அஸ்கோ பர்போலாவும், ஆரியர்களும், திராவிடர்களும்!

அஸ்கோ பர்போலாவும், ஆரியர்களும், திராவிடர்களும்!

அஸ்கோ பர்போலாவவும், ஐராவதம் மஹாதேவனைப் போல உருவாகி விட்டார். சென்ற இடத்தில் எல்லாம் விதவிதமாக பேசுவது, மேடைக்கு ஏற்ப மாற்றி பேசுவது, ஊடகக்காரர்களிடம் வேறு விதமாகப் பேசுவது என்பது வேடிக்கையாக இருக்கிறது.

http://expressbuzz.com/states/tamil-nadu/dravidians-headed-south-before-aryans-arrival/185399.html

அஸ்கோ-பர்போல-2010

அஸ்கோ-பர்போல-2010

திராவிடர்கள் சிந்துசமவெளியிலிருந்து, வெளியேரி குஜராத் முதலிய இடங்களில் வாழ்ந்தார்கள்.

ஆரிய படையெடுப்பு இல்லை, திராவிடர்களே, ஆரியர்கள் வருவதற்கு முன்னமே தெற்காக நகர்ந்து சென்று விட்டனர்: அஸ்கோ பர்போல திடீரென்று அதிரடியாக, இரண்டாம் மில்லினியம் காலத்தில் ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதற்கு, ஒரு புதிய திரிபு வாதத்தை முன்வைத்துள்ளார். இதன்படி, திராவிடர்கள் விரட்டியடிக்கப்படவில்லை, ஆனால், ஆரியர்கள் அங்கு நகரத்திற்கு வருவதற்கு முன்னமே, படிப்படியாக அவர்களே மேய்ச்சலுக்கு நல்ல பசுமையான நிலங்களைத் தேடிக்கொண்டு, தெற்கு நோக்கி நகர்ந்து சென்று விட்டனர். சென்னைக் கிருத்துக் கல்லூரியின் சார்பாக, கிஃப்ட் சிரோமணி என்பாரது நினைவுச் சொற்பொழிவாக, தான் “சிந்துவரிவடிவம், திராவிட ஹரப்பன்கள், காட்டுக்கழுதை” என்ற தலைப்பில் பேசியதைப் பற்றி, இந்தியன் எக்ஸ்பிரஸுக்குச் சொன்னார். அவரது ஆராய்ச்சியின் படி, திராவிடர்கள்தாம், குஜராத்தில் உள்ள சிந்துசமவெளி நாகரிகத்தில் இருந்தனர். அவர்களில் சிலர் மேய்ச்சலுக்கு நல்ல பசுமையான மற்றும் செழுமையான நிலங்களைத் தேடிக்கொண்டு தெற்காக நகர்ந்தனர். இது ஆரியர்கள் கூட்டம் கூட்டமாக பெருமளவில் வருவதற்கு முன்பே ஏற்பட்டது, என்று ஆதாரங்கள் உள்ளன.

வட-இந்தியாவில் ஆங்கிலேயர்களைப் போல ஆரியர்கள் திராவிடர்களை இந்தோ-ஆரிய மொழியைக் கற்றுக்க்கொள்ளச் செய்தனர்: ஆங்கிலேயர்கள் எப்படி பிராமணர்களை ஆங்கிலம் கற்றுக்கொள்ளவைத்து, தங்கள் கீழ் வேலை செய்யவைத்து, நாட்டை ஆண்டனரோ, அதே போல, சிந்துநதி அருகில் தங்கி விட்ட, திராவிட சமுதாயமும், குறிப்பாக சமுதாயத்தலைவர்கள், இந்தோ-ஆரிய மொழியைக் கற்றுக்கொண்டது. திராவிடர்களுடைய மேற்தட்டுக் குடிகள் அவ்வாறு ஆரிய மொழியைக் கற்றுக் கொண்டு, வட-திராவிடர்களாக மாறினர். இருப்பினும் அவர்களது மொழியில், முந்தைய-திராவிட கூறுகளைத் தக்கவைத்துக் கொண்டனர். தென்னிந்தியாவில் திராவிட மொழிகள் இன்னும் பேசப்பட்டு வருகின்றன, ஏனெனில், ஆரியர்கள் தென்னிந்தியாவை முழுவதுமாக வெற்றிக் கொள்ளமுடியவில்லை. வட-இந்தியாவை அவ்வாறு வெற்றிக் கொள்வதற்கே பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கும். ஆனால், இப்பொழுதைக்கு, சரித்திர ஆசிரியர்களிடம் வழக்கத்தில் உள்ள சித்தாந்தமானது, ஆரியர்கள் திராவிடர்களை தென்னிந்தியாவிற்கு விரட்டியடித்தனர் என்பதுதான். இது படித்தவர்களிடையே, இப்பொழுது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

9 பதில்கள் to “அஸ்கோ பர்போலாவும், ஆரியர்களும், திராவிடர்களும்!”

 1. vedaprakash Says:

  ‘Dravidians headed south before Aryans’ arrival’
  Express News Service
  First Published : 29 Jun 2010 04:09:33 AM IST
  Last Updated : 29 Jun 2010 04:35:45 AM IST
  http://expressbuzz.com/states/tamil-nadu/dravidians-headed-south-before-aryans-arrival/185399.html

  CHENNAI: Giving a new twist to the debate over what actually happened between the Aryans and the Dravidians in the second millennium BC, Professor of Indology with the University of Helsinki Asko Parpola said his research indicated that Dravidians were not driven south by the Aryans; instead, they gradually moved there in search of better pastures – and this was before the invading Aryans even came to town.

  On the sidelines of the Dr Gift Siromani Endowment Lecture organised by Madras Christian College where Parpola delivered his lecture on ‘The Indus script, Harappan Dravidian and the wild ass’, he told Express that his research showed that the Dravidians were originally the inhabitants of the Indus Valley in Gujarat.

  Gradually, some of them moved south in search of greener pastures and more fertile soil for grazing and farming. And there was evidence, he said, that this move was much before the invading Aryan hordes came to India. The Dravidian community that remained near the Indus River was conquered over many years later by the Aryans, he said.

  “Just like when the British took over India, they made the Brahmins learn their language and work under them to administer the country before they conquered the whole nation, likewise, these Aryans too made the local village chieftains learn the Indo Aryan language. An elite layer of Dravidians would’ve initially learnt Indo Aryan first,” said Parpola.

  “The northern Dravidians then over time took completely to speaking Indo Aryan with only traces of the original proto Dravidian language still remaining,” he added.

  Parpola added, “Dravidian languages flourished in the south because the Aryans could never conquer the south. Even the north would’ve taken centuries to conquer.”

  The theory that has currency among historians is that Aryans drove Dravidians to the south of the nation. This has been the cause for much debate in academic circles.

 2. K. Venkatraman Says:

  NIE has decided to report like this to mislead readers, as some of them think that the meeting was held at the Madras Christian College instead of Roja Muthaiah Hall, Taramani. Moreover, he talked about “Indus script, Harappan Dravidians and Wild ass”, whereas, something else is dscussed!

  Anyway, Asko Parpola has also been fooling Indians by talking in different ways – in Dravidian angle at Coimbatore to please the dravidian leaders and sponsors (who have spent lavishly lakhs on his visit, comforts etc), “wild ass” way here without any “dravidian conclusion” and so on!

 3. Tamilselvan Says:

  நிச்சயமாக அஸ்கோ பர்போல தமிழர்களைக் குழப்புகிறார்.

  எந்த திராவிடனும், ஆரியர் படையெடுப்பு இல்லை என்பதனை ஏற்றுக் கொள்ள மாட்டான்.

  கருணநிதியே, அத்தகைய நிலையை அறிந்தால், கொடுத்த பரிசையே திரும்பி வாங்கிக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

  இல்லை, அஸ்கோ பர்போலவே, திரும்பிக் கொடுத்துவிடலாம்.

  ஏனெனில் இம்மாதிரி, மாற்றி-மாற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.

  • vedaprakash Says:

   இப்படி கொடுத்ததையெல்லாம், திருப்பி வாங்க ஆரம்பித்தால் என்னாவது?

   இது முடிகின்ற காரியமா?

   ஆனால், ஒன்று உண்மையிலேயே, தான் இந்த கூட்டத்திற்கு ஒத்துப் போகாதாவன் என்ற உண்மையை வெளிப்படையாக சொல்லும் மனப்பக்குவம் இருந்தால், தாராளமாக, இந்த பரிசைத் தூக்கிப் போட்டுவிட்டு சென்று விடலாம்.

 4. Jennifer Says:

  Why New Indian Express is writing wrong reports.

  Pr.Parbola used so many “ifs” and”buts” to say his findings are only SPECULATIONS -but why Papers leave all those careful claims.

 5. Tamilselvan Says:

  தமிழர்களை நன்றாக முட்டாள்களாக்கி, ஆளுக்கு ஆள் லட்சங்களை அள்ளீக் கொண்டு சென்று விட்டார்கள்.

  அச்கு-புஸ்கு என்று போலவும், போயேவிட்டார் லட்சங்களுடன்.

  இனி, காட்டுக்கழுதைதான் மிஞ்சியுள்ளது திராவிடர்களுக்கு!

  மடலேறும் வழக்கிலிருந்தால், இந்த கழுதை மீது ஏறி செல்லலாம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: