ரத்தம், நிறம், இனம் பிறகு மரபணு வைத்து “விஞ்ஞான” ஆராய்ச்சி – நூபியா–ஆப்பிரிகாவிலிருந்து திராவிடர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர் [2]
சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் வருகையால்தான் அழிந்தது என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப் பெறவில்லை – டோனி ஜோசப்: “டைம்ஸ் நௌ” தமிழும் விடவில்லை, தமிழில் இவ்வாறு வெளியிட்டது. இந்திய வரலாற்றில் ஆரியர்களின் வருகை இதுநாள் வரை கோட்பாடு அடிப்படையில் சொல்லப்பட்டு வந்தது[1]. டிஎன்ஏ அடிப்படையிலான ஆய்வில் உலக அறிவியலாளர்கள் தற்போது இந்தக் கோட்பாட்டுக்கு ஆதாரங்களை வழங்கியுள்ளனர்[2]. இதுகுறித்து தி இந்து ஆங்கில நாளிதழில் (ஜூன் 17, 2017) டோனி ஜோசப் விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார்[3]. கட்டுரையிலிருந்து சில குறிப்பிடத்தகுந்த கருத்துக்கள் மட்டும் இங்கே…[4] என்று மொழிபெயர்த்து கொடுத்துள்ளது:
- தந்தை வழியில் கடத்தப்படும் ’ஒய்’ குரோமோசோம்களைக் கொண்டு ஆரியர்களின் வருகையை அறிவியலாளர் நிரூபித்துள்ளனர். இதுநாள் வரை தாய் வழி எம்டி டிஎன்ஏக்களை வைத்துதான் ஆய்வு நடந்தது. அதில் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியவில்லை.
- ஒய் டிஎன்ஏக்களுக்கும் எம்டி டிஎன்ஏக்களுக்கும் நேர் எதிரான ஆய்வு முடிவுகள் காணக்கிடைக்கின்றன. காரணம், வெண்கல யுகத்தில் நடந்த புலப்பெயரில் பாலியல் சமத்துவமற்ற நிலைமை இருந்திருக்கிறது. அதாவது புலப்பெயர்வில் ஆண்களே அதிகமானோர் இருந்திருக்கிறார்கள். எனவே, இந்திய பெண்களின் தாய்வழி மரபணுக்களை வைத்து இதுநாள் வரை சரியான முடிவை நோக்கி ஆய்வாளர்களால் நகர முடியவில்லை.
- ஒய் டிஎன்ஏக்களின் ஆய்வில்5% இந்திய ஆண்கள் ஹப்லோ க்ரூப் எனப்படும் ஆர்1ஏ என்ற பிரிவினர் ஒற்றை உறவு வழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
- இந்த ஆர்1ஏ என்ற பிரிவினர் மத்திய ஆசியா, ஐரோப்பிய மற்றும் தெற்கு ஆசியாவில் விரவி இருக்கிறார்கள்.
கட்டுரை வலியுறுத்துவது இந்தியாவில் ஒற்றை கலாச்சாரம், ஒற்றை சந்ததியினர் என்பவர் எவரும் இல்லை: “வெண்கல யுகத்தில் மத்திய ஆசியாவில் நிகழ்ந்த புலப்பெயர்வு ஆண்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை டிஎன்ஏ முடிவுகள் காட்டுகின்றன. மேலும், த பண்டைய இந்தோ ஆசிய இனத்தின் பாகுபாடுள்ள சமூக அமைப்பையும் இது காட்டுகிறது” என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்டின் பி. ரிச்சர்ட்ஸ்.
- ஆர்1ஏ பிரிவில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன. ஒன்று z282, z93. z282 பிரிவினர் ஐரோப்பாவுக்குள் மட்டுமே பிரிந்து சென்றனர். z93 பிரிவினர் மத்திய ஆசியாவுக்கும் கிழக்கு ஆசியாவுக்கும் பரவினர். மேலும்z93ன் மூன்று துணைபிரிவினர் இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இமாலய பகுதிகளில் பரவினர்..
- முந்தைய ஆய்வுகளில் ஆர்1ஏ பிரிவினர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு, அங்கிருந்து பரவியதாக கருதப்பட்டனர். அந்தக் கருத்தை தற்போதைய ஆய்வு தகர்த்திருக்கிறது” என்கிறார் அறிவியலாளர் பீட்டர் அண்டர்ஹில்.
- பீட்டர் அண்டர்ஹில்லுடன் இணைந்து டேவிட் போஸ்னிக் 2016ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு ஆய்வு முடிவில்z93பிரிவினரின் பரவல் 4000லிருந்து 4500 ஆண்டுகளில் நடந்திருக்கலாம் என்கின்றன. அதாவது 4000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இந்தப் பிரிவினரின் வருகை நடந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் வருகையால்தான் அழிந்தது என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப் பெறவில்லை என்கிறார் கட்டுரையாளர் டோனி ஜோசப். ஆனால் இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே காலத்தில் நடந்தேறியிருக்கின்றன என்பதையும் சுட்டுகிறார்.
- 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஊடகங்கள் ’ஆரிய – திராவிட பிரிவினை என்பது பொய்- ஆய்வு முடிவு’ என தவறான கோணத்தில் செய்தி வெளியிட்டதையும் கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறார். இதுவரை வெளியான ஆய்வுகளில் அப்படியான கருத்துகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால். ஊடகங்கள் திரித்துள்ளன என்கிறார்.
- இதுவரையிலான ஆய்வுகளில் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பங்களிலிருந்து பிரிந்த ஒரு பிரிவினர் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர் என்று நிரூபித்திருந்தனர். அதாவது சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இவர்கள் உயர்சாதியினராக அறியப்படுகின்றனர்.
- கட்டுரை வலியுறுத்துவது இந்தியாவில் ஒற்றை கலாச்சாரம், ஒற்றை சந்ததியினர் என்பவர் எவரும் இல்லை. 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து ஒரு பிரிவினர் இங்கே வந்தனர்[5]. பிறகு 10 ஆயிரம் ஆண்டுகளில் தெற்கு ஆசியாவிலிருந்து ஒரு பிரிவினர் வந்தனர்[6]. பிறகு சிந்துவெளி சமவெளி மக்கள் (அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதை கட்டுரையாளர் குறிப்பிடவில்லை; அவர்கள் முதலில் வந்தவர்கள்தான் அதாவது பூர்வகுடிகள் என்கிற கோட்பாடு சொல்லப்படுகிறது) 4 ஆயிரம் ஆண்டுகளில் ஆரியர்கள் வந்தனர். அதன் பிறகு வணிகம் செய்யவந்தவர்கள் என வரலாறு முழுக்க பலரும் வந்துகொண்டிருக்கின்றனர் என்கிறார்கள். நாமெல்லாம் வந்தேறிகள் என்று முடிக்கிறார்.
இனம் [Race], இனசித்தாந்தம் [Racism], மற்றும் இனவெறித்துவம் / நிறவெறித்துவம் [Racialism]: கலப்பினத் தோற்றம் அல்லது கலப்பினம் உருவாக்கம் [Miscegenation] என்பது முன்னமே இருந்த கொள்கைதான். இனம் [Race], இனசித்தாந்தம் [Racism], மற்றும் இனவெறித்துவம் / நிறவெறித்துவம் [Racialism] முதலியவற்றுடன், கலப்பினத் தோற்றம் அல்லது கலப்பினம் உருவாக்கம் சேர்ந்திருந்தன. போர்ச்சுகீசியர் தாம், தாம் சென்ற நாடுகளில், அந்தந்த நாட்டினர் பெண்களுடன் புணர்ந்து, புதியதாக கலப்பினத்தவரை உண்டாக்கினர். அத்தகையோர் தமக்கு விசுவாசமாக இருப்பர் என்பது அவர்களது கொள்கையாக இருந்தது. அவ்வாறு உருவாக்கிய குழுமத்தை காஸ்டா [casta] என்று குறிப்பிட்டனர். அது பிறகு காஸ்ட் [caste] / ஜாதி என்றாகியது. போர்ச்சுகீசியர் கலப்பினத்தவரை சுத்தமானவர் / தூய்ன்மையாஅ இனத்தவர் என்று கொள்ளவில்லை. ஆனால், அவர்கள் தங்களது நிறவெறித்துவ தீவிரவாதக் கொள்கைகளை உலக யுத்தங்கள் முடிந்த பிறகு, ஹிட்லரி மீது சுமத்த, “ஆரிய இனம்” என்று உருவாக்கி, பரப்ப ஆரம்பித்தனர். இனரீதியில், அது யூதர்களை பாதித்ததால், இனம் பொய், கட்டுக்கதை என்று மற்றினர். பிறகு, இப்பொழுது, உலகமயமாக்கம் போன்றவற்றில் வியாபாரம் தான் முக்கியம் எனும் போது, “எல்ல்லொரும் ஒன்று” போன்ற பொய்மை சித்தாந்தங்களை உருவாக்க, வழி தேடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் தான், டோனி ஜோசப் போன்ற வியாபார ஏஜென்டுகள், “எல்லோருமே வந்தேறிகள்” என்று சித்தாந்தத்தை மாற்றியமைக்கப் பார்க்கின்றானர்.
திராவிடர்களும், மரபணு ஆராய்ச்சிகளும்: இந்தியாவில், வேண்டுமென்றே, ஆரிய குடியேற்றம், குடிபெயர்பு என்றெல்லாம் தான், விவாதிக்கப் படுகிறது, “திராவிடர்” பற்றி பேசுவது கிடையாது. ஏனெனில், ஆராய்ச்சியாளர்கள், 5000 வருடங்களுக்கு முன்பாக, திராவிட மொழி பேசுபவர்கள் நூபியாவில் வாழ்ந்து, இரான் மூலமாக, இந்தியாவிற்குள் நுழைந்து குடியேறிவர்கள் ஆவர். நூபியா என்பது, ஆப்ரிகாவில், நைல் நதிக்கரையில், அஸ்வான் மற்றும் கார்டோம் இடையில் உள்ளது[7]. அதனால், இந்தியாவில் தோன்றிய மரபணு குழுக்கள் அல்லர் என்பது “M macrohaplogroups” நிரூபிக்கிறது[8] என்பதால், மறைப்பர்தற்காக, இதைப் பற்றி அலசுவதில்லை. மேலும், ஆப்ரிகாவில் இருந்து திராவிடர்கள் வந்தனர் என்றால், சிந்துசமவெளி மற்றும் குமரிக்கண்டம் இரண்டுமே – மூலம் மற்றும் சம்பந்தப்பட்ட கருதுகோள்கள், சித்தாந்தங்கள் எல்லாமே – அடிபட்டு போகிறது. பூகோள ரீதியாக பரவிய, மரமணு கூறு “hg M” கொண்டவர், நூபியாவில் உள்ள “C-Group”-டன் ஒத்துப் போகிறார்கள்[9] என்றும் எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. இந்நிலையில், திராவிட இன வந்தேறி மரபணு கோட்பாட்டை ஓரங்கட்டி, ஜாதி ரீதியில் அலசி, ஆராய்ச்சி செய்ய இறங்கி விட்டனர்[10]. பள்ளர், வன்னியர், நாடார் [கிருத்துவன் / இந்து], முஸ்லிம், ஐயங்கார், ஐயர், மீனவர், மார்வார், அகமுடையார், என்று எல்லோருமே, ஒரே மூல மரபணுவிருந்து, பிறகு, கலப்பினில் உருவானவதாம் என்று எடுத்துக் காட்டுகின்றனர். பிறகு, தமிழகத்தில் இருப்பவர் அனைவரையும் ஒரே ஜாதி என்று சொல்லி விட முடியுமா?
© வேதபிரகாஷ்
15-07-2019
[1] The Hindu, How genetics is settling the Aryan migration debate, Tony Joseph JUNE 16, 2017 23:49 IST; UPDATED: JUNE 19, 2017 12:50 IST.
[2]https://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece
[3] டைம்ஸ் தமிழ், பெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆரியர்களின் வருகைக்கு மரபணு ரீதியான ஆதாரம் கண்டுபிடிப்பு, ஜூன் 17, 2017
[4]https://thetimestamil.com/2017/06/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/
[5] தி.இந்து, எங்கிருந்து வந்தார்கள்?, டோனி ஜோசப், Published : 03 Jul 2017 09:40 IST, Updated : 03 Jul 2017 09:40 IST.
[6]https://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9745656.ece
[7] Nubia is a region along the Nile river encompassing the area between Aswan in southern Egypt and Khartoum in central Sudan. It was the seat of one of the earliest civilizations of ancient Africa, with a history that can be traced from at least 2500 BC onward with the Kerma culture. The latter was conquered by the New Kingdom of Egypt under pharaoh Thutmose I around 1500 BC. Nubia was home to several empires, most prominently the kingdom of Kush, which conquered Egypt during the 8th century BC during the reign of Piye and ruled the country as its Twenty-fifth Dynasty (to be replaced a century later by the native Egyptian Twenty-sixth Dynasty).
[8] Dravidian speakers formerly lived in Nubia and migrated to India over 5000 years ago and the Indian M macrohaplogroups do not have an in situ origin.
Winters, Clyde. Origin and spread of Dravidian speakers, International Journal of Human Genetics 8.4 (2008): pp.325-329.
[9] The geographical distribution of the archaeological signature of the C-Group people from Nubia to India matches the location of populations carrying hg M.
[10] Kanthimathi, S., M. Vijaya, and A. Ramesh. Genetic study of Dravidian castes of Tamil Nadu, Journal of genetics 87.2 (2008): pp.175-179.