Posts Tagged ‘காட்டுக் கழுதை’

நொபுரு கராஷிமா: தமிழ், கல்வெட்டு, செம்மொழி மாநாடு, திராவிட இயக்கம்

மே 29, 2013

நொபுரு கராஷிமா: தமிழ், கல்வெட்டு, செம்மொழி மாநாடு, திராவிட இயக்கம்

தமிழகத்தில் ஆராய்ச்சி செய்த ஜப்பானியர்: ஜப்பானைச் சேர்ந்த நொபுரு கராஷிமா எனும் தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். 80 வயதாகும் நொபுரு கராஷிமா, தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ் ஆய்வுகள் மேற்கொண்டவர். பின்னர் தமிழ்மொழி மீது கொண்ட ஆர்வம் காரணமாக சென்னை வந்து, சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியின் வரலாறு, கல்வெட்டுகள் பற்றி ஆராய்ந்தார்[1]. சரளமாக தமிழ் மொழியில் பேசக் கூடியவர். 1964-ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கல்விப் பணியைத் தொடங்கிய நொபுரூ கராஷிமா, 1974-ஆம் ஆண்டில் தெற்காசிய வரலாற்றுத் துறையின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்று 20 ஆண்டுகள் பணியாற்றியவர். இப்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராக உள்ளார்.

நொபுருகராஷிமாவிற்கு ஜப்பானிலேயே பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது: இவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை (28-05-2013) பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார். இவ்வாண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உடல் நிலை காரணமாக, புது தில்லியில் ஏப்ரல் மாதம் (05-04-2013) நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை[2]. இந்நிலையில், மூன்று நாள் பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் பத்மஸ்ரீ விருதை நொபுரு கராஷிமாவுக்கு வழங்கினார். டோக்கியோவில் செயல்படும் ஜப்பான்-இந்தியா நட்புறவு பரிமாற்ற கவுன்சில் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் நொபுரு கராஷிமாவுக்கு பத்மஸ்ரீ விருதை பிரதமர் வழங்கி கௌரவித்தார். முன்பு செந்தமிழ் மாநாட்டுப் பிரச்சினையிலும், வயதாகி விட்டது என்று ஒதுங்கிக் கொண்டார். ஒருவேளை, இப்பொழுதும், அரசியலில் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தாரோ என்னமோ அதே காரணம் சொல்லித் தவிர்த்து விட்டார். பிரணாப் முகர்ஜியும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

1995லிருந்து 14 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த, உலகத் தமிழ் மாநாடு: 1995ற்குப் பிறகு, முக்கியமாக இலங்கைப் பிரச்சினையால், தமிழர்களின் ஆத்ரவு சரியானமுறையில் இல்லாததாலும், யாரும் முன்வந்து நடத்த வராதலாலும், தள்ளிப்போடப் பட்டது. 1981 மற்றும் 1995 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது, கருணாநிதி அதை புறக்கணித்துள்ளார்[3]. இதனால், ஜெயலலிதா அவருக்கு அம்மாந்நாட்டை நடத்தவே தகுதியில்லை என்று விமர்சித்தார். 1995லிருந்து 14 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த, உலகத் தமிழ் மாநாடு நடத்துவேன் என்று திடீரென்று கருணாநிதி பிடிவாதம் பிடித்து ஆரம்பித்தார், ஆனால், அதற்கு ஒப்புதல் இல்லை என்பதனை, முன்னர் எட்டு “உலகத் தமிழ் மாநாடுகளை” நடத்திய[4], நொபுரு கராஷிமா எடுத்துக் காட்டினார்[5].அதுமட்டுமல்லாது, பிறகு ஒப்புதல் அளிக்கவும் மறுத்தார்[6]. ஐராவதம் மஹாதேவன், சுப்பராயலு போன்றோரை வைத்து சமாதானம் செய்ய கருணாநிதி முயன்றார், ஆனால், அவர் ஒப்புக் கொள்ளாவில்லை[7]. மாறாக விலகிக் கொண்டார்[8]. இளைஞர்கள் இணைந்து வேலை செய்யட்டும், எனக்கு வயதாகி விட்டது என்று ஒதுங்கிக் கொண்டார்.

உலகத் தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடாக மாற்றப்பட்டாலும் கலந்து கொள்ளாத நொபுருகராஷிமா:. செம்மொழி மாநாடாக மாற்றப்பட்டாலும் கலந்து கொள்ளவில்லை, ஆனால், ஆஸ்கோ பர்போலா கலந்து கொண்டார், அவருக்கு விருதும் கொடுக்கப்பட்டது. கருணாநிதி “பொங்குற்ற சிலர் பொல்லாத வழியில் திசை திருப்பப் பார்க்கின்றனர்” என்று ஏசவும் செய்தார்[9]. முன்னர் பிப்ரவரி 2007ல் “தமிழகமும் சிந்துவெளிப் பண்பாடும்” என்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தபோதும், ஜப்பானிய அறிஞர்கள் கலந்து கொள்ளவில்லை, ஏனென்றால், அப்பொழுது “கண்டியூர் கல்வெட்டு” என்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆஸ்கோ பர்போலாவும் சிந்து வரிவடிவம் தமிழ்தான்[10] என்று தீர்ர்மானமாக சொல்லவில்லை[11]. மேலும் விமர்சனங்கள் அதிகமாக வருவது கண்டு, “சமஸ்கிருதமும் சிந்துசமவெளிக்கு பங்களித்துள்ளாது” என்று விளக்கமும் கொடுத்தார்[12]. ஐராவதம் மகாதேவன் தனது கருத்தைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டக் கேள்விகளுக்கும் இவர்கள் நேரிடையாக பதில் சொல்லவில்லை[13]. இப்பிரச்சினை தொடர்ந்து “தி ஹிந்து” மற்றும் ரோசா முத்தையா நூலகத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் தொடர்ந்தது[14].

சைவசித்தாந்தம் தோற்றம் பற்றிய இவரது கருத்து: கல்வெட்டுகள் ஆதாரமாக, கிராமங்களில் இருந்த மக்கள் குழுமங்கள் அவர்களது சமயத் தொடர்பான விஷயங்கள் முதலியவற்றை வைத்துக் கொண்ண்டு, கீழ்கண்ட வாதங்களை வைக்கின்றார்[15]. மடங்களில் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடப்பட்டு வந்ததிலிருந்து, பக்தி இயக்கம் தோன்றிய காலம் 7 முதல் 10 நுற்றாண்டுகள் என்று கொள்ளப்படுகிறது. இது 11ம் நுற்றாண்டு கூட தொடர்ந்தது. பிறகு, 11-12 நுற்றாண்டுகளில் வடவிந்தியாவிலிருந்து, சைவத் துறவிகள் தென்னிந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டனர். ராஜராஜன்–1 மற்றும் ராஜேந்திரன்-1 பிராமணத்துறவியர்களை அரசகுரு ஸ்தானத்தில் அமர்த்தினார்கள். இவையிரண்டும் கலந்து, ஒரு பிரபலமான  சமூக இயக்கம் உருவானது. அதில் விவசாயிகள், வியாபாரிகள், கைவினைஞர்கள், மலைவாசிகள், வீரர்கள் என்று சமூகத்தின் கீழடுக்களில் இருந்தவர்களும் கலந்து கொண்டதால் அவ்வியக்கம் தோன்றியது[16]. அவர்களது ஆதிக்கம் 12ம் நுற்றாண்டில் வளர்ந்தது, அது 13ம் நுற்றாண்டில் மடங்களின் காரியங்களுடன் இணைந்தது. இது பிறகு தமிழகம் எங்கும் பரவியது. 13ம் நுற்றாண்டில் உருவான சிவஞானபோதம் இதற்கு ஒரு சிறப்பான உதாரணமாகும். இத்தகைய கலவையினால் சைவசித்தாந்தம் 13ம் நுற்றாண்டில் உண்டாக்கப்பட்டது, ஏற்படுத்தப்பட்டது[17].  கைலாசநாத கோயில் கல்வெட்டு, பல்லவ அரசன் “சித்தாந்தம்” உணர்ந்தவன் என்று கூறுவதால், சைவசிதாந்தத்தின் தொன்மையை 13ம் நுற்றாண்டில் உண்டாக்கப்பட்டது என்று சுருக்குவது ஏற்புடையதல்ல.

திராவிட இயக்கத்தை விமர்சித்தது: நொபுரு கராஷிமா திராவிட இயக்கம் தனது தேவைக்கு மீறி அதிகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று விமர்சித்துள்ளார்[18]. 1970களிலேயே, அவ்வியக்கத்தின் தேவை பூர்த்தியாகிவிட்டது[19]. அதாவது, அரசியல் மயமாக்கப்பட்ட அந்த இயக்கம் தேவையற்றது, அல்லது அதன் தேவை முடிந்து விட்டதால், இனியும், அதனை அரசியல் ஆதாயங்களுக்கு நடத்துவதை விரும்பவில்லை என்று சுட்டிக் காட்டினார்[20]. இதனாலும், ஆரிய-திராவிட இனவாதங்களை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்திவரும் ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்புப் போய்விட்டது. அதுமட்டுமல்லாது, இனி தமிழகத்திற்கு வெளியில் அத்தகைய சரித்திர ஆதாரமில்லாத சித்தாந்தங்கள் எடுபடாது என்பதால், இங்கு அவற்றை ஆதரித்துப் பேசுவது-எழுதுவது, வெளியில், மற்ற இடங்களில், வெளிநாடுகளில் வேறுவிதமாகப் பேசுவது-எழுதுவது என்று ஆரம்பித்தார்கள். இதனால் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் முரண்பாடுகள் காணப்பட்டன.

© வேதபிரகாஷ்

29-05-2013


[3] Ms Jayalalitha said”the fact that no country has come forward to host the 9th World Tamil Conference for 14 long years since 1995 is an indication of the turmoil the Tamil world is going through”. Indicating that her party might boycott the conference, Ms. Jayalalitha said Mr. Karunanidhi was the first leader of a Tamil political party to boycott 1981 and 1995 conferences held in Tamil Nadu when M G Ramachandran and she were Chief Ministers respectively.

http://www.asiantribune.com/news/2009/09/25/karunanidhi-has-no-locus-standi-host-world-tamil-meet-jaya

[6] Renowned Tamil scholar Noboru Karashima of Japan, the president of International Association of Tamil Research (IATR), the body that had organised the previous eight Tamil meets — then called ‘World Tamil Conference’ — refused to give formal consent to Karunanidhi’s impromptu announcement, prompting the DMK leader to convene a parallel meet under a new name.

http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=4080285

[8] I have already clarified my thoughts and stand concerning the Tamil Conference and the IATR, in an article published in The Hindu on July 23, 2010, and have nothing more to say about it. Somebody had to sound the alarm about the IATR, which got entangled with local politics, and that is what I did. The reason for my resignation as its President is that I had no hope of reviving the IATR from within. In addition, there were the factors of my age and health. I hope its resurrection will be taken up by young and sincere Tamil scholars.

http://www.thehindu.com/opinion/interview/unless-knowledge-of-epigraphy-develops-no-ancient-or-medieval-history-of-this-country-can-be-studied/article925942.ece

[9] செம்மொழி மாநாட்டை திசைதிருப்ப முயற்சி: கருணாநிதி: சென்னை (19-06-2010): கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை திசை திருப்ப முயற்சி நடப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதத்தைப் பார்க்கவும்.

http://chemozhi.wordpress.com/2010/06/20/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF/

[16] Parvati Menon, Unless knowledge of epigraphy develops, no ancient or medieval history of this country can be studied‘, an interview with Noboru Karashima in The Hindu dated December 2, 2010

[17] The first was the Bhakti movement of the period from the 7th to 10th centuries, which is attested to by the recitation of Devaram hymns and Tirumurai in mathas of the 11th century and after. The second is the North Indian Brahmanical tradition brought by the influx of Saiva ascetics to the Tamil country during the 11th and 12th centuries, which is shown by the appointment of those Brahmana ascetics asrajagurus by Rajaraja I and Rajendra I. These two traditions merged when the people of the lower social sections, such as cultivators, merchants, artisans, [members of the] hill tribes and soldiers, who had increased their power during the 12th century, also joined in matha activities in the 13th century, as our study of the inscriptions indicate. Their activities are spread all over the Tamil country. Sivananabodam, written in Tamil by Meykandar, a Vellalla ascetic, in the 13th century, is the hallmark of this fusion of the two traditions and the establishment of South Indian Saivasiddhantism in the 13th century.

http://www.thehindu.com/opinion/interview/unless-knowledge-of-epigraphy-develops-no-ancient-or-medieval-history-of-this-country-can-be-studied/article925942.ece

[18] For many, like noted Japanese Tamilologist Noboru Karashima, the Dravidian movement has ‘outlived its utility’. Read more at:http://indiatoday.intoday.in/story/dmk-chief-m-karunanidhi-has-lost-the-plot-in-tamil-nadu/1/176260.html

[19] From the 1970s, however, the situation changed in accordance with the changes in caste society and the gradual economic growth of the South. The Dravidian Movement could be said to have fulfilled its historical role to a certain extent. From the 1980s, we see a shift in the aims of the movement. The political mobilisations by the DMK and AIADMK, and their appeals to the regional sentiments of the Tamil people, were primarily aimed at the expansion of their political vote base.

http://www.thehindu.com/opinion/op-ed/article528744.ece

அஸ்கோ பர்போலாவும், ஆரியர்களும், திராவிடர்களும்!

ஜூன் 29, 2010

அஸ்கோ பர்போலாவும், ஆரியர்களும், திராவிடர்களும்!

அஸ்கோ பர்போலாவவும், ஐராவதம் மஹாதேவனைப் போல உருவாகி விட்டார். சென்ற இடத்தில் எல்லாம் விதவிதமாக பேசுவது, மேடைக்கு ஏற்ப மாற்றி பேசுவது, ஊடகக்காரர்களிடம் வேறு விதமாகப் பேசுவது என்பது வேடிக்கையாக இருக்கிறது.

http://expressbuzz.com/states/tamil-nadu/dravidians-headed-south-before-aryans-arrival/185399.html

அஸ்கோ-பர்போல-2010

அஸ்கோ-பர்போல-2010

திராவிடர்கள் சிந்துசமவெளியிலிருந்து, வெளியேரி குஜராத் முதலிய இடங்களில் வாழ்ந்தார்கள்.

ஆரிய படையெடுப்பு இல்லை, திராவிடர்களே, ஆரியர்கள் வருவதற்கு முன்னமே தெற்காக நகர்ந்து சென்று விட்டனர்: அஸ்கோ பர்போல திடீரென்று அதிரடியாக, இரண்டாம் மில்லினியம் காலத்தில் ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதற்கு, ஒரு புதிய திரிபு வாதத்தை முன்வைத்துள்ளார். இதன்படி, திராவிடர்கள் விரட்டியடிக்கப்படவில்லை, ஆனால், ஆரியர்கள் அங்கு நகரத்திற்கு வருவதற்கு முன்னமே, படிப்படியாக அவர்களே மேய்ச்சலுக்கு நல்ல பசுமையான நிலங்களைத் தேடிக்கொண்டு, தெற்கு நோக்கி நகர்ந்து சென்று விட்டனர். சென்னைக் கிருத்துக் கல்லூரியின் சார்பாக, கிஃப்ட் சிரோமணி என்பாரது நினைவுச் சொற்பொழிவாக, தான் “சிந்துவரிவடிவம், திராவிட ஹரப்பன்கள், காட்டுக்கழுதை” என்ற தலைப்பில் பேசியதைப் பற்றி, இந்தியன் எக்ஸ்பிரஸுக்குச் சொன்னார். அவரது ஆராய்ச்சியின் படி, திராவிடர்கள்தாம், குஜராத்தில் உள்ள சிந்துசமவெளி நாகரிகத்தில் இருந்தனர். அவர்களில் சிலர் மேய்ச்சலுக்கு நல்ல பசுமையான மற்றும் செழுமையான நிலங்களைத் தேடிக்கொண்டு தெற்காக நகர்ந்தனர். இது ஆரியர்கள் கூட்டம் கூட்டமாக பெருமளவில் வருவதற்கு முன்பே ஏற்பட்டது, என்று ஆதாரங்கள் உள்ளன.

வட-இந்தியாவில் ஆங்கிலேயர்களைப் போல ஆரியர்கள் திராவிடர்களை இந்தோ-ஆரிய மொழியைக் கற்றுக்க்கொள்ளச் செய்தனர்: ஆங்கிலேயர்கள் எப்படி பிராமணர்களை ஆங்கிலம் கற்றுக்கொள்ளவைத்து, தங்கள் கீழ் வேலை செய்யவைத்து, நாட்டை ஆண்டனரோ, அதே போல, சிந்துநதி அருகில் தங்கி விட்ட, திராவிட சமுதாயமும், குறிப்பாக சமுதாயத்தலைவர்கள், இந்தோ-ஆரிய மொழியைக் கற்றுக்கொண்டது. திராவிடர்களுடைய மேற்தட்டுக் குடிகள் அவ்வாறு ஆரிய மொழியைக் கற்றுக் கொண்டு, வட-திராவிடர்களாக மாறினர். இருப்பினும் அவர்களது மொழியில், முந்தைய-திராவிட கூறுகளைத் தக்கவைத்துக் கொண்டனர். தென்னிந்தியாவில் திராவிட மொழிகள் இன்னும் பேசப்பட்டு வருகின்றன, ஏனெனில், ஆரியர்கள் தென்னிந்தியாவை முழுவதுமாக வெற்றிக் கொள்ளமுடியவில்லை. வட-இந்தியாவை அவ்வாறு வெற்றிக் கொள்வதற்கே பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கும். ஆனால், இப்பொழுதைக்கு, சரித்திர ஆசிரியர்களிடம் வழக்கத்தில் உள்ள சித்தாந்தமானது, ஆரியர்கள் திராவிடர்களை தென்னிந்தியாவிற்கு விரட்டியடித்தனர் என்பதுதான். இது படித்தவர்களிடையே, இப்பொழுது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

ஆஸ்கோ பர்போல, கருணாநிதி, ஐராவதம் மஹாதேவன்: சிந்துசமவெளி குறியீடுகள்!

ஜூன் 24, 2010

ஆஸ்கோ பர்போல, கருணாநிதி, ஐராவதம் மஹாதேவன்: சிந்துசமவெளி குறியீடுகள்!

ஆஸ்கோ பார்போல ஒன்று குழம்பி போயிருக்கிறார் அல்லது தமது திராவிட நண்பர்களால் குழப்பப்பட்டிருக்கிறார்.

“ஆரிய படையெடுப்பு இல்லை” ஏனெனில், திராவிட நாகரிகம் சிந்து சமவெளியில் மறைந்த (1950 BCE ) பிறகுதான் அவர்கள் அங்கு வந்தார்கள் என்கிறார்.

பிறகு, திராவிட மொழிபேசுகிறவர்கள் கழுதையைப் பார்த்திருப்பார்கள், அதனால் தான், கழுதையை ஞாபகமாக தம்முடைய முந்தையப்-திராவிடக் கூறுகளில், ஜாக்கிரதையாக பாதுகாத்து வைத்துள்ளார்கள் என்கிறார்!

பிறகு சொல்கிறார், “சமஸ்கிருதம் தன்னுடைய 3000 வருட காலத்தைய பாரம்பரியத்துடன் பல அரிய நூல்களை உருவாக்கியுள்ளது. அது பின் சென்று முந்தைய-இந்தோ-ஆரிய(மொழிக்கு)னுக்குச் சென்று 1500 மற்றும் 1300 BCE காலத்தில் சிரியாவிலுள்ள மிட்டானிய ராஜ்யத்தில் சில பெயர்கள் மற்றும் வார்த்தைகளில் பதிவாகியுள்ளது. இந்தோ-ஆரிய மொழிகளின் முந்தைய கூறுகள், 2000 BCE வாக்கில் மத்திய ருஷ்யாவில் பேசப்பட்ட ஃபின்லாந்து-உக்ரைன் மொழிகளில் காணப்படும் “கடனனாகப் பெறப்பற்ற வார்த்தைகளாகக் காணப்படுகின்றன.

“இருப்பினும், இவற்றின் ஆரம்ப மூலங்கள் எல்லாமே தமிழினுடைய ஆரம்ப மூலங்களைவிடத் தொன்மையானது அல்ல. என்னுடைய கருத்தின்படி, தமிழ் முந்தைய-திராவிட(மொழிக்குடும்பத்திற்கு)ச் செல்கின்றது. அவை 2600-1700 BCE வாக்கில் இந்து-வரிவடிவங்களில் சிறிய அளவில் ஆயிரக்கணக்கில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகளில் காணலாம் என்பதாகும். இதில் பலதரப்பட்டக் கருத்துகள் உள்ளன, இருப்பினும் 1000 BCE வாக்கில் சிந்து சமவெளியில் சேகரிக்கப்பட்ட ரிக்வேதத்தில் கூட அரை டஜன் (சுமார் ஆறு) திராவிட வார்த்தைகள் உள்ளன என்பதனை மற்ற விமர்சனம் செய்யும் ஆராய்ச்சியாளர்கள்கூட ஒப்புக்கொள்கிறார்கள்.

“வட-இந்திய மக்களில் பெரும்பாலானவர்கள் ஹரப்பன் நாகரிகத்திலிருந்து வந்தவர்கள் தாம், அவர்களும் அதே நாகரிகத்தின் கலாசாரத்தை பாதுகாத்துவைத்துள்ளார்கள்”.

எல்லோருமே ஒரே நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் எனும்போது, அவர்கள் பேசிய மொழிகள் எப்படி இரண்டாகும்?

காலக்கணக்கீட்டில்கூட, இவர் பல குழப்பங்களைச் செய்கிறார்.

ஆரிய-மொழிகள் பேசும் மக்கள், திராவிட-மொழிபேசும் மக்கள் எல்லோருமே, சிந்துசமவெளி நாகரிகத்தின் இடம் வழியாகத்தான் உள்ளே நுழைந்தார்கள் என்றால், அங்கு இருந்த மக்கள் யார்?

அதாவது, இவர்கள் – ஆரிய-மொழிகள் பேசும் மக்கள், திராவிட-மொழிபேசும் மக்கள் – வருவதற்கு முன்னர் இருந்த மக்கள் யார்?

மேலாக, அந்த காட்டுக்கழுதையே இந்தியாவில் சிந்துசமவெளி வழியாக இந்தியாவில் நுழைந்தது என்கிறார்!

பிறகு எப்பொழுது அந்த காட்டுக்கழுதை, மனிதனால் வளர்க்கப்பட்டக் கழுதையாகியது?

குதிரை இப்ப்ழுது வந்தது? அது எப்பொழுது மனிதனால் வளர்க்கப்பட்டக் குதிரையாகியது?

பர்போலவும், சிந்து எழுத்தும் (Parpola and the Indus script)

ஜூன் 20, 2010

பர்போலவும், சிந்து எழுத்தும் (Parpola and the Indus script)

பர்போலவும், சிந்து எழுத்தும்: ஐராவதம் மஹாதேவன், “தி ஹிந்து” அல்லது “மவுண்ட்ரோட் மஹாவிஷ்ணு” என்று செல்லமாக கருணாநிதி குறிப்பிடும் நாளிதழில்[1], “பர்போலவும், சிந்து எழுத்தும்” என்ற தலைப்பில் எழுதியுள்ள ஒரு கட்டுரை பதிப்பிக்கப்பட்டுள்ளது[2]. “அவர் தமிழ் நாட்டு முதன் மந்திரியால் ஏற்படுத்தப்பட்டுள்ள “செம்மொழி விருது” பெறுவதற்கு தகுதியானவர்” (He richly deserves the honour of being the first recepirent of the Claassical Tamil Award instituted by the Tamil Nadu Chief Minister) என்று தலைப்பின் கீழ் முத்தாய்ப்பாய் கூறியிருக்கிறார். ஐராவதம் மஹாதேவன்[3], அஸ்கோ பர்போல[4] முதலியோர் சிந்துசமவெளிக் குறியீடுகள், முத்திரைகள், சின்னங்கள் அடங்கிய தொகுதிகளை வெளியிட்டுள்ளனர். ஆராய்ச்சியாளர்களுக்கு இவைதாம் அடிப்படையாக உள்ளன. சிந்துசமவெளி நாகரிக இடத்திற்கு செல்லமுடியாதவர்கள் கூட, இந்த தொகுதிகளை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்யலாம். ஆகவே, அவர்களுடைய பங்கு மகத்தானது, போற்றப்படக்கூடியது. இனி இந்த கட்டுரையில் உள்ள விஷயங்களைப் பற்றி அலசவேண்டியுள்ளது.

நேதி, நேதி என்ற மஹாதேவனும், ராமன்-கிருஷ்ணன் எல்லாம் திராவிடர்கள் என்ற பர்போலாவும்: வேத பண்டிதராகயிருந்து[5] திராவிட ஆராய்ச்சியாளராக மாறிய (Vedic scholar turned Dravidian researcher) ஆஸ்கோ பர்போல என்று இப்பொழுது குறிப்பிடப்படுவதே வேடிக்கையாக இருக்கிறது. அவர் தான் பல்கலைக்கழகத்தில் இருக்கும்போது, ஒரு சித்தாந்தம், ஓய்வு பெற்றப் பிறகு மற்றொரு சித்தாந்தம் என்று வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்வது, துரதிருஷ்டமாக, அவருடைய நிலையற்றத்தன்மை, சமயத்திகேற்றபடி கருத்தை மாற்றிக் கொள்ளும் போக்கு, ஆட்சியாளர்களைத் திருப்தி படுத்தும் சந்தர்ப்பவாதம் முதலியவற்றைக் காட்டுகிறது.

ஐராவதம் மஹாதேவனும் அதுமாதிரிதான், ஓய்வு பெற்றபிறகு, பலநேரங்களில், பலவிதமாக தமது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்[6]. இந்திய வரலாற்றுப் பேரவையில் பேசும்போது, “சிந்துசமவெளி குறியீடுகளைப் பற்றி ஒன்றும் தீர்மானமாக சொல்லமுடியாது – நேதி, நேதி – அதாவது இதுவும் இல்லை, அதுவும் இல்லை”, என்று தனது சிறப்பு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பதில் கூறியுள்ளார்[7].

வேத பண்டிதர்களும், சிந்துசமவெளி நாகரிகமும்: ஐராவதம் மஹாதேவன் அவர்கள் மைக்கேல் விட்ஸெல் என்ற ஹார்ட்வார்ட் பல்கலைக்கழக சமஸ்கிருத பேராசிரியரை அழைத்து, சென்னை சம்ஸ்கிருத கல்லூரி, சென்னை பல்கலைக்கழக சம்ஸ்கிருதப் பிரிவு, ரோஜா முத்தையா கூடம் முதலிய இடங்களில் மொழிகளின் தோற்றம், ரிக்வேத சமஸ்கிருதம் முதலிய தலைப்புகளில் பேசவைத்தார். அதற்கு இந்திய சமஸ்கிருத பண்டிதர்களிடையே பலத்த எதிர்ப்பு இருந்தது. ஆனால், ஐராவதம் மஹாதேவன் அவர்கள் எல்லோரும், மைக்கேல் விட்ஸெலின் சமஸ்கிருத அறிவை பரிசோதிக்க விடாதபடி தடுத்துவிட்டார். இன்னிலையில் வேத பண்டிதராகயிருந்து திராவிட ஆராய்ச்சியாளராக மாறிய (Vedic scholar turned Dravidian researcher) ஆஸ்கோ பர்போலவும் அவராலேயே வரவழைக்கப்பட்டுள்ளார். இனி அவர் சமஸ்கிருதத்தை விட்டுவிட்டு தமிழில் பேசப்போகிறாரா என்பதனைப் பார்க்கவேண்டும். ஒருவேளை மைக்கேல் விட்ஸெல் கூறியதுபோல, பழைய ரிக்வேத சமஸ்கிருதத்தைத் தன்னால் தான் படிக்கமுடியும், இந்திய பண்டிதர்கள் கூட படிக்கமுடியாது என்று சொல்லிக்கொண்டதுபோல, பர்போலவும், சிந்துசமவெளியின் பழமையான திராவிடத்தமிழில் பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

பர்போலவின் முந்தைய சென்னை விஜயங்கள்: அஸ்கோ பர்போல சென்னைவாசிகளுக்கு புதியவர் அல்லர். அதே சமஸ்கிருத கல்லூரியில் பலதடவை சிந்துசமவெளி நாகரிகத்தைப் பற்றி பேசியுள்ளார். பர்போலாவும், தனது சென்னை சொற்பொழிவில், ராமன் – கிருஷ்ணன் முதலியோர் கருமையானவர்கள், அவர்கள் திராவிடர்கள்தாம் என்று கூறியிருந்தார் (பிப்ரவரி 1989). பிறகு, ஏன் அந்த திராவிடர்கள் மீது, இப்பொழுதுள்ள திராவிடர்களுக்கு இத்தனை வெறுப்பு, காழ்ப்பு முதலியன உள்ளன? பெரியார் முதல் கருணாநிதி வரை அவர்களை ஏன் தூஷிக்கவேண்டும்? அவ்வாறு தூஷித்தபோது, இந்த பண்டிதர்கள் ஏன் மௌனமாக இருந்தனர்? ஆக, இது அரசியல் இல்லாமல் என்னவென்று சொல்வது?

சிந்துசமவெளி குறியீடுகள் இன்னும் படிக்கபடவில்லை, ஆனால் அந்நாகரிகம் மற்றும் வரிவடிவம் இவற்றின் திராடத்தன்மையைப் பெற்றுள்ளது: சிந்துசமவெளி குறியீடுகள் இன்னும் படிக்கபடாமல் உள்ளன என்ற உண்மையினை பேராசியர் பர்போல தாரளமாகவே ஒப்புக்கொள்கிறார். இருப்பினும் அவரது சிந்துசமவெளி நாகரிகம் மற்றும் வரிவடிவம் இவற்றின் திராடத்தன்மையைப் பற்றிய கருதுகோள்  மற்றும் சிந்துசமவெளி நாகரிகம் வீழ்ந்த பிறகுதான், ஆரிய இடம்பெயர்ப்பு ஏற்பட்டது என்ற உண்மையை உலகில் உள்ள பெரும்பாலான ஆராய்சியாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் (Even though the Indus script remains undeciphered, as professor Parpola readily admits, his theoretical groundwork on the Dravidian character of the Indus civilization and the script, and the fact of Aryan immigration into India after the decline of the Indus civilization, have been accepted by most scholars in the world). உண்மை, சரித்திர உண்மை என்பதெல்லாம் உலகில் உள்ள பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளது, ஏற்றுக்கொள்ளாதது என்ற நிலையில் தீர்மானிக்கப்படுவதில்லை. அத்தகைய எண்ணத்தை ஐராவதம் மஹாதேவன் இங்கே முன்வைப்பதால், அதில் பாரபட்சமற்ற, நடுநிலையான, எந்த அரசியல் நோக்கில்லாமல், யாரையும் திருப்திசெய்யவேண்டும் என்ற ரீதியில், அக்கருத்தை வைக்கவில்லை என்று சொல்லமுடியாது. யாருமே தீர்மானமாக எல்லா குறியீடுகளை படிக்கவில்லை எனும்போது, எப்படி தீர்மானமான முடிவிற்கு வரலாம்? இத்தகைய கண்டுபிடிப்பு உரிமைகளை மற்ற ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளார்களே? தங்களது கண்டுபிடிப்பு பிரகடனங்களை அறிவித்துள்ளார்களே?

படிக்கப்படாத எழுத்துகளின் மொழியை எப்படி தீர்மானமாக அடையாளங்காணமுடியும்? சிந்துசமவெளி குறியீடுகள் இன்னும் படிக்கபடவில்லை, ஆனால் சிந்துசமவெளி நாகரிகம் மற்றும் வரிவடிவம் இவற்றின் திராடத்தன்மையைப் பெற்றுள்ளது என்றால், அது என்ன ஆராய்ச்சி? இத்தனை ஆண்டுகள் காலமாகியும், ஆராய்ச்சியாளர்கள் தோல்வியைத்தன் கண்டுள்ளனர். உண்மையை அவர்களால் கண்டறிய முடியவில்லை. அதாவது ஒன்று அது வெறும் வரிவடிவங்கள், சித்திரக் குறியீடுகள், எந்த மொழியின் எழுத்தையோ, எழுத்துமுறையினையோக் கொண்டிருக்கவில்லை, அல்லது அதன் உண்மையினை அறிந்தாலும், இன்றளவில் ஆரிய-திராவிட மொழிவாதங்களுக்கு உட்படுத்தி பிழைப்பு நடத்துகிறார்கள். ஆக இது அரசியல் இல்லாமல், வெறேன்னவென்பது?

தமிழ்நாட்டு முதலமைச்சரின் பரிசு சிந்துப்பிரச்சினைக்கான ஒரு திராவிடத்தீர்விற்க்காக எனக்களிக்கப்படுகிறது எனும்போது, பலர் நிச்சயமாக அது அரசியல் நோக்கமுடையது என்றுக் கூறத்தான் செய்வார்கள். ஆனால், நான் உண்மைக்காக போராட தயாராக உள்ளேன். என்னுடைய கருத்தில் தமிழர்கள் தம்முடைய இந்துசமவெளி நாகரிகத்தின் மொழி பாரம்பரியத்தை பாதுகாத்து வைப்பதற்கு ஓரளவிற்கு பெருமைப்படலாம். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் தங்களது மொழி வடக்கில் இடம் பெயர்ந்தது, வட-இந்திய மக்களும் ஹரப்பன் நாகரிகத்திலிருந்துதான் வழிவந்தவர்களாக இருக்கிறர்கள், அவர்களும் தங்களுடைய அதே நாகரிகத்தைப் போற்றிக் காத்துவந்துள்ளனர் என்பவற்றையெல்லாம் மறந்துவிடக்க்கூடாது””, என்றெல்லாம் சொல்லும்போது, நிச்சயமாக உண்மையை மறுக்கிறார் என்பதுதான் தரிகிறது (“When the Chief Minister of Tamilnadu’s award is given to me for a Dravidian solution of the Indus enigma, this award will be inevitably interpreted by many people as politically motivated. Nevertheless, I am ready to fight for the truth, and in my opnion, the Tamils are entitled to some pride for having preserved so well the linguistic heritage of the Indus Cicilization. At the same time, it must not be forgotten that though their language has shifted in the course of millinea, people of North India too are to a large extent descended from the Harappan people, and have also preserved cultural heritage of the same civilization”).

சிந்துப்பிரச்சினைக்கான ஒரு திராவிடத்தீர்வு: திராவிடத்தீர்வென்றால் பரிசு, இல்லையென்றால் இல்லை என்பது மேனாட்டு பைபிள் ஆராய்ச்சியைப் போன்றுதான் உள்ளது. ஒருகுறிப்பிட்ட முடிவை நிலைநிறுத்தும் வகையில் அகழ்வாய்வு செய்து ஆதாரங்களை கண்டுபிடித்து எடுக்க வேண்டும், அப்படி அகழ்வாய்வு செய்தானல் பணம், இல்லையென்றால் இல்லை என்றுதான் பைபிளுக்கான அகழ்வாய்வுகள், திட்டங்கள் முதலியன செயல்படும். “நோவாவின் ஆர்க் திட்டம்” என்று ஆரம்பித்தால், எப்படியாவது “நோவாவிவின் படகை”க் கண்டுபிடித்தே விடுவார்கள். அதன் வடிவம், உருவம், அளவு, எதனால் செய்யப்பட்டது முதலிய விவரங்களைப் பற்றிக் கவலையில்லை. அதுமாதிரி இங்கும் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும், அது திராவிடத் தீர்வாக இருக்க வேண்டும் எனும்போது, ஆராய்ச்சி குறுகிவிடுகிறதே? பிறகென்ன, “நான் உண்மைக்காக போராட தயாராக உள்ளேன்” என்ற வாய்சவடால் எல்லாம்?

ஆரிய படையெடுப்பு இல்லை, இடம் பெயர்தல்தான் இருந்தது, அதிலும் அவர்கள் சிந்துசமவெளிக்கு வந்தபோது அங்கு திராவிடர்களே இல்லை: இதுதான் உலகத்தில் உள்ள பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ள உண்மையாகும் என்று மஹாதேவன் சொல்கிறார். அதாவது ஆரியர்கள் சிந்துசமவெளிக்கு வந்தபோது, திராவிட நாகரிகம் தேய்ந்து மறைந்துவிட்டதாம். ஆகையால் அவர்கள் திராவிடர்கள் கூட சண்டையிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆக திராவிடர்களே, ஆரியர்கள் வருவதற்கு முன்னமே, அங்கிருந்து இடம் பெயர்ந்து விட்டனர். வட-இந்தியாவில் இருந்து, மத்திய இந்தியாவில் இருந்து, இறுதியாக தென்கோடி தமிழகத்திற்கு வந்து குடியேறி நிரந்தரமாகத் தங்கி விட்டனர்.

ð  இதை கருணாநிதி ஏற்றுக் கொள்வாரா?

ð  அல்லது கருணாநிதிக்குத் தெரியுமா?

ð  இல்லை அண்ணவின் “ஆரியமாயை” போல, பர்போலவின் “திராவிடமாயையை” உருவாக்கப் போகிறார்களா?

ð  மற்ற திராவிட சித்தாந்திகள் என்ன சொல்லப் போகிறார்கள்?

பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மேதகு பண்டிதர்கள் இதற்கு ஒளிவு மறைவில்லாமல் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

கருணாநிதியும், மற்ற திராவிட சித்தாந்திகளும் இத்தகைய நுணுக்கங்களை அறிவார்களா? முதலில், இந்த திராவிட இனவாத, மொழிவெறியர்களுக்கு இந்து நுணுக்கம் தெரிந்தால், இவரைத் தூக்கியெரிந்து விடுவர். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில், ஆரியர்கள் படையெடுத்து வந்து திராவிட-சிந்துசமவெளி நாகரிகத்தை அழித்தொழித்தனர். தப்பித்தவர்களையும் விரட்டியடித்ததால், அவர்கள் தென்னிந்தியாவின் கோடியில் தமிழகத்தில் வந்தடைந்து, குடியேறித் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். ஆரியர்கள் தங்களது சலாச்சாரம், பண்பாடு, முதலியவற்றை திராவிடர்கள்மீது வலியத் திணித்து திராவிடக்கூறுகளை மறைத்துவிட்டனர், அழித்து விட்டனர் என்றெல்லாம் உறுதியாக நம்பி வருகின்றனர். இந்நிலையில், திராவிட-சிந்துசமவெளி நாகரிகம் தேய்ந்த்பிறகு, வீழ்ந்த பிறகுதான், ஆரிய இடம்பெயர்ப்பு ஏற்பட்டது, அதாவது ஆரியர்கள் படையெடுத்து வரவில்லை, அமைதியாக ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு இடம் பெயர்ந்துதான் வந்துள்ளனர், அவ்வாறு அவர்கள் சிந்துசமவெளிக்கு வந்தபோது திராவிடர்கள் ஏற்கெனவே மறைந்து விட்டனர் அல்லது இடம் பெயர்ந்து விட்டனர் என்ற இந்த “திராவிட ஆராய்ச்சியாளர்”களின் உண்மையை இந்த “அரசியல் திராவிடர்கள்” எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

ஒரே மூலத்திலிருந்துதான் ஆரிய-திராவிட நாகரிகங்கள் தோன்றியிருக்கும்போது, சண்டைச்சச்சரவுகள் ஏன்? ஹரப்பன் நாகரிகத்தின் காலத்திற்குப் பின்னர், வட மற்றும் மத்திய இந்தியாவைச் சேர்ந்த திராவிடமொழி பேச்சாளர்கள் எல்லாம் நாளடைவில் ஆதிக்கத்தில் ஓங்கியிருந்த இந்தோ-ஆரியமொழிகளுக்கு மாறிவிட்டனர். ஆரிய மொழிகள் பேசும் மக்கள், திராவிட மற்றும் முண்டா மொழிபேச்சாளர்களுடன், ஒரு ஆயிர வருடத்திற்கு முன்பாகமவே, அடையாளமே தெரியாத அளவிற்கு கலந்து மறைந்து ஒன்றாக சேர்ந்துவிட்டார்கள். இதனால் உருவான கலவையான இந்திய சமூகத்தில் எல்லாவித மூலங்களிலிலிருந்து பெறப்பட்ட கூறுகளும் இருந்தன. ஆகையால்தான், இருக்கின்ற இந்தியகலை, மதச் சின்னங்கள் மற்றும் பிற்பாடு உருவாக்கப்பட்ட கலைப்பொருட்கள் இவற்றின் மூலங்களை எல்லாம் ரிக்வேத காலத்திலிருந்து இருக்கும் சமஸ்கிருத இலக்கியத்திற்கும் மற்றும் பழையத் தமிழ் பாரம்பரியங்கள் படிவாகியுள்ள சங்க இலக்கியத்திற்கும் தொடர்பு படுத்தலாம். கலாச்சார ரீதியில் இந்தோ-ஆரிய மொழிகளையும் மற்றும் மொழியியல் ரீதியில் திராவிட மொழிகளைச் சார்ந்துதான் ஹரப்பாவின் பாரம்பரியம் உள்ளது என்பது பர்போலவிற்கு நன்றகவேத் தெரியும் (Professor Parpola is aware of the Harappan heritage of both Indo-Aryan and Dravidian languages, the former culturally and the latter linguistically). பிறகு என்ன ஆரிய-திராவிட இனவாதம், பேச்சுகள், ஆராய்ச்சிகள், மாநாடுகள், கோடிக்கணக்கான செலவுகள் எல்லாம்?

தமிழிலுள்ளத் தொன்மையான கல்வெட்டுகள் மௌரிய காலத்திலிருந்து தேதியிடப்படுகின்றன: மௌரியர்கள் காலம் சுமார் 300 BCE க்கு நிர்ணயிக்குப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவிலேயே, முதன்முதலில் எழுதக் கற்றுக் கொண்ட அசோகன், தன்னுடைய கல்வெட்டுகளை இந்தியா முழுவதும், ஏன்  இந்தியாவிற்கு வெளியேயும் பலமொழிகளில் பொறித்துதள்ளியுள்ளான். பலமொழிகளில் கல்வெட்டுகள் இருந்தாலும், எழுத்து ஒன்றே ஒன்றுதான் – அதுதான் பிரம்மி. அதே பிரம்மியில் தான் தமிழும் எழுதப்படுகின்றன அல்லது இக்காலத்தைய வல்லுனர்களால் கல்வெட்டுகளில் எழுதப்பட்டுள்ளதை தமிழ்மொழியில் அவ்வாறுப் படிக்கப்படுகின்றன. ஆனால், அந்த தமிழ் கல்வெட்டுகள் எல்லாம் ஒருவரி-இருவரி என்று சிறியதாக அங்கும் இங்குமாக உள்ளன. அசோகனைப்போல பல வரிகளில் இல்லை. பின்பு வந்த காரவேலனோ, தான் தனது எல்லைகளை மிரட்டி வந்த ஒரு “திரமிடதேச சங்கடண” அதாவது ஒரு திராவிடதேசத்தவருடைய கூட்டணியைக் குறிப்பிட்டு, அதனை வெற்றிக் கொண்டதாகக் குறிப்பிடுகிறான். அக்கல்வெட்டும் 16 வரிகளுக்கு மேலாக உள்ளது, அவனைப் பற்றி பல செய்திகளைக் கொடுக்கிறது. அது சமஸ்கிருதத்திலும், பாலியிலும் படிக்கப் படுகிறது. ஆனால், ஏன் தமிழில் படிக்கப்படுவதில்லை என்று யாரும் இதுவரை சொன்னதாகத் தெரியவில்லை.

திராவிடர்கள் ஏன் சிந்துசமவெளி குறீயீட்டை விட்டுவிட்டு பிரம்மியில் எழுத ஆரம்பித்தனர்? தமிழிலுள்ளத் தொன்மையான கல்வெட்டுகள் மௌரிய காலத்திலிருந்து தேதியிடப்படுகின்றன (The earliest Tamil inscriptions date from the Mauryan Era). ஆனால் அவை எல்லாம் ஒருவரி-இருவரி என்று சிறியதாக அங்கும் இங்குமாக உள்ளன. ஏன் அசோகனைப்போல, காரவேலனைப் போல பலவரிகளில் திராவிடர்கள் எழுதவில்லை? சிந்துசமவெளி நாகரிகத்திலேயே எழுதக் கற்றுக் கொண்டவர்கள் ஏன் அசோகனுக்குப் பிறகு அவனைப் பார்த்து காப்பியடித்து அதே பிரம்மியில் எழுதவேண்டும்? சிந்துசமவெளி எழுத்துகளிலேயே எழுதியிருக்கலாமே? இல்லை சிலர் எடுத்துக் காட்டியுள்ளபடி பழங்கால பானைகளில் உள்ள கிறுக்கல்கூட சிந்துசமவெளி நாகரிகத்தைப் போலயுள்ளது என்கின்றவர்கள், ஏன் அந்த எழுத்துமுறையைக் கைவிட்டு அசோகனது எழுத்துமுறையப் பின்பற்றினர் என்று விளக்கவில்லை.

வேதபிரகாஷ்

20-06-2010


[1] கருணாநிதியின் பிராமண துவேஷம் அலா-தியானது, மாற்றமுடியாதது, மறைக்க-மறக்க-மறுக்க முடியாதது. “தி ஹிந்து”வின் ஸ்தாபகர்களில் ஒருவர் மற்றும் இப்பொழுதைய முதலாளிகள் “ஐயங்கார் பிராமணர்கள்” என்ற பொருளில் நக்கலாகக் குறிப்பிடுவது வழக்கம்.

[2] Iravatham Mahadevan, Parpola and the Indus script, the Hindu dated 17-06-2010, p.9.

[3] ………………………, Concordance of Indus Valeey Script, ASI, New Delhi, Two volumes.

[4] Asko Parpola, Corpus of Indus Seals and Inscriptions, Two volumes,

[5] வேதம் படித்தவர்கள் வேத பண்டிதர்களா, வேதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் எல்லாம் “வேத பண்டிதர்களா”, பிறகு சமஸ்கிருத கல்லூரிகளில் உள்ள பண்டிதர்கள் எல்லாம் யார், அவர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள், அக்கருத்தை ஏன் ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்துவதில்லை, பதிவு செய்வதில்லை?

[6] சென்ற வருடம் 2009ல் தமிழக வரலாற்றுப் பேரவையில், திருச்சி தேசிய கல்லூரியில் நடந்த மாநாட்டில் என்ன பேசினார், ஆனால், பத்திரிக்கைகளில் எவ்வாறு அவை வெளியிடப்பட்டன, என்பவற்றையெல்லாம், நான் தனியாக ஒரு கட்டுரையில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

[7] தார்வார் மற்றும் போபாலில் நடந்த இந்திய வரலாற்றுப் பேரவை மாநாடுகளில் இவர் ஆற்றிய சிறப்பு சொற்பொழிவுகள்.

சிந்து வரிவடிவம், ஹரப்பன் திராவிடி மற்றும் காட்டுக் கழுதை!

ஜூன் 16, 2010

சிந்து வரிவடிவம், ஹரப்பன் திராவிடி மற்றும் காட்டுக் கழுதை

அஸ்கோ பர்போலவின் ரோஜா முத்தையா நூலகத்தில் நடந்த சொற்பொழிவைப் பற்றிய விவரங்கள் தினமலரில் இன்றுதான் – 02-07-2010 – வெளி வந்துள்ளது. இதை என்னுடைய மற்ற இடுகைகளுடன் ஒப்பிட்டு விவரங்களை அறியலாம், அலசலாம் [நன்றி: தினமலர்].

Asko-Roja-muthaiah-meeting-Dinamalar-02-07-2010

Asko-Roja-muthaiah-meeting-Dinamalar-02-07-2010

பேராசிரியர் ஆஸ்கோ பர்போலா, வரும் 28-06-2010 அன்று (Prof. Asko Parpola on “The Indus Script, Harappan Dravidian and  the Wild Ass”)சிந்து வரிவடிவம், ஹரப்பன் திராவிடி மற்றும் காட்டுக் கழுதை” என்ற தலைப்பில் ரோஜா முத்தையா அரங்கத்தில் மாலை 4.30க்கு  பேசவுள்ளார்!

திராவிட இனவாதக் கூட்டங்களைத் திருப்தி படுத்த, அந்த சிந்து குறியீடுகள், வரிவடிவங்களை………..திராவிட மொழிக் குழுமத்தைச் சேர்ந்தது அதாவது அது, “திராவிடி” என்று சொல்லப்போகிறார் என்று தெரிகிறது.

“காட்டுக் கழுதை” எனும்போது, அந்த குதிரைச் சின்னத்தைப் பற்றி பேசுவார் எனத் தெரிகிறது. இதைப் பற்றி, ஏற்கெனெவே சிந்துசமவெளி குறியீட்டு ஆராய்ச்சியாளர்களிடம் வேறுபாடுகள் உள்ளன.

  • குதிரை இருந்ததா இல்லையா,
  • இருந்தால் அது மனிதனால் உபயோகப்படுத்தப் பட்டதா அல்லது காட்டில் திரிந்து கொண்டிருந்ததா,
  • குதிரை இல்லை கழுதைதான்
  • கழுதையில்லை குதிரைதான்
  • எத்தனை எலும்புகள் உள்ள குதிரை
  • இந்தியாவில் எப்பொழுது குதிரை அறிமுகப்படுத்தப்பட்டது
  • தென்னிந்தியாவில் எப்பொழுது வந்தது

இப்படியெல்லாம் வாதங்கள் உள்ளன. இனியும் தொடரும். இப்படி படித்தவர்களிடையே “கழுதையா, குதிரையா” அல்லது “குதிரையா,கழுதையா “, என்று விவாதித்துக் கொண்டிருக்கும்போது, நமது அறிவுஜீவிகள் என்ன சொல்வார்கள்?

  1. சங்க இலக்கியங்களில், குதிரையைப் பற்றிய விவரங்கள் அதிகமாகவே உள்ளன.
  2. உலகத்திலேயே, இந்தியாவில் தான் குதிரைக்கு இருக்கை, லகான், கால்பிடி, முதலியவற்றை உபயோகித்து, ஓட்டினர்.
  3. ஆதிச்சநல்லூர், குதிரை உபகரணங்களை இங்கு நோக்கத்தக்கது.
  4. வரிவடிவம், எழுத்து, எழுத்துமுறை, மொழி, இலக்கணம் முதலியவற்றைக் குழப்பி இனவாத ரீதியில் பொருள்கொண்டு, இன்றும் விவாதிப்பது சரியன்று.
  5. ஆகவே, “திராவிடி” என்பது மொழியென்று கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.

வழக்கம் போல ஐராவதம் மஹாதேவன் இருப்பதால், கேள்விகள் கேட்பதைத் தடுத்துவிடுவார்!

பார்ப்போம், என்ன பேசுவார் என்று?

செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு இக்கூட்டம் நடப்பதால், இதில் ஒன்றும் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாப்போவதில்லை.

சிந்து சமவெளி திராவிடர்களின் கடவுள் முருகர் : பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பர்போலா

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=26968

கோவை : “சிந்து சமவெளி எழுத்துக்களை ஆய்வு செய்ததில், முருகன், ஆரிய கடவுள் ருத்ரா -ஸ்கந்தா ஆகியோர், திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தனரென ஆய்வில் தெரிய வருகிறது’ என்று “செம்மொழி தமிழ்’ விருது பெற்ற பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிந்து சமவெளி எழுத்துக்கள் குறித்த ஆய்வு கட்டுரையில் கூறியுள்ளார். கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெளிநாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று, தமது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். பின்லாந்து நாட்டை சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் பற்றி ஆய்வு செய்து வருகிறார்.

இவருக்கு மாநாட்டு முதல் நாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் “செம்மொழி தமிழ்’ விருது வழங்கினார். இவர் “சிந்து சமவெளி எழுத்துக்களுக்கான திராவிட தீர்வு’ என்ற தலைப்பில் 35 பக்கம் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரையை, முதல்வர் கருணாநிதி முன்னிலையில் மாநாட்டில் சமர்ப்பித்தார். அவர் தமது ஆய்வு குறித்து பேசியதாவது: சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய ஹரப்பா பகுதியில், 1870 மற்றும் 1890ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், எந்த மொழி என்று அறுதியிட்டு கூற முடியாத, கற்களில் பொறிக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.

மேலும் அகழாய்வு செய்ததில் மெசபடோமியா பகுதியில் பல எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப் பட்டன. அதன் அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிக காலம் கி.மு. 2600 -1900 என்பதை ஆய்வுகள் மூலம் உறுதியானது. இக்கல்வெட்டு, எழுத்துக்கள் வளைகுடா கடல் வாணிபர்களால் அந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களால் அந்த எழுத்துக்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருந்துள்ளது.

சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தபோதே, சிந்து சமவெளி எழுத்து வடிவங்கள் சேர்ந்து அழிந்து விட்டன: சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தபோதே, சிந்து சமவெளி எழுத்து வடிவங்கள் சேர்ந்து அழிந்து விட்டன. ஆனாலும் பாதுகாக்கப்பட்ட சில எழுத்து வடிவங்கள், ஆய்வுக்கும் ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட மொழியினை அறிய உதவுவது திராவிட மொழிகளே. அவற்றின் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்தோ-ஆரிய உருவ வடிவ எழுத்துக்களில் திராவிட மொழி எழுத்துக்கள் இருப்பதை அறிய முடிகிறது:  மத்திய மற்றும் தென்னிந்தியாவில் 26 திராவிட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. எனினும், கி.மு. 1100 -600ம் ஆண்டுகளில், வடமேற்கு பகுதியில் காணப்பட்ட இந்தோ-ஆரிய உருவ வடிவ எழுத்துக்களில், முகம், பலம், காணா, கியாம்பு ஆகிய திராவிட மொழி எழுத்துக்கள் இருப்பதை அறிய முடிகிறது. வரலாற்று மொழிகள் வாயிலாக நாம் அறிய முடிவது என்னவென்றால், சிந்து சமவெளி பகுதி மக்கள் (ஹரப்பா) திராவிட மொழியைத்தான் பேசியிருக்க வேண்டுமென்று தெரிய வருகிறது. சிந்து சமவெளி மதங்களை பற்றி படிக்க பழந்தமிழ் இலக்கியங்கள் உதவிக்கு வருகின்றன.

பிறகு சங்க இலக்கியம் ஏன் 300 BCE ல் தோன்றின? போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய, “இளமை’ கடவுளை வணங்கினர். அக்கடவுள், வடஇந்தியர்கள் வணங்கிய போர்கடவுளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது. அக்கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங்கப்பட்டன. வேதங்களில் ஸ்கந்தாவுக்கு முன்னோராக குறிப்பிடப்படும் “ருத்ரா’ என்னும் கடவுளும் எழுத்து வடிவக் குறியீடுகளில் குறிக்கப்பட்டுள்ளார். முருகனும், ஸ்கந்தாவும், சிவப்பு நிறம் அல்லது உதிக்கும் சூரியன் எழுத்து வடிவ குறியீடுகளால் குறிப்பிடப்படுகின்றனர். இதன் மூலம் திராவிட கடவுள் முருகன் மற்றும் ஆரிய கடவுள் ருத்ரா-ஸ்கந்தா ஆகியோர், திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தனரென தெரிய வருகிறது.

உருவக எழுத்துக்களின் அர்த்தங்களை கண்டுபிடிக்க, திராவிட மொழியாற்றல் மிக்க பேச்சாளர்கள் தேவையில்லை: சிந்து சமவெளி நாகரிக காலத்தைய எழுத்து வடிவங்கள் திராவிட மொழியே பின்னணியில் உள்ளதை தெளிவாகி உறுதியுடன் கூற முடிகிறது. உருவக எழுத்துக்களின் அர்த்தங்களை கண்டுபிடிக்க, திராவிட மொழியாற்றல் மிக்க பேச்சாளர்கள் தேவையில்லை. இந்திய கலாசாரம் மற்றும் தெற்காசிய தன்மையை பற்றி நன்கு அறிந்திருந்தாலே போதும். இவ்வாறு பேராசிரியர் பர்போலோ பேசினார். துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.