சிந்து வரிவடிவம், ஹரப்பன் திராவிடி மற்றும் காட்டுக் கழுதை!

சிந்து வரிவடிவம், ஹரப்பன் திராவிடி மற்றும் காட்டுக் கழுதை

அஸ்கோ பர்போலவின் ரோஜா முத்தையா நூலகத்தில் நடந்த சொற்பொழிவைப் பற்றிய விவரங்கள் தினமலரில் இன்றுதான் – 02-07-2010 – வெளி வந்துள்ளது. இதை என்னுடைய மற்ற இடுகைகளுடன் ஒப்பிட்டு விவரங்களை அறியலாம், அலசலாம் [நன்றி: தினமலர்].

Asko-Roja-muthaiah-meeting-Dinamalar-02-07-2010

Asko-Roja-muthaiah-meeting-Dinamalar-02-07-2010

பேராசிரியர் ஆஸ்கோ பர்போலா, வரும் 28-06-2010 அன்று (Prof. Asko Parpola on “The Indus Script, Harappan Dravidian and  the Wild Ass”)சிந்து வரிவடிவம், ஹரப்பன் திராவிடி மற்றும் காட்டுக் கழுதை” என்ற தலைப்பில் ரோஜா முத்தையா அரங்கத்தில் மாலை 4.30க்கு  பேசவுள்ளார்!

திராவிட இனவாதக் கூட்டங்களைத் திருப்தி படுத்த, அந்த சிந்து குறியீடுகள், வரிவடிவங்களை………..திராவிட மொழிக் குழுமத்தைச் சேர்ந்தது அதாவது அது, “திராவிடி” என்று சொல்லப்போகிறார் என்று தெரிகிறது.

“காட்டுக் கழுதை” எனும்போது, அந்த குதிரைச் சின்னத்தைப் பற்றி பேசுவார் எனத் தெரிகிறது. இதைப் பற்றி, ஏற்கெனெவே சிந்துசமவெளி குறியீட்டு ஆராய்ச்சியாளர்களிடம் வேறுபாடுகள் உள்ளன.

 • குதிரை இருந்ததா இல்லையா,
 • இருந்தால் அது மனிதனால் உபயோகப்படுத்தப் பட்டதா அல்லது காட்டில் திரிந்து கொண்டிருந்ததா,
 • குதிரை இல்லை கழுதைதான்
 • கழுதையில்லை குதிரைதான்
 • எத்தனை எலும்புகள் உள்ள குதிரை
 • இந்தியாவில் எப்பொழுது குதிரை அறிமுகப்படுத்தப்பட்டது
 • தென்னிந்தியாவில் எப்பொழுது வந்தது

இப்படியெல்லாம் வாதங்கள் உள்ளன. இனியும் தொடரும். இப்படி படித்தவர்களிடையே “கழுதையா, குதிரையா” அல்லது “குதிரையா,கழுதையா “, என்று விவாதித்துக் கொண்டிருக்கும்போது, நமது அறிவுஜீவிகள் என்ன சொல்வார்கள்?

 1. சங்க இலக்கியங்களில், குதிரையைப் பற்றிய விவரங்கள் அதிகமாகவே உள்ளன.
 2. உலகத்திலேயே, இந்தியாவில் தான் குதிரைக்கு இருக்கை, லகான், கால்பிடி, முதலியவற்றை உபயோகித்து, ஓட்டினர்.
 3. ஆதிச்சநல்லூர், குதிரை உபகரணங்களை இங்கு நோக்கத்தக்கது.
 4. வரிவடிவம், எழுத்து, எழுத்துமுறை, மொழி, இலக்கணம் முதலியவற்றைக் குழப்பி இனவாத ரீதியில் பொருள்கொண்டு, இன்றும் விவாதிப்பது சரியன்று.
 5. ஆகவே, “திராவிடி” என்பது மொழியென்று கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.

வழக்கம் போல ஐராவதம் மஹாதேவன் இருப்பதால், கேள்விகள் கேட்பதைத் தடுத்துவிடுவார்!

பார்ப்போம், என்ன பேசுவார் என்று?

செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு இக்கூட்டம் நடப்பதால், இதில் ஒன்றும் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாப்போவதில்லை.

சிந்து சமவெளி திராவிடர்களின் கடவுள் முருகர் : பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பர்போலா

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=26968

கோவை : “சிந்து சமவெளி எழுத்துக்களை ஆய்வு செய்ததில், முருகன், ஆரிய கடவுள் ருத்ரா -ஸ்கந்தா ஆகியோர், திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தனரென ஆய்வில் தெரிய வருகிறது’ என்று “செம்மொழி தமிழ்’ விருது பெற்ற பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிந்து சமவெளி எழுத்துக்கள் குறித்த ஆய்வு கட்டுரையில் கூறியுள்ளார். கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெளிநாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று, தமது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். பின்லாந்து நாட்டை சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் பற்றி ஆய்வு செய்து வருகிறார்.

இவருக்கு மாநாட்டு முதல் நாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் “செம்மொழி தமிழ்’ விருது வழங்கினார். இவர் “சிந்து சமவெளி எழுத்துக்களுக்கான திராவிட தீர்வு’ என்ற தலைப்பில் 35 பக்கம் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரையை, முதல்வர் கருணாநிதி முன்னிலையில் மாநாட்டில் சமர்ப்பித்தார். அவர் தமது ஆய்வு குறித்து பேசியதாவது: சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய ஹரப்பா பகுதியில், 1870 மற்றும் 1890ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், எந்த மொழி என்று அறுதியிட்டு கூற முடியாத, கற்களில் பொறிக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.

மேலும் அகழாய்வு செய்ததில் மெசபடோமியா பகுதியில் பல எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப் பட்டன. அதன் அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிக காலம் கி.மு. 2600 -1900 என்பதை ஆய்வுகள் மூலம் உறுதியானது. இக்கல்வெட்டு, எழுத்துக்கள் வளைகுடா கடல் வாணிபர்களால் அந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களால் அந்த எழுத்துக்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருந்துள்ளது.

சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தபோதே, சிந்து சமவெளி எழுத்து வடிவங்கள் சேர்ந்து அழிந்து விட்டன: சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தபோதே, சிந்து சமவெளி எழுத்து வடிவங்கள் சேர்ந்து அழிந்து விட்டன. ஆனாலும் பாதுகாக்கப்பட்ட சில எழுத்து வடிவங்கள், ஆய்வுக்கும் ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட மொழியினை அறிய உதவுவது திராவிட மொழிகளே. அவற்றின் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்தோ-ஆரிய உருவ வடிவ எழுத்துக்களில் திராவிட மொழி எழுத்துக்கள் இருப்பதை அறிய முடிகிறது:  மத்திய மற்றும் தென்னிந்தியாவில் 26 திராவிட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. எனினும், கி.மு. 1100 -600ம் ஆண்டுகளில், வடமேற்கு பகுதியில் காணப்பட்ட இந்தோ-ஆரிய உருவ வடிவ எழுத்துக்களில், முகம், பலம், காணா, கியாம்பு ஆகிய திராவிட மொழி எழுத்துக்கள் இருப்பதை அறிய முடிகிறது. வரலாற்று மொழிகள் வாயிலாக நாம் அறிய முடிவது என்னவென்றால், சிந்து சமவெளி பகுதி மக்கள் (ஹரப்பா) திராவிட மொழியைத்தான் பேசியிருக்க வேண்டுமென்று தெரிய வருகிறது. சிந்து சமவெளி மதங்களை பற்றி படிக்க பழந்தமிழ் இலக்கியங்கள் உதவிக்கு வருகின்றன.

பிறகு சங்க இலக்கியம் ஏன் 300 BCE ல் தோன்றின? போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய, “இளமை’ கடவுளை வணங்கினர். அக்கடவுள், வடஇந்தியர்கள் வணங்கிய போர்கடவுளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது. அக்கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங்கப்பட்டன. வேதங்களில் ஸ்கந்தாவுக்கு முன்னோராக குறிப்பிடப்படும் “ருத்ரா’ என்னும் கடவுளும் எழுத்து வடிவக் குறியீடுகளில் குறிக்கப்பட்டுள்ளார். முருகனும், ஸ்கந்தாவும், சிவப்பு நிறம் அல்லது உதிக்கும் சூரியன் எழுத்து வடிவ குறியீடுகளால் குறிப்பிடப்படுகின்றனர். இதன் மூலம் திராவிட கடவுள் முருகன் மற்றும் ஆரிய கடவுள் ருத்ரா-ஸ்கந்தா ஆகியோர், திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தனரென தெரிய வருகிறது.

உருவக எழுத்துக்களின் அர்த்தங்களை கண்டுபிடிக்க, திராவிட மொழியாற்றல் மிக்க பேச்சாளர்கள் தேவையில்லை: சிந்து சமவெளி நாகரிக காலத்தைய எழுத்து வடிவங்கள் திராவிட மொழியே பின்னணியில் உள்ளதை தெளிவாகி உறுதியுடன் கூற முடிகிறது. உருவக எழுத்துக்களின் அர்த்தங்களை கண்டுபிடிக்க, திராவிட மொழியாற்றல் மிக்க பேச்சாளர்கள் தேவையில்லை. இந்திய கலாசாரம் மற்றும் தெற்காசிய தன்மையை பற்றி நன்கு அறிந்திருந்தாலே போதும். இவ்வாறு பேராசிரியர் பர்போலோ பேசினார். துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “சிந்து வரிவடிவம், ஹரப்பன் திராவிடி மற்றும் காட்டுக் கழுதை!”

 1. நெட்டிமையார் Says:

  பீம்பெட்கா என்ற பாறை ஓவியங்களில் 40,000-30,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்தியர்கள் குதிரைகளை வரைந்துள்ளார்கள்.

  தமிழக பாறை ஓவியங்களிலும் குதிரைகள் காணப்படுகின்றன. ஆனால், அவை சுமார் 1000 BCE அதாவது 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று பெரிய கற்கால ஒப்புமை ரீதியில் கணக்கிடுகிறார்கள்.

  ஆக, இவற்றையேல்லாம் விட்டுவிட்டு, கழுதை சிந்துசமவெளியாகத்தான் இந்தியாவிற்குள் நுழைந்தது. அக்கழுதையை, திராவிடர்கள், தமது மொழியில் பாதுகாத்து வைத்துள்ளார்கள் என்றெல்லாம் சொல்லவா, ஒரு ஆராய்ச்சியாளர் தேவைப்படுகிறார்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: