Posts Tagged ‘பிழையுரை’

பிஷப் கால்டுவெல் – பிழையுரையும், பொய்யுரையும், திராவிட இனவாதமும் – புத்தக வெளியீடு, கிருத்துவர்களின் சாணார் விரோத போக்கும், பின்னணியும் [1]

ஒக்ரோபர் 13, 2018

பிஷப் கால்டுவெல்பிழையுரையும், பொய்யுரையும், திராவிட இனவாதமும்புத்தக வெளியீடு, கிருத்துவர்களின் சாணார் விரோத போக்கும், பின்னணியும் [1]

Caldwell book, wrapper

பிஷப் கால்டுவெல்பிழையுரையும், பொய்யுரையும், திராவிட இனவாதமும்என்ற நுால், ஏன்?: வெளியீட்டு விழா 07-10-2018 அன்று சென்னையில், குரு பாலாஜி  கல்யாண மண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. சாணார்களுக்கு அறிவில்லை, மந்தமான புத்தி உடையவர்கள், அவர்கள் படிப்பதற்கு லாயக்கில்லை…..என்றெல்லாம் கால்டுவெல் தனது புத்தகத்தில் எழுதினார். பிரச்சினை எழுந்தவுடன், அப்புத்தகத்தைத் திரும்பப் பெற்றதாக, ஆங்கில அரசு அறிவித்தது. ஆனால், விரிவான மற்றொரு புத்தகத்தை, லண்டனில் வெளியிட்டது. அதாவது, இந்தியாவைப் பொறுத்த வரைக்கும், அது திரும்பப் பெற்றதாக இருக்கலாம், ஆனால், உலகத்தைப் பொறுத்தவரைக்கும், அக்கருத்துதான், படித்தவர்கள் எல்லோரும் கொண்டிருப்பர். சாணர்களை இழுவு படுத்திய புத்தகம் முதலில் சென்னையில் 1849ல் வெளியிடப் பட்டது[1]. அப்பொழுதே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டது. அதனால், பிரதிகளை ஆங்கில அரசு பதுக்கிவிட்டது. ஆனால், மறுவருடமே, அதாவது 1850ல் லண்டனில் அதனை விரிவாக்கி வெளியிடப் பட்டது[2]. ஆகையால், இதற்கு மறுப்பு நூலாகத்தான், இப்புத்தகம் வெளியிடப்பட்டது.  அதைப் பற்றிய விவரங்கள் கீழே அலசப் படுகின்றன.

Shanars - how Robert Caldwell treated-1

கால்டுவெல் சாணார்களை / நாடார்களை தூஷித்து எழுதியது: கால்டுவெல் சாணார்களின் மீது மட்டும் ஏன் அத்தகைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்பது புதிராக உள்ளது. கால்டுவெல் சாணார்களை மிகவும் கேவலப் படுத்தி எழுதியுள்ளவற்றில் முக்கியமானவை கீழே கொடுக்கப் படுகின்றன:

  1. சாணார்களுக்கு அறிவில்லை, மந்தமான புத்தி உடையவர்கள், அவர்கள் படிப்பதற்கு லாயக்கில்லை…..
  2. சாணார்களுக்கு பனை ஏறுதலும், கருப்பட்டி தயாரித்தலும் முக்கிய தொழில். சிலர் விவசாயிகளாகவும், வியாபாரிகளாகவும் உள்ளனர்.
  3. சாணார்கள் – ஸ்ரீலங்காவிலிருந்து தமிழக தென் மாவட்டங்களில் குடியேறிய “வந்தேறிகள்”. அவர்கள் குடியேற வந்தபோது பனங்கொட்டைகளை விதைத்தனர்.
  4. இராவணனுடைய பிரதம மந்திரி மகோதாரா என்பவன் சாணார் குலத்தவன். சாணார்கள் ஆடிமாதம் முதல் தேதியை விடுமுறை நாளாகவும், மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாகவும் கொண்டாடுகின்றனர். ஏனென்றால் இதே தேதியில்தான் சீதையை இராவணன் கவர்ந்து சென்றான். இராமனுடைய துயரத்தை சாணார்கள் சந்தோஷமான நாளாக கொண்டாடுகின்றனர் ஆடி மாத இறுதி கொல்லம் ஆண்டின் கடைசி நாள். இத்தேதியை நாடார்கள் மட்டுமின்றி தென்மாவட்டங்களில் உள்ள மற்ற சமுதாயத்தினரும் “ஆடி இறுதி” என மகிழ்வான நாளாக கொண்டாடுகின்றனர்.
  5. சாணார்கள், கடவுளுக்கு பயப்படுகிறவர்கள் அல்ல. பொய் சொல்வதற்கு தயங்காதவர்கள். ஏமாற்று வேலையையும், தாழ்வான குணங்களையும் உடையவர்கள், இவர்கள் அறிவுபூர்வமானவர்கள் அல்லர். மிகவும் கோழையர்கள் கூட. இவர்கள் நன்றி மறப்பவர்கள். சுயநலவாதிகள், சதிகாரர்கள், ஏமாற்றுக்காரர்கள், வணிக பொருள்களை திருடுபவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள், நிலப்பிரச்சனைகளிலே காலத்தை கழிப்பவர்கள்.
  6. சாணார்கள் சோம்பேறிகள், மந்தபுத்தி உடையவர்கள், அவர்களின் குழந்தைகள் அல்லது உறவினா;கள் காலரா நோயால் சாகும் தருவாயில் இருந்தால்கூட, விழித்திருந்து அவர்களுக்கு ஊழியம் செய்யாமல் தூங்கும் தன்மை உடையவர்கள்.
  7. சாணார்கள் சுய சிந்தனை அற்றவர்கள். சுயமாக சிந்திக்காமல் தங்களுடைய முன்னோர்கள் செய்த / கூறிய செயல்களுக்கே மதிப்பு கொடுப்பவர்கள். தங்களின் வாழ்நாளில் பாதியை சோம்பேறித்தனமாகவே கழிப்பவர்கள். எந்த தொழிலை செய்தாலும் இவர்களுக்கு அதனை பூரணமாக செய்யும் திறமை கிடையாது. கடனில் மூழ்கி இருப்பவர்கள், ஏழைகள்.
  8. நீக்ரோ அடிமைகளை விட சாணார்கள் அறிவாற்றலிலும், செயல்திறனிலும் தாழ்ந்தவர்கள்
  9. அத்துடன், திராவிடர்கள் மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்களுக்கு முன்பு இந்தியாவில் குடியேறியவர்கள் -வந்தேறிகள்,
  10. அவர்களின் இந்திய தமிழ்மொழி யுக்ரயின் (Ukraine) நாட்டு பகுதிகளில் பேசப்படும் ஸ்கைத்திய மொழி குடும்பத்தைச் சார்ந்த (வந்தேறி), மொழியென்றும் அடையாளம் காட்டியுள்ளார்.

Shanars - how Robert Caldwell treated-2

பெரும்பாலான சாணார்கள் மதம் மாறாதலால், கிருத்துவப் பாதிரிகள் அவர்களுக்கு விரோதமான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தினர்: சாணார்கள் கிருத்துவர்களின் இந்துவிரோத பிரச்சரத்தினால், சுயகௌரவம் அதிகமாகியது. தாங்கள் “பத்ரகாளியம்மனின் வழிவந்தவர்கள்” என்பதை அவர்கள் கிண்டலடிப்பதை எதிர்த்தனர். இதனால், நாளுக்கு நாள் அவர்களது இந்து-உணர்வு அதிகமானது. இதனால், கால்டுவெல் மட்டுமல்ல, சார்லஸ் மீட் போன்ற பாதிரிகளும் அவர்களைப் பற்றி மோசமான கருத்துகளையே கொண்டனர்[3]. “ஏசுகிருஸ்துவை ஏற்கும் இந்து சர்ச் பெருமளவில் லாபமடையவில்லை. இருப்பினும் நாடார் ஜாதி சுயசிந்தனை உருவாக்க உதவியது. கால்டுவெல் மற்றும் கியர்ன்ஸ் எதிராக சட்டாம்பிள்ளை தனது குறும்புத்தகத்தை 1857ல் வெளியிட நிதியுதவி கிடைக்கவில்லை….. இருப்பினும் 75 ஆண்டுகளுக்குப் பிறகு அது வெளியிடப்பட்டது”. சாணர்களை மதம் மாற்றும் முயற்சிகளில் ராபர்ட் கால்டுவெல் மற்றும் சர்ச்சுகள் அதிக அளவில் வெள்ளிப் பெற முடியவில்லை. கல்கத்தா பிஷப் திருநெல்வேலிக்கு 1865ல் வந்தபோது, “நாடார்கள் ராஜபுதன வீரர்களைப் போன்ற இனம் என்று கருதிக் கொள்லும் உணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், இவர்களது மூதாதையர்கள் பனைமரம் மேறும் ராஜாக்களாக இருந்திருக்கின்றனர்”, என்று விமர்சித்தார். மாறாக மற்ற ஜாதியர்-சாணார்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டன[4]. இதனால், கால்டுவெல்லுக்கு அவர்களின் மீது அதிகமானவெறுப்பு ஏறட்டது. கலவரம் நடந்த நிலைகளில் ஆங்கில அரசே அத்தகைய சட்டமீறல்கள் முதலியவற்றை விரும்பவில்லை.

Shanars - how Calcutta bishop commented in 1865

நாடார்கள் போட்ட வழக்குதோல்வியும், வெற்றியும்: ஆங்கிலேயர் Act XX of 1863ன்படி, கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனி நபர் மற்றும் கமிட்டிகளிடம் விட்டு விட்டது. இதனால், வைதீக-ஆகம-சாத்திரங்களின் படி, நிர்வாகிக்கப் படும் நிலையில் சில சட்ட-திட்டங்களை ஏற்ப்டுத்தினர். அதனால் தான், குறிப்பிட்ட சமூகத்தினர், குறிப்பிட்ட சடங்குகளை, கிரியைகளை செய்யலாம் கூட்டாது போன்ற விதிமுறைகள் ஏற்படுத்தப் பட்டன. அந்நிலையில், கோவில்களில் நுழையவும் விதிமுறைகள் ஏற்பட்டன, ஆனால், சிலவற்றில் அவை முறையாக இருக்கவில்லை. இந்துக்களின் ஒரு பிரிவினர் கால்டுவெல்லின் பொய் பிரச்சாரத்தை உண்மை என நம்பி, சாணார்களை இழிந்த சாதியினர் எனவும், அவர்களை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று, தடுத்ததால், ஒரு வழக்கு நாடார்களுக்கு எதிராக ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது (OS நம்பர் 88 of 1872 / Case no.88 of 1872 of Tinnevelly District Magistrate). ஈரோடு மாவட்டம் பாசூர் மடாதிபதி அய்யாச்சாமி தீட்சிதர் கால்டுவெல் பாதிரியாரின் பொய் பிரச்சாரத்தை கடுமையாக எதிர்த்து,அவர்கள் ஸ்ரீலங்காவிலிருந்து குடியேறியவர் அல்ல என்று எடுத்துக் காட்டினார். மேலும், அவர்கள் தமிழகத்தை ஆண்ட பாண்டிய குலத்தை சார்ந்தவர், சத்திரியர் என ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். அதனால், ஆலய பிரவேச தடுப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல, கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆலய பிரவேச வழக்கில் (OS 33/1898) தில்லைவாழ் (தீட்சிதர்) அந்தணர், பாசூர் அந்தணர், மதுரை சார்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.. நாடார்களுக்கு எதிராக நீதிமன்றத்தில், கால்டுவெல் அவர்களின் பிரசுரங்கள் முன் ஆதாரங்கள்க வைக்கப்பட்டன. இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி, நாடார்களுக்காக சாட்சியம் கூறிய தீட்சிதர்களையும், பாசூர் அந்தணர்களையும் கடுமையான அவமதிப்பிற்கு உள்ளாக்கினர். அதனால், நாடார்கள் தண்டிக்கப்பட்டனர்.

© வேதபிரகாஷ்

10-10-2018

Shanars - how Calcutta bishop commented in 1865

[1] Robert Caldwell, The Tinnevelly Shanars: A Sketch of Their Religion and Their Moral Condition, and Characteristics as a Caste. With Special Reference to the Facilities and Hindrances to the Progress of Christianity Amongst Them, London, 1849.

[2] Michael Bergunder, Heiko Frese, and Ulrike Schröder (Edited by), Ritual, Caste, and Religion in Colonial South India, Verlag der Franckeschen Stiftungen zu Halle, 2010, p.139

[3] Robert L. Hardgrave.Jr,  The Nadars of Tamilnad – The Political Culture of a Community in Change, University of California Press, Berkeley and Los Angeles, 1969, p.58.

[4] Anthony Good, The Car and the Palanquin: Rival Accounts of the 1895 Riot in Kalugumalai, South India, Modern Asian Studies 33, 1 (1999), pp. 23–65. 1999 Cambridge University Press Printed in the United Kingdom .