்குனர், முனிரத்தினம் கூறியதாவது: “மைசூரு கல்வெட்டுப் பிரிவில் உள்ள, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி கல்வெட்டு ஆவணங்களும், உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன. இங்குள்ள தமிழ் அறிஞர்கள், தமிழ் கல்வெட்டு ஆவணங்களை சரிபார்த்து, பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழ் அறிஞர்களும், ஆய்வாளர்களும், இங்கு வந்து ஆவணங்களை பார்த்து, ஆராய்ந்து செல்கின்றனர். மத்திய அரசின் நிறுவனமான, மத்திய தொல்லியல் துறை, இந்திய மொழிகளின் ஆவணங்களை சிதைத்து, நாட்டின் ஒற்றுமையை ஒரு போதும் கெடுக்காது,” இவ்வாறு அவர் கூறினார்[6].
வெங்கடேசனின்டுவிட்டர்கடிதம்வைத்துகதைவிடும்குங்குமம்[7]: இந்திய தொல்லியல் துறையின் கீழ் உருவாக்கப்படவுள்ள 758 புதிய பணியிடங்கள் குறித்தும், இந்தியக் கல்வெட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் குறிப்பிட்டும் இந்தியக் கலாசாரத்துறை அமைச்சருக்கு மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன் எழுதிய கடிதம்தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாக் என்று கதையை ஆரம்பிக்கிறது குங்குமம்[8]. அந்தக் கடிதத்தில், “இந்தியவரலாற்றிற்குப்பேருதவிபுரியும்கல்வெட்டுத்துறையில்குறைந்தது 40 தொழில்நுட்பபணியிடங்களைஉருவாக்கவேண்டும். இந்தியாமுழுமைக்கும்கல்வெட்டுஆய்வாளர்களைப்புதிதாகநியமியுங்கள்; குறைந்தஅளவாகஒருமொழிக்கு 2 பேரையாவதுநியமனம்செய்யுங்கள்,…” என சு.வெங்கடேசன் வலியுறுத்தி இருந்தார். தவிர, “இந்தியா முழுவதும் கண்டறியப்பட்டுள்ள 80,000 மேலான கல்வெட்டுகளில் 50% இன்னும் பதிப்பிக்கப்படவில்லை என்பதை மீண்டும் கவனப்படுத்துகிறேன்…” என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அரைகுறையாக கடிதம் எழுதி, டுவிட்டரில் வெளியிட்ட்தற்கு, அமைச்சர் முறையாக பதில் அளித்து விட்டார்.
பணியாளர்மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்குஒப்புக்கொண்டதைமறைப்பது: இதுகுறித்து கல்வெட்டுத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஓர் அதிகாரியிடம் பேசினோம். ஓய்வுபெற்ற அவர் தன்னுடைய பெயரை வெளியிட விரும்பவில்லை. ‘‘கற்பாறைகள், தூண்கள், கோயிற்சுவர்கள், செப்பேடுகள், காசுகள், கற்கள், உலோகங்கள், பானைகள், மரங்கள், ஓலைச்சுவடிகள், துணிகள், சங்குகள் மற்றும் ஓவியங்கள் மீதான எழுத்துப்பதிவுகள் பற்றிய ஆய்வை கல்வெட்டியல் என்கிறோம். இது திராவிடம், சமஸ்கிருதம் என்று இரு பிரிவுகளாகத்தான் இருக்கும். அந்த இரு பிரிவுக்கும் ஒரே ஒரு இயக்குனர்தான். இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் 60% இருக்கின்றன. இதில் தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கைதான் அதிகம். தொல்லியல் துறையின் கீழ் 758 புதிய பணியிடங்களில், கல்வெட்டு துறைக்கென்று 99 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இது மிக மிகக் குறைவானது. இந்திய அரசு அங்கீகரித்துள்ள ஒவ்வொரு மொழிக்கும் அதன் விகிதாசார அடிப்படையில் கல்வெட்டு கண்காணிப்பாளர், துணை கல்வெட்டு கண்காணிப்பாளர், உதவி கல்வெட்டு கண்கணிப்பாளர், கல்வெட்டு ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும். பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைத்துப் பேசுவது தான் வெளிப்படுகிறது.
துறைஆரம்பித்தகதைசொல்லும்விதம்: அதிலும் அதிகமாக இருக்கும் தமிழ் கல்வெட்டுகளைப் படித்து, டிஜிட்டல் ஆக்குவதற்கு கூடுதலாக பணி நியமனம் செய்ய வேண்டும்…” என்கிற அந்த அதிகாரி, ‘‘1916லிருந்து 2020 வரைக்குமான கல்வெட்டுகள் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை…” என்கிறார். ‘‘இதுபோக ஏற்கனவே இருக்கும் கல்வெட்டுகளின் காகிதப்பதிவுகள் பலவீனமடைந்து வருகின்றன. அதனால் 74 ஆயிரம் கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணியை உடனே செய்ய வேண்டும்…” என்று அரசுக்கு கோரிக்கை வைக்கும் அந்த அதிகாரி, இந்தியாவில் கல்வெட்டுத் துறை குறித்தான வரலாற்றைப் பகிர்ந்தார். “இந்தியாவில் ஆங்கில அரசால் 1860ல் தொல்லியல் துறை ஆரம்பிக்கப்பட்டது. இதிலிருந்து பிரிந்து 1886ல் தனியாக கல்வெட்டு துறை உருவானது. வட இந்தியாவிற்கு அலெக்சாண்டர் கன்னிங்காமும் தென் இந்தியாவிற்கு ஜெர்மன் ஆய்வாளரான ஹல்ட்ஸ்ச்சும் முக்கிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். தஞ்சை பெரிய கோயில் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுகளை வெளியிட்டவர் ஹல்ட்ஸ்ச். 1887லிருந்து இதுவரை இந்தியா முழுக்க 85,000 – 90,000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் கல்வெட்டுகள் 45 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். இதற்கடுத்து கன்னடத்தில் 10 ஆயிரம், தெலுங்கில் 8 ஆயிரம், சமஸ்கிருதத்தில் 5,000 – 8,000 கல்வெட்டுகள் இருக்கும். இனிவரும் காலங்களிலும் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட வேண்டியுள்ளது.
ஆங்கிலேயர்ஊட்டியில்வைத்திருந்ததுமைசூருக்குச்சென்றது: “உலகஅளவில்இந்தியாவில்தான்அதிககல்வெட்டுகள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேவேளையில்குவாரி, சுரங்கவேலைகள்செய்யும்போதுகல்வெட்டுகளைப்பாதுகாப்பதும்அவசியமானது. ஆரம்பத்தில்கல்வெட்டுகளைப்பாதுகாக்கும்அலுவலகம்சென்னையில்இயங்கியது. சென்னையில்வைத்திருந்தால்காலப்போக்கில்காகிதம்இற்றுப்போய்விடும்என்று, காலநிலைகுளிர்ச்சியாகஇருக்கும்ஊட்டிக்குமாற்றப்பட்டது. 1968ல்மைசூர்காரர்ஒருவர்கல்வெட்டுத்துறையின்தலைமைப்பொறுப்புக்குவந்தார். பாதுகாப்புஅலுவலகத்தைஅவர்இடத்துக்குக்கொண்டுபோய்விட்டார். அங்கேயும்காலநிலைமோசம்இல்லை. ஆனால், கன்னடம், தமிழ்பிரச்னைகள்இருந்தது,…” என்கிற அந்த அதிகாரி, கல்வெட்டுத் துறையில் வட இந்திய, தென் இந்திய அதிகாரிகளுக்கான பனிப்போர் குறித்தும் விளக்கினார்.
தேசியஅருங்காட்சியகத்தில்உரியநிபுணர்கள்கிடைக்காததால் 92 காலியிடங்கள்நீக்கப்பட்டன: தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப் படும் 2 லட்சத்திற்கு மேலாக உள்ள விலையுயர்ந்த பொருட்களை விளக்க 15 பேர் தான் உள்ளனர். ஜூலை 23, 2019 அன்று காலியிடங்களுக்கு திறமையான நிபுணர்கள் வராதலால், அவை காலாவடி ஆகியதாக அறிவித்து, நீக்கப் பட்டன[1]. தகுதி வாய்ந்தவர்கள் கிடைக்கவில்லை என்று 2014 முதல் 2019 வரை ஐந்து வருடங்களாக நிரப்பப் படாமல் காலியாக இருந்தன. ஏனெனில், சரித்திரகாலத்திற்கு முந்தைய பொருட்கள், கையெழுத்துப் பிரதிகள், நாணயங்கள், கல்வெட்டுகள், தாமர பட்டயங்கள் முதலியவற்றை விளக்க, பாதுகாக்க யாரும் வரவில்லை[2]. அதனால், அவ்வாறு செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது[3]. அத்தகைய நிபுணத்துவம், வல்லமை, திறமை, கல்விதகுதி என்று எல்லாம் இருந்திருந்தால், ஏன் அந்த 92 காலியடங்களுக்கு தமிழர்கள் முறைப்படி விண்ணப்பித்து சேர்ந்திருக்கக் கூடாது? குங்குமம், விகடன், நக்கீரன், கலைஞர் செய்தி என்றெல்லாம் ஊடகங்களில் பெருமை பேசுபவர்கள் ஏன் சேரவில்லை?
இளைஞர்அகழாய்வாய்வாளர் [Young Archaeologist (ASI-YA)] சேர்ப்புஎன்றுஅறிவிக்கப்பட்டது: 27-07-2021 அன்று இளைஞர் அகழாய்வாய்வாளர் [Young Archaeologist (ASI-YA)] சேர்ப்பு பற்றி சுற்றறிக்கை விடப் பட்டது[4]. மாதம் ரூ 35,000/- என்று ஒப்பந்த முறையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க அறிக்கை வெளியிட்டது. இதையும், சிலர் சுட்டிக் காட்டி, அகழாய்விற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள், ஆனால், கல்வெட்டியல் துறைக்கு ஆள் சேர்ப்பதை தடுக்கிறார்கள் என்றேல்லாம் என்று சொல்வதாகட் தெரிகிறது. இருப்பினும், தமிழ் ஊடகங்களில் இவையெல்லாம் வெளிவரவில்லை. வெங்கடேசன் கடிதம் எழுதியது, தங்கம் தென்னரசு கல்வெட்டு படித்தது, கனிமொழி ஆய்வு செய்தது பற்றி தான் செய்திகள் வந்துள்ளன. ஒருவேளை, இந்த வேலைக்கும் கல்வெட்டு நிபுணத்துவ இளைஞர்கள் விரும்பினால், அவர்களுக்கும் அதுபோல வேலை கொடுக்க, பெரியவர்கள் பதாகை ஏந்தலாம், போராடலாம், ஏன் மோடிக்கு கடிதம் கூட எழுதலாம். ஆனால், செய்யவில்லை. ஊடகங்களில் தற்பெருமை செய்திகளை வெளியிட்டு, அது-இது-எது பாணியில் ஆரிய-திராவிட கட்டுக் கதைகளுக்கு வந்து, ஆர்பாட்டங்கள் செய்வதில் முடிந்துள்ளன.
டிசம்பர் 2020 – ‘இந்தியாவில், எத்தனைகல்வெட்டுகள்அடையாளம்காணப்பட்டுள்ளன, அவற்றில்எந்தமொழியில்அதிககல்வெட்டுகள்உள்ளன‘: என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தர விட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர், இளஞ்செழியன் தாக்கல் செய்த பொதுநல மனு: “மத்தியதொல்லியல்துறையின்கல்வெட்டுஆய்வகப்பிரிவு, மைசூரில்உள்ளது.தமிழகஅகழாய்வில்கண்டெடுக்கப்பட்ட, 90 சதவீதகல்வெட்டுகள்மற்றும்அவற்றின்நகல்எடுக்கப்பட்டபடிகள், அங்குஉள்ளன.அவை, முறையாகபராமரிக்கப்படவில்லை. அவைசேதமடைந்து, அழியும்நிலையில்உள்ளன. அங்குசென்று, தமிழகதொல்லியல்ஆய்வாளர்கள்ஆய்வுசெய்யஇயலவில்லை. மைசூரில்உள்ளகல்வெட்டுகள்மற்றும்அவற்றின்நகல்படிகளை, தமிழகத்திற்குகொண்டுவந்துபராமரிக்க, நடவடிக்கைஎடுக்க, மத்திய, மாநிலஅரசுகளுக்குஉத்தரவிடவேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்[5]. நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி அமர்வு விசாரித்தது. மத்திய அரசுத் தரப்பு, ‘இவை, முதலில் ஊட்டியில் பாதுகாக்கப்பட்டன. தட்பவெப்ப நிலை கருதி, மைசூருக்கு மாற்றப்பட்டன. அங்கு பாதுகாக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என தெரிவித்தது[6].
கட்டமைப்புவசதி – நீதிபதிகள்உத்தரவு: இந்தியாவில், எத்தனை கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் எந்தெந்த மொழிகளைச் சேர்ந்த கல்வெட்டுகள் உள்ளன. எந்த மொழியில், அதிக கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. மைசூரில் உள்ளவற்றில், எத்தனை சேதம் அடைந்துள்ளன. மத்திய தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வகப் பிரிவின் கிளையை, தமிழகத்தில் ஏற்படுத்தினால் என்ன?மைசூரில் உள்ள பொருட்களை தமிழகத்திற்கு மாற்றி பாதுகாக்க வாய்ப்புள்ளதா, அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை, தமிழக அரசு ஏற்படுத்தி தர சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து, மத்திய, மாநில தொல்லியல் துறைகள், டிச., 10, 2020ல் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
2019 – பிப்ரவரியில்ஒருவழக்கு: 16—02-2019 அன்று மதுரை உயர்நீதிமன்றமும் தமிழின் தொன்மைக்குச் சான்றாக இருக்கும் சமணர்காலக் கல்வெட்டுகளைப் பாதுகாக்கத் தொல்லியல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை தொல்லியல் துறைக்குக் கேள்வி எழுப்பியுள்ளது[7]. விகடனின் செய்தி, செய்தியாக இல்லை, ஏதோ தீர்ப்பு கொடுக்கும் தோரணையில் உள்ளது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட வாதங்கள், ஆவணங்கள் பற்றி சொல்லாமல், “மத்தியஅரசு, வடநாட்டுத்தொன்மையைவெளிப்படுத்தமுயற்சிக்கும்அளவுக்குத்தமிழகத்தின்தொன்மையைவெளிப்படுத்துவதில்போதியஅக்கறையின்றியேசெயல்பட்டுவருகிறது. ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல்என்றுபல்வேறுஅகழ்வாராய்ச்சிப்பணிகளுக்குமத்தியஅரசுபோதியமுக்கியத்துவத்தைஎப்போதுமேஅளித்ததில்லை. பாதுகாக்கவேண்டியமுக்கியசின்னங்களானசமணர்படுகைகள்மற்றும்தமிழ்பிராமிகல்வெட்டுகளுக்கும்இதேநிலைமைதான்.” இவ்வாறு ஏதோ குடுமிப்பிடி சண்டையை மூட்டிவிடுவது போலிருக்கிறது[8].
2019 ஆகஸ்டில்தொடர்ந்தவழக்கு: பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரம் பகுதியில் ஆறு வார்டுகளில் உள்ள 59 ஏக்கர் நிலம், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள நிலங்களை யாரும் விற்கவோ, வாங்கவோ, வீடு கட்டவோ அல்லது வீட்டை புதுப்பிக்கவோ கூடாது என தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவித்தனர். தொல்லியல் துறையின் இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று (07.08.2019) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், பல்லாவரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை சுற்றி வேலி அமைப்பதற்காக தொல்லியல் துறையினரும், வேலையாட்களும் சென்றபோது அந்த பகுதியில் உள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வேலி அமைக்கும் பணியை மேற்கொள்ள முடியவில்லை என வாதிட்டார். இதையடுத்து, அகழ்வாராய்ச்சி செய்வதற்காக குறிப்பிட்ட அந்த பகுதிகளில் வேலி அமைக்க பாதுகாப்பு வழங்கும்படி, நீதிபதி கிருபாகரன் பரங்கிமலை டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட்டார். பின்னர், இந்தியாவில் கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான கல்வெட்டுகள் தமிழில் உள்ளதால் தமிழ்மொழி தெரிந்த கூடுதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களை ஏன் நியமிக்க கூடாது எனக் கேள்வி எழுப்பினார்[9]. மேலும், கல்வெட்டு ஆராய்ச்சி மைய கிளையை ஏன் சென்னையில் அமைக்க கூடாது எனவும், அனைத்து தமிழ் கல்வெட்டுகளையும் ஏன் சென்னைக்கு மாற்றக்கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இதற்கு வரும் 25ம் தேதிக்குள் பதில் அளிக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்[10].
[1] The museum issued its office order on July 23, 2019 announcing that the group A, B and C posts stand abolished, following a ministry of culture order[1]. A museum source informed that of the 92 posts, up to 50 were group A and B — functional and technical staff.
[2] Times of India, National Museum in Delhi abolishes 92 vacant posts, Manimugdha S Sharma / TNN / Updated: Jul 26, 2019, 08:58 IST.
ரத்தம், நிறம், இனம்பிறகுமரபணுவைத்து “விஞ்ஞான” ஆராய்ச்சி – நூபியா–ஆப்பிரிகாவிலிருந்துதிராவிடர்கள்இந்தியாவிற்குள்நுழைந்தனர் [2]
சிந்துசமவெளிநாகரிகம்ஆரியர்வருகையால்தான்அழிந்ததுஎன்பதற்கானஎவ்விதஆதாரங்களும்கிடைக்கப்பெறவில்லை – டோனிஜோசப்: “டைம்ஸ் நௌ” தமிழும் விடவில்லை, தமிழில் இவ்வாறு வெளியிட்டது. இந்திய வரலாற்றில் ஆரியர்களின் வருகை இதுநாள் வரை கோட்பாடு அடிப்படையில் சொல்லப்பட்டு வந்தது[1]. டிஎன்ஏ அடிப்படையிலான ஆய்வில் உலக அறிவியலாளர்கள் தற்போது இந்தக் கோட்பாட்டுக்கு ஆதாரங்களை வழங்கியுள்ளனர்[2]. இதுகுறித்து தி இந்து ஆங்கில நாளிதழில் (ஜூன் 17, 2017) டோனி ஜோசப் விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார்[3]. கட்டுரையிலிருந்து சில குறிப்பிடத்தகுந்த கருத்துக்கள் மட்டும் இங்கே…[4] என்று மொழிபெயர்த்து கொடுத்துள்ளது:
தந்தை வழியில் கடத்தப்படும் ’ஒய்’ குரோமோசோம்களைக் கொண்டு ஆரியர்களின் வருகையை அறிவியலாளர் நிரூபித்துள்ளனர். இதுநாள் வரை தாய் வழி எம்டி டிஎன்ஏக்களை வைத்துதான் ஆய்வு நடந்தது. அதில் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியவில்லை.
ஒய் டிஎன்ஏக்களுக்கும் எம்டி டிஎன்ஏக்களுக்கும் நேர் எதிரான ஆய்வு முடிவுகள் காணக்கிடைக்கின்றன. காரணம், வெண்கல யுகத்தில் நடந்த புலப்பெயரில் பாலியல் சமத்துவமற்ற நிலைமை இருந்திருக்கிறது. அதாவது புலப்பெயர்வில் ஆண்களே அதிகமானோர் இருந்திருக்கிறார்கள். எனவே, இந்திய பெண்களின் தாய்வழி மரபணுக்களை வைத்து இதுநாள் வரை சரியான முடிவை நோக்கி ஆய்வாளர்களால் நகர முடியவில்லை.
ஒய் டிஎன்ஏக்களின் ஆய்வில்5% இந்திய ஆண்கள் ஹப்லோ க்ரூப் எனப்படும் ஆர்1ஏ என்ற பிரிவினர் ஒற்றை உறவு வழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆர்1ஏ என்ற பிரிவினர் மத்திய ஆசியா, ஐரோப்பிய மற்றும் தெற்கு ஆசியாவில் விரவி இருக்கிறார்கள்.
கட்டுரைவலியுறுத்துவதுஇந்தியாவில்ஒற்றைகலாச்சாரம், ஒற்றைசந்ததியினர்என்பவர்எவரும்இல்லை: “வெண்கல யுகத்தில் மத்திய ஆசியாவில் நிகழ்ந்த புலப்பெயர்வு ஆண்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை டிஎன்ஏ முடிவுகள் காட்டுகின்றன. மேலும், த பண்டைய இந்தோ ஆசிய இனத்தின் பாகுபாடுள்ள சமூக அமைப்பையும் இது காட்டுகிறது” என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்டின் பி. ரிச்சர்ட்ஸ்.
ஆர்1ஏ பிரிவில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன. ஒன்று z282, z93. z282 பிரிவினர் ஐரோப்பாவுக்குள் மட்டுமே பிரிந்து சென்றனர். z93 பிரிவினர் மத்திய ஆசியாவுக்கும் கிழக்கு ஆசியாவுக்கும் பரவினர். மேலும்z93ன் மூன்று துணைபிரிவினர் இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இமாலய பகுதிகளில் பரவினர்..
முந்தைய ஆய்வுகளில் ஆர்1ஏ பிரிவினர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு, அங்கிருந்து பரவியதாக கருதப்பட்டனர். அந்தக் கருத்தை தற்போதைய ஆய்வு தகர்த்திருக்கிறது” என்கிறார் அறிவியலாளர் பீட்டர் அண்டர்ஹில்.
பீட்டர் அண்டர்ஹில்லுடன் இணைந்து டேவிட் போஸ்னிக் 2016ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு ஆய்வு முடிவில்z93பிரிவினரின் பரவல் 4000லிருந்து 4500 ஆண்டுகளில் நடந்திருக்கலாம் என்கின்றன. அதாவது 4000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இந்தப் பிரிவினரின் வருகை நடந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் வருகையால்தான் அழிந்தது என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப் பெறவில்லை என்கிறார் கட்டுரையாளர் டோனி ஜோசப். ஆனால் இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே காலத்தில் நடந்தேறியிருக்கின்றன என்பதையும் சுட்டுகிறார்.
2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஊடகங்கள் ’ஆரிய – திராவிட பிரிவினை என்பது பொய்- ஆய்வு முடிவு’ என தவறான கோணத்தில் செய்தி வெளியிட்டதையும் கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறார். இதுவரை வெளியான ஆய்வுகளில் அப்படியான கருத்துகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால். ஊடகங்கள் திரித்துள்ளன என்கிறார்.
இதுவரையிலான ஆய்வுகளில் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பங்களிலிருந்து பிரிந்த ஒரு பிரிவினர் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர் என்று நிரூபித்திருந்தனர். அதாவது சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இவர்கள் உயர்சாதியினராக அறியப்படுகின்றனர்.
கட்டுரை வலியுறுத்துவது இந்தியாவில் ஒற்றை கலாச்சாரம், ஒற்றை சந்ததியினர் என்பவர் எவரும் இல்லை. 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து ஒரு பிரிவினர் இங்கே வந்தனர்[5]. பிறகு 10 ஆயிரம் ஆண்டுகளில் தெற்கு ஆசியாவிலிருந்து ஒரு பிரிவினர் வந்தனர்[6]. பிறகு சிந்துவெளி சமவெளி மக்கள் (அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதை கட்டுரையாளர் குறிப்பிடவில்லை; அவர்கள் முதலில் வந்தவர்கள்தான் அதாவது பூர்வகுடிகள் என்கிற கோட்பாடு சொல்லப்படுகிறது) 4 ஆயிரம் ஆண்டுகளில் ஆரியர்கள் வந்தனர். அதன் பிறகு வணிகம் செய்யவந்தவர்கள் என வரலாறு முழுக்க பலரும் வந்துகொண்டிருக்கின்றனர் என்கிறார்கள். நாமெல்லாம் வந்தேறிகள் என்று முடிக்கிறார்.
இனம் [Race], இனசித்தாந்தம் [Racism], மற்றும்இனவெறித்துவம் / நிறவெறித்துவம் [Racialism]: கலப்பினத் தோற்றம் அல்லது கலப்பினம் உருவாக்கம் [Miscegenation] என்பது முன்னமே இருந்த கொள்கைதான். இனம் [Race], இனசித்தாந்தம் [Racism], மற்றும் இனவெறித்துவம் / நிறவெறித்துவம் [Racialism] முதலியவற்றுடன், கலப்பினத் தோற்றம் அல்லது கலப்பினம் உருவாக்கம் சேர்ந்திருந்தன. போர்ச்சுகீசியர் தாம், தாம் சென்ற நாடுகளில், அந்தந்த நாட்டினர் பெண்களுடன் புணர்ந்து, புதியதாக கலப்பினத்தவரை உண்டாக்கினர். அத்தகையோர் தமக்கு விசுவாசமாக இருப்பர் என்பது அவர்களது கொள்கையாக இருந்தது. அவ்வாறு உருவாக்கிய குழுமத்தை காஸ்டா [casta] என்று குறிப்பிட்டனர். அது பிறகு காஸ்ட் [caste] / ஜாதி என்றாகியது. போர்ச்சுகீசியர் கலப்பினத்தவரை சுத்தமானவர் / தூய்ன்மையாஅ இனத்தவர் என்று கொள்ளவில்லை. ஆனால், அவர்கள் தங்களது நிறவெறித்துவ தீவிரவாதக் கொள்கைகளை உலக யுத்தங்கள் முடிந்த பிறகு, ஹிட்லரி மீது சுமத்த, “ஆரிய இனம்” என்று உருவாக்கி, பரப்ப ஆரம்பித்தனர். இனரீதியில், அது யூதர்களை பாதித்ததால், இனம் பொய், கட்டுக்கதை என்று மற்றினர். பிறகு, இப்பொழுது, உலகமயமாக்கம் போன்றவற்றில் வியாபாரம் தான் முக்கியம் எனும் போது, “எல்ல்லொரும் ஒன்று” போன்ற பொய்மை சித்தாந்தங்களை உருவாக்க, வழி தேடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் தான், டோனி ஜோசப் போன்ற வியாபார ஏஜென்டுகள், “எல்லோருமே வந்தேறிகள்” என்று சித்தாந்தத்தை மாற்றியமைக்கப் பார்க்கின்றானர்.
திராவிடர்களும், மரபணுஆராய்ச்சிகளும்: இந்தியாவில், வேண்டுமென்றே, ஆரிய குடியேற்றம், குடிபெயர்பு என்றெல்லாம் தான், விவாதிக்கப் படுகிறது, “திராவிடர்” பற்றி பேசுவது கிடையாது. ஏனெனில், ஆராய்ச்சியாளர்கள், 5000 வருடங்களுக்கு முன்பாக, திராவிட மொழி பேசுபவர்கள் நூபியாவில் வாழ்ந்து, இரான் மூலமாக, இந்தியாவிற்குள் நுழைந்து குடியேறிவர்கள் ஆவர். நூபியா என்பது, ஆப்ரிகாவில், நைல் நதிக்கரையில், அஸ்வான் மற்றும் கார்டோம் இடையில் உள்ளது[7]. அதனால், இந்தியாவில் தோன்றிய மரபணு குழுக்கள் அல்லர் என்பது “M macrohaplogroups” நிரூபிக்கிறது[8] என்பதால், மறைப்பர்தற்காக, இதைப் பற்றி அலசுவதில்லை. மேலும், ஆப்ரிகாவில் இருந்து திராவிடர்கள் வந்தனர் என்றால், சிந்துசமவெளி மற்றும் குமரிக்கண்டம் இரண்டுமே – மூலம் மற்றும் சம்பந்தப்பட்ட கருதுகோள்கள், சித்தாந்தங்கள் எல்லாமே – அடிபட்டு போகிறது. பூகோள ரீதியாக பரவிய, மரமணு கூறு “hg M” கொண்டவர், நூபியாவில் உள்ள “C-Group”-டன் ஒத்துப் போகிறார்கள்[9] என்றும் எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. இந்நிலையில், திராவிட இன வந்தேறி மரபணு கோட்பாட்டை ஓரங்கட்டி, ஜாதி ரீதியில் அலசி, ஆராய்ச்சி செய்ய இறங்கி விட்டனர்[10]. பள்ளர், வன்னியர், நாடார் [கிருத்துவன் / இந்து], முஸ்லிம், ஐயங்கார், ஐயர், மீனவர், மார்வார், அகமுடையார், என்று எல்லோருமே, ஒரே மூல மரபணுவிருந்து, பிறகு, கலப்பினில் உருவானவதாம் என்று எடுத்துக் காட்டுகின்றனர். பிறகு, தமிழகத்தில் இருப்பவர் அனைவரையும் ஒரே ஜாதி என்று சொல்லி விட முடியுமா?
[7] Nubia is a region along the Nile river encompassing the area between Aswan in southern Egypt and Khartoum in central Sudan. It was the seat of one of the earliest civilizations of ancient Africa, with a history that can be traced from at least 2500 BC onward with the Kerma culture. The latter was conquered by the New Kingdom of Egypt under pharaoh Thutmose I around 1500 BC. Nubia was home to several empires, most prominently the kingdom of Kush, which conquered Egypt during the 8th century BC during the reign of Piye and ruled the country as its Twenty-fifth Dynasty (to be replaced a century later by the native Egyptian Twenty-sixth Dynasty).
[8] Dravidian speakers formerly lived in Nubia and migrated to India over 5000 years ago and the Indian M macrohaplogroups do not have an in situ origin.
Winters, Clyde. Origin and spread of Dravidian speakers, International Journal of Human Genetics 8.4 (2008): pp.325-329.
[9] The geographical distribution of the archaeological signature of the C-Group people from Nubia to India matches the location of populations carrying hg M.
[10] Kanthimathi, S., M. Vijaya, and A. Ramesh. Genetic study of Dravidian castes of Tamil Nadu, Journal of genetics 87.2 (2008): pp.175-179.
டோனிஜோசப்பைஏன்யாரும்கண்டுகொள்ளவில்லை?: டோனி ஜோசப்பின்[1] கட்டுரைகள் மற்றும் புத்தகம், நிறைய பேர்களால் கண்டுகொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது. இப்பொழுதெல்லாம், புத்தகம் விற்கவேண்டும், சினிமா ஓட வேண்டும் என்றால், ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி, அதன் மூலம் வியாபாரத்தைப் பெருக்கி, லாபமடையலாம் என்ற யுக்தியை கையாண்டு வருகிறார்கள். 2017லேயே கண்டுகொள்ளாத நிலையில், 2019ல் மறுபடியும், ஏதோ எய்தியை வெளியிட்டு, வியாபாரத்தைத் தொடங்கியிருப்பது போன்று தெரிகிறது. மரபணுவியல் என்ற போர்வையில். ஏதோ விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி, ஆராய்ச்சியின் புள்ளி விவரங்கள், புள்ளி விவரங்கள் வைத்து விளக்கம், விளக்கங்களை வைத்து திரிபு விளக்கங்கள் என்று பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. ஆனால், ஆரம்பித்திலிருந்தே, திராவிடத்துவ வாதிகள் இவற்றைக் கண்டுகொள்ளவில்லை. ஒன்று அவர்களுக்கு ஆங்கிலத்தில் இருப்பவற்றைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. ஆங்கிலத்தில் படித்து அவர்களுக்கு சொன்னபோது, அவர்களுக்கு சாதகமாக இல்லை என்ற நிலையில் அமைதியாக இருந்து வருகின்றனர்.
டோனியின்வந்தேறிமுடிவும், எடுபடாமல்போனபுத்தகமும்: இப்பொழுது கூட, “சிந்துசமவெளிநாகரிகம்ஆரியர்வருகையால்தான்அழிந்ததுஎன்பதற்கானஎவ்விதஆதாரங்களும்கிடைக்கப்பெறவில்லைஎன்கிறார்கட்டுரையாளர்டோனிஜோசப்,” என்றுள்ளதை மறைக்கப் பார்க்கின்றனர் திராவிடத்துவவாதிகள், கம்யூனிஸ்ட் மற்றும் இதர பிரிவினைவாதிகள். உண்மைகளை மறைத்து, திரிக்கும் போக்கை, வழக்கமாக, “வினவு” போன்றவற்றில் கவனிக்கலாம்[2].
அதாவது, இந்தியாவிற்குள் வந்தவர்கள் எல்லோருமே “வந்தேறிகள்” என்பதை மறைத்து, அந்த பதிவை செய்தது[3]. இரண்டு வருடங்கள் கழித்து, டெக்கான் குரோனிகல், “ஜாதி மற்றும் ஆரியர்” என்ற தலைப்பில், அதே விவரங்களை வெளிட்டதால் கவனிக்க நேர்ந்தது[4]. திகவோ அமுக்கி வாசிக்க பார்த்தது[5]. தி.இந்து, தமிழில் வந்ததை போட்டு, “நன்றி: ‘தி இந்து’ (16.6.2017)” தனது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டது[6].
65,000 ஆண்டுகளுக்குமுன்னர்ஆப்பிரிக்காவிலிருந்துவெளியேறிமக்கள்இந்தியாவில்குடியேறினராம்!: கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதிக்கு வந்த அதாவது 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள். எது என்னவாக இருந்தாலும், இந்திய மக்கள் தங்கள் நாகரிகத்தை பல இனம் மற்றும் வரலாற்றிலிருந்து உருவாக்கினார்கள் என்பதே நிஜம். இந்திய நாகரிகத்தின் செழுமையின் உச்சம், அது எல்லாவற்றையுன் உள்ளடக்கிய போதுதான் நிகழ்ந்தது. அதாவது இந்திய மரபியல் அடிப்படையின் மையமாக ‘வேற்றுமையில் ஒற்றுமையே’ இருந்துள்ளது என்பதே உண்மை.
கடந்த 10 ஆயிரம்ஆண்டுகளில்இரண்டுமிகப்பெரியகுடிப்பெயர்வுநடந்துள்ளது: இன்று இந்தியாவில் உள்ளவர்கள் எல்லோருமே “வந்தேறிகள்” தாம் என்ற ரீதியில் டோனி ஜோசப் என்பவர் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மரபணுவியலாளர் டேவிட் ரெய்ச்சின் ஆய்வு முடிவானது 2018 மார்ச்சில் வெளியானது. அவருடன் உலகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, வரலாறு, தொல்லியல், மானுடவியல், மரபணுவில் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 92 அறிஞர்கள் இந்த ஆய்வில் பணியாற்றினார்கள். அந்த ஆய்வானது கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் இரண்டு மிகப்பெரிய குடிப்பெயர்வு நடந்துள்ளது.
7000 – 3000 YBP காலத்தில்நடந்தது: முதல் குடிப்பெயர்வானது தென்மேற்கு இரான் பகுதியில் உள்ள ஜக்ரோஸிலிருந்து நடந்திருக்கிறது. அதாவது, அங்கிருந்து இந்தியாவுக்கு விவசாயிகளாகவும், ஆடு மேய்ப்பவர்களாகவும் வந்திருக்கிறார்கள். இந்த குடிபெயர்வானது 7000 மற்றும் 3000 ஆண்டுகளுக்கு இடையேயான காலக்கட்டத்தில் நடந்திருக்கிறது. இந்த கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதிக்கு வந்த அதாவது 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள்.
2000 BCEல்நடந்தகுடிபெயர்வு: இரண்டாவது குடிபெயர்வு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. அதாவது ஆரியர்கள் வந்திருக்கிறார்கள். இது இன்றைய கஜகஸ்தான் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என அனுமானிக்கிறார்கள். குதிரை செலுத்துவதில் வல்லுநர்களான அவர்கள் சமஸ்கிருதத்தின் முந்தைய மொழி வடிவத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பலியிடும் பழக்கத்தையும், வேத பண்பாட்டையும் உருவாக்கியது அவர்களே. எனது புத்தகத்தில் எழுதியது போல, இந்த மக்களை புரிந்து கொள்ள நமக்கு பீட்சாவுடம் ஒப்பிடுவது உதவதலாம்.
இந்தியர்கள்எல்லோருமேபீட்சாமாதிரிதான்[7]: இந்திய மக்களை ஒரு பீட்சாவாக கருதிக் கொள்ளுங்கள். முதல்முதலாக இந்த நிலபரப்பிற்கு வந்தவர்கள் பீட்சாவின் அடிபாகத்தை உருவாக்கினார்கள். அந்த அடிபாகமானது சில இடங்களில் மெல்லிதாகவும், சில இடங்களில் தடிமனாகவும் இருந்தது. இதன் மேல்தான் பீட்சாவின் பிற பகுதிகள் அமைக்கப்பட்டன. அதாவது இந்திய மக்களின் மரபணுவை சோதனை செய்தால், அது 50 முதல் 65 சதவீதம் முதல் முதலாக இந்தியாவிற்குள் குடிப்புகுந்த மரபணுவை ஒத்து இருக்கிறது. பீட்சாவின் மேற்பகுதியில் உள்ள சாஸை போன்றவர்கள் ஹரப்பன் (சிந்து சமவெளி) நாகரிக மக்கள். அதன்மீது உள்ள வெண்ணெய்தான் பிற்காலத்தில் இந்தியாவிற்குள் குடிபுகுந்த ஆரியர்கள், திபெத்தோ-பர்மன் மக்கள் மற்றும் ஆஸ்ட்ரோ-ஆசிய மக்கள். எது என்னவாக இருந்தாலும், இந்திய மக்கள் தங்கள் நாகரிகத்தை பல இனம் மற்றும் வரலாற்றிலிருந்து உருவாக்கினார்கள் என்பதே நிஜம். இந்திய நாகரிகத்தின் செழுமையின் உச்சம், அது எல்லாவற்றையுன் உள்ளடக்கிய போதுதான் நிகழ்ந்தது. அதாவது இந்திய மரபியல் அடிப்படையின் மையமாக ‘வேற்றுமையில் ஒற்றுமையே’ இருந்துள்ளது என்பதே உண்மை[8].
உஷரானதிகடோனிஜோசப்பைதிரித்தது[9]: விடுதலையின் திரிப்பு மற்றும் புலம்பல் இவ்வாறாக உள்ளது, “இந்தியமனிதஇனம்குறித்தமரபணுஆய்வில்குறிப்பிட்டபிரிவுமக்கள்மத்தியஆசியாவின்மேய்ச்சல்நிலப்பகுதியில்இருந்துவந்தவர்கள்என்றுமரபணுஆய்வாளர்டோனிஜோசப்பிபிசி—க்குதனதுஆய்வின்முடிவுகள்குறித்துபேட்டியளித்துள்ளார். இதன்மூலம்ஆரியர்கள்மத்தியஆசியாவில்இருந்துவந்தவர்கள்தான்என்பதுமீண்டும்உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[10]………………இந்தசிந்துவெளிநாகரிகமானது, எகிப்தியமற்றும்மெசோபோடாமியநாகரிககாலகட்டத்தைசேர்ந்தது, ஆரியக்கலாச்சாரத்திற்குமுற்றிலும்எதிரானதிராவிடக்கலாச்சாரம்என்றுசான்றுகளுடன்குறிப்பிட்டுள்ளனர்…அமைக்கப்பட்டன. அதாவதுஇந்தியமக்களின்மரபணுவைசோதனைசெய்தால், அது 50 முதல் 65 சதவீதம்இந்தியாவில்உள்ளபூர்வீகமக்கள்ஹரப்பன் (சிந்துசமவெளி) நாகரிகமக்களின்மரபணுவைஒத்துஇருக்கிறது. ஆனால், தற்போதுஅதிகாரத்தில்உள்ளவர்கள்இதைமுற்றிலுமாகமறுக்கின்றனர். அவர்கள்இந்தியவரலாற்றின்உள்ளடக்கத்தைமாற்றிஅமைக்கமுயற்சிக்கிறார்கள். ஆரியர்கள்வெளியிலிருந்துகுடிபெயரவில்லைஎன்கிறார்கள். ஆரியர்கள்வருகைக்கோட்பாட்டைமுன்வைக்கும்முன்னணிவரலாற்றுஆய்வாளர்களுக்குமாறாகசமூகவலைதளம்மற்றும்பொதுத்தளத்தில்கடுமையாககருத்துத்தாக்குதலைமேற்கொள்கின்றனர்”.
நொபுரு கராஷிமா: தமிழ், கல்வெட்டு, செம்மொழி மாநாடு, திராவிட இயக்கம்
தமிழகத்தில் ஆராய்ச்சி செய்த ஜப்பானியர்: ஜப்பானைச் சேர்ந்த நொபுரு கராஷிமா எனும் தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். 80 வயதாகும் நொபுரு கராஷிமா, தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ் ஆய்வுகள் மேற்கொண்டவர். பின்னர் தமிழ்மொழி மீது கொண்ட ஆர்வம் காரணமாக சென்னை வந்து, சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியின் வரலாறு, கல்வெட்டுகள் பற்றி ஆராய்ந்தார்[1]. சரளமாக தமிழ் மொழியில் பேசக் கூடியவர். 1964-ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கல்விப் பணியைத் தொடங்கிய நொபுரூ கராஷிமா, 1974-ஆம் ஆண்டில் தெற்காசிய வரலாற்றுத் துறையின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்று 20 ஆண்டுகள் பணியாற்றியவர். இப்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராக உள்ளார்.
நொபுருகராஷிமாவிற்கு ஜப்பானிலேயே பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது: இவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை (28-05-2013) பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார். இவ்வாண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உடல் நிலை காரணமாக, புது தில்லியில் ஏப்ரல் மாதம் (05-04-2013) நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை[2]. இந்நிலையில், மூன்று நாள் பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் பத்மஸ்ரீ விருதை நொபுரு கராஷிமாவுக்கு வழங்கினார். டோக்கியோவில் செயல்படும் ஜப்பான்-இந்தியா நட்புறவு பரிமாற்ற கவுன்சில் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் நொபுரு கராஷிமாவுக்கு பத்மஸ்ரீ விருதை பிரதமர் வழங்கி கௌரவித்தார். முன்பு செந்தமிழ் மாநாட்டுப் பிரச்சினையிலும், வயதாகி விட்டது என்று ஒதுங்கிக் கொண்டார். ஒருவேளை, இப்பொழுதும், அரசியலில் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தாரோ என்னமோ அதே காரணம் சொல்லித் தவிர்த்து விட்டார். பிரணாப் முகர்ஜியும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
1995லிருந்து 14 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த, உலகத் தமிழ் மாநாடு: 1995ற்குப் பிறகு, முக்கியமாக இலங்கைப் பிரச்சினையால், தமிழர்களின் ஆத்ரவு சரியானமுறையில் இல்லாததாலும், யாரும் முன்வந்து நடத்த வராதலாலும், தள்ளிப்போடப் பட்டது. 1981 மற்றும் 1995 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது, கருணாநிதி அதை புறக்கணித்துள்ளார்[3]. இதனால், ஜெயலலிதா அவருக்கு அம்மாந்நாட்டை நடத்தவே தகுதியில்லை என்று விமர்சித்தார். 1995லிருந்து 14 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த, உலகத் தமிழ் மாநாடு நடத்துவேன் என்று திடீரென்று கருணாநிதி பிடிவாதம் பிடித்து ஆரம்பித்தார், ஆனால், அதற்கு ஒப்புதல் இல்லை என்பதனை, முன்னர் எட்டு “உலகத் தமிழ் மாநாடுகளை” நடத்திய[4], நொபுரு கராஷிமா எடுத்துக் காட்டினார்[5].அதுமட்டுமல்லாது, பிறகு ஒப்புதல் அளிக்கவும் மறுத்தார்[6]. ஐராவதம் மஹாதேவன், சுப்பராயலு போன்றோரை வைத்து சமாதானம் செய்ய கருணாநிதி முயன்றார், ஆனால், அவர் ஒப்புக் கொள்ளாவில்லை[7]. மாறாக விலகிக் கொண்டார்[8]. இளைஞர்கள் இணைந்து வேலை செய்யட்டும், எனக்கு வயதாகி விட்டது என்று ஒதுங்கிக் கொண்டார்.
உலகத் தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடாக மாற்றப்பட்டாலும் கலந்து கொள்ளாத நொபுருகராஷிமா:. செம்மொழி மாநாடாக மாற்றப்பட்டாலும் கலந்து கொள்ளவில்லை, ஆனால், ஆஸ்கோ பர்போலா கலந்து கொண்டார், அவருக்கு விருதும் கொடுக்கப்பட்டது. கருணாநிதி “பொங்குற்ற சிலர் பொல்லாத வழியில் திசை திருப்பப் பார்க்கின்றனர்” என்று ஏசவும் செய்தார்[9]. முன்னர் பிப்ரவரி 2007ல் “தமிழகமும் சிந்துவெளிப் பண்பாடும்” என்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தபோதும், ஜப்பானிய அறிஞர்கள் கலந்து கொள்ளவில்லை, ஏனென்றால், அப்பொழுது “கண்டியூர் கல்வெட்டு” என்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆஸ்கோ பர்போலாவும் சிந்து வரிவடிவம் தமிழ்தான்[10] என்று தீர்ர்மானமாக சொல்லவில்லை[11]. மேலும் விமர்சனங்கள் அதிகமாக வருவது கண்டு, “சமஸ்கிருதமும் சிந்துசமவெளிக்கு பங்களித்துள்ளாது” என்று விளக்கமும் கொடுத்தார்[12]. ஐராவதம் மகாதேவன் தனது கருத்தைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டக் கேள்விகளுக்கும் இவர்கள் நேரிடையாக பதில் சொல்லவில்லை[13]. இப்பிரச்சினை தொடர்ந்து “தி ஹிந்து” மற்றும் ரோசா முத்தையா நூலகத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் தொடர்ந்தது[14].
சைவசித்தாந்தம் தோற்றம் பற்றிய இவரது கருத்து: கல்வெட்டுகள் ஆதாரமாக, கிராமங்களில் இருந்த மக்கள் குழுமங்கள் அவர்களது சமயத் தொடர்பான விஷயங்கள் முதலியவற்றை வைத்துக் கொண்ண்டு, கீழ்கண்ட வாதங்களை வைக்கின்றார்[15]. மடங்களில் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடப்பட்டு வந்ததிலிருந்து, பக்தி இயக்கம் தோன்றிய காலம் 7 முதல் 10 நுற்றாண்டுகள் என்று கொள்ளப்படுகிறது. இது 11ம் நுற்றாண்டு கூட தொடர்ந்தது. பிறகு, 11-12 நுற்றாண்டுகளில் வடவிந்தியாவிலிருந்து, சைவத் துறவிகள் தென்னிந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டனர். ராஜராஜன்–1 மற்றும் ராஜேந்திரன்-1 பிராமணத்துறவியர்களை அரசகுரு ஸ்தானத்தில் அமர்த்தினார்கள். இவையிரண்டும் கலந்து, ஒரு பிரபலமான சமூக இயக்கம் உருவானது. அதில் விவசாயிகள், வியாபாரிகள், கைவினைஞர்கள், மலைவாசிகள், வீரர்கள் என்று சமூகத்தின் கீழடுக்களில் இருந்தவர்களும் கலந்து கொண்டதால் அவ்வியக்கம் தோன்றியது[16]. அவர்களது ஆதிக்கம் 12ம் நுற்றாண்டில் வளர்ந்தது, அது 13ம் நுற்றாண்டில் மடங்களின் காரியங்களுடன் இணைந்தது. இது பிறகு தமிழகம் எங்கும் பரவியது. 13ம் நுற்றாண்டில் உருவான சிவஞானபோதம் இதற்கு ஒரு சிறப்பான உதாரணமாகும். இத்தகைய கலவையினால் சைவசித்தாந்தம் 13ம் நுற்றாண்டில் உண்டாக்கப்பட்டது, ஏற்படுத்தப்பட்டது[17]. கைலாசநாத கோயில் கல்வெட்டு, பல்லவ அரசன் “சித்தாந்தம்” உணர்ந்தவன் என்று கூறுவதால், சைவசிதாந்தத்தின் தொன்மையை 13ம் நுற்றாண்டில் உண்டாக்கப்பட்டது என்று சுருக்குவது ஏற்புடையதல்ல.
திராவிட இயக்கத்தை விமர்சித்தது: நொபுரு கராஷிமா திராவிட இயக்கம் தனது தேவைக்கு மீறி அதிகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று விமர்சித்துள்ளார்[18]. 1970களிலேயே, அவ்வியக்கத்தின் தேவை பூர்த்தியாகிவிட்டது[19]. அதாவது, அரசியல் மயமாக்கப்பட்ட அந்த இயக்கம் தேவையற்றது, அல்லது அதன் தேவை முடிந்து விட்டதால், இனியும், அதனை அரசியல் ஆதாயங்களுக்கு நடத்துவதை விரும்பவில்லை என்று சுட்டிக் காட்டினார்[20]. இதனாலும், ஆரிய-திராவிட இனவாதங்களை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்திவரும் ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்புப் போய்விட்டது. அதுமட்டுமல்லாது, இனி தமிழகத்திற்கு வெளியில் அத்தகைய சரித்திர ஆதாரமில்லாத சித்தாந்தங்கள் எடுபடாது என்பதால், இங்கு அவற்றை ஆதரித்துப் பேசுவது-எழுதுவது, வெளியில், மற்ற இடங்களில், வெளிநாடுகளில் வேறுவிதமாகப் பேசுவது-எழுதுவது என்று ஆரம்பித்தார்கள். இதனால் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் முரண்பாடுகள் காணப்பட்டன.
[3] Ms Jayalalitha said”the fact that no country has come forward to host the 9th World Tamil Conference for 14 long years since 1995 is an indication of the turmoil the Tamil world is going through”. Indicating that her party might boycott the conference, Ms. Jayalalitha said Mr. Karunanidhi was the first leader of a Tamil political party to boycott 1981 and 1995 conferences held in Tamil Nadu when M G Ramachandran and she were Chief Ministers respectively.
[6] Renowned Tamil scholar Noboru Karashima of Japan, the president of International Association of Tamil Research (IATR), the body that had organised the previous eight Tamil meets — then called ‘World Tamil Conference’ — refused to give formal consent to Karunanidhi’s impromptu announcement, prompting the DMK leader to convene a parallel meet under a new name.
[8] I have already clarified my thoughts and stand concerning the Tamil Conference and the IATR, in an article published in The Hindu on July 23, 2010, and have nothing more to say about it. Somebody had to sound the alarm about the IATR, which got entangled with local politics, and that is what I did. The reason for my resignation as its President is that I had no hope of reviving the IATR from within. In addition, there were the factors of my age and health. I hope its resurrection will be taken up by young and sincere Tamil scholars.
[9]செம்மொழிமாநாட்டைதிசைதிருப்பமுயற்சி: கருணாநிதி: சென்னை (19-06-2010): கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை திசை திருப்ப முயற்சி நடப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்துமுரசொலியில்அவர்எழுதியுள்ளகடிதத்தைப்பார்க்கவும்.
[16] Parvati Menon, ‘Unless knowledge of epigraphy develops, no ancient or medieval history of this country can be studied‘, an interview with Noboru Karashima in The Hindu dated December 2, 2010
[17] The first was the Bhakti movement of the period from the 7th to 10th centuries, which is attested to by the recitation of Devaram hymns and Tirumurai in mathas of the 11th century and after. The second is the North Indian Brahmanical tradition brought by the influx of Saiva ascetics to the Tamil country during the 11th and 12th centuries, which is shown by the appointment of those Brahmana ascetics asrajagurus by Rajaraja I and Rajendra I. These two traditions merged when the people of the lower social sections, such as cultivators, merchants, artisans, [members of the] hill tribes and soldiers, who had increased their power during the 12th century, also joined in matha activities in the 13th century, as our study of the inscriptions indicate. Their activities are spread all over the Tamil country. Sivananabodam, written in Tamil by Meykandar, a Vellalla ascetic, in the 13th century, is the hallmark of this fusion of the two traditions and the establishment of South Indian Saivasiddhantism in the 13th century.
[19] From the 1970s, however, the situation changed in accordance with the changes in caste society and the gradual economic growth of the South. The Dravidian Movement could be said to have fulfilled its historical role to a certain extent. From the 1980s, we see a shift in the aims of the movement. The political mobilisations by the DMK and AIADMK, and their appeals to the regional sentiments of the Tamil people, were primarily aimed at the expansion of their political vote base.
அஸ்கோ பர்போலாவவும், ஐராவதம் மஹாதேவனைப் போல உருவாகி விட்டார். சென்ற இடத்தில் எல்லாம் விதவிதமாக பேசுவது, மேடைக்கு ஏற்ப மாற்றி பேசுவது, ஊடகக்காரர்களிடம் வேறு விதமாகப் பேசுவது என்பது வேடிக்கையாக இருக்கிறது.
திராவிடர்கள் சிந்துசமவெளியிலிருந்து, வெளியேரி குஜராத் முதலிய இடங்களில் வாழ்ந்தார்கள்.
ஆரிய படையெடுப்பு இல்லை, திராவிடர்களே, ஆரியர்கள் வருவதற்கு முன்னமே தெற்காக நகர்ந்து சென்று விட்டனர்: அஸ்கோ பர்போல திடீரென்று அதிரடியாக, இரண்டாம் மில்லினியம் காலத்தில் ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதற்கு, ஒரு புதிய திரிபு வாதத்தை முன்வைத்துள்ளார். இதன்படி, திராவிடர்கள் விரட்டியடிக்கப்படவில்லை, ஆனால், ஆரியர்கள் அங்கு நகரத்திற்கு வருவதற்கு முன்னமே, படிப்படியாக அவர்களே மேய்ச்சலுக்கு நல்ல பசுமையான நிலங்களைத் தேடிக்கொண்டு, தெற்கு நோக்கி நகர்ந்து சென்று விட்டனர். சென்னைக் கிருத்துக் கல்லூரியின் சார்பாக, கிஃப்ட் சிரோமணி என்பாரது நினைவுச் சொற்பொழிவாக, தான் “சிந்துவரிவடிவம், திராவிட ஹரப்பன்கள், காட்டுக்கழுதை” என்ற தலைப்பில் பேசியதைப் பற்றி, இந்தியன் எக்ஸ்பிரஸுக்குச் சொன்னார். அவரது ஆராய்ச்சியின் படி, திராவிடர்கள்தாம், குஜராத்தில் உள்ள சிந்துசமவெளி நாகரிகத்தில் இருந்தனர். அவர்களில் சிலர் மேய்ச்சலுக்கு நல்ல பசுமையான மற்றும் செழுமையான நிலங்களைத் தேடிக்கொண்டு தெற்காக நகர்ந்தனர். இது ஆரியர்கள் கூட்டம் கூட்டமாக பெருமளவில் வருவதற்கு முன்பே ஏற்பட்டது, என்று ஆதாரங்கள் உள்ளன.
வட-இந்தியாவில் ஆங்கிலேயர்களைப் போல ஆரியர்கள் திராவிடர்களை இந்தோ-ஆரிய மொழியைக் கற்றுக்க்கொள்ளச் செய்தனர்: ஆங்கிலேயர்கள் எப்படி பிராமணர்களை ஆங்கிலம் கற்றுக்கொள்ளவைத்து, தங்கள் கீழ் வேலை செய்யவைத்து, நாட்டை ஆண்டனரோ, அதே போல, சிந்துநதி அருகில் தங்கி விட்ட, திராவிட சமுதாயமும், குறிப்பாக சமுதாயத்தலைவர்கள், இந்தோ-ஆரிய மொழியைக் கற்றுக்கொண்டது. திராவிடர்களுடைய மேற்தட்டுக் குடிகள் அவ்வாறு ஆரிய மொழியைக் கற்றுக் கொண்டு, வட-திராவிடர்களாக மாறினர். இருப்பினும் அவர்களது மொழியில், முந்தைய-திராவிட கூறுகளைத் தக்கவைத்துக் கொண்டனர். தென்னிந்தியாவில் திராவிட மொழிகள் இன்னும் பேசப்பட்டு வருகின்றன, ஏனெனில், ஆரியர்கள் தென்னிந்தியாவை முழுவதுமாக வெற்றிக் கொள்ளமுடியவில்லை. வட-இந்தியாவை அவ்வாறு வெற்றிக் கொள்வதற்கே பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கும். ஆனால், இப்பொழுதைக்கு, சரித்திர ஆசிரியர்களிடம் வழக்கத்தில் உள்ள சித்தாந்தமானது, ஆரியர்கள் திராவிடர்களை தென்னிந்தியாவிற்கு விரட்டியடித்தனர் என்பதுதான். இது படித்தவர்களிடையே, இப்பொழுது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
செம்மொழி மாநாட்டில் நான் என்னுடைய சமீபகால சிந்துசமவெளி வரிவடிவங்களைப்பற்றிய ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளை ஒரு ஆய்வுக்கட்டுரையில் சமர்ப்பிக்க உள்ளேன். “சிந்துசமவெளி வரிவடிவங்களை அடையாளங்கொண்டுப் படிப்பது” என்ற புத்தகத்தில்[2] (கேம்பிரிட்ஜ், 1994), நான் மீன் வடிவத்தை “மின் நட்சத்திரம்”, மற்றும் அதன் மற்ற கூட்டு வார்த்தைகள் பழந்தமிழில், பல வானில் உள்ளவற்றைக் குறிப்பதாக எடுத்துக் காட்டி விளக்கம் கொடுத்துள்ளேன். புதிதாக அடையாளங்காணப்படுகின்ற முத்திரையில் ஒரு “திமில் கொண்ட விலங்கின் பின்னங்கால்கள்” உள்ளன. அது மீன் சின்னத்திற்கு முன்பாகக் காணப்படுகிறது. பழந்தமிழ் “தாள்” என்ற வார்த்க்தையின் மறுவுருவம், தோடாவில் “விலங்கின் பின்னங்காலின் தொடை” என்ற பொருளில் உள்ளது. அதுவே புறநானூறில் நட்சத்திரத்தைக் குறிப்பதாக உள்ளது (புறம்.395).
ஒரே ஒரு இந்து-முத்திரையில்தான் காட்டுக்கழுதையின் உருவம் காணப்படுகிறது. இந்த முத்திரை 2009ல் கட்சில் உள்ள கன்மர் என்ற இடத்தில் தோன்றியபோது கிடைத்ததாகும். தென்னாசிய பிராந்தியத்தில் உள்ள காட்டுக்கழுதைகள் சரணாலயத்திற்கு மிக்க அருகில் இந்த இடம் உள்ளது. காட்டுக்கழுதைகளின் எலும்புகள் பலுச்சிஸ்தான், சிந்துசமவெளி மற்றும் குஜராத் முதலிய ஹரப்பன் அகழ்வாய்விடங்களிலிருந்து கிடைக்கின்றன. உவர் நிலமாக இருக்கும் இந்த இடம்தான் இந்த காட்டுக்கழுதையின் வாழ்விடமாக இருந்துள்ளது. 1600 BCE முன்பாக தெற்காசியாவில் மனிதனின் உபயோகத்தில் இருந்த குதிரையின் எலும்புகள் மற்றும் அவற்றின் உருவம் காணப்படுவதில்லை.
தமிழ் “கழுதை”யின் வார்த்தை உருவங்கள் மலையாளம், கோடா, தோடா, கன்னடம், கொடகு, துளு, தெலுங்கு, கொலாமி, நாய்கி, பர்ஜி, கோண்டி, மறும் குவி மொழிகளில் காணப்படுகிறது. பாத்ரிராஜு கிர்ஷ்ணாமூர்த்தி என்பவர், கழ்-உத்-அய் என்று வார்த்தை அமைப்பின மறுபடியும் ஏற்படுத்தியுள்ளார். அதன்படி முந்தைய-திராவிரர்களுக்கு கழுதை தெரிந்துள்ளது என்று தெரிகிறது. கழு-தை என்றால் ஒருவேளை “காட்டுக்கழுதை” என்று ஹரப்பன்-திராவிடர்களால் உணரப்பட்டது போலும். மேற்கிலிருந்து இந்தக் காட்டுக்கழுதை புதியதாக சிந்துசவளி வழியாக தெற்காசியாவில் நுழைந்திருக்கிறது. அதே மாதிரி அந்த வார்த்தையும் மாற்றப்பட்டு சென்றடைந்துள்ளது. ரிக்வேதத்தில் உள்ள கழுதையைக் குறிக்கும் “கர்தபா” என்ற வார்த்தைக்கு ஈரானியத்தில் எந்த மூலக்கூறும் இல்லை. அது ஒரு திராவிடத்திலிருந்து கடன் பெற்றச் சொல்லாகிறது. அதாவது திராவிட வார்த்தை “பா” என்ற இந்தோ-இரானிய விலங்கின் கூறுடன் சேர்ந்து “கர்த + பா” என்றாகிறது. நான் கழுதை என்றால், உவர்ப்பான பாலைவனத்தின் மண்ணை உதைக்கும் விலங்கு என்று கழுதைக்கு பொருள் விளக்கம் சொல்வேன் – கழ் / கள்ளர் = உவர்ப்பான மண் மற்றும் “உதய்” = உதைப்பது. ஆக, இந்த காட்டுக்கழுதை உவர்ப்பான பாலைவனத்தில் வசிக்கிறது மற்றும் நன்றாக உதைக்கும் விலங்காக உள்ளது.
ஹரிவம்சம் என்ற சமஸ்கிருத நூலில் 57வது அதியாயத்தில் காட்டுகழுதையைப் பற்றிய ஒரு இந்து காட்டுக்கதையுள்ளது. கிருஷ்ணரும், பலராமனும் தேனுகன் என்ற அரக்கன் வாழும் பனைமரக் காட்டிற்கு சென்றனர். நன்றாக பழுத்த பனைப்பழத்தின் சாற்றை குடிக்க, பனைமரங்களை பலராமன் ஆட்டுகிறான். சப்தத்தைக் கேட்டு கழுதை-அரக்கன் ஓடிவருகிறான். பனைமரத்தின் கீழிருக்கும் பலராமனை, மரத்தைத் தன் கைகளில் பிடித்திருக்கும் விதத்தில், பனைக்கொடியைப் பிடித்திருப்பது போன்று தெரிந்ததாம். ஓடிச்சென்று, தன்னுடைய பின்னங்கால்களினால், அக்கழுதை அரக்கன் பலமாக உதைக்க ஆரம்பித்தானாம். அப்பின்னங்கால்களைப் பிடித்துக் கொண்டு, பலராமன் அப்படியே பனைமரத்தின் மீது தூக்கி எரிய, அக்குழுதை கீழே விழுந்து இறந்ததாம். மற்றக்கழுதைகளும் அவ்வாறே கொல்லப்பட்டனவாம். முன்பு அக்கழுதைகள் அவ்வழியாக யாரும் செல்லமுடியாதபடி, தீவிரவாதத்துடன் கலாட்டா செய்து வந்தநிலையில், இப்பொழுது அவைகள் கொல்லப்பட்டதால், அழகான இடமாகிவிட்டதாம்.
பனைமர காட்டின் விவரணம் உவர் பாலைவனத்தைக் குறிப்பதாக இருப்பது, நிச்சயம்மாக “காட்டுக்கழுதைகளை”த்தான் என்று தெரிகிறது. சமஸ்கிருதத்தில் “தாள” மற்றும் முந்தைய-திராவிடத்தில் “தாழ்” என்ற வார்த்தைகளில் குறிப்பிடப்படும் பனைமரம், இவ்விதமாக காட்டுக்கதைகளிலும், பழைய இலக்கியங்களிலும் உள்லதைக் காணலாம். கள்ளிருக்கும் பனை, காட்டுக்கழுதையுடன் ஒப்பிடப்படுகிறது. பழுத்தப்பழங்கள் கீழே விழுவது மாதிரி, அவையும் கீழே விழுகின்றன. அந்தவிதமாக, கள்ளிருக்கும் பனை கழுதையைக்கொன்றவனுடன் சம்பந்தப்படுத்தப்படுகிறது, அவனுடைய முக்கிய அம்சமாகவும் கருதப்படுகிறது.
இந்த கட்டுக்கதை பலராமனுடைய கொடியையும் (தாள-த்வஜா) குறிக்கிறது. ரிக்வேதத்தில், இந்திரன் சோமபானத்தைப் போன்றதை ருசிக்க அழைக்கப்படுகிறன். அது ஒரு தாகமெடுத்த காட்டடக்கழுதை (கௌர) உவர்நிலத்திலுள்ள (இரிணா) ஒரு குட்டையில் நீர்பருகுவதைப் போன்றிருக்கிறதாம். கட்ச் பிரதேசத்தில், அத்தகைய குட்டைகள் எல்லாம் இன்றும் “தாலாப்” என்றுதான் வழங்க்கப்படுகின்றன. இந்த பாரசீக வார்த்தை இந்தோ-ஆரியன் வார்த்தை “தால”, மற்றும் முந்தைய-திராவிட “தாழ்” – தாழ்ந்த, குழிந்த இடம் என்ற பொருளில் வருகிறது. ஒட்டகத்தைப் போல, இந்தக் காட்டுக்கழுதையும் நிறைய தண்ணீரை மொந்தைக்குடிகாரனைப் போலக் குடிக்கலாம். இதைத்தவிர, “தாழ்” என்ற வார்த்தை, தாழ்வான அலைகளைக் குறிப்பதாகவும் உள்ளது. அதாவது, குதிரையின் முகத்தையுடைய ஒரு அரக்கன் கடல் முழுவதையும் குடித்துவிடிவதுபோல ஒரு கட்டுக்கடதையும் உள்ளது.
முடிவுரை: “தாள்” (தாழ் என்று பழைய கான்னடத்தில் உள்ளது), (பின்னங்)கால், மரத்தின் திம்மை (பருத்த திம்மையையுடைய தாழச் செடி> கள் தருகின்ற பனைமரம்) முதலியவை பலவிதங்லளில் காட்டுக்கழுதையுடன் தொடர்புடையாத உள்ளது.
விமர்சனம் மற்றும் வினவுகள்:
கழுதையில் எந்த கழுதை காட்டுக்கழுதை? கழுதை – கழ் / கழு + உதய் = பின்பக்கமாக + உதை = அவ்வாறாக உதைக்கும் விலங்கு = கழுதை. அஸ்கோ பர்போல் இவ்வாறு கழுதைக்கு அர்த்தம் கண்டுபிடித்திருப்பது, மிகப்பெரிய ஆராய்ச்சியா என்றுத் தெரியவில்லை. ஏனெனில், “கழுதை” என்ற வார்த்தை ஏற்கெனெவே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. புறம்.15.1-3; புறம்.392.8-10; பதிற்றுப்பத்து..25.4; பெரும்பாணாற்றுப்படை.78-80 முதலிய, கழுதை, பொதி-கழுதையைக் குறிக்கின்றன.
சமஸ்கிருத நூல்களினின்று ஏன் முந்தைய-திராவிடி சொற்கூறுகளின் விள்ளக்கம், அர்த்தம் பெறப்படவேண்டும்? முந்தைய-திராவிட மொழி, பழந்தமிழ் என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், ஏன் அத்தகைய மொழிக்கூறுகளின் தன்மை, உண்மை, விவரங்கள் எல்லாமே, சமஸ்கிருத நூல்களின் மூலம்தான் அறியப்படவேண்டும் என்று, இந்த உற்சாகமுள்ள திராவிட ஆராய்ச்சியாளர்கள் யோசித்துப் பார்ப்பதில்லை. அத்தகையத் தொன்மைத் தனம் முந்தைய-திராவிடியிலேயே இருந்திருந்தால், அக்காலத்தைல் ஏன் இலக்கியம் தோன்றாமல் இருந்தது?
“என்னுடைய கருத்தின்படி, தமிழ் முந்தைய-திராவிட (மொழிக்குடும்பத்திற்கு)ச் செல்கின்றது அவை 2600-1700 BCE வாக்கில் இந்து-வரிவடிவங்களில் சிறிய அளவில் ஆயிரக்கணக்கில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகளில் காணலாம் என்பதாகும்”, என்கிறார். பிறகு ஏன் சுமார் 300 BCE வாக்கில்தான் சங்க இலக்கியம் எழுதப்பட்டிருக்க வேண்டும்?
இடைப்பட்டகாலத்தில் சுமார்.2600-1700 BCEமுதல்300 BCE வரை, முந்தைய திராவிடர் எழுதியதையே எழுதிக் கொண்டிருந்தார்களா, இல்லை, வேறு வரிவடிவங்களை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார்களா?
“மேற்கிலிருந்து இந்தக் காட்டுக்கழுதை புதியதாக சிந்துசமவளி வழியாக தெற்காசியாவில் நுழைந்திருக்கிறது”. அதாவது, முந்தைய-திராவிட மொழி பேசும் காலத்தில் காட்டுக்கழுதைகள்தாம் இருந்தன. அதனால், “கழுதை”யை பழந்தமிழன் நன்றக அறிந்திருந்தான். ஆக, கழுதைகள், காட்டுக்கழுதைகள் எல்லாம் கூட“மேற்கிலிருந்து புதியதாக சிந்துசமவளி வழியாக தெற்காசியாவில் நுழைந்திருக்கிறது”. ஆக, இனி “காட்டுக்கழுதை நுழைந்த சித்தாந்தத்தை”ப் பற்றி தமிழர்கள் படித்துக் கொண்டேயிருக்கலாம்.
“1600 BCEமுன்பாக தெற்காசியாவில் மனிதனின் உபயோகத்தில் இருந்த குதிரையின் எலும்புகள் மற்றும் அவற்றின் உருவம் காணப்படுவதில்லை”. அதாவது, முந்தைய-திராவிட மொழி பேசும் மக்களுக்கு “குதிரை” என்றால் என்னவென்று தெரியாது.
காட்டுக்குழுதைக்குப் பிறகு, குதிரைகள் எப்பொழுது இந்தியாவில், “மேற்கிலிருந்து புதியதாக சிந்துசமவளி வழியாக நுழைந்தது”., என்று தெரியவில்லை.
“காட்டுக்கழுதை முத்திரை” கட்சில் உள்ள கன்மர் என்ற இடத்தில் கிடைத்தது, மற்றும் தென்னாசிய பிராந்தியத்தில் உள்ள காட்டுக்கழுதைகள் சரணாலயத்திற்கு மிக்க அருகில் இந்த இடம் உள்ளது”, என்றெல்லாம் விளக்கம் கொடுக்கும் போது, குதிரைகள் சரணாலயம் ஏன் இல்லை என்று சொல்லவில்லையே?
குதிரைக்கு, சங்க இலக்கியத்தில் மா, புரவி, இமில் என பற்பல சொற்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, காட்டுக்கழுதை, கழுதையை விட அதிகமான பெயர்கள் உள்ளபோது, அதே மாதிரி, முந்தைய-திராவிட மொழிகளில் அதன் பிரயோகம் ஏன் இல்லை?
திராவிடர்கள் நுழைந்த பிறகு காட்டுக்கழுதைகள் / கழுதைகள் “மேற்கிலிருந்து புதியதாக சிந்துசவளி வழியாக நுழைந்தனவா”, அல்லது காட்டுக்கழுதைகள் / கழுதைகள் நுழைந்த பிறகு திராவிடர்கள் நுழைந்தனரா?
ஆரியர்கள் நுழைந்த பிறகு குதிரைகள் “மேற்கிலிருந்து புதியதாக சிந்துசவளி வழியாக நுழைந்தனவா”, அல்லது குதிரைகள் நுழைந்த பிறகு ஆரியர்கள் நுழைந்தனரா?
தெற்கிலிருக்கும் அரக்கர்கள் கோவேறுக்கழுதைகள் பூட்டிய ரதங்களை ஓட்டியதாக கதைகள் உள்ளன. இதற்கும், முந்தைய-திராவிட மொழி பாரம்பரியங்களுக்கும், ஏதாவது தொடர்பு உள்ளதா?
வேதபிரகாஷ்
26-06-2010
[1] Asko Parpola, The Indus script and the wild ass, The Hindu
ஆஸ்கோ பார்போல ஒன்று குழம்பி போயிருக்கிறார் அல்லது தமது திராவிட நண்பர்களால் குழப்பப்பட்டிருக்கிறார்.
“ஆரிய படையெடுப்பு இல்லை” ஏனெனில், திராவிட நாகரிகம் சிந்து சமவெளியில் மறைந்த (1950 BCE ) பிறகுதான் அவர்கள் அங்கு வந்தார்கள் என்கிறார்.
பிறகு, திராவிட மொழிபேசுகிறவர்கள் கழுதையைப் பார்த்திருப்பார்கள், அதனால் தான், கழுதையை ஞாபகமாக தம்முடைய முந்தையப்-திராவிடக் கூறுகளில், ஜாக்கிரதையாக பாதுகாத்து வைத்துள்ளார்கள் என்கிறார்!
பிறகு சொல்கிறார், “சமஸ்கிருதம் தன்னுடைய 3000 வருட காலத்தைய பாரம்பரியத்துடன் பல அரிய நூல்களை உருவாக்கியுள்ளது. அது பின் சென்று முந்தைய-இந்தோ-ஆரிய(மொழிக்கு)னுக்குச் சென்று 1500 மற்றும் 1300 BCE காலத்தில்சிரியாவிலுள்ள மிட்டானிய ராஜ்யத்தில் சில பெயர்கள் மற்றும் வார்த்தைகளில் பதிவாகியுள்ளது. இந்தோ-ஆரிய மொழிகளின் முந்தைய கூறுகள், 2000 BCE வாக்கில் மத்திய ருஷ்யாவில் பேசப்பட்ட ஃபின்லாந்து-உக்ரைன் மொழிகளில் காணப்படும் “கடனனாகப் பெறப்பற்ற வார்த்தைகளாகக் காணப்படுகின்றன.
“இருப்பினும், இவற்றின் ஆரம்ப மூலங்கள் எல்லாமே தமிழினுடைய ஆரம்ப மூலங்களைவிடத் தொன்மையானது அல்ல. என்னுடைய கருத்தின்படி, தமிழ் முந்தைய-திராவிட(மொழிக்குடும்பத்திற்கு)ச் செல்கின்றது. அவை 2600-1700 BCE வாக்கில் இந்து-வரிவடிவங்களில் சிறிய அளவில் ஆயிரக்கணக்கில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகளில் காணலாம் என்பதாகும். இதில் பலதரப்பட்டக் கருத்துகள் உள்ளன, இருப்பினும் 1000 BCE வாக்கில் சிந்து சமவெளியில் சேகரிக்கப்பட்ட ரிக்வேதத்தில் கூட அரை டஜன் (சுமார் ஆறு) திராவிட வார்த்தைகள் உள்ளன என்பதனை மற்ற விமர்சனம் செய்யும் ஆராய்ச்சியாளர்கள்கூட ஒப்புக்கொள்கிறார்கள்.
“வட-இந்திய மக்களில் பெரும்பாலானவர்கள் ஹரப்பன் நாகரிகத்திலிருந்து வந்தவர்கள் தாம், அவர்களும் அதே நாகரிகத்தின் கலாசாரத்தை பாதுகாத்துவைத்துள்ளார்கள்”.
எல்லோருமே ஒரே நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் எனும்போது, அவர்கள் பேசிய மொழிகள் எப்படி இரண்டாகும்?
காலக்கணக்கீட்டில்கூட, இவர் பல குழப்பங்களைச் செய்கிறார்.
ஆரிய-மொழிகள் பேசும் மக்கள், திராவிட-மொழிபேசும் மக்கள் எல்லோருமே, சிந்துசமவெளி நாகரிகத்தின் இடம் வழியாகத்தான் உள்ளே நுழைந்தார்கள் என்றால், அங்கு இருந்த மக்கள் யார்?
அதாவது, இவர்கள் – ஆரிய-மொழிகள் பேசும் மக்கள், திராவிட-மொழிபேசும் மக்கள் – வருவதற்கு முன்னர் இருந்த மக்கள் யார்?
மேலாக, அந்த காட்டுக்கழுதையே இந்தியாவில் சிந்துசமவெளி வழியாக இந்தியாவில் நுழைந்தது என்கிறார்!
பிறகு எப்பொழுது அந்த காட்டுக்கழுதை, மனிதனால் வளர்க்கப்பட்டக் கழுதையாகியது?
குதிரை இப்ப்ழுது வந்தது? அது எப்பொழுது மனிதனால் வளர்க்கப்பட்டக் குதிரையாகியது?